முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே!
அனைவரும்: ஆமென்.
தொடக்கச் செபம்
ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்களை அதிகமாக அன்பு செய்வதால், எங்களைப் புனிதமாக்க உம்மையே சிலுவையில் முழுமையாக ஒப்புக் கொடுத்தீர். எங்கள் விண்ணகத் தந்தை முழுமையாய் இருப்பது போல நாங்களும் முழுமையாய் இருக்க விரும்புகிறோம். இந்தச் சிலுவைப்பாதையைத் தியானிக்கும் எங்களைப் புனிதமாக்கியருளும். நாங்கள் ஒரே குடும்பமாக விசுவாசத்துடன் ஒன்றித்து நடக்க உதவியருளும். ஆமென்.
பழிகளை சுமத்தி பரிகசித்தார், உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
பிலாத்து இயேசுவுக்கு அநீதத் தீர்ப்பை வழங்கி அவரை சிலுவைச் சாவுக்குக் கையளிக்கின்றான்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: தீர்ப்புக்காகப் பிலாத்துவின் முன் இயேசு, தலைமைக் குருக்களாலும் மூப்பராலும் நிறுத்தப் பட்டுள்ளார். அவர் நிரபராதி என்றாலும் அவருக்குத் துணை நிற்க யாருமில்லை.
எவ்விதப் பிரச்சனைகளையும் விரும்பாத பிலாத்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாதக் காரணத்தால் இயேசுவை சிலுவைச் சாவுக்குக் கையளிக்கிறான்.
உங்களைப் பற்றி யாராவது தவறாகப் புண்படுத்தும்படிப் பேசியதுண்டா? உங்களைப் பற்றி யாராவது அபாண்டமாகப் பொய் சொல்லியதுண்டா? அப்படி யாராவது செய்திருந்தால், அந்த நேரத்தில் உங்கள் உள்ளம் எப்படி இருந்ததென உணர்ந்தீர்களா? நீங்கள் மிகவும் பயந்திருக்கலாம், காயப்பட்டிருக்கலாம் அல்லது கோபப்பட்டிருக்கலாம்.
அப்படிப்பட்ட இதயத்தை இயேசுவிடம் காட்டுங்கள். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். பின் நீங்கள் தயாராக இருக்கும்போது, உங்கள் இதயத்தை இயேசுவின் இதயத்தைப் போலாக்க உதவி செய்யும்படி அவரிடம் மன்றாடுங்கள். மேலும், நம் தந்தையாகிய இறைவன் என்றும் நம்மோடு இருப்பதை நமக்கு நினைவூட்டும்படி இயேசுவிடம் சொல்லுங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
தாளாச் சிலுவை சுமக்க வைத்தார், உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் மீது பாரமான சிலுவையைச் சுமத்துகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: படைவீரர்கள் இயேசுவைச் சாட்டையால் அடித்து, துன்புறுத்தி, காறித் துப்பி ஏளனம் செய்த பின், அவர் மேல் பாரமான சிலுவையைச் சுமத்தி, நகரத்திலிருந்து கல்வா¡¢யின் கொல்கொத்தா மலை நோக்கி நடத்திச் சென்றனர்.
நீங்கள் எப்போதாவது கடினமான செயல்களைச் செய்ததுண்டா? உங்களை யாராவது எப்போதாவது, குறிப்பாக நீங்கள் நோயுற்ற போது, சா¢யாக நடத்தவில்லையா? சில வேளைகளில் நாம் விரும்புவது போல நம்மைச் சிலர் நடத்துவதில்லை.
அப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் இதயத்தை உற்று நோக்குங்கள். உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். பின் நீங்கள் தயாராக இருக்கும்போது, உங்கள் இதயத்தை இயேசுவின் இதயத்தைப் போலாக்க உதவி செய்யும்படி அவா¢டம் மன்றாடுங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
விழுந்தீர் சிலுவை பளுவோடு, மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு மனம், உடல் சோர்ந்து தள்ளாடி முதல்முறையாக தரையில் முகம் குப்புற விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: சிலுவையின் பாரச் சுமையால் வலுவிழந்த இயேசு முதல் முறை கீழே விழுகிறார். சிலுவை அவர் தோள்களை அழுத்த, சாலையின் கற்கள் அவரது கால்களை காயப் படுத்துகின்றன. மக்கள் கூட்டம் கூச்சலிட்டு அவரைத் தள்ள, படைவீரர்கள் அவரை வேகமாக முன்னோக்கி நகர்த்துகின்றனர். இயேசு மிகவும் சோர்வாக இருக்கிறார்!
