Search this site
Embedded Files

இறைவார்த்தை
செபங்கள்
  • பொருளடக்கம்
  • ஆசீர்கள்
    • வீடுகளை ஆசீர்வதித்தல்
    • கடைகளை ஆசீர்வதித்தல்
    • நிறுவனங்களை ஆசீர்வதித்தல்
    • கட்டப்பட்டும் வீடுகளை ஆசீர்வதித்தல்
    • நோயாளிகளை ஆசீர்வதித்தல்
  • செபங்கள்
  • சிலுவைப்பாதை
    • சிலுவைப்பாதை பாடல்கள்
    • சிலுவைப்பாதை 1
    • சிலுவைப்பாதை 2
    • சிலுவைப்பாதை 3
    • சிலுவைப்பாதை 4
    • சிலுவைப்பாதை 5
    • சிலுவைப்பாதை 6
    • சிலுவைப்பாதை 7
    • இறைவார்த்தை இணைப்பு
  • நவநாட்கள்
    • இறை இரக்க செபம்
    • திரு இருதய செபமாலை
    • திருக்குடும்ப செபமாலை
    • புனித சூசையப்பர் நவநாள்
    • புனித சுவக்கீம் அன்னம்மாள் நவநாள்
    • பெற்றோரை பெற்றோருக்கான செபம்
    • தூய ஆவியார் நவநாள்
    • புனித தந்தை பியோ நவநாள்
    • புனித பிரான்சிஸ் அச்சியார் நவநாள்
  • அன்பிய நவநாட்கள்
    • அன்பிய சங்கமம்
    • புனித ஜோசப் வாஸ்
    • புனித தேவசகாயம்
    • புனித அருளானந்தர்
    • புனித குரியாகோஸ்
    • புனித தோமையார்
    • புனித அன்னை தெரேசம்மாள்
    • புனித அல்போன்சம்மாள்
    • புனித கார்லோ அகுடிஸ்
    • புனித சம்மனசுகளின் இராக்கினி நவநாள்
    • அன்னை வேளாங்கண்ணி
  • மன்றாட்டு மாலைகள்
  • திருப்பலி
  • செபமாலை
    • மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
    • ஒளி நிறை மறை உண்மைகள்
    • துயர் நிறை மறை உண்மைகள்
    • மாட்சி நிறை மறை உண்மைகள்
    • 24 மணி நேர செபமாலை
  • நற்கருணை ஆராதனைகள்
    • நற்கருணை ஆசீர்வாதம்
    • நற்கருணை ஆராதனை 1
    • நற்கருணை ஆராதனை 2
    • நற்கருணை ஆராதனை 3
    • நற்கருணை ஆராதனை 4
    • நற்கருணை ஆராதனை 5
    • 24 மணி நேர செபமாலை
  • இறந்தோர்க்கான செபம்
    • இறந்தோர் வீட்டில் செபம் 1
    • இறந்தோர் வீட்டில் செபம் 2
    • இறந்தோர் வீட்டில் செபம் 3
    • மன்றாட்டு மாலை
    • இறந்தோர் பாடல்கள்
    • வீட்டில் சடங்குகள்
    • அடக்கச் சடங்குத் திருப்பலி
    • கல்லறைச் சடங்குகள்
    • திருப்பலி வாசகங்கள்
  • பாடல்கள்
    • திருப்பலிப் பாடல்கள்
    • பொதுப் பாடல்கள்
    • மாதா பாடல்கள்
    • தவக்கால பாடல்கள்
    • கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
  • இறைப்புத்தகம்
  • புனிதர்கள்
  • விவிலியம்
செபங்கள்
  • பொருளடக்கம்
  • ஆசீர்கள்
    • வீடுகளை ஆசீர்வதித்தல்
    • கடைகளை ஆசீர்வதித்தல்
    • நிறுவனங்களை ஆசீர்வதித்தல்
    • கட்டப்பட்டும் வீடுகளை ஆசீர்வதித்தல்
    • நோயாளிகளை ஆசீர்வதித்தல்
  • செபங்கள்
  • சிலுவைப்பாதை
    • சிலுவைப்பாதை பாடல்கள்
    • சிலுவைப்பாதை 1
    • சிலுவைப்பாதை 2
    • சிலுவைப்பாதை 3
    • சிலுவைப்பாதை 4
    • சிலுவைப்பாதை 5
    • சிலுவைப்பாதை 6
    • சிலுவைப்பாதை 7
    • இறைவார்த்தை இணைப்பு
  • நவநாட்கள்
    • இறை இரக்க செபம்
    • திரு இருதய செபமாலை
    • திருக்குடும்ப செபமாலை
    • புனித சூசையப்பர் நவநாள்
    • புனித சுவக்கீம் அன்னம்மாள் நவநாள்
    • பெற்றோரை பெற்றோருக்கான செபம்
    • தூய ஆவியார் நவநாள்
    • புனித தந்தை பியோ நவநாள்
    • புனித பிரான்சிஸ் அச்சியார் நவநாள்
  • அன்பிய நவநாட்கள்
    • அன்பிய சங்கமம்
    • புனித ஜோசப் வாஸ்
    • புனித தேவசகாயம்
    • புனித அருளானந்தர்
    • புனித குரியாகோஸ்
    • புனித தோமையார்
    • புனித அன்னை தெரேசம்மாள்
    • புனித அல்போன்சம்மாள்
    • புனித கார்லோ அகுடிஸ்
    • புனித சம்மனசுகளின் இராக்கினி நவநாள்
    • அன்னை வேளாங்கண்ணி
  • மன்றாட்டு மாலைகள்
  • திருப்பலி
  • செபமாலை
    • மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
    • ஒளி நிறை மறை உண்மைகள்
    • துயர் நிறை மறை உண்மைகள்
    • மாட்சி நிறை மறை உண்மைகள்
    • 24 மணி நேர செபமாலை
  • நற்கருணை ஆராதனைகள்
    • நற்கருணை ஆசீர்வாதம்
    • நற்கருணை ஆராதனை 1
    • நற்கருணை ஆராதனை 2
    • நற்கருணை ஆராதனை 3
    • நற்கருணை ஆராதனை 4
    • நற்கருணை ஆராதனை 5
    • 24 மணி நேர செபமாலை
  • இறந்தோர்க்கான செபம்
    • இறந்தோர் வீட்டில் செபம் 1
    • இறந்தோர் வீட்டில் செபம் 2
    • இறந்தோர் வீட்டில் செபம் 3
    • மன்றாட்டு மாலை
    • இறந்தோர் பாடல்கள்
    • வீட்டில் சடங்குகள்
    • அடக்கச் சடங்குத் திருப்பலி
    • கல்லறைச் சடங்குகள்
    • திருப்பலி வாசகங்கள்
  • பாடல்கள்
    • திருப்பலிப் பாடல்கள்
    • பொதுப் பாடல்கள்
    • மாதா பாடல்கள்
    • தவக்கால பாடல்கள்
    • கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
  • இறைப்புத்தகம்
  • புனிதர்கள்
  • விவிலியம்
  • More
    • பொருளடக்கம்
    • ஆசீர்கள்
      • வீடுகளை ஆசீர்வதித்தல்
      • கடைகளை ஆசீர்வதித்தல்
      • நிறுவனங்களை ஆசீர்வதித்தல்
      • கட்டப்பட்டும் வீடுகளை ஆசீர்வதித்தல்
      • நோயாளிகளை ஆசீர்வதித்தல்
    • செபங்கள்
    • சிலுவைப்பாதை
      • சிலுவைப்பாதை பாடல்கள்
      • சிலுவைப்பாதை 1
      • சிலுவைப்பாதை 2
      • சிலுவைப்பாதை 3
      • சிலுவைப்பாதை 4
      • சிலுவைப்பாதை 5
      • சிலுவைப்பாதை 6
      • சிலுவைப்பாதை 7
      • இறைவார்த்தை இணைப்பு
    • நவநாட்கள்
      • இறை இரக்க செபம்
      • திரு இருதய செபமாலை
      • திருக்குடும்ப செபமாலை
      • புனித சூசையப்பர் நவநாள்
      • புனித சுவக்கீம் அன்னம்மாள் நவநாள்
      • பெற்றோரை பெற்றோருக்கான செபம்
      • தூய ஆவியார் நவநாள்
      • புனித தந்தை பியோ நவநாள்
      • புனித பிரான்சிஸ் அச்சியார் நவநாள்
    • அன்பிய நவநாட்கள்
      • அன்பிய சங்கமம்
      • புனித ஜோசப் வாஸ்
      • புனித தேவசகாயம்
      • புனித அருளானந்தர்
      • புனித குரியாகோஸ்
      • புனித தோமையார்
      • புனித அன்னை தெரேசம்மாள்
      • புனித அல்போன்சம்மாள்
      • புனித கார்லோ அகுடிஸ்
      • புனித சம்மனசுகளின் இராக்கினி நவநாள்
      • அன்னை வேளாங்கண்ணி
    • மன்றாட்டு மாலைகள்
    • திருப்பலி
    • செபமாலை
      • மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
      • ஒளி நிறை மறை உண்மைகள்
      • துயர் நிறை மறை உண்மைகள்
      • மாட்சி நிறை மறை உண்மைகள்
      • 24 மணி நேர செபமாலை
    • நற்கருணை ஆராதனைகள்
      • நற்கருணை ஆசீர்வாதம்
      • நற்கருணை ஆராதனை 1
      • நற்கருணை ஆராதனை 2
      • நற்கருணை ஆராதனை 3
      • நற்கருணை ஆராதனை 4
      • நற்கருணை ஆராதனை 5
      • 24 மணி நேர செபமாலை
    • இறந்தோர்க்கான செபம்
      • இறந்தோர் வீட்டில் செபம் 1
      • இறந்தோர் வீட்டில் செபம் 2
      • இறந்தோர் வீட்டில் செபம் 3
      • மன்றாட்டு மாலை
      • இறந்தோர் பாடல்கள்
      • வீட்டில் சடங்குகள்
      • அடக்கச் சடங்குத் திருப்பலி
      • கல்லறைச் சடங்குகள்
      • திருப்பலி வாசகங்கள்
    • பாடல்கள்
      • திருப்பலிப் பாடல்கள்
      • பொதுப் பாடல்கள்
      • மாதா பாடல்கள்
      • தவக்கால பாடல்கள்
      • கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
    • இறைப்புத்தகம்
    • புனிதர்கள்
    • விவிலியம்

