29-இத்தனை நாள் ஆன-*

இத்தனை நாள் ஆன பின்னும் (1949)

Ithanai_Naalaana_Pinnum_Gana.PK_.mp4

LYRICS BY KALKI

MUSIC BY S.V.VENKATARAMAN

RAGAM : A GRAND VARIANT OF SINDHU BAIRAVI

or perhaps it is a variant of DARBARI KAANADAA

இத்தனை நாள் ஆன பின்னும்

ஏழை நெஞ்சே ஏன் துயரம்?

எத்தனை நீ அழுதாலும்

உத்தமர் தாம் வருவாரோ

தன்னுயிரை மன்னுயிறகே

தந்தவர் தாம் மாய்ந்தவரோ!

இன்னுயிரும் எமக்களித்த

ஏந்தல் அன்றோ ,காந்தி மஹான் !

(NOTE THE MUSIC INTERLUDE HERE!)

அன்பினிலே அவரிருப்பார் !

அருளினிலே விளங்கிடுவார் !

துன்பமுற்ற பேதையர்தம்

துயரினிலே திகழ்ந்திடுவார் !

சின்னச்சிறு மதலையரின்

சிரிப்பினிலே மலர்ந்திடுவார்

( note the divine rendering by MS here!)

சின்னச்சிறு மதலையரின்

சிரிப்பினிலே மலர்ந்திடுவார்

கன்னியர்கள்,அன்னையர்தம்

கண்ணீரில் கரைந்திடுவார்

ஏழையர்க்கே இரங்கிடுவோர்

இதயங்களில் வீற்றிருப்பார் !

ஊழியர்கள் உழவோரின்

உழைப்பினிலே ஜ்வலித்திடுவார் !

இத்தனை நான் சொன்ன பின்னும்

ஏழை நெஞ்சே ஏன் துயரம் ?

------------------------------------------------------

RSR