தொடக்கச் செபம்
முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே!
அனைவரும்: ஆமென்.
அன்பின் இயேசுவே! நீர் எனக்காகவும் என் வீட்டாருக்காகவும் அனுபவித்த துன்ப வேதனைகளை உமது திருச்சிலுவைப் பாதையின் வழியாக வெளிப்படுத்தியுள்ளீர். உமது பாடுகளும், இறப்பும் உயிர்ப்பும் எங்களுக்கு வான் வீட்டின் கதவுகளைத் திறந்துள்ளன. உமது பாடுகளைத் தியானிக்கும் இவ்வேளையில் உமது உயிரின் விலை எவ்வளவு பெரியது என்பதை நாங்கள் உணரச் செய்யும். வாழ்வில் நல்லதை சரியானதை செய்யவும், கெட்டதை பிழையானதை விலக்கவும், மனச்சான்று பேசும்போது, உம் தெய்வீகக் குரலுக்கு செவிமடுத்து வாழும் முறையை எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் சொல்லித் தாரும். ஆமென்.
எங்கே சுமந்து போறீர்?
சிலுவையை நீர்
எங்கே சுமந்து போறீர்
பொங்கும் பகைவராலே,
அங்கம் நடுநடுங்க
எங்கே போறீர்.
மனித பாவத்தாலே
மரணத் தீர்வை பெற்று
தூய செம்மறி போல,
துக்கத்துடன் வருந்தி
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: மதத் தலைவர்கள் தோட்டத்தில் என்னைக் கைது செய்தார்கள். தலைமைச் சங்கத்தார் முன் நிறுத்தினார்கள். நான் கடவுளின் மகன் என்பதை அவர்களுக்கு வெளிப்படையாகச் சொன்னேன். அவர்கள் என்னை ஏற்க மறுத்தார்கள். அபச்சாரம் என்று சொல்லி, கொலைக் குற்றம் சாட்டி, எனக்கு மரண தண்டனையைக் கொடுத்தார்கள். பின்னர் பிலாத்துவிடம் கூட்டிச் சென்று அவா¢டம் அதற்கான அனுமதியையும் பெற்றார்கள்.
சிந்தனை:
முதல்வர்: நான் பல தடவைகளில் என் குடும்ப உறுப்பினர்களைத் தகாத வார்த்தைகளால் தாக்கித் தவறாகத் தீர்ப்பிட்டுள்ளேன். இதனால் அவர்களைப் பெரிதும் துக்கப்படுத்திக் காயப்படுத்தியுள்ளேன். கோபத்தில் நான் பேசிய கடும் சொற்களால் நான் அவர்களைக் கொலை செய்துள்ளேன்.
உண்மைக்குப் புறம்பான தீர்ப்புகளால் கணவரை, மனைவியை, பிள்ளைகளை, பெற்றோரை, சகோதரர் சகோதா¢களை நான் அதிகம் துக்கப்படுத்திவிட்டேனே! அவ்வாறு அவரை வேதனைப் படுத்தும்போது நாவால் அவரைக் கொலை செய்துவிட்டேனே!
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! மனம் காயப்படும் அளவுக்குக் கடுமையான சொற்களைப் பேசிய தீர்ப்புக்களால் என் குடும்ப உறுப்பினர்களைத் தாக்கிவிட்டேன். இதற்காக நான் மனம் வருந்துகிறேன். அவர்களிமும் உம்மிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பாரச் சிலுவை மரம்,
பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அணைத்து,
பாரத்துடன் நடந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: யூதர்கள் மரத்தால் பொருந்திய பாரச் சிலுவை ஒன்றை எனக்குத் தந்தார்கள். பலர் அதைத் தூக்கி என் தோளில் சுமத்தினார்கள். அதன் பாரத்தை என்னால் தாங்க முடியவில்லை. நீ செய்த எல்லாப் பாவங்களின் மொத்தச் சுமையே அப்போது எனக்குப் பாரமாக இருந்தது. அதையே நான் சுமந்தேன். நீ அதை ஒருபோதும் ஒரு விரலால் கூட தொட்டுப் பார்த்ததில்லை. நீ பாவம் செய்யும் ஒவ்வொரு வேளையும் தொடர்ந்து உன் பாவத்தின் பாரத்தை என் தோளில் சுமத்துகிறாய் என்பதை மறவாதே.