பாடல்கள்

செபமாலை 

அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும், எங்கள் சர்வேசுரா!                                                    

தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே. ஆமென்.



தொடக்க செபம்


எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனிதரும், நன்றி இல்லாதப் பாவிகளுமாய் இருக்கிற எங்கள் மீது, அளவில்லாத மாட்சி கொண்டிருக்கின்ற உம்முடைய திருச்சந்நிதியிலே இருந்து செபம் செய்யத் தகுதி அற்றவர்களாய் இருந்தாலும், அளவில்லாத இரக்கத்தை நம்பிக் கொண்டு, உமது மாட்சிக்காகவும், அன்னை மரியாவின் புகழ்ச்சிக்காகவும் ஐம்பத்து மூன்று மணி செபமாலை தொடுக்க ஆசையாய் இருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடு செய்து, எவ்வித கவனச் சிதறல்களும் இல்லாமல் முடிக்க உம்முடைய அருளை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.


தூய ஆவியார் செபம்


தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின்  தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதல் ஆனவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மைத் தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல்    மனிதரில் எதுவும் இல்லை. நல்லது அவனில் எதுவும் இல்லை. மாசு      கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும், உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. ஆமென்.


நம்பிக்கை அறிக்கை


விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்.


முதல் மூன்று மணிகளில்:


1 இயேசு கற்பித்த செபம்

3 மங்கள வார்த்தை செபம்

1 திருத்துவ புகழ்


இயேசு கற்பித்த செபம்


விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென். 


மங்கள வார்த்தை செபம்


அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே, தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.

திருத்துவப் புகழ்


தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.


பத்து மணிகள் முடிந்ததும்


ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் 

1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக!


2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு  என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.


3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!


4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!


5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!

துயர் மறை உண்மைகள் 

1. இயேசு பூங்காவனத்தில் இரத்தம் வியர்த்ததைத் தியானித்து துன்பங்களை ஏற்கும்  வரத்தைக் கேட்டு செபிப்போம்!


2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்ட தியானித்து உடலின் புலன்களை  அடக்கி வாழும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!


3. இயேசு முள்முடி தரிக்கப்பட்டதை தியானித்து நிந்தை அவமானங்கள், தாழ்ச்சி  இவற்றை திடமனத்துடன் ஏற்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்! 


4. இயேசு சிலுவை சுமந்ததை தியானித்து வாழ்வின் சிலுவைகளை இயேசுவோடு  சேர்ந்து சுமக்கும்வரத்தைக் கேட்டு செபிப்போம்!


5. இயேசு சிலுவையில் உயிர்விட்டதை தியானித்து தீமை செய்தவர்களை மன்னிக்கும்  வரத்தைக் கேட்டு செபிப்போம்!

மகிமை நிறை மறை உண்மைகள்

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ  செபிப்போமாக!


2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!


3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!


4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக!


5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக!

ஒளி நிறை மறை உண்மைகள்

1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக!


2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக!


3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக!


4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக!


5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும்  தியானிப்போமாக!

இறுதி செபம்

அதிதூதரான தூய மிக்கேலே, வானதூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே, திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே, நாங்கள்  எத்தனை பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஐம்பத்து மூன்று மணி  செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் புனித அன்னை  மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம் -ஆமென்.

புனித தேவமாதாவின் மன்றாட்டு மாலை

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்! 

அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை  நன்றாகக் கேட்டருளும். 

முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...

அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...

அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...

அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...

முதல்வர்: சர்வேசுரனுடைய புனித மாதாவே ...

முதல்வர்: கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...

முதல்வர்: கிறிஸ்துவினுடைய மாதாவே...

 முதல்வர்: தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...

முதல்வர்: மகா பரிசுத்த மாதாவே...

முதல்வர்:  அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..

முதல்வர்:  பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...

முதல்வர்:  ஆச்சரியத்துக்குரிய மாதாவே...

முதல்வர்:  நல்ல ஆலோசனை மாதாவே,..

முதல்வர்:  சிருஷ்டிகருடைய மாதாவே...

புனித தேவமாதாவின் மன்றாட்டு மாலை

முதல்வர்:  இரட்சகருடைய மாதாவே...

முதல்வர்:  மகா புத்தியுடைத்தான கன்னிகையே...

முதல்வர்:  மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...

முதல்வர்:  பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற           கன்னிகையே...

முதல்வர்:  சக்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே...

முதல்வர்:  தயையுள்ள கன்னிகையே...

 முதல்வர்:  விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....

முதல்வர்:  தருமத்தின் கண்ணாடியே...

முதல்வர்:  ஞானத்துக்கு இருப்பிடமே...

முதல்வர்:  எங்கள் சந்தோஷத்தின் காரணமே...

முதல்வர்:  ஞானப் பாத்திரமே...

முதல்வர்:  மகிமைக்குரிய பாத்திரமே...

முதல்வர்:  அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...

முதல்வர்:  மறை பொருளை கொண்ட ரோஜா மலரே

முதல்வர்:  தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...

முதல்வர்:  தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே...

முதல்வர்:  சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...

முதல்வர்:  வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...

முதல்வர்:  பரலோகத்தினுடைய வாசலே...

முதல்வர்:  விடியற்க்காலத்தின் நட்சத்திரமே...

முதல்வர்:  வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...

முதல்வர்:  பாவிகளுக்கு அடைக்கலமே...

முதல்வர்:  கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...

முதல்வர்:  கிறிஸ்தவர்களுடைய சகாயமே...

முதல்வர்:  சம்மனசுக்களுடைய இராக்கினியே...

முதல்வர்:  பிதா பிதாக்களுடைய இராக்கினியே...

முதல்வர்:  இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...

முதல்வர்:  அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே....

முதல்வர்:  மறைசாட்சிகளுடைய இராக்கினியே...

முதல்வர்:  துதியர்களுடைய இராக்கினியே...

முதல்வர்:  கன்னியர்களுடைய இராக்கினியே...

முதல்வர்:  அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே....

முதல்வர்:  ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...

முதல்வர்:  பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...

முதல்வர்:  திருச் செபமாலையின் இராக்கினியே...

முதல்வர்:  சமாதானத்தின் இராக்கினியே...


முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் 

செம்மறியே...

அனைவரும்:  எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முதல்வர்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளு-மாயிருக்கிற நித்திய கன்னிகையே! சகல ஆபத்துக்களி-லேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும்.. 

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதல்வர்:  செபிப்போமாக 

  இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

பாத்திமா மாதா மன்றாட்டு மாலை

முதல்வர்:         ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்:       கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்:  கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

முதல்வர்:       ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்:     கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைவரும்:   கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும். 

