➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.
இயேசுவின் திரு இதயப் பாடல்:
இயேசுவின் இருதயமே, என்றும்
இரங்கிடும் அருள் மயமே, உந்தன்
ஆசீரும் அருளும் சேர்ந்து வந்தால், எங்கள்
ஆனந்தம் நிலைபெறுமே (2)
1.
இறைவனுக்கிதயம் உண்டு - அந்த
இதயத்தில் இரக்கம் உண்டு (2) - என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால் - எங்கள்
அனைவர்க்கும் வாழ்வு உண்டு (2) - இயேசுவின்
2.
பாவிக்குப் பொறுத்தல் உண்டு - அந்தப்
பரலோக வாழ்வும் உண்டு - நாங்கள்
கூப்பிடும் குரலைக் கேட்பதற்கு - இந்த
கோவிலில் தெய்வம் உண்டு - இயேசுவின்
தொடக்கச் செபம்:
எல்: எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! நீர் உமது திருச்சிலுவையின் பாடுகளால் இந்த உலகை மீட்டீர் என்பதால், பாவிகளாகிய நாங்கள் உம்மை ஆராதித்து வணங்கி உம்மைப் போற்றுகிறோம். ஆமென்.
தூய ஆவியார் செபம்:
எல்: தூய ஆவியாரே எழுந்தருள்வீர். வானினின்று எமது பேரொளியின், அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியவர் தந்தாய், வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மை தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை. நல்லது அவனில் ஏதுமில்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதைக் குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா, உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணியப் பலன்கள் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர். அழிவிலா இன்பமும் அருள்வீரே. ஆமென்.
நம்பிக்கை அறிக்கை:
எல்: விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித, கத்தோலிக்கத் திருஅவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவமன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.
மனத் துயர் செபம்:
எல்: எல்லாம் வல்ல இறைவா! நீர் அளவில்லாத அனைத்து நன்மைகளும் நிறைந்தவராக இருப்பதால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் உம்மை முழு மனதோடு அன்பு செய்கிறேன். இப்படிப்பட்ட உமக்கு எதிராகப் பாவங்களைச் செய்ததால் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். எனக்கு இந்த மனத்துயரின்றி வேறு மனத்துயரில்லை. எனக்கு இந்தத் துக்கமின்றி வேறு துக்கமில்லை. இனி ஒருபோதும் இப்படிப்பட்டப் பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதி செய்கிறேன். மேலும் எனக்கு வலுவில்லாததால், இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிந்தின திரு இரத்தத்தால் என் பாவங்களை எல்லாம் கழுவி, மன்னித்து, உமது இரக்கத்தையும், விண்ணக நிலைவாழ்வையும் தந்தருளுவீர் என்று முழுமனதோடு நம்புகிறேன். திருஅவை நம்பிக்கையோடு கற்றுத் தரும் உண்மைகளை எல்லாம் நீரே கற்றுத் தந்தது என நான் உறுதியாக நம்புகிறேன். ஆமென்.
பெரிய மணியில்:
முத: இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
எல்: என் இதயத்தை உம் இதயத்தைப் போல் மாற்றியருளும்.
சிறிய மணியில்: (மூன்று முறை)
முத: இயேசுவின் மதுரமான திரு இதயமே!
எல்: என் சிநேகமாயிரும்.
முடிவில்:
முத: மரியாவின் மாசற்ற திரு இதயமே!
எல்: என் இரட்சணியமாயிரும்.
முத: இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
எல்: என் இதயத்தை உம் இதயத்தைப் போல் மாற்றியருளும்.
முதல் பத்து மணி கருத்து:
பிற மதத்தினர், மற்றப் பிரிவினைச் சகோதரர்கள் அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக நாம் மன்றாடுவோம்.
சிறிய மணியில்: (பத்து முறை)
முத: இயேசுவின் மதுரமான திரு இதயமே!
எல்: என் சிநேகமாயிரும்.
முடிவில்:
முத: மரியாவின் மாசற்ற திரு இதயமே!
எல்: என் இரட்சணியமாயிரும்.
முத: இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
எல்: என் இதயத்தை உம் இதயத்தைப் போல் மாற்றியருளும்.
இரண்டாம் பத்து மணி கருத்து:
மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக நாம் மன்றாடுவோம்.
சிறிய மணியில்: (பத்து முறை)
முத: இயேசுவின் மதுரமான திரு இதயமே!
எல்: என் சிநேகமாயிரும்.
முடிவில்:
முத: மரியாவின் மாசற்ற திரு இதயமே!
எல்: என் இரட்சணியமாயிரும்.