சிந்தனை:
முதல்வர்: குடும்பச் சுமைகள் பலவிதம். பொருளாதாரச் சுமையோ இவற்றுள் தனி ரகம். இது உறுப்பினர்கள் எல்லோரையும் பொ¢தும் தாக்கி அழுத்துகிறது. பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து இப்பாரத்தைச் சுமக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இதனை ஒருவா¢ன் தோள் மேல் மட்டும் சுமத்துவது நியாயமா?
குடும்பப் பாரத்தை மற்றவர்களோடு சேர்ந்து சுமக்க வேண்டிய நான், அதைத் தட்டிக் கழித்து ஒதுங்கி இருந்திருக்கிறேன்! நான் தவறு செய்யும் போதெல்லாம் என்னைக் காப்பாற்ற அதை மற்றவர்களின் தோள் மேல் சுமத்தியிருக்கிறேனே!
நான் செய்தது சா¢தானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! என் சகோதர சகோதா¢களோடு சேர்ந்து நானும் என் குடும்ப பொருளாதாரப் பாரத்தில் பங்கெடுக்க எனக்கு உதவிசெய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கல்வாரி மலை நாடி,
தள்ளாடித் தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களைத்,
தனிமையாய் சுமந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: இரவு முழுவதும் உறங்கவில்லை. உணவு தண்ணீர் எதையும் எவரும் எனக்குத் தரவில்லை. இதனால் உடலில் மிகவும் பலவீனமாய் இருந்தேன். ஆயிரக் கணக்கில் வாங்கிய கசை அடிகளால் இரத்தம் பாய்ந்து ஓட, சோர்ந்து போயிருந்தேன். இவை போதாதென்று இப்போது தோளிலே பாரமான சிலுவையும் கூட என்னால் நகர முடியவில்லை. மனந்திரும்ப மாட்டேன் என்று அடம்பிடிக்கும் உன்னை ஒரு கணம் நினைத்தேன். தடுமாறி விழுந்தேன். பலவீனம் உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும்தான்.
சிந்தனை:
முதல்வர்: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் வருவது இயல்பு. குடும்பம் இதற்கு விதிவிலக்கு அல்ல. நான் செய்த தவறுகளால் வறுமை நிலைக்கு வந்துவிட்டேன். இதுவும் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சா¢வுதான்; எவ்வளவுதான் உடைந்து போனாலும் ஒருபோதும் தாழ்வு மனநிலைக்குள் மட்டும் நான் போகவில்லை.
வீரத்தோடு மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்றும், சோம்பலைக் களைந்து கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்றும் எண்ணாது அலட்சியமாய் இருந்துவிட்டேனே! ஒவ்வொரு முறையும் தவறியபோது, மனச்சான்று கடுமையாக என்னைக் கண்டித்தும் திருந்தமாட்டேன் என்று தொடர்ந்து அடம்பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தேனே!
நான் செய்தது சா¢தானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! பொருளாதாரச் சுமை தாக்கும்போது நான் சோர்வினால் மனம் உடைந்து போகிறேன். இதில் இருந்து எழுந்திருக்க எனக்கு உதவிசெய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மாமரி கன்னி அன்னை,
மகனின் கோலங்கண்டு
மாதுயருடன் வாடி,
மனம் நொந்து வருந்த
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: நேரம் இளங்காலை வேளை, யெருசலேம் வீதியில் கொலைக் களப் பவனி. தெருவோரம் இரண்டிலும் மக்கள் கூட்டம். நான் சிலுவையை சுமந்து கொண்டு தள்ளாடிச் சென்றேன். அங்கே நின்றவர்கள் எனக்கு நிகழ்ந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நடுவே கதறி அழும் சத்தம். பழக்கமான குரல். சற்றே திரும்பினேன். மகனே! என்று என் அம்மா ஓலமிட்டு அழுதுகொண்டே என்னிடம் ஓடிவந்தார். அவா¢ன் கலங்கிய கண்கள் என்னோடு பேசின. மகனே! பாவத்தை அழிக்க என் பாசம் உனக்குத் தடையில்லை என்றன.
சிந்தனை:
முதல்வர்: குடும்பத்தில் அம்மா அன்பின் வடிவமாக இருக்கிறார். அவர் ஒரு சுமைதாங்கி. கணவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருந்து பாசத்தால் அனைவரையும் இணைக்கும் ஒரு பாசக் கயிறு. அவருக்கு குடும்பத்தில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது.