முதல்வர்:      விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
அனைவரும்:   எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:        உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
அனைவரும்:   எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:        தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்:   எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:        மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்:   எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: பாத்திமாவெனும் சிற்றூரில் ஆடு மேய்க்கும் பிள்ளைகளுக்கு ஆறு முறை தரிசனையான மாதாவே ...

முதல்வர்:  சிறு பிள்ளைகளைப் போல் ஆவது மோட்ச இராஜ்ஜியத்துக்கு அவசியம் என்று காண்பிக்க , மூன்று ஏழை பாமர பிள்ளைகளுக்குக் காட்சியளித்த பாத்திமா மாதாவே...

முதல்வர்:  அமைதியான ஆத்துமத்திலே ஆண்டவர் பேசுகிறார் என்று காண்பிக்க, ஏகாந்தமும் அமைதியும் பொருந்திய மலைச் சாரலில் காட்சியளித்த பாத்திமா மாதாவே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  தம்மைத் தேடுகிற மக்களை தேவனும் தேடுகிறார் என்று காண்பிக்க ஜெபமாலை பக்தியில் சிறந்து விளங்கி ,'மரியாயின் நிலம்' என்று அழைக்கப்பட்ட போர்த்துகல் நாட்டில் தரிசனை கொடுக்கத் திருவுளமான பாத்திமா மாதாவே...

முதல்வர்:  செபமும் தவமும் கிறிஸ்தவ வாழ்வுக்கு அவசியம் என்று காண்பிக்க பத்து வயதுக்கு உட்பட்ட சிறு பிள்ளைகளிடத்தில் ஜெப தவம் செய்யும்படி கேட்ட பாத்திமா மாதாவே...

முதல்வர்:  இரட்சண்யமடையவும் உலக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஜெபமாலை ஜெபிப்பது மிகவும் முக்கியம் என்று காண்பிக்க , காட்சி தந்து அனுதினமும் ஜெபமாலை சொல்லும்படி கேட்டுக் கொண்ட பாத்திமா மாதாவே...

முதல்வர்:  பூலோக கடமைகளில் சிக்குண்டிருக்கிற நாங்கள் பரலோகத்துடன் எவ்வித தொடர்பு கொள்ள வேண்டுமானாலும் அதற்குத் தகுந்த ஆயத்தம் அவசியம் என்று காண்பிக்க , அக்குழந்தைகளுக்கு முன்னால், ஒரு தேவதூதனை அனுப்பி ஒரு வருட காலமாய் அவர்களைத் தயாரித்த பாத்திமா மாதவே...

முதல்வர்:  சர்வேசுரனை விசுவசித்து ஆராதித்து நம்பி நேசிப்பது ஒவ்வொரு மனிதனுடையவும் கடமை என்று காண்பிக்க , சம்மனசின் முதல் காட்சியிலேயே அதற்கேற்ற அரிய செபம் ஒன்றை எங்களுக்குக் கற்றுத் தந்த பாத்திமா மாதாவே...

முதல்வர்:  கடவுளின் திருச்சந்நிதியில் மனிதன் மிகுந்த தாழ்ச்சியுடன் பணிந்து ஆராதனை வேண்டும் என்று காண்பிக்க நெற்றி தரையில் பட அச்செபத்தை சம்மனசானவர் சொல்லும்படி கட்டளையிட்ட பாத்திமா மாதாவே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  பாவத்தில் இருந்தும் நரகத்தில் இருந்தும் காப்பாற்றும்படி ஆண்டவரிடம்  மன்றாடுவது அவசியம் என்று காண்பிக்க, ஜெபமாலையின் ஒவ்வொரு பத்து மணிமுடிவிலும் அதற்கான ஒரு தனி ஜெபம் சொல்லும்படி கற்பித்த பாத்திமா மாதாவே...

முதல்வர்:  ஒறுத்தல் முயற்சி செய்வது அவசியம் என்றும் எங்களுக்கு இவ்வுலகில் நேரிடும் எல்லாவற்றையும் பாவப் பரிகாரமாக நாங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சம்மனசுக்களின் வாயிலாக போதித்தருளிய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  சுவிசேஷ போதனைகளையும் திருச்சபையின் படிப்பினைகளையும் நாங்கள் மறந்து விடாதிருக்கும் படியாக , உங்களுடைய காட்சிகளாலும் உரையாடல்களாலும் கத்தோலிக்க ஞான உபதேசத்தை முழுமையாக போதித்து அருளிய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  இயேசுக்கிறிஸ்து நாதர் உண்மையாகவே திவ்விய நற்கருணையில் இருக்கிறார் என்ற மகா உன்னத சத்தியத்தின் உண்மையை காண்பிக்க அப்ப இரச குணங்களில் நற்கருணையை ஏந்திய சம்மனசானவரை அனுப்பி, அதிலே இயேசுவை அந்த மூன்று குழந்தைகளும் ஆராதித்து அவரை உட்கொள்ளும்படி செய்த பாத்திமா மாதாவே...

முதல்வர்:  நற்கருணையில் தந்தை மகன் தூய ஆவியாகிய கடவுள் ஆராதிக்கப்பட வேண்டும் என்று காண்பிக்க அதற்கென ஒரு மனவல்லிய ஜெபத்தை அம்மூன்று சிறுவர்களுக்கும் உணர்த்தி அருளிய பாத்திமா மாதாவே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  தேவ நற்கருணையில் அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும் முந்திரிகைப்பழ இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் இயேசுநாதருடைய திருச்சரீரம், இரத்தம், ஆத்துமம், தேவசுபாவம் எல்லாம் அடங்கி இருப்பதையும் அந்த இயேசுக்கிறிஸ்து உலகத்திலுள்ள எல்லா தேவ நற்கருணைப் பேழைகளிலும் இருக்கிறார் என்பதையும் தேவதூதனின் மற்றொரு ஜெபத்தால் எங்களுக்குப் படிப்பித்தருளிய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாக நின்தைப்படும் நற்கருணை ஆண்டவருக்கு நிந்தைப் பரிகாரமாக , மிக பரிகார நன்மை உட்கொள்ளும்படி அச்சிறுவர்களைத் தூண்டிய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  இயேசுவின் திரு இருதயத்துடன் உங்கள் மாசற்ற இருதயமும் ஒன்றாக நேசிக்கப்பட்டு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் சித்தம் என்று கூறி அதற்காக முதல் சனிக்கிழமை பக்தியை ஏற்படுத்திய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  மரியாயின் மாசற்ற இருதயத்துக்காகப் பரிகாரம் செய்யும் கருத்தோடு தொடர்ச்சியாக 5 முதல் சனிக்கிழமைகளில் பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை உட்கொண்டு , 53 மணி ஜெபமாலை சொல்லி கால்மணி நேரம் ஜெபமாலை தேவ இரகசியங்களை நினைத்தபடி மாதாவுடன் தங்கி இருப்பதே முதல் சனி பக்தி என்று விளக்கிக் கூறிய பாத்திமா மாதாவே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  மரியாயின் அமலோற்பவம் தெய்வீகத் தாய்மை, எப்போதும் கன்னிமை ஆகிய சிறப்புகளுக்கு எதிராகவும் மாதாவின் பக்தியை அழிப்பதும் மாதாவின் திரு உருவங்களை அகற்றி அவமதிப்பதும் ஆகிய ஐந்து வகை நிந்தைகளுக்குப் பரிகாரமாகவே 5 முதல் சனி பக்தி என்று இயேசுவே விளக்கிக் கூறும் அளவுக்கு தேவ சலுகைகளைப் பெற்றுள்ள பாத்திமா மாதாவே...

முதல்வர்:  முதல் சனி பக்தியைப் பிரமாணிக்கமுடன் அனுசரிப்பவர்களின் மரண சமயத்தில் , ஈடேற்றத்திற்கு அவசியமான சகல உதவிகளையும் அவர்களுக்குச் செய்வதாக வாக்களித்துள்ள பாத்திமா மாதாவே...

முதல்வர்:  பாவத்தின் பலனாக யுத்தம், பஞ்சம் ஆகிய துன்பங்கள் நேருகின்றன என்று கூறி அவற்றை தடுக்க செபமாலையும், தவ முயற்சிகளும் செய்து உங்கள் மாசற்ற இருதய பக்தியைக் கைக்கொள்ளும்படி தூண்டி, இதுவே பாத்திமா செய்தி என்று உலகிற்கு உணர்த்தி வருகின்ற பாத்திமா மாதாவே...

