82-எனக்குன் இரு பதம் நினைக்க வரமருள்வாய்

M.S. Subbulakshmi

1935' Broadcast' Record ( MS was just 19 then)

Enakkun iru padam - Ragamalika - Part 1 & 2 :-

https://soundcloud.com/thebranchdravidian/m-s-subbulakshmi-ennakkun-iru

https://soundcloud.com/thebranchdravidian/m-s-subbulakshmi-ennakkun

எனக்குன் இரு பதம் நினைக்க வரமருள்வாய் - ஸ்ரீ ராமச்சந்த்ரா

பல்லவி

எனக்குன் இரு பதம் நினைக்க வரமருள்வாய் - ஸ்ரீ ராமச்சந்த்ரா

எனக்குன் இரு பதம் நினைக்க வரமருள்வாய்

சரணங்கள்

எனக்குன் இருபதம் நினைக்க வரம் அருள்

இனித்த தசரதன் தனக்கு மகன் எனும்

மனத்தினுடன் அவதரித்து முனிவரன்

மகத்தில் அரக்கியை வதைத்த அரசே (1)

mp4-----part1 and part-2 given here

enkkun_part_1.mp4
ms_enakkun_part_2.mp4

நடக்கையிலே அஹல்யைக்கு கிருபை செய்து

நடத்தி ஜனகன் வில் ஒடித்து ஜானகியைக் கை

பிடித்துப் பரசுராமனுக்கு மமதையைப்

பிரித்து நகரில் வந்திருக்கும் ஐயனே (2)

தரிக்கும் முடி பரதனுக்குதவி நதி

தடத்தில் குகனுடன் அடுத்து சித்ரகூட

வரைக்குள் ஜானகியோடிருக்கத் துணைவன் நல்

வணக்கம் செய்ய மகிழ் குணக்குஞ்சரமே (3)

துடித்த பரதனும் ஒடுக்கமுடன் வர

தொடுத்த மிதியடி கொடுத்தரசு செய்ய

வடக்கில் அவனையும் விடுத்து நடுவிலே

வனத்தில் வரும் விராதனைக் கொன்றவனே (4)

விடுக்கரிய ஜடாயுவுக்கு உறவு சொல்லி

விடுத்துக் கொண்டு பஞ்சவடிக்கு சென்றவுடன்

அடுத்த சூர்ப்பனகை கொடுத்தகர தூ

ஷணத் திரிசிரர் முடி துணித்த ராகவா (5)

தனித்து வரு மாரீசனைக் கொன்றொரு

கவந்தனுக்கு அருளி ஹநுமனைக் கொண்டொரு

சுக்ரீவனுக்குதவி வாலி தனைப் பொருதி

வானரப் படையை ஆதரித்த துரையே (6)

இருக்கும் ஹனுமான் வந்துரைக்க நிசி சரர்

இருக்கை அறிந்தபின் எரித்த கடலிலே

பெருக்க அணை செய்து வருக்கம் வருக்கமாப்

பெலத்த அரக்கனைத் தொலைத்த தெய்வமே (7)

கொடிய இந்த்ரஜித்தன் ப்ரஹஸ்தன் முதலாகக்

கொள்ளும் மூல பல வெள்ள அரக்கர்தம்

முடியும் கும்பகர்ணன் முடியும் ராவணன்

முடியும் பொடியாக விடும் புங்கவனே (8)

நினைத்தபடி விபீஷணர்க்கு அரசு பெற

நிறுத்தி ஒரு புஷ்பரதத்தில் ஏறி வந்து

தனத்தில் உயர் தரும் அயோத்தியிலே சிம்மா

தனத்திலிருக்கும் ரகு குல குமரனே (9)

*************************************************

ragams to be verified ( 25-11-2016)

==============================

இனித்த தசரதன் தனக்கு மகன் எனும் மனத்தினுடன் அவதரித்து

முனிவரன் மகத்தில் அரக்கியை வதைத்த அரசே (பைரவி)

நடக்கையிலே அஹல்யைக்கு கிருபை செய்து

நடத்தி ஜனகன் வில் ஒடித்து

ஜானகியைக் கைப்பிடித்து

பரசுராமனுக்கும் மமதையைப் பிரித்து

நகரில் வந்திருக்கும் ஐயனே (கேதார கௌளை )

தரிக்கும் முடி பரதனனுக்குதவி

????????????????????????????????........

குஹனுடன் அடுத்து சித்ரகூட வரைக்குள்

ஜானகியோடிருக்கத் துணைவன் நல்வணக்கம் செய்ய மகிழ்

குணக்குஞ்சரமே (தோடி)

துடித்த பரதனும் ஒடுக்கமுடன் வர

தொடுத்த மிதியடி கொடுத்தரசு செய்ய

வடக்கில் அவனையும் விடுத்து

நடுவிலே வனத்தில் வரும் விராdaனைக் கொன்றவனே (மோஹனம்)

விடுக்கரிய ஜடாயுக்கு உறவு சொல்லி

விடுத்துக் கொண்டு

பன்ச்சவடிக்கு சென்றவுடன்

அடுத்த சூர்ப்பனகை கொடுத்த்

கர தூஷணத் திரிசிரர் முடி துணித்த ராகவா (தன்யாசி)

தனித்து வரு மாரீசனைக் கொன்று

கவந்தனுக்கு அருளி

ஹநுமனைக் கொண்டொரு

சுக்ரீவனுக்குதவி

வாலி தனைப் பொருதி

வானரப் படையை அடைந்த துரையே (ஸஹானா)

இருக்கும் ஹனுமான் வந்துரைக்க

நிசி சரர் இருக்கை அறிந்தபின்

எரித்த கடலிலே (?)

பெருக்க அணை செய்து

வருக்கம் வருக்கமா

.???????????????????????????..?

அரக்கனைத் தொலைத்த தெய்வமே (ஷண்முகப்ரியா)

கொடிய இந்த்ரஜித்தன் ப்ரஹஸ்தன்

முதலாகக் கொள்ளும்

மூல பல வெள்ள அரக்கர்தம் முடியும்

கும்பகர்ணன் முடியும்

ராவணன் முடியும்

பொடியாக விடும் புங்கவனே (மத்யமாவதி)

நினைத்தபடி விபீஷணர்க்கு அரசு பெற நிறுத்தி

ஒரு புஷ்பரத்தத்தில் ஏறி வந்து

தனத்தில் உயர் தரும் அயோத்தியிலே

சிம்மாதனத்திலிருக்கும்

ரகு குல குமரனே