விழுந்தால் வலிக்கத்தானே செய்யும். மக்கள் தவறு செய்வது விழுவதற்குச் சமம். அந்த நேரத்தில் நம் இதயமும் அந்த வலியை உணர்கிறது. நீங்கள் எப்போதாவது விழுந்ததுண்டா? உங்கள் இதயம் வலித்ததுண்டா?
அப்போதுள்ள உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். பின் நீங்கள் தயாராக இருக்கும்போது, உங்கள் இதயத்தை இயேசுவின் இதயத்தைப் போலாக்க உதவி செய்யும்படி அவா¢டம் மன்றாடுங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
தாங்கிட வொண்ணாத் துயருற்றே, உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு தன் தாய் மரியாளைச் சந்திக்கின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கோபமான கூட்டத்தின் நடுவில், அவர் அங்கு இருக்கிறார். இயேசு தன் தாயைப் பார்க்கிறார். தாயும் சேயும் அவரவர் வலியை உணர்ந்து கொண்டனர். அந்த வலியைப் போக்க அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இருவரும் தங்களைத்தானே ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர்.
நீங்கள் வருந்தி அழுத நேரத்தை நினைவு கூறுங்கள். அப்போதுள்ள உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். பின் நீங்கள் தயாராக இருக்கும்போது, உங்கள் இதயத்தை இயேசுவின் இதயத்தைப் போலாக்க உதவி செய்யும்படி அவா¢டம் மன்றாடுங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மறுத்திட முடியா நிலையாலே, சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் உதவி செய்கிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கல்வாரிக்குச் செல்லும் வழியில், இயேசுவின் சிலுவையைச் சுமக்கப் படைவீரர்கள் ஒருவனை இழுத்து வந்தனர். அவர் சீரேனே ஊரைச் சார்ந்த சீமோன்.
அவர் எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்தார். பின் இருவரும் சேர்ந்து சிலுவையைச் சுமந்தபடி வெகுதூரம் நடந்து சென்றனர்.
பல காரணங்களுக்காக, உதவி செய்வதென்றால் நமக்குக் கடினமாகத்தான் இருக்கும். அந்த நேரம் நாம் எதையாவது விரும்பிச் செய்து கொண்டிருக்கலாம், அல்லது அந்த நபருக்கு உதவி செய்ய விரும்பம் இல்லாமல் இருக்கலாம். உங்களின் உதவி நாடி வந்தவருக்கு உதவி செய்யமால் இருந்த நேரத்தை சற்று எண்ணிப் பாருங்கள்.
அப்போதுள்ள உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். “உன் உதவிக்காக நன்றி” என்று இயேசு கூறுவது உங்கள் காதுகளில் ஒலிக்கலாம். பின் நீங்கள் தயாராக இருக்கும்போது, உங்கள் இதயத்தை இயேசுவின் இதயத்தைப் போலாக்க உதவி செய்யும்படி அவரிடம் மன்றாடுங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நிலையாய் பதிந்தது உம் வதனம், அன்பின்
விலையாய் மாதின் சிறுதுணியில்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இரத்தம் வழிந்தோடிய இயேசுவின் திருமுகத்தை வெரோணிக்காள் துடைக்கிறாள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: வெப்ப மிகுதியால் இயேசு சோர்வுற்றுத் தளர, அவரது முகத்தில் வியர்வையும் இரத்தக் கறையும் தூசியும் படர்ந்துள்ளது.
அவர்மீது இரக்கம் கொண்ட வெரோணிக்காள் என்ற பெண் ஒருத்தி கூட்டத்திலிருந்து வந்து அவரது முகத்தை ஒரு துணியால் துடைக்கிறார்.
சில வேளைகளில் நீங்கள் செய்த உதவி உங்களுக்குச் சிறிதாகத் தோன்றலாம். தாகத்தில் உள்ளவருக்கு தண்ணீர் கொடுத்தது, வயதானோருக்கு பை சுமந்தது, வருத்தத்தில் உள்ள ஒருவரைப் பார்த்து ஆறுதல் சொன்னது.
நீங்கள் உதவி செய்த போது இருந்த உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். அவர் தன் முகத்தை உங்கள் இதயத்தில் பா¢சாகப் பதித்திருப்பதைப் பாருங்கள். இப்போது உங்கள் இதயம் எவ்வளவு அழகாக உள்ளது!
