➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.
தொடக்கச் செபம்:
எல்: எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனிதரும், நன்றி இல்லாதப் பாவிகளுமாய் இருக்கிற எங்கள் மீது, அளவில்லாத மாட்சி கொண்டிருக்கின்ற உம்முடைய திருச்சந்நிதியிலே இருந்து செபம் செய்யத் தகுதி அற்றவர்களாய் இருந்தாலும், அளவில்லாத இரக்கத்தை நம்பிக் கொண்டு, உமது மாட்சிக்காகவும், அன்னை மரியாவின் புகழ்ச்சிக்காகவும் ஐம்பத்து மூன்று மணி செபமாலை தொடுக்க ஆசையாய் இருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடு செய்து, எவ்வித கவனச் சிதறல்களும் இல்லாமல் முடிக்க உம்முடைய அருளை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
தூய ஆவியார் செபம்:
எல்: தூய ஆவியாரே எழுந்தருள்வீர். வானினின்று எமது பேரொளியின், அருள்சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியவர் தந்தாய், வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மை தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை. நல்லது அவனில் ஏதுமில்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதைக் குளிர் போக்கிடுவீர். தவறிப்போனதை ஆண்டருள்வீர். இறைவா, உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணியப் பலன்கள் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர். அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென்.
நம்பிக்கை அறிக்கை:
எல்: விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
(“பிறந்தார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவமன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.
1. கபிரியேல் தூதர் அன்னை மரியாவுக்கு வாழ்த்துரைத்ததைப் பற்றித் தியானிப்போம்
முத: இயேசுவே மரியே!
எல்: இயேசு, மரி, சூசை (10 முறை)
முத: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
2. அன்னை மரியா எலிசபெத்தை சந்தித்ததைப் பற்றித் தியானிப்போம்
முத: இயேசுவே மரியே!
எல்: இயேசு, மரி, சூசை (10 முறை)
முத: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
3. பெத்லகேமின் மாட்டுத் தொழுவில் இயேசு பிறந்ததைப் பற்றித் தியானிப்போம்
முத: இயேசுவே மரியே!
எல்: இயேசு, மரி, சூசை (10 முறை)
முத: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
4. இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததைப் பற்றித் தியானிப்போம்
முத: இயேசுவே மரியே!
எல்: இயேசு, மரி, சூசை (10 முறை)
முத: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
5. பன்னிரெண்டு வயதில் காணமல் போன இயேசுவைக் கோவிலில் கண்டடைந்ததைப் பற்றித் தியானிப்போம்
முத: இயேசுவே மரியே!
எல்: இயேசு, மரி, சூசை (10 முறை)
முத: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
எல்: அதிதூதரான தூய மிக்கேலே, வானதூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே, திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே, நாங்கள் எத்தனை பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஐம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் புனித அன்னை மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம் -ஆமென்.
புனித பெர்னார்து அன்னை மரியாவிடம் மன்றாடிய செபம்:
எல்: மிகவும் இரக்கமுள்ள தாயே, உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து, ஆதரவைத் தேடி மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியர்களுக்கு அரசியான கன்னியே, நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை என்னைத் தூண்டுவதால் நான் உமது திருவடியை நாடி வருகிறேன். பாவியாகிய நான், உமது இரக்கத்திற்காகத் துயரத்தோடு உம் திருமுன் காத்து நிற்கிறேன். மனுவுருவான இறைவார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கேட்டுப் பரிந்துரை செய்தருளும்.
எல்: பிறப்புநிலைப் பாவமின்றிக் கருவுற்றத் தூய மரியே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு, எங்களுக்காக உமது திருமகனிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

நிறைவு செபம்:
முத: நமது திருத்தந்தையின் கருத்துகளுக்காகவும், நமது குடும்பங்களில் உள்ள அனைவரின் நலனுக்காகவும், இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மா இளைப்பாற்றிகாகவும், மேலும், இங்குள்ள விண்ணப்பப் பெட்டகத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அனைத்து விண்ணப்பங்களும் இறைவனின் திருவுளப்படி நிறைவேறவும் மன்றாடுவோமாக:
முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.