என் தாயின் தியாகத்தையும், அன்பையும் தொ¢ந்திருந்தும் பல தடவைகளில் நான் அவரை மனம் நோகச் செய்து விட்டேனே! பல தடவைகளில் பாசத்தைப் பாவித்தே நான் அவருக்கு எதிராகப் பாவங்களை செய்திருக்கின்றேனே!
நான் செய்தது சா¢தானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! என் அம்மாவின் அன்பையும் தியாகத்தையும் தொ¢ந்திருந்தும் பல தடவைகளில் நான் அவரை மனம் நோகச் செய்துவிட்டேன். இனி வரும் காலத்தில் நான் அவருக்காக வாழ்ந்து அவரை மகிழ்விக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
உதிரம் ஆறாய் சிந்தி,
உள்ளம் உரமிழந்து
சீரேன் சீமோன் துணையை,
ஏற்று வழி நடந்து
எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: தோட்டக்காரரான சீமோன் என் எதிரே வந்து கொண்டிருந்தார். நானோ மலைப்பாதையில் மேலே ஏற முடியாது தடுமாறிக் கொண்டிருந்தேன். மலையுச்சிக்குப் போகுமுன் நான் இறக்கக்கூடும் என்று கொலைகாரக் கும்பல் அஞ்சியது. அதனால் எனக்கு உதவி செய்ய அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். முதலில் மறுப்புத் தெரிவித்த அவர், பின்னர் என்மேல் இரங்கி எனக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டார். அவர் என் சுமையைப் பகிர்ந்து கொண்டதால் எனக்குக் கொஞ்சம் சுகமாக இருந்தது.
சிந்தனை:
முதல்வர்: தந்தையோ, தாயோ, சகோதரர்களோ, பிள்ளைகளோ எல்லோரும் விழுந்தே எழுகிறோம். உதவி செய்ய மறுப்பதே ஒருவர் விழுவதற்குக் காரணமாயிருக்கிறது. குடும்பம் குலைந்து போகாமல் ஒன்றாய் இருக்க ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டியது அவசியம்.
பொருளாதாரத்திலே நலிவுற்று உடைந்து போன என் சகோதர சகோதா¢ ஒருவருக்குக் கைகொடுத்துத் தூக்கி விட நான் முன்வரவில்லையே! தூரத்தில் விலகி நின்றுகொண்டுதானே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உதவி செய்வதற்குப் பதிலாக அவரின் சுமைகளைப் பொ¢தாக்கி அவரை வேதனைப் படுத்தியிருக்கிறேனே!
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! எல்லோரும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறேன். இதற்கு மாறாக நான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல மனதை எனக்குத் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கர்த்தரே உம் வதனம்,
இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெரோணிக்காள்,
வெண் துகிலால் துடைத்தும் எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: தலையில் முட்கள் ஏறியதால் முகத்தில் இரத்தம் வடிந்து, உறைந்துபோய் இருந்தது. அதன்மேல் தூசி படிய, என் முகம் உருக்குலைந்து காணப்பட்டது. எல்லோரும் என் முதத்தைப் பார்த்தார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு மட்டுமே என் முகம் உருக்குலைந்து இருந்தது தெளிவாகத் தொ¢ந்தது. துணிச்சலோடு அவர் என்னிடம் ஓடிவந்தார். தன் கைக்குட்டையால் என் முகத்தைத் துடைத்தார். என் முகத்தை நான் அதில் பதித்தேன். அத்தோடு, அவா¢ன் உள்ளத்திலும் அதை நிரந்தரமாய் பதித்துவிட்டேன்.
சிந்தனை:
முதல்வர்: துயரத்தில் இருக்கும் ஒருவருக்கே ஆறுதல் அவசியம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் துயரத்தில் இருக்கிறோம். எல்லோருக்கும் ஆறுதல் தேவைப்படுகிறது. வீட்டுக்கு வெளியே இதைத் தேடினால் அது பெரும் சிக்கலை உள்ளே கொண்டுவரும்.
