ஆரோக்கிய மாதா நவநாள்
அன்னை வேளாங்கண்ணி நவநாள்
அன்னை வேளாங்கண்ணி நவநாள்
எல்லோரும்:
➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே,
➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்,
➕ எங்கள் சர்வேசுரா!
➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே. ஆமென்.
ஆரோக்கிய மாதா நவநாள் செபம்
முதல்வர்:
ஆரோக்கிய மாதாவே,
எல்லோரும்:
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்:
ஆரோக்கிய மாதாவே,
எல்லோரும்:
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்:
ஆரோக்கிய மாதாவே,
எல்லோரும்:
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எல்லோரும்:
புனித கன்னியே, இயேசுவின் அன்னையாக இருக்குமாறு முடிவற்ற காலமாக மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! கடவுளின் திருமைந்தன் உமது திரு உதரத்தில் மனுஉருப் பெற்றபோதும், ஒன்பது மாதங்களாக அவரை உமது மாசணுகாத உதரத்தில் தாங்கியபோதும் நீர் அடைந்த பேரின்பத்தை எளியோராகிய நாங்கள் உமக்கு நினைவுறுத்துகிறோம். நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை எங்கள் அன்பினாலும் செபங்களாலும் மீண்டும் புதுப்பிக்கவும், இயலுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறோம். துன்புற்றோருக்கு இரங்கியருளும் அன்னையே! உமது சிறப்பு உதவியையும் பாதுகாப்பையும் எங்களுக்கு தந்தருளும். உமது இறை மைந்தனின் அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். கேட்பவருக்குக் கொடுப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, பெரும் வல்லமை கொண்ட உம் மன்றாட்டுகளை நம்பியுள்ளோம். இந்த நவநாளின் போது நாங்கள் செய்யும் விண்ணப்பங்களை, அவை கடவுளின் திருவுளத்துக்கு ஏற்பவையனில், அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும்.
(விண்ணப்பங்களைக் கூறுவோம்)
இறைவனின் அன்னையே! உம்மில் நாங்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதால் தான், இந்த நவநாளை வணக்கத்துடன் செய்கிறோம். இயேசு மனிதரானபோது நீர் அடைந்த திரு மகிழ்ச்சியை நினைத்து, அதற்கு வணக்கமாக இந்த நவநாளை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
தொடக்க செபம்
எல்லோரும்:
எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனிதரும், நன்றி இல்லாதப் பாவிகளுமாய் இருக்கிற எங்கள் மீது, அளவில்லாத மாட்சி கொண்டிருக்கின்ற உம்முடைய திருச்சந்நிதியிலே இருந்து செபம் செய்யத் தகுதி அற்றவர்களாய் இருந்தாலும், அளவில்லாத இரக்கத்தை நம்பிக் கொண்டு, உமது மாட்சிக்காகவும், அன்னை மரியாவின் புகழ்ச்சிக்காகவும் ஐம்பத்து மூன்று மணி செபமாலை தொடுக்க ஆசையாய் இருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடு செய்து, எவ்வித கவனச் சிதறல்களும் இல்லாமல் முடிக்க உம்முடைய அருளை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
தூய ஆவியார் செபம்
எல்லோரும்:
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதல் ஆனவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மைத் தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை. நல்லது அவனில் எதுவும் இல்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும், உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. ஆமென்.
நம்பிக்கை அறிக்கை
எல்லோரும்:
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகின்றேன்.
புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்பை நம்புகின்றேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்.
நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்.
முதல் மூன்று மணிகளில்
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
திருத்துவப் புகழ்
➕ தந்தைக்கும் ➕ மகனுக்கும் ➕ தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!
தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
பத்து மணிகள் முடிந்ததும்
எல்லோரும்:
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள் / சனி)
1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக!
2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!
4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!