முத: இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
எல்: என் இதயத்தை உம் இதயத்தைப் போல் மாற்றியருளும்.
மூன்றாம் பத்து மணி கருத்து:
நாம் அனைவரும் செய்த அனைத்துப் பாவங்களுக்குப் பரிகாரமாக நாம் மன்றாடுவோம்.
சிறிய மணியில்: (பத்து முறை)
முத: இயேசுவின் மதுரமான திரு இதயமே!
எல்: என் சிநேகமாயிரும்.
முடிவில்:
முத: மரியாவின் மாசற்ற திரு இதயமே!
எல்: என் இரட்சணியமாயிரும்.
முத: இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
எல்: என் இதயத்தை உம் இதயத்தைப் போல் மாற்றியருளும்.
நான்காம் பத்து மணி கருத்து:
மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக நாம் மன்றாடுவோம்.
சிறிய மணியில்: (பத்து முறை)
முத: இயேசுவின் மதுரமான திரு இதயமே!
எல்: என் சிநேகமாயிரும்.
முடிவில்:
முத: மரியாவின் மாசற்ற திரு இதயமே!
எல்: என் இரட்சணியமாயிரும்.
முத: இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
எல்: என் இதயத்தை உம் இதயத்தைப் போல் மாற்றியருளும்.
ஐந்தாம் பத்து மணி கருத்து:
எல்லோரும் திரு இதயத்தை அறிந்து அன்பு செய்ய வேண்டும் என்று அன்னை மரியா, புனிதர்கள் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுத்து நாம் மன்றாடுவோம்.
சிறிய மணியில்: (பத்து முறை)
முத: இயேசுவின் மதுரமான திரு இதயமே!
எல்: என் சிநேகமாயிரும்.
முடிவில்:
முத: மரியாவின் மாசற்ற திரு இதயமே!
எல்: என் இரட்சணியமாயிரும்.
முத: இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
எல்: என் இதயத்தை உம் இதயத்தைப் போல் மாற்றியருளும்.
இறுதி செபம்:
முத: இயேசுவின் திரு இதயமே...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: பிறப்புநிலைப் பாவமின்றிக் கருவுற்றத் தூய கன்னி மரியாவின் மாசற்ற திரு இதயமே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: இயேசுவின் திரு இதயமானது...
எல்: எங்கும் போற்றப்படுவதாக!
முத: திரு இதயத்தின் அன்பரும், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையும், திருக்குடும்பத்தின் தலைவருமான புனித யோசேப்பே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: இயேசுவின் திரு இதயமானது...
எல்: எங்கும் போற்றப்படுவதாக!
முத: என் இயேசுவே!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: என் இயேசுவே!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: என் இயேசுவே!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
எல்: இயேசுவின் திரு இதயமே! உமது அரசு வருக. எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களது செபம், தபம், அன்றாடச் செயல்கள், இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களது உயிருள்ள வரை நாங்கள் உம்மை அன்பு செய்யவும், உம்மை மாட்சிப்படுத்தவும் எங்களுக்கு அருள் புரியும். ஆமென்.
இயேசுவின் திரு இதயத்திற்குப் புகழ்மாலை:
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முத: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: தூய ஆவியாராகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உங்கள் பதில்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: என்றும் வாழும் தந்தையின் திரு மகனாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: தூய கன்னித் தாயின் கருவில் தூய ஆவியாரால் உருவாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: இறை வார்த்தையான மகனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திரு இதயமே...
முத: எல்லையற்ற மாட்சிமை நிறைந்த இயேசுவின் திரு இதயமே...
முத: இறைவனின் தூய ஆலயமாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: அதி உன்னத இறைவனின் திருப்பேழையாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: இறைவனின் இல்லமும் விண்ணக வாயிலுமாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: அன்புத் தீ கொழுந்துவிட்டெரியும் சூளையாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: நீதிக்கும் அன்புக்கும் உறைவிடமாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: நன்மைத்தனமும் அன்பும் நிறைந்த இயேசுவின் திரு இதயமே...
முத: அனைத்து நற்பண்புகளும் முழுமையாக நிறைந்திருக்கும் இயேசுவின் திரு இதயமே...
முத: எல்லா ஆராதனைப் புகழ்ச்சிகளுக்கும் தகுதியான இயேசுவின் திரு இதயமே...
முத: எல்லா இதயங்களுக்கும் மையமும் அரசருமான இயேசுவின் திரு இதயமே...
முத: ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திரு இதயமே...
முத: இறைத்தன்மை முழுமையாகப் பொங்கி வழியும் இயேசுவின் திரு இதயமே...