துன்ப துயரத்தில் இருந்த என் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு ஆறுதல் சொல்ல நான் முன்வரவில்லையே! அவா¢ன் தேவைகளை அறிந்தும் அவருக்கு உதவ முன்வராது என் தேவைகளுக்காக மட்டுமே நான் அவரைப் பாவித்திருக்-கின்றேனே! நான் செய்தது சா¢தானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! என் குடும்பத்தில் துன்ப துயரத்தில் இருப்பவர்கள் யாரென நான் அறிவேன். இவர்களுக்கு நான் ஆறுதலாய் இருக்க எனக்கு உதவிசெய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த,
பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும்
வீரத்துடன் எழுந்து எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: மலைப் பாதையில் கற்களும் முட்களும் பரவிக் கிடந்தன. எனக்கோ பாவத்தைச் சுமந்த பயணம். பாரத்தின் உருவில் பாவத்தின் ஆதிக்கமே என்னை அதிகம் தாக்கியது. ஒரு கணப்பொழுதில் உங்கள் எல்லோருடைய பாவங்களையும் ஒன்றாய்ச் சேர்த்து நினைத்தேன். அவை என்னைக் கடுமையாகத் தாக்கியதால் சுமைதாங்கி நான் சாய்ந்தேன். என் முதுகிலே அப்பாரம் விழுந்தது. அப்போது சாத்தான் தன் வெற்றியைக் கொண்டாடினான். நானோ மீண்டும் வீரனாய் எழுந்தேன்.
சிந்தனை:
முதல்வர்: குறைகள் இல்லாதவர்கள் எவரும் இல்லை. எல்லோருமே பாவிகள்தான். குடும்பத்தில் உண்டாகும் பிணக்குகளால் எல்லோருமே பாவம் செய்கிறோம். நம்மில் சிலர் சுயநலனுக்காக மிக மோசமாகவே ஏனைய குடும்ப உறுப்பினர்களைக் கொடூரமாகத் தாக்குகிறோம். சொத்துத் தகராறுகளே உறவின் முறிவுக்கு முக்கிய காரணம். பாகப் பிரிவினையால் நான் எண்ணற்ற பாவங்களைச் செய்திருப்பது எமக்குத் தெரிந்ததுதானே! பாவத்தில் பயணப் பாதையை பழக்கமாக்கிக்கொண்ட நான் அதை விட்டு வெளியேறாது அச்சேற்றையே நாம் தொடர்ந்து நாடியிருக்கின்றோமா!
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! என் சகோதர சகோதாரிகளோடு உறவை முறித்துக் கொண்டதால் பாவங்கள் பல செய்துள்ளேன். உறவுகளைச் சீராக்கி மீண்டும் எழுந்திருக்க எனக்கு உதவிசெய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
புண்ணிய ஸ்தீரிகள் பலர்,
புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும்,
நேசக்கண்ணீர் சொ¡¢ந்து எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: தெருவோரத்தில் நின்ற பெண்கள் சிலர் என்னைப் பார்த்து, தங்கள் கண்ணீரால் என்னோடு பேசினார்கள். உங்களுக்கு ஏன் இந்தப் பா¢தாப நிலை என்று அவர்கள் சொன்னதைக் கேட்டேன். நான் அவர்களிடம், பாவப்பட்டது நான் அல்ல பாவிகள் நீங்கள் தான் என்றேன். பச்சை மரமே எரிகிறது என்றால் பட்ட மரம் எவ்வாறு எரியும் என்று யோசியுங்கள் என்றேன். எனவே நீங்கள் உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் காப்பாற்றுங்கள். பாவத்தைத் தேடி நீங்கள் போக வேண்டியதில்லை அதுவே உங்களைத் தேடி வீட்டுக்கு வரும் என்றேன்.
சிந்தனை:
முதல்வர்: இயந்திர உலகைத் தாண்டி நாம் இப்போது இணைய உலகிலே வாழ்கிறோம். அறிவு வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளும் அதிவேகமாக நிகழ்கின்றன. நல்லது கெட்டது எல்லாமே இணைய தளத்தில் இலவசமாக கிடைக்கின்றன. ஒரு குழந்தை நல்லவராக வாழ்ந்து உயரவும், கெட்டவராகப் பாழடைந்து சீரழியவும் இதுவே இன்று காரணமாகவும் இருக்கிறது. இணையதளத்தின் தவறான பாவணையால் பிள்ளைகள், கெட்டுப் போகக் கூடாது என்பது எனக்குத் தெரிந்ததுதானே!