துயர் மறை உண்மைகள் (செவ்வாய் / வெள்ளி)
1. இயேசு பூங்காவனத்தில் இரத்தம் வியர்த்ததைத் தியானித்து துன்பங்களை ஏற்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்ட தியானித்து உடலின் புலன்களை அடக்கி வாழும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
3. இயேசு முள்முடி தரிக்கப்பட்டதை தியானித்து நிந்தை அவமானங்கள், தாழ்ச்சி இவற்றை திடமனத்துடன் ஏற்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
4. இயேசு சிலுவை சுமந்ததை தியானித்து வாழ்வின் சிலுவைகளை இயேசுவோடு சேர்ந்து சுமக்கும்வரத்தைக் கேட்டு செபிப்போம்.
5. இயேசு சிலுவையில் உயிர்விட்டதை தியானித்து தீமை செய்தவர்களை மன்னிக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
மகிமை நிறை மறை உண்மைகள் (புதன் / ஞாயிறு)
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக!
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக!
ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழன்)
1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக!
2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக!
3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக!
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக!
5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக!
இறுதி செபம்
எல்லோரும்:
அதிதூதரான தூய மிக்கேலே, வானதூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே, திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே, நாங்கள் எத்தனை பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஐம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் புனித அன்னை மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம் -ஆமென்.
ஆரோக்கிய மாதா மன்றாட்டு மாலை
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா.
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா.
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!
உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே
முதல்வர்: புனித சூசையப்பரே
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே
முதல்வர்: புனித அந்தோணியாரே
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே
முதல்வர்: புனித தோமா அடிகளாரே
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே
முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே
முதல்வர்: அனைத்துலகம் படைக்குமுன்னே இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: இன்ப வனத்திலே முதல் மனிதருக்கு அறிவிக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: பாவமுள்ள இருளை அகற்றுகிற ஞான ஒளியான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உதித்தெழும் விண்மீன் என இறைவாக்கினரால் உரைக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: மண்ணுலகிற்குப் பலன் விளைவிக்கும் மேகமென்றும் சொல்லப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: நன்மைத்தனத்துக்குத் தகுதியான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: முதுபெரும் தந்தையரால் புனிதை என உரைக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: சென்மப் பாவமின்றி உற்பவித்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: அகங்காரமுள்ள பசாசின் தலையை மிதித்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: புனிதர்களான அன்னம்மாள் சுவக்கீன் இடமாய் பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: முதிர் வயதான தாய் தகப்பனிடத்திலிருந்து பிறந்தவரான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: அவர்களுடைய வேண்டுதலாலும் அறச்செயல்களாலும் பிறந்தவரான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: அனைத்து வானத்தூதர், புனிதர்களைவிட மிகுந்த ஒளியோடே பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: படைப்புப் பொருள்களிலேயே அதிக அறிவோடு பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: திருவருட் கொழுந்தான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: அறநெறியிலே நிறைவுடனே நடந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உம்முடைய பிறப்பைக் கொண்டு விண்ணுலகோருக்கு மகிழ்ச்சி வருவித்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: நீர் பிறந்தவுடனே தந்தைக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: மிகுந்த மகிமையுள்ள மரியா என்னும் பெயர் அடைந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: மூன்று வயதிலே கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: கன்னிமையைத் தேர்ந்து கொண்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: கன்னியர் மடத்தில் இருக்கிறபோது அனைவருக்கும் நன்மாதிரிகையாய் நடந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: நோயாளிகளுடைய வேதனையை அகற்றுகிற புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உம்மை நம்பினவர்களை ஒரு போதும் கைவிடாத கருணைத் தாயாகிய புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: புனிதர்கள் அனைவருக்கும் விண்ணுலக முடியான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்:
செபிப்போமாக
அன்பே உருவான இறைவா, உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்னையை எங்களுக்கு ஆரோக்கிய அன்னையாக அளித்து, அந்த அன்னையை அண்டி வரும் மக்கள் எல்லாருக்கும் நீர் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்காகவும் நாங்கள் நன்றியோடு உம்மைப் புகழ்கின்றோம். அன்னையின் அருட்காவலைத் தேடி வருகின்ற நாங்கள், அவர் எங்களுக்குக் கூறியபடி, உம் திருமகன் இயேசு கிறிஸ்து சொல்வதெல்லாம் செய்திட உதவி புரிந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.- ஆமென்.
