➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.
முத: புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
எல்: தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதல் ஆனவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மைத் தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை. நல்லது அவனில் எதுவும் இல்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும், உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. ஆமென்.
முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!
எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
புனித தேவசகாயம் அடிகளாரை நோக்கி செபம்:
முத: புனித தேவசகாயம் அடிகளாரே! எங்கள் இந்திய மண்ணின் முதல் பொதுநிலையினரின் மறைசாட்சியே செல்வம், புகழ், பதவி போன்ற உலகப் பற்றுகளை நீர் துறந்து இறை ஆட்சியின் வளர்ச்சிக்காக உம்மையே கையளித்தீர். நற்செய்தி மதிப்பீட்டின்படி வாழ்ந்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி, கிறிஸ்துவுக்காக நீர் பல்வேறு துன்பத் துயரங்களைப் பொறுமையோடு அனுபவித்து, உம்முடைய இன்னுயிரையும் தியாகப் பலியாக்கினீர். விண்ணகத்தில் பேரின்ப வாழ்வை, இறைவனின் மாபெரும் கொடையாகப் பெற்றுள்ளதோடு, இன்று பீட வணக்கத்திற்கும் உயர்த்தப்பட்டுள்ளீர். இறைவன் உமக்கு அளித்த இந்த மாபெரும் மகிமைக்காக நாங்கள் இறைவனைப் போற்றிப் புகழ்கின்றோம். இரத்தம் சிந்தி கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்த புனித தேவசகாயம் அடிகளாரே, நாங்கள் உம்மைப் பின்பற்றி வாழ்ந்து, நாங்களும் கிறிஸ்துவுக்கு இறுதி வரை பிரமாணிக்கமுள்ள சீடர்களாக வாழ்ந்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி, விண்ணக வாழ்வின் பேரின்பத்தைப் பெற்று மகிழ்ந்திட எங்களுக்காக இறைவனை மன்றாடும்.
எல்: ஆமென்.
இறை வார்த்தை:
முத: எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் ().
உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை. எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மை பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்கு குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும், அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
முத: ஆண்டவரின் அருள் வாக்கு.
எல்: இறைவனுக்கு நன்றி!
இறை வேண்டல்:
1.
முத: கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்;. உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;. என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;.
எல்: ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
2.
முத: உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;. உம் பார்வையில் தீயது செய்தேன்;. எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர். உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்;, பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.
எல்: இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே, மெய்ஞானத்தால் என் மனதை நிரப்பும்.
3.
முத: ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். உறைபனியிலும் வெண்மையாவேன். மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும். நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
எல்: என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக் கறைகளை எல்லாம்
துடைத்தருளும்.
4.
முத: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;. உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;. உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
எல்: உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
5.
முத: அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்;. அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
எல்: என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
6.
முத: ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது. நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டம் கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே, கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை.
எல்: சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு:
1.
முத: எங்கள் அன்பின் ஆண்டவரே! ஆவியானவரின் தூண்டுதலால், எங்கள் திருதந்தை பிரான்சிஸ் அவர்களின் வழியாக, எங்கள் மண்ணின் முதல் பொது நிலையினர் மறைசாட்சியான எங்கள் புனிதர் தேவசகாயம் அடிகளாரை, புனிதர் நிலைக்கு உயர்தியதற்காக நன்றி கூறுகின்றோம். அவரின் வழிவரும் நாங்களும் துன்பங்களை மனம் தளராமல் ஏற்றுக்கொண்டு, இறை சாட்சிகளாக வாழ வரமருள வேண்டும் என்று புனித தேவசகாயம் அடிகளார் வழியாக மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
2.
