முதல்வர்: சம்மனசுகளின் இராக்கினியே !
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்வர்: சம்மனசுகளின் இராக்கினியே !
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்வர்: சம்மனசுகளின் இராக்கினியே !
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்வர்: சம்மனசுகளின் ராக்கினியே, உம்மிடத்தில் நம்பிக்கையுடன் சரணடைந்து உமது பாதத்தை அண்டி வந்திருக்கும் எங்களை தயவாய் கண்ணோக்கி அருளும். இரக்கத்தின் மாதாவே எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாவிகளின் நம்பிக்கை என எல்லாராலும் அழைக்கப்படுகின்ற அன்னையே நீரே எங்களுக்கு நம்பிக்கையும் அடைக்கலமாய் இருப்பீராக. இயேசுநாதரின் சினேகதிற்காக எங்களுக்கு சகாயம் புரிந்தருளும்.
புனித மரியே, துன்பப்படுகிறவர்களுக்கு உமது ஆறுதலை தந்தருளும். உமது சகாயத்தை நாடுவோர், உமது உதவியை உணரச் செய்தருளும். நவ நாளின்போது நாங்கள் செய்யும் விண்ணப்பங்கள் கடவுளின் சித்தத்திற்கு ஏற்றவையானால் அவற்றை எங்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசி பெற்றுத் தந்தருளும். ஆமென்.
முதல்வர்: மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் அடைக்கலமும் நம்பிக்கையுமாக இருப்பவள் நீரே!
எல்லோரும்: இன்று நாங்கள் அனைவரும் உம்மிடம் வருகிறோம். நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். சம்மனசுகளின் இராக்கினியே, உம்மை நேசிக்கிறோம். எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும், அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம்.
முதல்வர்: சம்மனசுகளின் இராக்கினியே, இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.
எல்லோரும்: சோதனைகளை வெல்லும் பலத்தையும், இயேசு கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும், நல்ல மரணத்தையும் அடைந்து தாரும். உம்மோடும் உமது திருக்குமாரனோடும் என்றென்றும் வாழ அருள் புரியும்.
முதல்வர்: சம்மனசுகளின் இராக்கினியே!
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கு இணங்கி, கலிலேயாவின் கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே./ எங்கள் தாயாகிய சம்மனசுகளின் இராக்கினியின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும். எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு, அருள் புரிவீராக.
எல்லோரும்: சம்மனசுகளின் இராக்கினியே, சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்./ வாழ்வோரின் பாதுகாவலும்,/ மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே./ உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும்,/ மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக./ உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது./ ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே,/ நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும்./ நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம்./ நீரே எங்களின் தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம்.
முதல்வர்: நமது இகபரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக. சம்மனசுகளின் இராக்கினியே!/ மிகுந்த நம்பிக்கையுடன்/ உம் முன் முழந்தாளிடுகிறோம்./ எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம்./ துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும்/ எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன./ எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது./
எல்லோரும்: இரக்கம் நிறைந்த தாயே எங்கள் மேல் இரக்கமாயிரும்./ எங்கள் தேவைகளை நிறைவேற்றும்./ எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும்./ ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால்,/ நாங்கள் அவற்றை அன்புடனும்/ பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள/ சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். சம்மனசுகளின் இராக்கினியே, இந்த வரங்களையெல்லாம்,/ எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல/ ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும்/ நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம்.
முதல்வர்: எங்கள் திருத்தந்தைக்கும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்திட வேண்டுமென்று…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்திட வேண்டுமென்று…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் தூய ஆவியார் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம் , ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: இந்த நவநாள் பக்தர்கள் உமது திருவுளத்தின்படி தங்கள் உடல் நலத்தில் நீடிக்கவும், நோயாளிகள் தங்கள் உடல் நலத்தை திரும்ப அடையவும் வேண்டுமென்று…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: மரித்த நவநாள் பக்தர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும்
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: மக்கள் அனைவரும் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உமது அன்பின் ஆர்வத்தை உணரவும் வேண்டுமென்று…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல்வர்: நமது இராக்கினி அன்னையிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக் கூறுவோம்.
முதல்வர்: நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும்…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும்…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக…
எல்லோரும்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது சம்மனசுக்களின் இராக்கினிக்கு மௌனமாக நன்றி செலுத்துவோம்.
(சிறிது நேரம் மௌனமாக நன்றி செலுத்துவோம்)
முதல்வர்: செபிப்போமாக
எல்லோரும்: ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும்./ நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும்./ நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து/ உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள்புரிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
முதல்வர்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பாதுகாக்க நம் நடுவிலும், நம்மைக் காப்பாற்ற நமக்குள்ளும், நமக்கு வழிகாட்ட நம் முன்னும், நமக்கு காவலாயிருக்க நம் பின்னும், நம்மை ஆசீர்வதிக்க நம் மேலும் இருப்பாராக.
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
எல்லோரும்: ஆமென்.
முதல்வர்: இங்கே கூடியிருப்பவர்களின் விசுவாச அறிக்கை. ஓ சம்மனசுகளின் இராக்கினியே!/ நீர் அருள் நிறைந்தவள்,/ தாராள குணமும் உடையவள்./ இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே./ பாவிகளின் நம்பிக்கை நீரே./ அன்புள்ள அன்னையே உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும்./ உமது கரங்களில் மீட்பு உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம்./ நாங்கள் உமது பிள்ளைகள்./ அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும்./ ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை.