ஆரோக்கிய மாதாவை நோக்கி மன்றாட்டு
எல்லோரும்:
கன்னிமரியே! ஆரோக்கிய அன்னையே! எங்களின் ஆன்ம உடல் நோய்களை அகற்றி, எங்களுக்கு ஆறுதலாகவும் அடைக்கலமாகவும் இருந்தருளும். உமது பேருதவியால் எண்ணற்ற பிணியாளிகள் நலமடைந்துள்ளனர். உமது வல்லமையையும், தயவையும் நம்பிக்கொண்டு உம்மை நாடி வந்துள்ளோம். உம் திருமகனையும், உம்மையும் அன்புசெய்து இறைத்தொண்டர்களாக நாங்கள் விளங்குமாறு செய்தருளும். எங்களில் ஆன்ம அருள் வாழ்வை வளப்படுத்தியருளும்.
உலகத் துன்பங்களாலும், மனவேதனைகளாலும் அல்லலுறுகின்றவர்களுக்கு அருகிலிருந்து உமது தாயன்புடன் ஆறுதலளியும். இறைவனின் திருவுளத்திற்கேற்புடையதானால் அத்தகைய துன்ப வேதனைகளினின்று அவர்களைக் காத்தருளும். பாவச்சேற்றில் சிக்குண்டவர்களை உமது அருள் நீரால் கழுவிப் புனிதராக்கியருளும்.
இதய தாழ்ச்சியும், சாந்தமுமுள்ள இறைமகனை ஈன்றெடுத்த தாயே! உமது உதவியை நாடியவர் எவராகிலும் உம்மால் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லையே! எங்களுடைய துயர வேளைகளில் எங்களில் தஞ்சமாயிருப்பீர் என்று உறுதியாயிருக் கிறோம். ஏனெனில் எங்களுக்கு ஆறுதல் அளிக்க விரைந்திடும் விண்ணகத்தாய் நீரே. இம் மண்ணுலகத்தில் கசிந்த கண்களையும், அவற்றினின்று வழிந்தோடும் துன்பக்கண்ணீரையும், கண்டு இரக்கமுடன் எங்களை அரவணைத்துக் கொள்வீராக. இறைமக்களுக்கெல்லாம் சகாயம் புரிந்துவரும் ஆரோக்கிய மாதாவே! நீர் எல்லாம் வல்ல இறைமகன் கிறிஸ்துவின் அன்னையாகையால் எவ்வுதவியையும் எங்களுக்கு அடைந்து கொடுக்கக் கூடியவள் அன்றோ!
எல்லா ஆபத்துகளினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். எங்களைப் பற்றியுள்ள தீமைகளை அகற்றியருளும். இறையன்பில் வளர்ந்திட, நலமும், வரமும் அருளும். இவ்வண்ணம் நாங்கள் ஒவ்வொருவரும் உம்மோடு கூடி என்றென்றும் இறை புகழ் பாடி அவரை வாழ்த்துவோமாக. - ஆமென்.
இறுதி செபம்
பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாகவும்,
நமது தமிழ் குடும்பங்களில் உள்ள அனைவரின் நலனுக்காகவும்,
மரித்த விசுவாசிகளின் ஆன்ம இளைப்பாற்றிகாகவும் ஜெபிப்போமாக :
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
திருத்துவப் புகழ்
➕தந்தைக்கும் ➕ மகனுக்கும் ➕ தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!
தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே,
➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்,
➕ எங்கள் சர்வேசுரா!
➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே. ஆமென்.