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால், அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு இரண்டாம் முறையாகத் தரையில் விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்-சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இரண்டாவது முறையாக இயேசு கீழே விழுகிறார்.
சிலுவையின் பாரம் அதிகரிக்கிறது. கூட்டத்திலிருந்தும் படை வீரர்களிடமிருந்தும் வரும் கூச்சல் அவரது நிலையை மோசமாக்-குகிறது. எழுந்திருக்கக் கடினமாக இருந்தாலும் இயேசு எழுந்து செல்கிறார்.
ஏதாவது செயல் உங்களுக்குக் கடினமாக இருந்ததுண்டா? ஏதாவது செயலை மீண்டும் மீண்டும் தவறாக செய்ததுண்டா? எவ்வளவு முயற்சி செய்தும் அச்செயலில் முன்னேற்றம் எதுவும் காண முடியவில்லையா? அப்போது உங்கள் இதயத்தின் நிலை என்ன?
அந்த நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். இரண்டாம் முறை விழுந்தபோது இயேசுவின் நிலையும் இப்படித்தான் இருந்திருக்கும். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். உங்கள் இதயத்தின் நிலையை அவர் அறிவார்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு, அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
அழுது புலம்பும் எருசலேம் நகரத்துப் பெண்களை இயேசு சந்திக்கிறார்.
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: பலர் இயேசுவைப் பின்பற்றி வந்தார்கள். அவர்களுள் சில பெண்கள் மாரடித்துக் கொண்டும், அவருக்காக அழுது கொண்டும் இருந்தனர். அவர் அவர்களைப் பார்த்து “எருசலேம் மகளிரே, எனக்காக அழ வேண்டாம். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்-காகவும் அழுங்கள்” என்று ஆறுதல்படுத்தி, மற்றவர்களையும், குறிப்பாக தங்கள் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளும்படிச் சொல்கிறார்.
பல வேளைகளில் நாம் நம்மைப் பற்றியும், நம் பிரச்சனைகள் பற்றியும் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறோம். பிறரைப் பற்றியும் பிறரது பிரச்சனைகள் பற்றியும் நாம் கவலைப் படுவதில்லை. நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே நினைக்கும் போது உங்கள் இதயத்தின் நிலை என்ன?
அப்போதுள்ள உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். பின் நீங்கள் தயாராக இருக்கும்போது, உங்கள் இதயத்தை இயேசுவின் இதயத்தைப் போலாக்க உதவி செய்யயும்படி அவா¢டம் மன்றாடுங்கள். பிறரைப் பற்றி மட்டுமே நினைக்கும் இதயம். அதுவே இயேசுவின் இதயம்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர், கால்
ஊன்றி நடந்திடும் மெய் நொந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு மூன்றாம் முறை தரையில் விழுகின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: பயணம் மிக நீண்டதாகவும் கடினமானதாகவும் தொ¢கிறது. மறுபடியும், மூன்றாம் முறையாக, இயேசு தரையில் விழுகிறார்.
எனினும், மிகுந்த தைரியத்தோடும் சகிப்புத் தன்மையோடும் இயேசு கல்வாரி நோக்கிச் செல்கிறார். நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு அந்த வேதனைகளை எல்லாம் தாங்கிக் கொள்கிறது.
கடினமாக இருந்தாலும் இயேசு மீண்டும் எழுந்தார். உண்மையில் நாம் ஒரு செயலைச் சிறப்புடன் செய்யப் பல முறை முயன்றும், வெற்றி பெற முடியாமல் போகும்போது நாம் மனந்தளர்ந்து விடுகிறோம். சில நேரங்களில் மற்றவரின் கோபத்துக்கோ நகைப்புக்கோ ஏளனத்துக்கோ பயந்து நாம் செய்யும் செயலைக் கைவிட்டுவிடுகிறோம்.