இணையதளத்தால் வரும் ஆன்மீக ஆபத்துகளைத் தொ¢ந்திருந்தும் அதைத் தவறாகப் பயன்படுத்துவோருடன் கூட்டத்தில் நானும் சிக்கிக் கொண்டது உண்மைத்தானே! நான் செய்தது சா¢தானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! இணையதள அறிவில் பிள்ளைகள் பெற்றோரை மிஞ்சிய காலம் இது. இருந்தபோதிலும் பிள்ளைகள் கெட்டுப்போகாது அவர்களைப் பாதுகாக்க எனக்கு உம் ஞ¡னத்தைத் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
சிலுவைப் பாரத்தாலே,
மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில்,
முகம் படிந்தெழுந்து எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: சிலுவைப் பயணத்தின் போது நான் மூன்று முறைகள் விழுந்தேன். மரச் சுமையால் முதல் முறையும், மனச் சுமையால் இரண்டாம் முறையம் விழுந்தேன். ஆனால் மூன்றாம் முறையோ மரணச் சுமையால் விழுந்தேன். நான் எவ்வளவுதான் துன்பப்பட்டாலும், எவ்வளவு தான் என் உயிரைக் கொடுத்தாலும் மனம் மாறமாட்டேன் என்று, நீ தொடர்ந்து அடம்பிடிக்கிறாயே. உனக்காக நான் இறப்பது வீண் என்ற எண்ணமே எனக்கு மரணப் பயத்தைத் தந்தது. உன்னை எண்ணியவாறே நான் இம்முறை தரையிலே விழுந்தேன்.
சிந்தனை:
முதல்வர்: சாவு வரும்போது ஒருவர் நிலைகுலைந்து போகிறார். அவர் தடுமாறித் தரையில் விழுந்து விடுகிறார். இக்கால குடும்பங்களில் கணவனோ, மனைவியோ, அல்லது இருவருமோ ஒப்பந்த வாழ்வில் தடுமாறி திசைமாறிப்போகும் நிகழ்வுகள் ஏராளம் உண்டு. இவர்களின் மனங்கள் முறிவதால் குடும்ப வாழ்வின் உறவும் ஒன்றிப்பும் இல்லாது போகிறது.
சேர்ந்து வாழ மனமில்லாமலும், பிரிந்து போக முடியாமலும் வாழும் நிலையில் நான் காலத்தைக் கடத்தி வந்தது, எனக்குத் தொ¢யும்தானே! எல்லாம் தொ¢யும் என்ற பெருமையில் அடுக்கடுக்காய் தவறுகளைச் செய்ததும் எனக்குத் தெரியும்தானே!
உறவு என்று நடித்து, பிரிந்து வாழ்வதைப் பழக்கமாக்கிக் கொண்டதால் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்து விட்டேனே!
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! எங்களை நல்ல குடும்பமாக உலகுக்குக் காட்டிக் கொண்டு குடும்பமாக வாழாது, பிளவுபட்டு நிற்கும் கணவர்களையும் மனைவிகளையும் நீர் ஒரு போதும் கைவிடாதேயும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நீடாடை கழற்றவே,
கோடாகோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய் பெருகி,
வேதனையால் வருந்தி எங்கே போறீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: கல்வாரி மலை உச்சியில் ஒரு நாடகம் அரங்கேறியது. அது ஆடை உரியும் ஒரு காட்சிப் படலம். அடிகளால் ஏற்பட்ட காயங்களோடு என் நீண்ட ஆடை ஒட்டியிருந்தது. வீரர்கள் அதை உரிந்தார்கள். அப்போது அக்காயங்கள் மீண்டும் திறந்தன. ஏற்கனவே பட்ட வேதனைகளை மீண்டும் ஒருமுறை நான் அனுபவித்தேன். அத்தோடு என் மானமும் காட்சிப் பொருளானது. எல்லோரின் நகைப்புக்கும் ஆளானேன். உன் இரகசிய உடல்சார்ந்த பாவங்களுக்காகவே நான் பகிரங்கமாக அப்போது அவமானப்பட்டேன்.
சிந்தனை:
முதல்வர்: தவறான இணைய பயன்பாட்டால் திருமண உறவின் புனிதம் பறிபோய்விட்டது. இது வியாபாரத் தொழிலாக புதிய உருவம் எடுத்துள்ளது. கணவன் மனைவி இவர்களின் புனிதமான உறவு அந்நியர்களின் தலையீட்டால் பங்கப்படுத்தப் படுகிறது.
ஒழுக்கத்திற்குப் புறம்பான உறவுகளே பாவங்களாகி விட்டன. பல இளைஞர்கள் திருமணத்திற்கு முன்னரே இப்பாவத்தால் தங்கள் புனிதத்தை இழந்து விடுகிறார்கள்.
திருமண வாழ்வின் உன்னதத்தை கானாவூர் திருமணத்தில் குறைவை நிறைவு செய்ததின் வழியாக இயேசு நமக்கு எடுத்துரைத்தார்.