முதல்வர்:  பாத்திமா காட்சிகள் கடவுளால் ஆனவை என்று எல்லோரும் நம்பும்படியாக ,1917 அக்டோபர் 13 ஆம் நாளில் 6 ஆம் காட்சியின் போது சூரியனில் மாபெரும் அற்புதத்தை நிகழ்த்திய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  உங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் இரஷ்யா மனந்திரும்பும், உலக சமாதானம் வரும், இல்லாவிடில் இரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும் , யுத்தங்களையும் வேத கலாபனைகளையும் தூண்டி விடும் என்று எச்சரித்த பாத்திமா மாதாவே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  மனிதர்கள் போதிய ஜெப தப ஜெபமாலைகள் சொல்லாவிட்டால் இனம் தெரியாத ஒரு ஒளி ஓர் இரவில் தோன்றி அடுத்து வரவிருக்கும் மகா பெரிய ஆக்கினைகளை முன்னறிவிக்கும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள பாத்திமா மாதாவே...

முதல்வர்:  ரஷ்யா மனம் திரும்புவதற்கு ஏதுவாக அந்நாட்டைப் பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு பாப்பரசர் உலக மேற்றிராணிமார்களுடன் சேர்ந்து ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற இயேசுவின் நிபந்தனையை லூசியாவிடம் அறிவித்த பாத்திமா மாதாவே...

முதல்வர்:  நாங்கள் நம்பிக்கை இழந்து போகாவண்ணம் இறுதியில் என் மாசற்ற இருதயம் வெல்லும். பாப்பரசர் ரஷ்யாவை என் இருதயத்துக்கு ஒப்புக் கொடுப்பார். உலக சமாதானம் வரும் என்று கூறி அருளிய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  பாவிகளுக்காக ஜெபித்து பரித்தியாகம் செய்ய ஆளில்லாததால் அநேக ஆத்துமங்கள் நரகத்திற்குப் போகிறார்கள் என்று வேதனையுடன் கூறி பாவிகளுக்காக எங்களை மன்றாடத்தூண்டிய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  நரகத்திற்குச் செல்லும் பாவிகளில் பெரும்பாலானவர்கள் கற்புக்கெதிரான  பாவங்களுக்காகவே அங்கு செல்கிறார்கள் என்று ஜெசிந்தா வழியாகக் கூறி பரிசுத்தத்தனத்தின் மட்டில் எங்கள் கடமையை உணர்த்திய பாத்திமா மாதாவே...

முதல்வர்:  பாப்பரசரும் திருச்சபையும் கொடுமையாக அலைக்கழிக்கப்படுவதை முன்கூட்டியே அறிவித்து, அதிலிருந்து காப்பாற்றும்படி அதிகமான ஜெப தவம் அனுசரித்து ஜெபமாலையைப் பக்தியுடன் தியானித்து சொல்லும்படி கற்பித்த பாத்திமா மாதாவே...

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முதல்வர்:  செபிப்போமாக 

தமது ஜீவியத்தாலும் உத்தானத்தாலும் எங்களுக்கு நித்திய இரட்சணிய பேறுபலனை சம்பாதித்தருளிய ஏக புத்திரனின் பிதாவாகிய சர்வேசுரா சுவாமி!

அந்தத் தேவ இரகசியங்களை முத்திப்பேறு பெற்ற புனித கன்னி மரியாளின் மகா பரிசுத்த ஜெபமாலை வழியாக நினைவுகூரும் அடியோர்கள், பாத்திமாவில் அவர்கள் காட்டிய வழியின்படியே நடந்து அதிலுள்ள வாக்குத்தத்தங்களின் பேற்றை அடையத்தக்கதாக உதவி புரிந்தருளும். இவைகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி! ஆமென்.

ஆரோக்கிய மாதா மன்றாட்டு மாலை

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்! 

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

அனைவரும்:  கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!


முதல்வர்:       கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைவரும்:   கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும். 


முதல்வர்:  விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!


முதல்வர்:  உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!


முதல்வர்:  தூய ஆவியாராகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!


முதல்வர்:  மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!


முதல்வர்: அனைத்துலகம் படைக்குமுன்னே இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: இன்ப வனத்திலே முதல் மனிதருக்கு அறிவிக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே... அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: பாவமுள்ள இருளை அகற்றுகிற ஞான ஒளியான புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: உதித்தெழும் விண்மீன் என இறைவாக்கினரால் உரைக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே... அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: மண்ணுலகிற்குப் பலன் விளைவிக்கும் மேகமென்றும் சொல்லப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: நன்மைத்தனத்துக்குத் தகுதியான புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: முதுபெரும் தந்தையரால் புனிதை என உரைக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: சென்மப் பாவமின்றி உற்பவித்த புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: அகங்காரமுள்ள பசாசின் தலையை மிதித்த புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: புனிதர்களான அன்னம்மாள் சுவக்கீன் இடமாய் பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: முதிர் வயதான தாய் தகப்பனிடத்திலிருந்து பிறந்தவரான புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: அவர்களுடைய வேண்டுதலாலும் அறச் செயல்களாலும் பிறந்தவரான புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: அனைத்து வானத்தூதர், புனிதர்களைவிட மிகுந்த ஒளியோடே பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: படைப்புப் பொருள்களிலேயே அதிக அறிவோடு பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: திருவருட் கொழுந்தான புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: அறநெறியிலே நிறைவுடனே நடந்த புனித ஆரோக்கிய அன்னையே..

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: உம்முடைய பிறப்பைக் கொண்டு விண்ணுலகோருக்கு மகிழ்ச்சி வருவித்த புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: நீர் பிறந்தவுடனே தந்தைக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: மிகுந்த மகிமையுள்ள மரியா என்னும் பெயர் அடைந்த புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: மூன்று வயதிலே கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: கன்னிமையைத் தேர்ந்து கொண்ட புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: கன்னியர் மடத்தில் இருக்கிறபோது அனைவருக்கும் நன்மாதிரிகையாய் நடந்த புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: நோயாளிகளுடைய வேதனையை அகற்றுகிற புனித ஆரோக்கிய அன்னையே...

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: உம்மை நம்பினவர்களை ஒரு போதும் கைவிடாத கருணைத் தாயாகிய புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்: புனிதர்கள் அனைவருக்கும் விண்ணுலக முடியான புனித ஆரோக்கிய அன்னையே... 

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!


முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!


முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும்!


முதல்வர்:  செபிப்போமாக 

அன்பே உருவான இறைவா, உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்னையை எங்களுக்கு ஆரோக்கிய அன்னையாக அளித்து, அந்த அன்னையை அண்டி வரும் மக்கள் எல்லாருக்கும் நீர் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்காகவும் நாங்கள் நன்றியோடு உம்மைப் புகழ்கின்றோம். அன்னையின் அருட்காவலைத் தேடி வருகின்ற நாங்கள், அவர் எங்களுக்குக் கூறியபடி, உம் திருமகன் இயேசு கிறிஸ்து சொல்வதெல்லாம் செய்திட உதவி புரிந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.- ஆமென்

லூர்து மாதா மன்றாட்டு மாலை

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்! 

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

அனைவரும்:  கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைவரும்:  கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும். 

முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முதல்வர்:  உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  திரு மீட்பரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  இறைவனின் கருணைக்குரிய கருவியாகிய அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  லூர்துமலைக் கெபியில் தோன்றிய அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  உலக சந்தடியைத் தவிர்க்க வேண்டும் என்று காண்பிக்க தன்னந் தனியான தலத்தில் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  விண்ணுலக மகிமையைக் காண்பிக்கப் பூங்கதிர்கள் அணிந்த திரு மேனியுடன் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  ஞான அழகிற்கு மிஞ்சின அழகு இல்லையென்று காண்பிக்க அழகே உருவாகக் காட்சி தந்த அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  ஆன்மத் தூய்மைக்கு மேலான தூய்மை இல்லை என்று காண்பிக்கத் தூய வெண்ணாடையை உடுத்தியவராய்த் தோன்றிய அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  வானோருக்கு அடுத்த புண்ணியம் தூய்மை என்று காண்பிக்க மேகமற்ற வானம்போன்ற நீல கச்சையைக் கட்டிக் கொண்டவராய்க் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  நாங்கள் நாடவேண்டிய இலக்கு விண்ணகம் என்று காண்பிக்க வானத்தை அண்ணாந்து பார்த்தவராய்க் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே.....