இவ்வாறு பிறரின் கோபத்துக்கோ நகைப்புக்கோ ஏளனத்துக்கோ பயந்து எதையாவது செய்யாமல் மனந்தளரந்து போனதுண்டா? அப்போதுள்ள உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். உங்கள் இதயத்தில் நடப்பதைக் இயேசு பார்க்கும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். பின் நீங்கள் தயாராக இருக்கும்போது, இயேசுவின் உதவிக்காக அவா¢டம் மன்றாடுங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர், இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் ஆடைகள் களையப்படுகிறது
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: படைவீரர்கள் இயேசுவின் ஆடைகளை நான்கு பாகங்களாகத் தங்களுக்குள் பி¡¢த்துக் கொள்கிறார்கள். பின் அவரது அங்கியை எடுத்து, அது கீழிருந்து மேலாகத் தையலின்றி ஒரே துண்டாக இருந்ததால் ஒருவரையொருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்கு என்று பார்க்கச் சீட்டுப் போடுவோம்” என்றனர். தன் உடலை மறைக்க ஒரு சிறு துணியுடன் இயேசு கூட்டத்தின் முன் நிற்கிறார்.
உங்களுக்குப் பிடித்த ஒன்றை மற்றவருக்குக் கொடுக்கக் கடினமாக உள்ளதா? சில நேரங்களில் எல்லாவற்றையும் உங்களுக்கே வைத்துக் கொள்வீர்களா? உங்களுக்கு சொந்தமான ஒன்று, உங்களுக்கும் மற்றவருக்கும் இடையே பிரச்சனையை உண்டாக்க நீங்கள் அனுமதிப்பீர்களா?
இது போன்ற பிரச்சனைகள் வந்த நேரத்தை நினைவு கூறுங்கள். அப்போதுள்ள உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். பின், உங்கள் இதயத்தை இயேசுவின் இதயத்தைப் போலாக்க உதவி செய்யும்படி அவா¢டம் மன்றாடுங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பொங்கிய உதிரம் வடிந்திடவே, உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இயேசுவை அவர்கள் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. “யூதரின் அரசன்” என்ற குற்றப் பத்திரிக்கை சிலுவையின் மேலிருந்தது. அவருடன் இரு கள்வர்களை, ஒருவன் வலப்பக்கமும் மற்றவன் இடப்பக்கமுமாக சிலுவையில் அறைந்தார்கள். பலர் அவரைக் கடந்து சென்றனர்.
சிலர் அவரைப் பரிகசித்து ஏளனம் செய்தனர்.
படைவீரர்கள் அவரைச் சிலுவையில் ஆணியால் அறைந்தபோது அவர் எவ்வளவு கொடிய வேதனையை அனுபவித்திருப்பார்! ஆயினும் தம்மைத் துன்புறுத்தியவர்களை மன்னிக்கும்படி கடவுளிடம் அவர்களுக்காக வேண்டுகிறார்.
உங்களை ஒருவர் வார்த்தையாலோ செயலாலோ துன்புறுத்தியதுண்டா? அவர்களை மன்னிக்க உங்களுக்குக் கடினமாக இருந்ததா?
மன்னிப்பது கடினம் என இயேசுவுக்கு நன்றாகவேத் தெரியும். எனவே, நீங்கள் அவரிடம் மன்றாடும் போது அவர் உங்கள் மனதை மாற்றி, அவர்களை மன்னிக்க இயேசு கற்றுத் தருவார். இயேசு வழியாக நீங்கள் இப்படிச் செய்த பின் உங்கள் இதயம் எப்படிப்பட்டதாக இருக்கும் என சற்று எண்ணிப் பாருங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
இன்னுயிர் அகன்றது உமைவிட்டு, பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு.
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
எல்லாம் நிறைவேற்றிய இயேசு சிலுவையில் உயிர் விடுகின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இப்போது மதியம். பகல் மூன்று மணி வரை சூரியன் மறைய, இருள் பூமி முழுவதையும் சூழ்ந்து கொண்டது. கோவிலின் திரை இரண்டாகக் கிழிந்தது. அப்பொழுது, இயேசு: “தந்தையே, உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்று பலத்த குரல் எழுப்பி தன் ஆவியைத் தந்தையிடம் கையளிக்கிறார்.
(சிறிது நேரம் மௌனமாக செபிக்கவும்.)
நீங்கள் எதையாவது சிறப்பாகச் செய்ய நினைத்து, இன்னும் சிறிது முயன்றிருந்தால் நீங்கள் விரும்பிய மாற்றத்தை செய்திருக்கலாம் என நினைத்ததுண்டா? ஒரு செயலைச் செய்ய உங்களது கடின முயற்சி இல்லாததால் ஏதேனும் தவறு ஏற்பட்டதுண்டா?
