என் நிறைந்த நன்றிக்கும் நமஸ்காரத்துக்கும் உரியவர்களில் இன்று முக்கியமாக இருப்பவர் என் கணவர் அவர்கள். நான் அவருக்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை எத்தனை சபைகளில் மனம் விட்டு ,வாய் விட்டு சொன்னாலும் எனக்குத் திருப்தி ஏற்படாது. தமது தனி வாழ்வு என்றும், தனிப் பெருமை என்றும் எண்ணாமல் ,தமக்காக இம்மியும் செய்துகொள்ளாமல், என்னை வாழ்விப்பதற்கும், எனக்குப் பெருமை ஏற்படுவதற்குமே , அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் அவர். நான் சங்கீதத்திலும், சமூகத்திலும் சிறப்பு எய்தவேண்டும் என்பதொன்றையே தமது வாழ்வின் லட்சியமாகக்கொண்டு ,என் இசையையும், வாழ்வையும் பார்த்துப் பார்த்து உருவாக்கியவர் என் கணவர். இன்று எனக்கு கிடைத்துள்ள புகழுக்கெல்லாம் உரியவர் அவரே. எனவே, இதுவரை எனக்கு கிடைத்துள்ள சிறப்புகளையும் இப்போது பெருஞ்சிறப்பாகக் கிடைத்துள்ள இந்த தலைமைப் பதவியையும் அவரது பாதங்களிலேயே சமர்ப்பணம் செய்து வணங்குகிறேன்.
இந்தப் பொறுப்பை ஏற்க நான் அஞ்சிய போதிலும், தாய்-தந்தையாக என்னை வளர்த்து ஆளாக்கி , குருவாக எனக்குப் போதித்து ,நண்பராக எனக்கு உற்சாகமூட்டி ,தெய்வமாக என்னை வாழ்வித்துவரும் என் கணவரைப்பற்றி நான் உள்ளம் திறந்து பேச , இதனால் ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததே என்று மகிழ்கிறேன்.
The above passage is from the Presidential address in Chennai Music Academy by Smt.M.S.Subbulakshmi, in 1968. She was the first lady to be thus honoured. ...Here she gratefully acknowledges the role played by her husband Sr.T.Sadasivam in grooming and protecting her.
PLEASE VISIT
https://mssgems.blogspot.com/2019/08/smtmssubbulakshmi-1968-music-academy.html
for the full speech in Tamizh.
T************************************
Here is my heart-felt homage to MS
(RSR)
MS..She is not a mere singer with golden voice. though age took its toll inevitably in her later years. Her life is her message. Whatever finer values , our motherland has , she personified.
Suffice it to say, Dr.Kalaam considered her as one of his mothers .