86-ஆரார் ஆசைப்படார் நின் பாதத்திற்கு

Shankar Rajasekharan UPLOAD

Mysore 1960 Concert - Carnatic Music

viruttham

ragam..Revathi?

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமசிவாயத்தை நான் மறவேனே

....வள்ளலார் :

==========================================

முத்துத்தாண்டவர்:

Ragam Naadhanaamakriyaa

ஆரார் ஆசைப்படார் நின் பாதத்திற்கு

அருள் பாராய்

பதம் தாராய்

துயர் தீராய்

புலியூராய்

நின் பாதத்திற்கு (ஆரார்)

கனக மேனியன்

பன்னகசயணன் கஞ்ஜனுடன்

பதஞ்சலி புலி போற்ற

அனவரதமும் கனக சபையுள்

ஆடிச் சிவந்து என்னைத் தேடிய

பாதத்திற்கு (ஆரார்)

===============================================

) வள்ளலார் :

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே

2) முத்துத்தாண்டவர்:

பல்லவி

ஆரார் ஆசைப் படார் நின் பாதத்துக்கு ஆரார் ஆசைப்படார்

அனுபல்லவி:

அருள் பாராய் பதம் தாராய் துயர் தீராய் புலியூராய் நின் பாதத்துக்கு

சரணம்

கனக மேனியன் பன்னக சயனன் கஞ்சனுடன் பதஞ்சலி புலி போற்ற

அனவரதமும் கனக சபையுள் ஆடினதைக் கண் தேடிய பாதத்துக்கு