நானும் நமது உறவுகளை அன்பின் மூலம் புனிதப் படுத்த முயற்சித்தேனா?
மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! உம் திருக் குடும்பத்தின் புனிதத்தை, புரிந்துணர்வு, அன்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மூலமாக மேம்படுத்தினீரே. அதைபோல் நாங்களும் குடும்ப உறவுகளை ஆன்பினால் கட்டிக்காக்க வரம் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நீட்டிய கால் கரத்தில்,
நீண்ட இரும்பாணிகள்
நிஷ்ட யூதர் அறைந்தும்,
நேசத்திலே வெந்து பலியாகினீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: என் சாவுக்குக் கொலைகாரர் தந்த படுக்கை சிலுவை. கைகளிலும், கால்களிலும் ஆணிகள் ஏறியதும் என் உடல் சிலுவையோடு ஒன்றாக ஒட்டியது. வதைப்போருக்கு இரக்கம் இல்லை. பழிப்போருக்கு எல்லை இல்லை. இறப்பதைப் தவிர எனக்கும் இனி வேறு வழி இல்லை. சிலுவையை உயர்த்தி நட்டு வைத்தார்கள். நாடி நரம்புகள் எல்லாம் அறுந்து போக, நான் உன்னைத்தான் நினைத்தேன். இப்போதாவது திருந்தமாட்டாயா என்று ஏங்கினேன்.
சிந்தனை:
முதல்வர்: பல குடும்பங்கள் இன்று இரும்பால் செய்யப்படாத ஆணிகளில் தொங்குகின்றன. வறுமை, வெறுமை, தனிமை என்ற ஆணிகள் இவற்றுள் சில, செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலையில் வறுமையும், உறவுகள் அறுந்த நிலையில் தனிமையும் வீட்டுக்குள்ளே விருந்தாளிகளாக நுழைந்துவிட்டன.
வறுமை, வெறுமை, தனிமை என்ற ஆணிகளில் தொங்கி வேதனைகளோடு ஒட்டி வாழ்வது தான் குடும்ப வாழ்வு என்றால் நிம்மதியைத் தேடி சிலுவையில் தொங்கும் இயேசுவிடம் வரவில்லையே! எனக்குத் துன்பங்கள் வந்த போது மட்டும் என்னைப் புரிந்து கொண்ட நான் மற்றவர்களுக்கு துன்பங்கள் வரும்போது அவர்களைப் புரிந்து கொள்ளவில்லையே!
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! வறுமையும், வெறுமையும் தனிமையும் ஒன்று சேர்ந்து வாட்டும் குடும்பங்களை நீர் அறிவீர். இன்னல்களிலும் இவர்கள் இன்பமாய் வாழ இவர்களுக்கு வழிசெய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
சிலுவைப் பீடமேறி,
மும்மணி நேரம் தொங்கி
வான் பிதாவை வேண்டி,
ஆருயிர் ஒப்படைத்து
பலியாகினீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: மூன்று மணி நேரம் மூன்று ஆணிகளில் தொங்கினேன். சில பெண்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இருந்த இடம் தொ¢யாமல் ஓடி ஒளிந்துகொண்டார்கள். கைவிடப்பட்ட நிலையில் தனிமையை உணர்ந்தேன். கொடிய வேதனைப்பட்டு என் அப்பாவை அழைத்து, நீருமா என்னை கைவிட்டீர் என்று கதறி அழுதேன். மனதைச் சற்று தேற்றியபின் நீர் என்னிடம் ஒப்படைத்த அனைத்தையும் நான் பிரமாணிக்கத்தோடு நிறைவாகச் செய்து முடித்துவிட்டேன், உம்மிடம் வருகிறேன் என்றேன். அப்போது உன்னையும் நினைத்தேன். நீ எப்போது மனம் மாறுவாயோ என்று எண்ணியவாறே இறந்தேன். என் கண்கள் மூட, தலையும் கீழே சா¢ந்தது.
சிந்தனை:
முதல்வர்: குடும்பங்களில் இறப்புகள் தவிர்க்க முடியாத நிகழ்வுகள். ஒருவா¢ன் இறப்பு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் துக்கத்தைத் தருகிறது. இறப்புகள் எல்லாம் அவர்களுக்கு இழப்புகளே. உயிர் போகும்நிலை உடலுக்கு மட்டும் அல்ல ஆன்மாவுக்கும் இருக்கிறது. வானகத் தந்தையை எக்காலத்துக்கும் விட்டுப்பிரிவதே ஆன்மாவின் சாவு. உடல் இறந்துபோவது இயற்கை. ஆனால் ஆன்மாவைக் கொல்லுவது கொடிய பாவம். என் ஆன்மாவை வாழவைத்து வான் வீட்டுக்கு வேண்டிய விடயங்களை இவ்வளவு காலமும் தேடாதிருந்தது உண்மைதானே!