முத: அன்பின் ஆண்டவரே, புனித தேவசகாயம் அடிகளார் யோபுவின் கதையினால், மனம் மாற்றம் அடைந்து யோபுவை போல உடலிலும், மனதிலும் அடைந்த துன்பங்களை கிறிஸ்துவுக்காக அமைதியுடனும், பொறுமையோடும் ஏற்று வாழ்ந்தது போல, நாங்களும் துன்ப நேரங்களில் துவண்டு விடாமல், அமைதியுடன் இருந்து அந்நேரங்களில் கிறிஸ்து எங்களில் செயல்பட்டு, முடிவில் இரட்டிப்பான நன்மைகளை மகிழ்ச்சியுடன் பெற அருள் வரம் வேண்டி புனித தேவசகாயம் அடிகளார் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
3.
முத: குணமளிக்கும் ஆண்டவரே, எங்கள் புனிதர் சிறைபட்டபின் அனுபவித்த கொடுமைகளை அமைதியுடன் ஏற்றுக் கொண்டதால், அன்று அவரை சந்திக்க வரும் எல்லா மனிதருக்கும், சுகம் கொடுத்து புதுமைகள் செய்தீரே! இன்றும் எங்கள் உடலிலுள்ள நோய்களை குணமாக்கி, மனதில் இருக்கும் வடுக்களை நீக்கி, சுகம் கொடுத்து காத்தருள வேண்டி புனித தேவசகாயம் அடிகளார் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
4.
முத: ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கும் இறைவா! அநீத தீர்ப்பு பெற்று சிறையில் வாடும் மனிதர்கள் விடுதலை பெறவும், தான் செய்த தவறுகளுக்காக தீர்ப்பு பெற்று சிறையில் இருக்கும் மனிதர்கள், குற்றங்களை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு பெறவும், மன ஆறுதல் அடைந்து மறு வாழ்வு பெறவும் வேண்டும் என்று புனித தேவசகாயம் அடிகளார் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
5.
முத: வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா! இக்கால கட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகவும், மனப்போராட்டத்தாலும் விவாகரத்துக்காக காத்து இருக்கின்ற தம்பதியர்களுக்காக மன்றாடுகின்றோம். தீய சக்தியின் பிடியிலிருந்து இவர்கள் விடுபட்டு, “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" என்ற இறை வார்த்தைக்கேற்ப ஒருவர் மற்றவரை மன்னித்து அன்பு செய்து, ஒற்றுமையுடன் வாழ வரமருள வேண்டுமென்று புனித தேவசகாயம் அடிகளார் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
6.
முத: திரு குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! இறைவனின் பிள்ளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் எங்கள் புனிதரை பின்பற்றி, தம்பதியர்களாக இணைந்து இறைவார்த்தையை பரப்பும் பணியினை எங்கள் வாழ்வில் கடைபிடித்து, அதனை செயலாற்றும் பண்பினை உணர்ந்து வாழ வரமருள வேண்டுமென்று புனித தேவசகாயம் அடிகளார் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
7.
முத: படைப்பின் ஆண்டவரே! எங்கள் புனிதர் இம்மண்ணில் இரத்தம் சிந்தி, உயிர் நீத்த நாளாகிய ஜனவரி 14ஆம் நாளன்று அறுவடை நாளாகவும் நாங்கள் நினைவு கூறுகின்றோம். அந்த நாளுக்காகவும் சிறப்பாக விவசாயிகள் அனைவருக்காகவும் உம்மை வேண்டுகின்றோம். விவசாயம் அழிந்து வரும் இக்கால கட்டத்தில், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயத்தை விட்டு சென்ற விவசாயிகள் அதனை நாடி வரவும், அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் ஆசிர்வதித்து செழிப்பாக்கவும், ‘நீ கையிட்டு செய்யும் எல்லா காரியங்களிலும் ஆண்டவர் உன்னுடனே இருக்கிறார்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்றும், புனித தேவசகாயம் அடிகளார் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்!