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடி சொல்லுதல் உத்தம பத்திச் செயல் என்று காண்பிக்க செபமாலையைத் திருக்கையில் ஏந்தியவராய்க் காட்சி தந்த அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் நீரே எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள்ரோசாச் செடியைக் காலாலே மிதிக்கிறவராய்க் காட்சி தந்த அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  தாழ்ச்சியும் ஏழ்மையும் உள்ளவர்கள் பேரில் அன்பாயிருக்கிறீர் என்று காண்பிக்க ஓர் ஏழைப் பெண்ணுக்குக் காட்சி தந்த அமலோற்பவ அன்னையே.....

முதல்வர்:  உம்மை அன்பு செய்து நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இயலாதது ஒன்றுமில்லை என்று காண்பிக்க பெர்னதெத்தைக் கொண்டு ஒரு நீருற்றைத் தோற்றுவித்த அமலோற்பவ அன்னையே....

முதல்வர்: உம்முடைய வல்லமையும் கருணையும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்று தாராளமாய்ச் சுரந்து வழிந்தோடவும், கணக்கற்ற நோயாளிகளுக்கு நலம் அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ அன்னையே....

முதல்வர்: பாவிகளை நன்னெறியில் திருப்புகின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: நீதிமான்களை உறுதிப்படுத்துகின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: உயிர்ப்பிக்கின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: குருடருக்குப் பார்வை அளிக்கின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: செவிடருக்குச் செவிப்புலனைத் தருகின்ற லூர்து நாயகியே....

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: நோயாளிகளைக் குணப்படுத்துகின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: துயருற்றோரைத் தேற்றுகின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: எல்லாத் தேவைகளிலும் உதவியாயிருக்கின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: மேன்மேலும் மன்றாடப்படுகின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: லூர்தென்னும் திருத்தலத்துக்குக் கணக்கற்ற மக்களை ஈர்க்கின்ற லூர்து நாயகியே....

முதல்வர்: எங்கள் தாயாகிய திருச்சபைக்காகவும், உம்மை மன்றாடுகிறோம் லூர்துமலை அன்னையே....

முதல்வர்: எங்கள் திருத்தந்தைக்காகவும், உம்மை மன்றாடுகிறோம் லூர்துமலை அன்னையே....

முதல்வர்: பல தண்டனைகளுக் குரியவர்களாகிய எங்களுக்காகவும், உம்மை மன்றாடுகிறோம் லூர்மலை அன்னையே....

முதல்வர்: எங்கள் உற்றார் பெற்றோர் பிள்ளைகள் நண்பர்களுக்காகவும், உம்மை மன்றாடுகிறோம் லூர்துமலை அன்னையே....

முதல்வர்: எங்களைப் பகைக்கிறவர்களுக்காகவும், உம்மை மன்றாடுகிறோம் லூர்துமலை அன்னையே....

முதல்வர்: அனைத்து மக்களுக்காகவும், உம்மை மன்றாடுகிறோம் லூர்துமலை அன்னையே....

முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முதல்வர்:  இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி 

அனைவரும்:  புனித அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதல்வர்:  செபிப்போமாக 

இரக்கமிக்க இறைவா, எங்களுடைய வலுவின்மையில் உம்முடைய உதவியையும் அடைக்கலத்தயும் தேடி வருகின்றோம். லூர்து நகரில் காட்சி தந்தவரும், உம்மால் எவ்வித மாசுமின்றிக் காக்கப் பெற்றவருமான இறையன்னையாம் மரியாவுடைய வேண்டுதலால், நாங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்கள் அனைத்தினின்றும் நலம் பெற அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

செபமாலை மாதா மன்றாட்டு மாலை

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்! 

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

அனைவரும்:  கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைவரும்:  கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும். 

முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

செபமாலை மாதா மன்றாட்டு மாலை

முதல்வர்:  தூய ஆவியாராகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  புனித மரியாவே...

முதல்வர்:  இறைவனுடைய அன்னையே...

முதல்வர்:  கன்னியர்களில் உத்தம புனித கன்னியே

முதல்வர்:  புனித செபமாலை அன்னையே...

முதல்வர்:  கபிரியேல் தூதரால் அருள் நிறைந்த மரியே என்று வாழ்த்தி வணங்கப்பட்ட செபமாலை அன்னையே...

முதல்வர்:  இறைவனுடைய அன்னை என்று எலிசபெத்தம்மாளால் புகழ்ந்து அழைக்கப்பட்ட செபமாலை அன்னையே...

முதல்வர்:  செபமாலைத் தியானத்தினால் உம்மைப் போற்றுவது நலமென்று மறைநூல் அறிஞரான புனித பொனவெந்தூரால் அறிவிக்கப்பட்ட செபமாலை அன்னையே...

முதல்வர்:  இந்த உத்தம செபத்தால் எல்லாரும் எல்லா நன்மைகளையும் உமது வழியாய் அடையலாம் என்று அவரால் அறிவிக்கப்பட்ட செபமாலை அன்னையே...

முதல்வர்:  விண்ணுலகிலுள்ள தூதருக்கு இத்துதி மிகவும் உவப்பானதாய் இருக்கத் தகுதியுள்ள செபமாலை அன்னையே...

முதல்வர்:  இறைச்சந்நிதிக்கு மிகவும் உகந்ததும் சிறப்பான பேறுள்ளதுமான தியானத்தை கொண்ட செபமாலை அன்னையே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  தாவீது மன்னர் பத்து நரம்புள்ள வீணையால் இறைவனை வாழ்த்தியதுபோல, செபமாலை என்னும் தூய கருவியால் துதிக்கப்படுகின்ற செபமாலை அன்னையே...

முதல்வர்:  இஸ்ரயேல் மைந்தர் 150 இராகமுள்ளதாய் அமைத்த ஓர் இசைக்கருவி செபமாலைக்கு அடையாளமென மறை வல்லுநரால் அறிவிக்கப்பட்ட செபமாலை அன்னையே...

முதல்வர்:  இந்த 150 இராகங்களும் செபமாலையின் 150 மணிகளுக்கு ஒப்பானவை என்பதால், மகிமை பெற்ற செபமாலை அன்னையே...

முதல்வர்:  பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கேடயமாகக் கைக்கொள்ளும்படி அருளப்பட்ட செபமாலை அன்னையே...

முதல்வர்:  இதன் பக்தியைக் கொண்டிருப்பவர்களுக்கு ஞான ஒளியாய் விளங்குகிற செபமாலை அன்னையே...

முதல்வர்:  செபமாலைப் பக்தியாயிருந்த உமது தாசரைக் காப்பாற்ற பகைவரைத் தோற்கடித்த செபமாலை அன்னையே...

முதல்வர்:  செபமாலைப் பக்தியை அறிக்கையிடும்படி புனித தோமினிக்கு என்ற சாமிநாதருக்குக் கட்டளையிட்ட செபமாலை அன்னையே...

முதல்வர்:  செபமாலையை எப்போதும் பக்தியுடன் செபித்தவர்களுக்கு எண்ணிலடங்காப் புதுமைகளைச் செய்தருளிய செபமாலை அன்னையே...

முதல்வர்:  பக்தியோடு செபமாலையைத் தியானிப்போருக்கு நிரம்ப அருள்பாலிக்கும் செபமாலை அன்னையே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  செபமாலைத் தியானத்தை முழுப் பக்தியோடு செய்தல் விண்ணுலக பாதைக்கு ஓர் ஏணி என்று காண்பித்தருளிய செபமாலை அன்னையே...

முதல்வர்:  இறைத் திருவுரைப்படி இடைவிடாது செபிப்பதற்கு இது ஓர் உன்னத வழியாய் விளங்கச் செய்த செபமாலை அன்னையே...

முதல்வர்:  துறவியர் எப்போதும் இச்செபத்தினால் உம்மைத் துதிப்பதால் உமது ஆதரவை அடையச் செய்கிற செபமாலை அன்னையே...

முதல்வர்:  குடும்பங்களில் அன்றாடம் செபமாலை செய்து உம்மை மன்றாடுவோர் தங்கள் நிலமைக்கு ஏற்ற பலன்களைப் பெறச் செய்தருளும் செபமாலை அன்னையே...

முதல்வர்:  மெய்யான செபத் தியானங்களுடைய ஒளியாகிய செபமாலை அன்னையே...

முதல்வர்:  விசுவாசிகளுக்குப் பாங்கான நல்வழியாகிய செபமாலை அன்னையே...

முதல்வர்:  எல்லா நன்மைகளுக்கும் ஊற்றாகிய செபமாலை அன்னையே...