தங்கத்தால் சிலுவையைச் செய்து சங்கிலியில் தொங்கவிட்ட நான் அதை வெறும் அலங்கார ஆபரணமாக மட்டும்தானே அணிந்திருந்தேன். கடவுளின் சாவைச் சுமக்கிறேன் என்ற எண்ணத்தை மறந்து விட்டேனே!
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! எவரும் இறக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. இந்த உலகில் உள்ளவை எல்லாம் அழிவுக்கு உரியவையே அழியாத வாழ்வுக்காக இவ்வுலகில் வாழ ஆண்டவரே எனக்கு உதவி செய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மரி தாய் மடிமீதில்,
மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால்,
ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோஸ்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: எனக்கு இரு நண்பர்கள் இருந்தார்கள் நான் இறந்ததை அறிந்ததும், உடனே அங்கே ஓடி வந்தார்கள். என் உடலைச் சிலுவையில் இருந்து இறக்கினார்கள். துயரத்தில் ஆழ்ந்திருந்த என் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி அதை அவர் மடியில் வைத்தார்கள். உன் இதயத்தை ஒரு வாள் காயப்படுத்தும் என்ற சிமியோனின் அன்றைய வாக்கு அப்போது உண்மையாயிற்று. அன்னை மரியாள் தன் மகனுக்காக மட்டும் அல்ல, உனக்காகவும் அவர் ஆறாத்துயரத்தில் மூழ்கினார்.
சிந்தனை:
முதல்வர்: முதிர்ந்த வயதில் பெற்றோர் இறப்பது இயற்கையின் நியதி, ஆனால் வாழவேண்டிய இளம் வயதில் வாலிபப் பிள்ளைகள் இறப்பதுதான் பெற்றோர்க்கு தாங்க முடியாத போ¢டி. அதுவும் அகால மரணத்தால் வாலிபர்கள் இறப்பதை அவர்கள் ஏற்கவே மாட்டார்கள்.
இளம் வயதினர் தம் மதியீனத்தால் இறக்கும் தருணங்களை விலக்கி வாழ முயற்சிகள் எடுக்க வேண்டாமா? தேவதாயின் மடியில் காலமெல்லாம் வாழ்வதற்குப் பதிலாக நான் உலக செல்வங்களின் பிடியில்தானே காலாகாலமாக வாழ்ந்து என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டேன்.
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! இளம் வயதில் தங்கள் பிள்ளைகளை இழந்து வேதனைப்படும் பெற்றோருக்கு நீரே ஆறுதல் கூறும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கர்த்தரின் உடல்தனை,
கல்லறைக்குள் அடக்க
உத்தானம் ஜீவனுமாய்,
உயிருடன் எழுந்து எப்போ வருவீர்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோஸ்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: என் நண்பர்கள் வெள்ளைத்துணியை வி¡¢த்து நறுமணப் பொருட்களைப் பரப்பினார்கள். அதன்மேல் என் உடலை வைத்தார்கள். உடல்மேலும் அவற்றைத்தூவி நன்றாகச் சுற்றிக் கட்டினார்கள். பின்னர் அதை மரியாதையாகத் தூக்கிக் கொண்டுபோய் கல்லறையில் வைத்தார்கள். பின்னர் அதன் வாயிலை மூடிச் சென்றார்கள். யூதத் தலைவர்களோ நான் வெளியே வராதவாறு கல்லறைக்குக் காவலர்களை நிறுத்தினார்கள்.
சிந்தனை:
முதல்வர்: கல்லறைத் தோட்டத்தில் இறந்தவர்களுக்குச் சமாதிகள் எழுப்பப்படுகின்றன. இக்கல்லறைச் சமாதிகள் குடும்பங்களின் சொத்துக்களாக இருக்கின்றன. இவற்றில் இறந்தவரின் பெயருடன் அவரின் பிறப்பு, இறப்பு ஆகிய குறிப்புகளை எழுதி வைக்கிறோம்.