எல்லோரும்: கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர்./ கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர்/ நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர்./ உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான கிறிஸ்து நாதர்/ எங்களைத் தீர்வையிட வரும்போது/ நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம்./ சோதனை வேளையில் உமது உதவியை தேட அசட்டை செய்வதால்,/ எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம்./ சம்மனசுகளின் இராக்கினியே! எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும்,/ கிறிஸ்து நாதரிடம் அன்பையும்,/ இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும்,/ என்றும் உமது உதவியை நாடும் மனதையும்,/ உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத் தாரும். ஆமென்.
முதல்வர்: எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமை மிக்க அவளது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக.
எல்லோரும்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
முதல்வர்: இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
எல்லோரும்: சம்மனசுகளின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்வர்: செபிப்போமாக ஓ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! உமது தாயாகிய மரியாவை, வணங்கும் எங்களுக்கு என்றும் உதவி செய்யத் தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! அவருடைய தாய்க்குரிய சலுகைகளைத் தேடுகிற நாங்கள் உமது மீட்பின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி புரியும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆமென்
முதல்வர்: ஆண்டவரே,இரக்கமாயிரும்!
எல்லோரும்: ஆண்டவரே ,இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே ,இரக்கமாயிரும்!
எல்லோரும்: கிறிஸ்துவே ,இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே ,இரக்கமாயிரும்!
எல்லோரும்: ஆண்டவரே ,இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்லோரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில், இருக்கும் தந்தையாகிய இறைவா...
எல்லோரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
எல்லோரும்: எங்கள் மேல் ,இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
எல்லோரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய், இருக்கிற ஒரே இறைவா...
எல்லோரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: இறைவனின் தாயானப் புனித மரியாவே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: சம்மனசுக்களின் இராக்கினியானப் புனித மரியாவே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: தந்தையாகிய இறைவன் தம் தூதரை அனுப்பப் பெற்ற சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: கபிரியேல் தூதரின் வாழ்த்துரையைப் பெற்றப் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: இறைவனின் தாயாகச் சம்மதம் தெரிவித்த சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: இறைவனின் மக்களைப் பாதுகாக்கும் மைக்கேல் தூதரின் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: இறைப்பயணங்களில் எங்களைப் பாதுகாப்பாக வழிநடத்தும் இரஃபேல் தூதரின் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: எங்களது பாதுகாவலர்களாகப் பணியாற்றும் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: நாசரேத்து வீட்டை லோரெட்டோ நகருக்குத் தூக்கிச் சென்ற சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: உமது திருவுருவத்தை ஜெனசானோவுக்குத் தூக்கிச் சென்ற சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித ஆசிர்வாதப்பரின் பரிசும், பிரான்சிஸ்கன் சபையினரின் பிறப்பிடமுமான போஷியன் குலா ஆலயத்தின் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினி ஆலயப் பங்கு தந்தையர்களுக்காகவும், பங்கு மக்களுக்காகவும் உமது திருமகனிடம் என்றும் பரிந்துரை செய்யும் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: அசிசி நகரின் எளியவரும், செராஃபிக் தந்தையுமான புனித பிரான்ஸிசின் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: வானகத் தூதரணிகள் புடை சூழ விண்ணகம் அடைந்த சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: அரியணைகளின் அரசியான சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: ஆதிக்கங்களின் அரசியான சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: வானகத் தூதரணிகளுக்கு நீதிமன்றமாகத் திகழும் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: எண்ணற்ற செராஃபின்களால் என்றும் சூழப்பட்டுள்ள சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: சம்மனசுக்களின் இராக்கினியானப் புனித மரியாவே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: இறைவனின் தாயும் எங்களது தாயுமாகத் திகழும் சம்மனசுக்களின் இராக்கினியே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித சூசையப்பரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித அந்தோணியாரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித தோமா அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: முக்தி பேறு பெற்ற புனித கார்லோஸ் அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல் : எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல் : எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல் : எங்கள் மேல் இரக்கமாயிரும்!
எல் : இறைவனின் தாயும், சம்மனசுக்களின் இராக்கினியுமான புனித மரியாவே, இதோ, உம்மிடம் சரணடைய ஓடி வந்துள்ளோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக் கொள்ளும் போது நீர் பாரா முகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவருமாய் விண்ணகத்துக்குரியவருமாயிருக்கிற கன்னியே, எல்லா ஆபத்துக்களிரிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். ஆமென்.
முதல்வர்: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படியாக...
எல் : சம்மனசுக்களின் இராக்கினியான புனித மரியாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முதல்வர்: மன்றாடுவோமாக.இறைவா, ஆண்டுதோறும் எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியான புனித மரியாவின் திருவிழாவைச் சிறப்புடன் கொண்டாட அனுமதிக்கும் நீர், உமது மக்களின் செபங்களுக்குச் செவிசாய்த்து, இந்த ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் உமது இரக்கத்தையும் அருட்கொடைகளையும் மனமுவந்து அளித்து, தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைக்க அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய ,இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை செபம் என்றும் நமக்கு கிடைக்கும்படியாக!
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
எல்லோரும்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்லோரும்: தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
எல்லோரும்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
முதல்வர்: ➕அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும், ➕ எங்கள் சர்வேசுரா!
➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.