அப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். இயேசு உங்களை அன்பு செய்வதை உணருங்கள். பின் நீங்கள் தயாராக இருக்கும் போது, உங்கள் இதயத்தை இயேசுவின் இதயத்தைப் போலாக்க உதவி செய்யும்படி அவா¢டம் மன்றாடுங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
துயருற்றுத் துடித்தார் உளம்நொந்து அன்னை
உயிரற்ற உடலினை மடிசுமந்து,
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் உடல் தன் தாயின் மடியில் கிடத்தப்படுகிறது
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அரிமத்தியாவின் யோசேப்பு இயேசுவின் உடலை எடுத்து அடக்கம் செய்ய பிலாத்துவிடம் அனுமதி கேட்கிறார். பிலாத்து அவருக்கு அனுமதி கொடுக்க, அவர் சிலுவையிலிருந்து அவரது உடலை இறக்குகிறார். அன்னை மா¢யா உயிரற்ற தன் மகன் இயேசுவின் உடலைத் தன் மடியில் வைத்து, “உன் ஆன்மாவை ஒரு வாள் ஊடுருவும்” என்ற சிமியோன் வார்த்தைகளை எண்ணிப் பார்க்கிறார்.
நீங்கள் அன்பு செய்த ஒருவர் இறந்ததுண்டா? அவரைப் பற்றி நினைக்கையில் உங்கள் இதயம் எப்படி இருக்கும்? உங்கள் இதயத்தை இயேசுவிடம் காட்டி, இறந்தவரைப் பற்றிய உங்கள் எண்ணங்களை இயேசுவிடம் பகிருங்கள். உங்கள் இதயத்தை இயேசு நன்கு அறிந்திருக்கிறார். உங்கள் இதயத்தை இயேசுவிடம் காட்டும் போது அவர் உங்களை அன்பு செய்வதை உணருங்கள். உங்கள் இதயத்தை அவருடைய இதயத்தைப் போல மாற்ற அவரால் மட்டுமே உதவ முடியும்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு, நீர்
அடங்கிய கல்லறை உமதன்று,
எனக்காக இறைவா எனக்காக!
இடர்பட வந்தீர் எனக்காக!
இயேசுவின் திருவுடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: யோசேப்பும் நிக்கோதேமுவும் இயேசுவின் உடலை யூத முறைப்படிச் சுத்தமாகக் கழுவி, நறுமணத் தைலம் பூசி, புதுத் துணியால் போர்த்தி, கல்லறையில் அடக்கம் செய்தனர். பின்னர், யாரும் கல்லறையினுள் நுழையாதபடி அதன் வாயிலில் அவர்கள் ஒரு பெரிய கல் ஒன்றை வைத்தனர்.
நீங்கள் யாருக்காவது மிக வருத்தத்துடன் பி¡¢யாவிடை கொடுத்துண்டா? அது நெடுநாள் பிரிவாகவோ சிறிய பிரிவாகவோ இருக்கலாம். ஒருவேளை அது உங்கள் பிரியமானவரின் இறப்பாகக் கூட இருக்கலாம்.
அப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் இதயத்தின் நிலையை இயேசுவிடம் காட்டுங்கள். இயேசு உங்களை அன்பு செய்வதையும், அவர் உங்களோடு இருப்பதையும், துயரமான உங்கள் இதயத்தினுள் அவர் இருப்பதையும் உருவகப்படுத்திப் பாருங்கள்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
முதல்வர்: கிறிஸ்து இல்லாமல் இவ்வுலகம் இருளில் மூழ்கி விடுகிறது. இயேசு இறந்தபோது, எல்லாம் நம்பிக்கையற்றதாகத் தெரிந்தது. ஆனால் இது முடிவல்ல என்று நமக்குத் தெரியும். இயேசு இறந்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று நமக்குத் தொ¢யும். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளி இறப்பையும் தாண்டி நமக்குப் புத்துயிர் அளிக்கிறது.
செபிப்போமாக!
எங்கள் தந்தையாகிய இறைவா, உயிருள்ள நிலைவாழ்வில் உம்மோடு ஒன்றித்திருக்க, உமது இறப்பிலும் நாங்கள் ஒன்றித்திருக்கிறோம். ஆண்டவரே, பாவ வழிகளிலிருந்து விலகி உமது பரிசுத்த வழிகளில் வளர எங்களுக்குக் கற்றுத் தாரும். ஆமென்.
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக...
➕ ஒரு பரலோக மந்திரம்
➕அருள் நிறைந்த மந்திரம்
➕ திருத்துவ செபம்.
முதல்வர்: இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்- தத்தங்களுக்கு, நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, புனித வியாகுல மாதாவே!
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.