இறந்தவரின் குறிப்பு கல்லறையில் எழுதப்பட்டாலும், வாழ்வோர் ஏட்டில் பதிவாக வேண்டும் என்ற ஞானத்தோடு அவர் வாழ்ந்திருக்க வேண்டாமா? மரணம் எனக்கு எவ்வேளையும் வரலாம் என்பதால், விண்ணகம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு கடந்த காலத்தில் நான் வாழவில்வையே?
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! இறந்தோரை அடக்கம் செய்யும் நிகழ்வுகளில் நான் பங்கெடுக்கும் போது நானும் ஒருநாள் அடக்கம் செய்யப்பட இருப்பதால் விண்ணகத்தை நினைத்து வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கல்லறைக்குள் அடங்கா,
இறைவனின் மைந்தனே
உத்தானம் ஜீவனுமாய்,
உயிருடன் எழுந்து
காட்சி தந்தீர்.
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: நான் இறந்ததும் என் சீடர்கள் எல்லோரும் தடுமாறிப் போனார்கள். அச்சத்தால் நடுங்கிய அவர்கள் என் அம்மாவோடு மாடி வீடொன்றில் ஒளிந்து கொண்டார்கள். என் உடலுக்கு நறுமணத் தைலம் பூசவந்த பெண் ஒருவருக்கு உயிர்த்த மகிமையடைந்த என் உடலைக் காண்பித்தேன். பின்னர் திருத்தூதர்கள், எம்மாவு சீடர்கள் எனப் பலருக்கு என்னைக் காண்பித்தேன். மனம்மாறி என்னை நம்பும் ஒருவருக்கு நான் இன்றும் மகிமையடைந்த என் உடலைக் காண்பித்துக் கொண்டே இருக்கிறேன்.
சிந்தனை:
முதல்வர்: இருந்தாலும் இறந்தாலும் நம்புவோர் வாழ்கிறார்கள். குடும்பத்தில் இறந்தோரின் பெயர்களை பிறக்கும் பிள்ளைகளுக்கு வைத்து இறந்தவர்கள் நம்மோடு வாழ்வதை நினைவு கூறுகின்றோம். நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள் விட்டுச் சென்ற பசுமையான நினைவுகளை நாம் என்றும் மறப்பதில்லை.
இவ்வுலகில் நாம் வாழ்வது சிறிது காலமே. இச்சிறிய வாழ்வுக்காக நிலையான பெரிய வாழ்வை நான் பலியாக்கி விட்டேனா?
அன்பு, அமைதி, உண்மை, நேர்மை, நீதி, இரக்கம், தியாகம், மன்னிப்பு, மகிழ்ச்சி போன்ற மதீப்பீடுகளிலும் இறை வார்த்தைகளிலும் தேவநற்கருணையிலும் உயிர்த்த இயேசுவின்
மகிமையடைந்த உடலைக் காண முயற்சிகள் எடுத்துள்ளேனா?
நான் செய்தது சரிதானா? மனமே நீ பதில் சொல்.
செபம்:
அனைவரும்: அன்பின் இயேசுவே! திருமுழுக்கில் எனக்குத் தொடங்கும் நிலைவாழ்வு எவராலும் எதனாலும் தடைப்படாதிருக்க பார்த்துக் கொள்ளும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
முதல்வர்: கிறிஸ்து இல்லாமல் இவ்வுலகம் இருளில் மூழ்கி விடுகிறது. இயேசு இறந்தபோது, எல்லாம் நம்பிக்கையற்றதாகத் தெரிந்தது. ஆனால் இது முடிவல்ல என்று நமக்குத் தொ¢யும். இயேசு இறந்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று நமக்குத் தெரியும். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளி இறப்பையும் தாண்டி நமக்குப் புத்துயிர் அளிக்கிறது.
செபிப்போமாக!
எங்கள் தந்தையாகிய இறைவா, உயிருள்ள நிலைவாழ்வில் உம்மோடு ஒன்றித்திருக்க, உமது இறப்பிலும் நாங்கள் ஒன்றித்திருக்கிறோம். ஆண்டவரே, பாவ வழிகளிலிருந்து விலகி உமது பா¢சுத்த வழிகளில் வளர எங்களுக்குக் கற்றுத் தாரும். ஆமென்.
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக...
➕ பரலோக மந்திரம்,
➕ அருள் நிறைந்த மந்திரம்
➕ திருத்துவ செபம்.
முதல்வர்: இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு, நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,
புனித வியாகுல மாதாவே!
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.