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
புனித தேவசகாயம் அடிகளாரின் வழியாக திருக்குடும்பத்தை நோக்கி செபம்:
முத: எங்கள் அன்பான தந்தையே! அனைத்து குடும்பங்களையும் ஆசீர்வதியும். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதன் மூலம், திருக்குடும்பத்தை போல ஒன்றிணைந்த மனதுடன் வாழச் செய்தருளும். எமது குடும்பங்களில் அன்பும் அமைதியும் ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் நாள்தோறும் வளர்வதாக! ஆண்டவரே! எமது குடும்பங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருகுடும்பத்தைப் போல, அனைத்து குடும்பங்களையும் பரிசுத்தமாக்கும். தந்தையே! எமது குடும்ப வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும், பிறரில் குறைகாண்பதை விடுத்து அவர்களது நிறைகளை கண்டுணரவும், பிறரை தூற்றுவதை விடுத்து அவர்களில் பரிவு கொள்ளவும், பிறரிடமிருந்து பெற்றுக்கொள்வதை விடுத்து பிறருக்கு கொடுக்கவும் வரமருளும். இதன்மூலம் எமது குடும்பம், உமது அன்பும் அமைதியும் ஊற்றெடுக்கும் இடமாக மாற்றப்பட வேண்டுமென்று புனித தேவசகாயம் அடிகளார் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
புனித தேவசகாயம் அடிகளாரின் வழியாக திருக்குடும்பத்தை நோக்கி செபம்:
முத: இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னிதாயின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமை நிறைந்த புனித சூசையப்பரே! உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இறந்து மன்றாடிக் கேட்ட எவறும் அந்த மன்றாட்டுக்களை அடையாமல் போனதில்லையென்று நினைத்தருளும். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்றாடுகின்றேன். அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளும்.
எல்: ஆமென்.
புனித தேவசகாயம் அடிகளாருக்கு மன்றாட்டு மாலை:
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முத: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: உலகத்தை மீட்டத் திருமகனாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: தூய ஆவியாராகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தூய மரியே, இறைவனின் தாயே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அன்னை மரியாவின் கணவரான புனித யோசேப்பே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மறைசாட்சிகளுக்கு அரசியான தூய மரியே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மறைசாட்சியான புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இந்தியாவின் முதல் பொதுநிலையினரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: பன்மொழி, கலைகளில் தேர்ச்சி பெற்றவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனை காரியக்காரராக விளங்கிய மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: குடும்பத்தில் பல இழப்புகள் நேரிட்ட போது மனம் நொந்து ஆறுதல் இன்றித் தவித்த மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உமது ஆன்ம நண்பரான படைத்தளபதி டிலனாய் வழியாக ஆறுதலைடந்த மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: நீதிமானாகிய யோபுவின் துன்ப வாழ்வையும், இறுதியில் இறைவன் அவரை மீட்டு ஆசீர்வதித்ததையும் அறிந்து திடம் பெற்றவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இந்த உலகம், அதில் கிடைக்கும் பட்டம், பதவி, பெயர், புகழ் அனைத்தும் நிலையற்றவை என்ற உண்மையை உணர்ந்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இயேசு கிறிஸ்துவை தனது மீட்பராக ஏற்று வடக்கன்குளம் சென்று அருள்தந்தை புத்தாரியிடம் திருமுழுக்குப் பெற்றவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இயேசுவே ஆண்டவர், அவரே நம் மீட்பர், நமக்கு விண்ணக வாழ்வைத் தருபவர் என்பதை ஏற்றுக் கொண்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தன் மனைவி ஞானப்பூவுக்கு அருளுரை வழங்கி அவர்களும் திருமுழுக்குப் பெற்று திருமறையில் சேர்ந்து வாழ வழிசெய்த மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித செபஸ்தியார் கிறிஸ்துவுக்காக உயிர் விட்டு மறைசாட்சி முடி பெற்றது போல, தனக்கும் மறைசாட்சி முடி கிடைக்கத் தன்னுயிரைக் கொடுக்க உறுதி பூண்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கிறிஸ்துவையும், கிறிஸ்துவ மதத்தையும் விட்டுவிட்டு, மீண்டும் முன்னால் வழிபட்ட அன்னிய தேவர்களை வணங்கும்படி, அரசரால் கட்டாயப்படுத்தப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மன்னர் வணங்கிய அந்நிய தேவர்களை வணங்க மறுத்ததால், மன்னனின் கோபத்துக்கு ஆளானவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கிறிஸ்துவ மதத்தை விட்டுவிட மறுத்ததால் பட்டம், பதவியைத் துறந்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பல நிந்தனைகளுக்கு ஆளானவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அதிகாரிகளால் நிந்திக்கப்பட்டு, கொடிய தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: சாட்டைகளாலும், தடிகளாலும் இரக்கமின்றி, உடல் கிழிய அடிக்கப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உடலில் ஏற்பட்ட காயங்களில் மிளகுப்பொடி தேய்த்து, அதிக வேதனைகளுக்கு ஆளாக்கப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, கைகால்களில் விலங்கு பூட்டப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: எருமை மேல் ஏற்றி, எருக்கம் பூமாலை அணிவித்து, ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உடம்பெல்லாம் முட்களால் கீறி, அவைகளில் மிளகுப்பொடி பூசி, கைகால் கட்டி, சுடு மணலில் உருட்டி கொடுமைப்படுத்தப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புலியூர்க்குறிச்சியில் கைகால்கள் கட்டி, கடுமையான வெயிலில் சுடுகின்ற பாறை மீது வெகு நேரம் நிறுத்தி துன்புறுத்தப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: பெருவிளையில் பட்டுப்போன வேப்ப மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் ஏழு மாதங்கள் இரவு, பகல், வெயில், மழை, காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களால் துன்பப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கட்டி வைக்கப்பட்டிருந்த பட்ட வேப்ப மரம், அற்புதமாகத் தளிர்விட்டு, தமக்கு நிழல் தந்த ஆறுதல் பெற்று, ஆண்டவரை போற்றிப் புகழ்ந்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தாகத்தால் துவண்டு போன போது சேவகர்கள் தண்ணீர் கொடுக்காததால் ‘இறைவா தாகம் தீர்க்க தண்ணீர் தாரும்’ என்று வேண்டி, கை முட்டியால் பாறையை இடிக்க, அற்புதமாய் பாறை பிளந்து பாய்ந்தோடிய தண்ணீரால் தாமும், பிறரும் தாகம் தீர்க்க வழி செய்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தம் உடல் காயங்கள் கடவுள் அருளால் ஆறி குணமடைந்து ஆண்டவரில் மகிழ்ச்சியடைந்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: ஆராச்சாரருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு செபித்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உயிரிழந்த ஆடு அற்புதமாக உயிர்பெற செபித்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மூடநம்பிக்கைகளையும், மந்திர மாயைகளையும் விட்டுவிட்டு, உலகெல்லாம் படைத்துக் காப்பாற்றுகின்ற உண்மைக் கடவுளை வணங்க வேண்டுமென்று மக்களுக்குப் போதித்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தம்மை சோதிக்க வந்த சாத்தானை, இயேசுவின் பெயரைச் சொல்லி துரத்தியவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உலக ஆட்சியை விட்டு விட்டு, இறை ஆட்சியை தேர்ந்து தெளிந்த மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தம்மைக் காண வந்த மக்களுக்கு நற்செய்தியைத் தெளிவாகப் போதித்து, நம்பிக்கையை வளர்த்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இவர் மதத் துரோகி, அந்தணரையும், மன்னனையும் பழித்துரைத்தவர் என தம் மேல் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, மன்னரால் மரண தீர்ப்பிற்கு ஆளாக்கப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மன்னனின் தீர்ப்பின்படி துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல, காற்றாடி மலை உச்சிக்குக் கிறாத்தடியில் சுமந்து செல்லப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இறப்பிற்கு முன் முட்டூன்றி செபித்து, தமது ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்து நல்ல மரணத்திற்குத் தயாரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: ஐந்து குண்டுகள் உடலில் பாய்ந்து மரணம் அடைந்த போது, தம் உயிரை இறைவனிடம் ஒப்படைத்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உம்மிடம் வேண்டிக்கொள்ளும் அனைவருக்கும் உடல் உள்ள நலன்களைப் பெற்றுத் தருபவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அசிசியின் புனித பிரான்சிசே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அசிசியின் புனித கிளாரம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: பதுவையின் புனித அந்தோணியாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித அருளானந்தர் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித குரியாகோஸ் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித தோமா அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கொல்கொத்தாவின் புனித அன்னை தெரேசம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித அல்போன்ஸ் அம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: முக்திபேறு பெற்ற கார்லோஸ் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இறைவனின் எல்லா புனிதர்களே, புனிதைகளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: இறைவனின் எல்லா வான தூதர்களே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும் படியாக...