முதல்வர்:  மறைபொருள்களையெல்லாம் நிறைவாய்க் கொண்டிருக்கிற செபமாலை அன்னையே...

முதல்வர்:  புனிதர் அனைவருடைய மணிமுடியாகிய செபமாலை அன்னையே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முதல்வர்:  இயேசுகிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக! 

அனைவரும்:  பரிசுத்த செபமாலை மாதாவே!  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதல்வர்:  செபிப்போமாக 

ஆண்டவரே, வானத்தூதர் அறிவித்ததால் உம் திருமகன் கிறிஸ்து மனிதரானதை அறிந்திருக்கிற நாங்கள். அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்த்தெழுதலின் மகிமையை அடைவோமாக; கன்னி மரியா எங்களுக்காகப் பரிந்து பேசுவதால் இந்த வரத்தை எங்கள் உள்ளத்தில் பொழிந்தருள வேண்டுமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

புனித சம்மனசுக்களின் இராக்கினி மன்றாட்டு மாலை

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்! 

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

அனைவரும்:  கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைவரும்:  கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும். 

புனித சம்மனசுக்களின் இராக்கினி மன்றாட்டு மாலை

முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  தூய ஆவியாராகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: இறைவனின் தாயானப் புனித மரியாவே...

முதல்வர்: சம்மனசுக்களின் இராக்கினியானப் புனித மரியாவே...

முதல்வர்: தந்தையாகிய இறைவன் தம் தூதரை அனுப்பப் பெற்ற சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: கபிரியேல் தூதரின் வாழ்த்துரையைப் பெற்றப் சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: இறைவனின் தாயாகச் சம்மதம் தெரிவித்த சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: இறைவனின் மக்களைப் பாதுகாக்கும் மைக்கேல் தூதரின் சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: இறைப்பயணங்களில் எங்களைப் பாதுகாப்பாக வழிநடத்தும் இரஃபேல் தூதரின் சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: எங்களது பாதுகாவலர்களாகப் பணியாற்றும் சம்மனசுக்களின் இராக்கினியே...

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: நாசரேத்து வீட்டை லோரெட்டோ நகருக்குத் தூக்கிச் சென்ற சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: உமது திருவுருவத்தை ஜெனசானோவுக்குத் தூக்கிச் சென்ற சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: புனித ஆசிர்வாதப்பரின் பரிசும், பிரான்சிஸ்கன் சபையினரின் பிறப்பிடமுமான போஷியன் குலா ஆலயத்தின் சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: எங்கள் சம்மனசுக்களின் இராக்கினி ஆலயப் பங்கு தந்தையர்களுக்காகவும், பங்கு மக்களுக்காகவும் உமது திருமகனிடம் என்றும் பரிந்துரை செய்யும் சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: அசிசி நகரின் எளியவரும், செராஃபிக் தந்தையுமான புனித பிரான்ஸிசின் சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: வானகத் தூதரணிகள் புடை சூழ விண்ணகம் அடைந்த சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: அரியணைகளின் அரசியான  சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: ஆதிக்கங்களின் அரசியான சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: வானகத் தூதரணிகளுக்கு நீதிமன்றமாகத் திகழும் சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: எண்ணற்ற செராஃபின்களால் என்றும் சூழப்பட்டுள்ள சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்: சம்மனசுக்களின் இராக்கினியானப் புனித மரியாவே...

முதல்வர்: இறைவனின் தாயும் எங்களது தாயுமாகத் திகழும் சம்மனசுக்களின் இராக்கினியே...

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முதல்வர்: இறைவனின் தாயும், சம்மனசுக்களின் இராக்கினியுமான புனித மரியாவே, இதோ, உம்மிடம் சரணடைய ஓடி வந்துள்ளோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக் கொள்ளும் போது நீர் பாரா முகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவருமாய் விண்ணகத்துக்குரியவருமாயிருக்கிற கன்னியே, எல்லா ஆபத்துக்களிரிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். ஆமென்.

முதல்வர்: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படியாக...

அனைவரும்:  சம்மனசுக்களின் இராக்கினியான புனித மரியாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல்வர்:  செபிப்போமாக 

இறைவா, ஆண்டுதோறும் எங்கள் சம்மனசுக்களின் இராக்கினியான புனித மரியாவின் திருவிழாவைச் சிறப்புடன் கொண்டாட அனுமதிக்கும் நீர், உமது மக்களின் செபங்களுக்குச் செவிசாய்த்து, இந்த ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் உமது இரக்கத்தையும் அருட்கொடைகளையும் மனமுவந்து அளித்து, தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைக்க அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய ,இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

வியாகுல மாதா மன்றாட்டு மாலை

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்! 

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

அனைவரும்:  கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

அனைவரும்:  ஆண்டவரே இரக்கமாயிரும்!

முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைவரும்:  கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும். 

முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  தூய ஆவியாராகிய இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

முதல்வர்:  மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  புனித மரியாயே…

முதல்வர்:  இறைவனின் புனித அன்னையே…

முதல்வர்:  கன்னியர்களில் உத்தம புனித கன்னியே…

முதல்வர்:  வேதனையடைந்த அன்னையே…

முதல்வர்:  வியாகுல அன்னையே…

முதல்வர்:  கண்ணீர் சொரிந்த அன்னையே…

முதல்வர்:  துயரமடைந்த அன்னையே…

முதல்வர்:  கைவிடப்பட்ட அன்னையே…

முதல்வர்:  ஆறுதலற்ற அன்னையே…

முதல்வர்:  வாளால் ஊடுருவப்பட்ட அன்னையே…

முதல்வர்:  சஞ்சலத்தில் அமிழ்ந்திய அன்னையே…

முதல்வர்:  இதயத்தினுள் சிலுவையை ஊன்றின அன்னையே…

முதல்வர்:  மகா துயரமுள்ள அன்னையே…

முதல்வர்:  கண்ணீர்ச் சுனையே…

முதல்வர்:  பாடுகளின் திரளே…

முதல்வர்:  பொறுமையின் கண்ணாடியே…

முதல்வர்:  உறுதி நிலைமையின் குன்றே…

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்:  நம்பிக்கையின் பெட்டகமே…

முதல்வர்:  கைவிடப்பட்டோரின் அடைக்கலமே…

முதல்வர்:  துன்பப்படுகிறவர்களுக்குக் கேடயமே…

முதல்வர்:  நம்பிக்கையற்றோரை வெல்பவரே…

முதல்வர்:  திக்கற்றவர்களுக்கு ஆதரவே…

முதல்வர்:  நோயாளிகளுக்கு அருமருந்தே…

முதல்வர்:  மெலிந்தவர்களுக்குத் திடனே…

முதல்வர்:  பயணத்தில் அவதிப்படுகிறவர்களுக்குத் துறைமுகமே…

முதல்வர்:  பெரும் புயலைத் தணிப்பவரே…

முதல்வர்:  துன்பப்படுகிறவர்களுக்குத் தஞ்சமே…

முதல்வர்:  தீயவர்களுக்கு அச்சமே…

முதல்வர்:  விசுவாசிகளின் கருவூலமே…

முதல்வர்:  இறைவாக்கினர்களின் அரசியே…

முதல்வர்:  அப்போஸ்தலர்களின் உதவியே…

முதல்வர்:  மறைச்சாட்சிகளின் மணிமுடியே…

முதல்வர்:  துதியர்களின் ஒளியே…

முதல்வர்:  கன்னியர்களின் மலர் அணியே…

முதல்வர்:  கைம்பெண்களின் தேற்றரவே…

முதல்வர்:  புனிதர்கள் அனைவரின் மகிழ்ச்சியே…

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!

முதல்வர்:  உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...