முத: உமது தந்தைக்கு மிகவும் விருப்பமான இயேசுவின் திரு இதயமே...
முத: உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திரு இதயமே...
முத: நிலையானச் சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: பொறுமையும் மிகுந்த இரக்கமும் நிறைந்த இயேசுவின் திரு இதயமே...
முத: உம்மை மன்றாடும் அனைவருக்கும் நிறைவளிக்கும் தாராளமாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: வாழ்வுக்கும் புனிதத்துக்கும் ஊற்றாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: எங்கள் பாவமன்னிப்புக்குப் பரிகாரமான இயேசுவின் திரு இதயமே...
முத: நிந்தை அவமானங்களால் நிறைந்துள்ள இயேசுவின் திரு இதயமே...
முத: எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்துகின்ற இயேசுவின் திரு இதயமே...
முத: இறப்பு வரையும் தந்தைக்குக் கீழ்படிந்திருந்த இயேசுவின் திரு இதயமே...
முத: ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திரு இதயமே...
முத: ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: எங்கள் உயிரும் உயிர்ப்புமாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: எங்கள் அமைதிக்கும் ஒப்புரவுக்கும் இணைப்பாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: எங்கள் பாவங்களுக்குப் பரிகாரப் பலியாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: உம் மீது நம்பிக்கை கொண்டோரின் மீட்பாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: உம்மில் மரிப்போரின் எதிர்நோக்காகிய இயேசுவின் திரு இதயமே...
முத: எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திரு இதயமே...
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே!
எல்: என் இதயத்தை உம் இதயத்தைப் போல் மாற்றியருளும்.
முத: மன்றாடுவோமாக! என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இதயத்தையும், பாவிகள் எங்களுக்காக அவர் உமக்குச் செலுத்தியப் பரிகாரப் பலியையும், வணக்கப் புகழ்ச்சிகளையும் அன்புடன் கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுபவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
இயேசுவின் திரு இதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம்:
எல்: இயேசுவின் திரு இதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு நீர் செய்து வரும் எல்லா உதவிகளையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியுள்ள அன்போடு உமது திருப்பாதத்தில் தெண்டனிட்டு ஆராதிக்கிறோம். அன்புள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். நீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் யாராவது உமது திரு இதயத்தை வேதனைப்படுத்தியிருந்தால், அவருடையக் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு இரக்கம் காட்டியருளும்.
இது மட்டுமின்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமாகவும், முதியோருக்கு ஊன்றுகோலாகவும், விதவைகளுக்கு ஆதரவாகவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமாகவும் இருந்தருளும். ஒவ்வொரு வீட்டிலும், நோயாளிகள், வேதனைப்படுவோர் தலைமாட்டிலும் நீர் விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திரு இதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பாசத்தோடு அன்பு செய்தீரே! உமது விசாரணையில் உள்ள எல்லாப் பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை நீர் ஆசீர்வதியும். அவர்களுடைய இதயத்தில் நம்பிக்கையையும், இறைப்பற்றையும் வளரச் செய்யும். உயிருள்ளக் காலத்தில் நீர் அவர்களுக்கு அடைக்கலமாகவும், இறப்பின் வேளையில் ஆறுதலாகவும் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! நாங்கள் என்றென்றும் உமது அன்பில் வாழ்ந்து, மரித்து, எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற அருள் புரியும். ஆமென்.
முத: இயேசுவின் திரு இதயமே!
எல்: என் நம்பிக்கை எல்லாம் உமது பேரில் வைக்கிறேன்.
பாடல்:
கிறிஸ்துவின் ஆன்மாவே என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே எனக்கு எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே என்னைக் கழுவிடுமே.
கிறிஸ்துவின் பாடுகளே என்னைத் தேற்றிடுமே.
ஓ நல்ல இயேசுவே எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரிய விடாதேயும்.
தீயப் பகைவரிடம் இருந்து என்னைக் காத்தருளும்.
எனது இறப்பின் வேளையினில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களோடு எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும். ஆமென்.
புனிதர்கள் மன்றாட்டு:
முத: இயேசுவின் மதுரமான திரு இதயமே...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: மரியாவின் மாசற்றத் திரு இதயமே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித யோசேப்பே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: அசிசியின் புனித பிரான்சிசே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: அசிசியின் புனித கிளாரம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: பதுவையின் புனித அந்தோணியாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித அருளானந்தரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: கொல்கொத்தாவின் புனித தெரேசம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித குரியாகோஸ் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித அல்போன்சம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: திருத்தூதரானப் புனித தோமாவே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.