எல்: இறைவனின் மறைசாட்சியான புனித தேவசகாயம் அடிகளாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: மன்றாடுவோமாக! எங்கள் அன்பு தந்தையே இறைவா, மறைசாட்சியான புனித தேவசகாயம் அடிகளார், பல்வேறு துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி, இறுதியில் சுடப்பட்டு, இரத்தம் சிந்தி, மரித்து அவர் உம் மீது கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தத் திருவுளமானீர். அவரிடம் வேண்டிக்கொள்ளும் உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் சமர்பிக்கும் மன்றாட்டுகளை உமது திருவுளப்படி எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
புனித மிக்கேல் அதிதூதர் செபம்:
முத: அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களைக் காத்தருளும். அலகையின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டு இறைவன் அலகையைக் கண்டிப்பாராக! விண்ணகப் படையின் தலைவரே, மக்களைக் கெடுக்க உலகில் சுற்றித் திரியும் சாத்தானையும், மற்ற கெட்ட அரூபிகளையும், நீர் இறை வலிமையால் நரகத்தில் தள்ளுவீராக.
எல்: ஆமென்.
இறுதி செபம்:
முத: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும் படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை நமக்கு என்றும் கிடைக்கும்படியாகவும் மன்றாடுவோமாக!
முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!
எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
புனித தேவசகாயம் அடிகளாருக்கு பாடல்:
எங்கள் புனிதரே தேவ சகாயமே - 2
வாழ்த்துகின்றோம் போற்றுகின்றோம்
உம் பெயரில் மகிழுகின்றோம் (2)
எங்கள் புனிதரே தேவ சகாயமே - 2
தன்னானே னானேனேன… தனனானே னானேனேன - 2
தனனானே னானேனேன… தனனானே னானேனேன
1.
நட்டாலத்தில் பிறந்தவரே எங்கள் புனிதரே - 2
ஆயக்கலைகளிலே தேர்ச்சியும் பெற்றவரே - 2
யோபுவின் கதையினாலே…
யோபுவின் கதையினாலே கிறிஸ்துவக்குள் மாறினீரே
கிறிஸ்துவில் நிலைத்துநின்று சாட்சியாய் மாறினீரே - 2
எங்கள் புனிதரே தேவ சகாயமே
தன்னானே னானேனேன… தனனானே னானேனேன - 2
தனனானே னானேனேன… தனனானே னானேனேன
2.
பலரை மனமாற்றம் செய்தாரே புனிதரே - 2
இயேசுவுக்காய் துன்பங்கள் நிறையவே தாங்கினீரே - 2
இயேசுவில் அனைவருமே…
இயேசுவில் அனைவருமே சரிசமம் என்றவரே
காற்றாடி மலையிலே மறைசாட்சியானவரே - 2
எங்கள் புனிதரே தேவ சகாயமே - 2
வாழ்த்துகின்றோம் போற்றுகின்றோம்
உம் பெயரில் மகிழுகின்றோம் (2)
எங்கள் புனிதரே தேவ சகாயமே - 2
➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.