அனைவரும்:  எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முதல்வர்:  இறைவனின் தூய அன்னையே, இதோ உம்மிடம் சரணடைய ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும் போது நீர் பாரா முகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற நித்தியக் கன்னியே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படியாக…

அனைவரும்:  வியாகுல அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதல்வர்:  மன்றாடுவோமாக! இறைவா, உமது அடியாராகிய சிமியோன் இறைவாக்குரைத்தபடியே உம் திருமகன் சிலுவை சுமந்துப் பாடுபட்ட போது மாட்சி மிக்கக் கன்னித் தாயான மரியாவின் மதுரமான ஆன்மா வியாகுல வாள்களால் ஊடுருவப்பட்டதே. அவருடைய வியாகுலத்தையும் வேதனையையும் வணங்கி ஆராதிக்கிற நாங்கள், உம் திருமகனுடைய சிலுவையை நேசித்த எல்லாப் புனிதர்களின் மகிமையுள்ள பேறுகளினாலும் மன்றாட்டுக்களினாலும் உம் திருமகனுடைய திருப்பாடுகளின் பலனை அடையும்படி அருள் புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

மன்றாட்டுமாலை பாடலாக

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்

கிறிஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும்

கிறிஸ்த்துவே தயவாய் கேட்டருளும்


விண்ணகத் தந்தை பிதாவே

உலகத்தை மீட்ட சுதன் தேவா

பரிசுத்த ஆவி இறைவனே

எம்மேல் இரக்கம் வைத்தருளும்


புனிதம் நிறைந்த மாமரியே

இறைவனின் புனித மாதாவே

கன்னியரில் உயர் கன்னிகையே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


கிறிஸ்துவை ஈன்ற மாதாவே

திருச்சபையோரின் மாதாவே

திருவருட்கொடைகளின் மாதாவே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


மாகா பரிசுத்த மாதாவே

பழுதற்ற கன்னி மாதாவே

மாசற்ற கன்னி மாதாவே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


கன்னிமை வழுவா மாதாவே

பேரன்பிற்குரிய மாதாவே

பெரும்வியப்பான மாதாவே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


நல்ல ஆலோசனை மாதாவே

சிருஷ்டிகருடைய மாதாவே

எங்கள் மீட்பரின் மாதாவே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்சபையினுடைய மாதாவே

வணக்கத்திற்குரிய மாதாவே

துதிகளுக்குரிய மாதாவே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


சக்திமிகுந்த கன்னிகையே

இறக்கமிகுந்த கன்னிகையே

விசுவாசியான கன்னிகையே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


தருமத்தினுடைய கண்ணாடியே

ஞானத்தின் நல்ல பிறப்பிடமே

எங்கள் மகிழ்வின் காரணமே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


ஞானம் மிகுந்த பாத்திரமே

மகிமை விளங்கும் பாத்திரமே

உன்னத பக்தியின் பாத்திரமே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


மறைபொருளான ரோஜாவே

தாவீது அரசரின் கோபுரமே

தந்த மயமான கோபுரமே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


தங்க மயமான ஆலயமே

வாக்குத்தத்தின் நல் பெட்டகமே

வானக எழில்மிகு வாசலே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


விடியற்காலத்தின் விண்மீனே

வியாதியுற்றோருக்கு ஆரோக்கியமே

பாவிகள் யாவர்க்கும் அடைக்கலமே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


துண்புறுவோருக்கு தேற்றரவே

கிறிஸ்தவருடைய சகாயமே

சம்மனசுக்களின் ராக்கினியே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


பிதா பிதாக்களின் ராக்கினியே

தீர்க்க-தரிசிகளின் ராக்கினியே

அப்போஸ்தலர்களின் ராக்கினியே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


மறைசாட்சியரின் ராக்கினியே

துதியர்களுடைய ராக்கினியே

கன்னியருடைய ராக்கினியே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


புனிதர்களுடைய ராக்கினியே

பிறவிபாவமற்ற ராக்கினியே

விண்ணேற்படைந்த ராக்கினியே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


திருச்செபமாலையின் ராக்கினியே

சமாதானத்தின் ராக்கினியே

புனித ஆரோக்கிய மாதாவே

குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


உலகின் பாவங்களைப் போக்கும் உத்தம இறைவனின் செம்மறியே-3

குழு: எங்கள் பாவங்கள் பொறுத்தருளும் – 2

குழு: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் – 2

குழு: எம்மேல் இரக்கம் வைத்தருளும் – 2

கிருபை தயாபத்து மந்திரம்

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதனின்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!

  • இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி

  • சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


செபிப்போமாக


சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரமும் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். – ஆமென்.

புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டிய செபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே! தூய கன்னி மரியே! இதோ.. உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து சரணடைந்து உமது அருட்காவலை மன்றாடிய ஒருவரையும் நீர் கைவிட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும் கன்னியருடைய அரசியான கன்னிகையே தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் நான் தூண்டபெற்று அடியேன் உம் திருப்பாதம் அண்டி வருகிறேன். பாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு உமது இரக்கத்திற்காக காத்து நிற்கிறேன். மனுவுருவான திருமகனின் தாயே! எம் மன்றாட்டைப் புறக்கணியாமல் எனக்காக தயாவாய் வேண்டிக்கொள்ளும். 


ஆமென். 


ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிரும் எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.


அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே, 


புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். 


- ஆமென். (3 முறை)

இறுதி செபம்

பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாகவும்,  நமது தமிழ் குடும்பங்களில் உள்ள அனைவரின் நலனுக்காகவும், மரித்த விசுவாசிகளின்  ஆன்ம இளைப்பாற்றிகாகவும் ஜெபிப்போமாக:

  • கர்த்தர் கற்பித்த செபம்

  • மங்கள வார்த்தை செபம்

  • திருத்துப்புகழ்



புனிதர்களின் ஆசீர்


முதல்வர்: இயேசுவின் மதுரமான திரு இருதயமே

அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

 

முதல்வர்: மரியாயின் மாசற்ற இருதயமே

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

 

முதல்வர்: புனித சூசையப்பரே

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


முதல்வர்: புனித பிரான்சிஸ் அசிசியாரே

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


முதல்வர்: புனித கிளாராம்மாவே

அனைவரும்:   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


முதல்வர்: புனித அந்தோணியாரே

அனைவரும்:   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே

அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: புனித தோமா அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: புனித அல்போன்சம்மாளே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

மாதா பாடல்கள்

1. மாதாவே துணை நீரே

 மாதாவே ! துணை நீரே உம்மை 

வாழ்த்திப் போற்ற வரந்தாரும்

ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !

ஏற்றன்பாக எமைப் பாரும்.


வானோர் தம் அரசே ! தாயே எம்

மன்றாட்டைத் தயவாய் கேளும்

ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்

எக் காலத்துமே தற் காரும்.


ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்

ஓர் சாவான பவந்தானும்

என்றேனுஞ் செய்திடாமற் காத்து

எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்.

2. ஞானம் நிறை கன்னிகையே

ஞானம் நிறை கன்னிகையே

நாதனைத் தாங்கிய ஆலயமே

மாண்புயர் எழு தூண்களுமாய்

பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்


பாவ நிழலே அணுகா

பாதுகாத்தான் உன்னையே பரமன்

தாயுதரம் நீ தரித்திடவே

தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்


வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே

மக்கள் இஸ்ராயேல் தாரகையே

வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்

3. மாதாவே சரணம்

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்

கன்னி மாதாவே சரணம்

மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி


மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்

மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)

செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2

பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே


நானிலத்தில் சமாதானமே நிலவ

நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)

உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2

உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே

4. அழகின் முழுமையே தாயே

அழகின் முழுமையே தாயே

அலகையின் தலைமிதித்தாயே

உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே


இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2

அருளே நிறைந்த மாமரியே அருள் வழி காட்டிடுவாயே


அன்பும் அறமும் செய்வோம்

அன்னை உனைப் பின் செல்வோம் (2)

உன்னைத் துணையாய்க் கொள்வோம்

என்றும் பாவத்தை வெல்வோம்

5. அன்னைக்குக் கரம் குவிப்போம்

அன்னைக்குக் கரம் குவிப்போம்

அவள் அன்பைப் பாடிடுவோம் – 2


கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த

முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)

மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2

தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்


பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று

பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)

பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2

பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்.

6. உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2


முடமான மகனை நடமாட வைத்தாய்

கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)

பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2

பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2


கடல்நீரும் கூட உன் கோயில் காண

அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)

அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2

அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

7. மாமறை புகழும் மரியென்னும் மலரே

மாமறை புகழும் மரியென்னும் மலரே

மாதரின் மா மணியே (2)


அமலியாய் உதித்து அலகையை மிதித்து

அவனியைக் காத்த ஆரணங்கே (2)

உருவிலா இறைவன் கருவினில் மலர

உறைவிடம் தந்த ஆலயமே!


பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து

ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)

இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி

வானக வாழ்வை அளிப்பாயே!

8. இதயம் மகிழுதம்மா

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா

உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்

தாய்மையின் நினைவாலே அம்மா


தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2

ஈன்ற தாயும் போற்றும் உந்தன்

பாதம் பணிந்திடுவேன் அம்மா...!


வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2

உண்மை மனதும் உயர்ந்த நெறியும்

நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா...!

9. அழகின் முழுமையே தாயே

அழகின் முழுமையே தாயே

அலகையின் தலைமிதித்தாயே

உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே


இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2

அருளே நிறைந்த மாமரியே

அருள் வழி காட்டிடுவாயே


அன்பும் அறமும் செய்வோம் அன்னை உனைப் பின் செல்வோம் -2

உன்னைத் துணையாய்க் கொள்வோம்

என்றும் பாவத்தை வெல்வோம்.

10. மாசில்லா கன்னியே

மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார்

வாழ்க, வாழ்க, வாழ்க மரியே

வாழ்க, வாழ்க, வாழ்க மரியே


மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்

அதியில்லாதோனை மாதா நீ பெற்றாய்

ஆவே ஆவே ஆவே மரியா

ஆவே ஆவே ஆவே மரியா


அருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே

பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே

வாழ்க, வாழ்க, வாழ்க மரியே

வாழ்க, வாழ்க, வாழ்க மரியே.

11.  அம்மா உந்தன் அன்பினிலே

அம்மா உந்தன் அன்பினிலே

அருள்வாய் எமக்கு அடைக்கலமே

 

1. இறைவன் படைத்த எழிலே எழிலே

இயேசுவைத் தந்த முகிலே முகிலே

தூய்மை பொழியும் நிலவே நிலவே

துணையே வாழ்வில் நீயே


2. புவியோர் எங்கள் புகழே புகழே

புனிதம் பொங்கும் அழகே அழகே

உம் மகன் புதிய உறவில் உறவில்

எம்மையும் வதியச் செய்வாய்.

12. இடைவிடா சகாயமாதா

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா

பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்

நிதம் துணை சேர்ப்பாயே - 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை

தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2

மாறாத கொடுமை நீங்காத வறுமை

தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி

உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2

வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட

தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

13. வியாகுல மாமரியே 

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)

பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை
கரங்களை விரித்தே கள்வனைப் போல்
கழுமரத்தினில் கண்டதினால்

கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே
மண்ணவர்க்காகத் தன்னுயிரை
இன்று மாய்த்திடக் கண்டதினால்

14. அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்

தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்

உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)


எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ

எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2)

நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்

சகாயத் தாய்மரியே எம்மை

அரவணைத்துக் காப்பாய் நீயே-2

அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்

அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே -2

15. விடியலைத் தேடும் நெஞ்சங்களே

விடியலைத் தேடும் நெஞ்சங்களே

விடியாக் கனவின் சொந்தங்களே --2

நமக்கொரு தாய் இருக்கின்றாள்

வாருங்கள் அவளிடம் செல்வோம் --2


இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்

கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் --2

தாயவள் அழகு பொற்சித்திரம்

கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் --2


புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்

மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் --2

வாழ்வினில் என்றும் போராட்டமே

தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே

16. கருணை மழையே மேரி மாதா 

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ

கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ   (2)


கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ   (2)

கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ  (2) -கருணை


தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே   (2)

சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே

ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே

உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே  (3)  -கருணை

17. அலையொளிர் அருணனை அணிந்திடுமா 

அலையொளிர் அருணனை

அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

வாழ்க்கையின் பேரரசி

வழுவில்லா மாதரசி

கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ

காலமும் காத்திடுவாய்


அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே

பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌

வல்ல உன் மகனிடம் கேள்

18. மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

தாய் என்று உன்னைத் தான் – 2

பிள்ளைக்குக் காட்டினேன் மாதா 


மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே – 2

மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே

மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா – மாதா 

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே – 2

கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே

அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ – மாதா

 

பிள்ளை பெறாத பெண்மை தாயானது – 2

அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது

கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது – மாதா

19. ஆவே கீதம் பாடியே

ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்

உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும்

மாண்பைப் போற்றுவேன் ஆவே ஆவே ஆவே


1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே (2)

அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா (2)


2. தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம் (2)

மாய உலகினில் காத்திடுவாய் அம்மா (2)

20. கலங்கரை தீபமே

கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே

துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே

காத்திடுவாய்த் தாயே –2


மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே

மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்


தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்

பாவி என் உள்ளம் தாயுனைத்தேடி கூவிடும் குரல் கேளாய்

21. ஆரோக்கியத் தாயே அம்மா

ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன்

அருட்பதம் நாடி வந்தேன்

மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே

இறையருள் நிறையச் செய்வாய் -2


சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே

பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே -2

உன்னைத்தான் நம்பித்தான் உலகதை உனக்களித்தான்

தேவன் வியந்தான், மகிழ்ந்தான் உன் பெருமை எண்ணித்தான் 

- ஆரோக்கியத் தாயே


உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு

வெள்ளம்போலே அருள் தந்தாளும் தாரகையே -2

எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்

இறை நிழலாய் நினைவாய் என் வாழ்வில் வருவாய் 

- ஆரோக்கியத் தாயே

22. நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்

நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்

எந்நாளுமே அன்னையின் புகழ்பாடுவோம்

நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்னைக்குப்

புகழ்ப்பாக்கள் பாடிடுவோம்

ஆ அன்னையே வாழ்க

அருளால் நிறைந்த அன்னையே நீ வாழ்க


1. இறைவனின் திருவுளத்தை

நிறைவேற்றிட மனமுவந்தாய் - என்றும்

மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட

குறையின்றிக் காத்திடுவாய்


2. தரணிக்குத் தாயானாய் - திருத்

தாய்மையைப் பாடுகின்றோம் - என்றும்

திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிடத்

தாயே உன் அருள் தாராய்

அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே,
எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்,
எங்கள் சர்வேசுரா!
தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே. ஆமென்.

நற்கருணை ஆசீர்வாதம்

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்.
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக!
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்கி
விசுவாசத்தின் உதவி பெறுக!


பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றி ஆர்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவுமாக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவருக்கும்
அளவில்லாத சமபுகழ்ச்சி
என்றென்றுமே உண்டாகுக. -ஆமென்


குரு: பரலோக அப்பத்தை அவர்களுக்குக் கொடுத்தருளினீர்

எல்லோரும்: அதில் சகல மதுரவின்பமும் உண்டாயிருந்தது


குரு: செபிப்போமாக

இறைவா, இந்த வியப்புக்குரிய திருவருட்சாதனத்திலே உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டு சென்றீர். உமது திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் மறை பொருளை வணங்கும் நாங்கள் உம்முடைய மீட்பின் பலனை இடைவிடாமல் அனுபவிக்க அருள் புரியும். தந்தையாகிய இறைவனோடு பரிசுத்த ஆவியின் ஜக்கியத்தில் என்றென்றும் ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்லோரும்: ஆமென்.


தேவ துதிகள்


  • சர்வேசுரன் - துதிக்கப்படுபவாராக! 

  • அவருடைய பரிசுத்த நாமம் - துதிக்கப்படுவதாக!

  • மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமான இயேசுகிறிஸ்து நாதர் - துதிக்கப்படுவராக!

  • இயேசுவின் திருநாமம் - துதிக்கப்படுவதாக!

  • அவருடைய மிகவும் பரிசுத்த இருதயம் - துதிக்கப்படுவதாக!

  • அவருடைய விலையில்லா திரு இரத்தம் - துதிக்கப்படுவதாக!

  • பீடத்தின் மிகவும் பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் இயேசுநாதர் - துதிக்கப்படுவராக!

  • தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி - துதிக்கப்படுவாராக!

  • சர்வேசுரனுடைய தாயாகிய அதிபரிசுத்த மரியம்மாள் -  துதிக்கப்படுவாளாக!

  • அவருடைய பரிசுத்த மாசில்லாத உற்பவம் - துதிக்கப்படுவதாக!

  • அவளுடைய மகிமை நிறை ஆரோபணம் - துதிக்கப்படுவதாக!

  • கன்னியும் தாயுமான மரியம்மாளின் பரிசுத்த நாமம் - துதிக்கப்படுவதாக!

  • அவளுடைய மிக்க விரத்த பத்தாவாகிய புனித சூசையப்பர் - துதிக்கப்படுவதாக!

  • தம்முடைய சம்மனசுக்களிடத்திலும், புனிதர்களிடத்திலும் சர்வேசுரன் - துதிக்கப்படுவதாக!


நித்திய ஸ்துதிக்குரிய
பரிசுத்த நற்கருணைக்கு
பக்தியாய் ஆராதனை
எத்திசையும் புரிவோம். (3)

24 மணி நேர செபமாலை Booklet .pdf
Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse