ADORATION
ADORATION
அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நற் கருணை விஸ்வாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்
இயேசுவுக்கு செவிமடுக்கு முன்... 🎼
முதல் வாசகம்
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19
அக்காலத்தில்
இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.
இறைவன் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்துவோம்...
எழுத்து வடிவில் சமர்ப்பிப்போம்...
நன்றிப்பாடல் 1 🎼
நன்றிப்பாடல் 2 🎼
இரண்டாம் வாசகம்
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில்
சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.
பல நாட்களாக நாம் கேட்கும் விண்ணப்பங்களை நினைவு படுத்தோம்
போற்றிப்பாடுவோம் 1 🎼
போற்றிப்பாடுவோம் 2 🎼
மூன்றாம் வாசகம்
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14
அக்காலத்தில்
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பு இருக் கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’ ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார். “
இயேசு, “பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
அயலவர்களுக்காக செபிப்போம்
மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்.
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக!
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்கி
விசுவாசத்தின் உதவி பெறுக!
பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றி ஆர்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவுமாக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவருக்கும்
அளவில்லாத சமபுகழ்ச்சி
என்றென்றுமே உண்டாகுக. -ஆமென்
குரு: பரலோக அப்பத்தை அவர்களுக்குக் கொடுத்தருளினீர்
எல்லோரும்: அதில் சகல மதுரவின்பமும் உண்டாயிருந்தது
குரு: செபிப்போமாக
இறைவா, இந்த வியப்புக்குரிய திருவருட்சாதனத்திலே உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டு சென்றீர். உமது திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் மறை பொருளை வணங்கும் நாங்கள் உம்முடைய மீட்பின் பலனை இடைவிடாமல் அனுபவிக்க அருள் புரியும். தந்தையாகிய இறைவனோடு பரிசுத்த ஆவியின் ஜக்கியத்தில் என்றென்றும் ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
தேவ துதிகள்
சர்வேசுரன் - துதிக்கப்படுபவாராக!
அவருடைய பரிசுத்த நாமம் - துதிக்கப்படுவதாக!
மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமான இயேசுகிறிஸ்து நாதர் - துதிக்கப்படுவராக!
இயேசுவின் திருநாமம் - துதிக்கப்படுவதாக!
அவருடைய மிகவும் பரிசுத்த இருதயம் - துதிக்கப்படுவதாக!
அவருடைய விலையில்லா திரு இரத்தம் - துதிக்கப்படுவதாக!
பீடத்தின் மிகவும் பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் இயேசுநாதர் - துதிக்கப்படுவராக!
தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி - துதிக்கப்படுவாராக!
சர்வேசுரனுடைய தாயாகிய அதிபரிசுத்த மரியம்மாள் - துதிக்கப்படுவாளாக!
அவருடைய பரிசுத்த மாசில்லாத உற்பவம் - துதிக்கப்படுவதாக!
அவளுடைய மகிமை நிறை ஆரோபணம் - துதிக்கப்படுவதாக!
கன்னியும் தாயுமான மரியம்மாளின் பரிசுத்த நாமம் - துதிக்கப்படுவதாக!
அவளுடைய மிக்க விரத்த பத்தாவாகிய புனித சூசையப்பர் - துதிக்கப்படுவதாக!
தம்முடைய சம்மனசுக்களிடத்திலும், புனிதர்களிடத்திலும் சர்வேசுரன் - துதிக்கப்படுவதாக!
நித்திய ஸ்துதிக்குரிய
பரிசுத்த நற்கருணைக்கு
பக்தியாய் ஆராதனை
எத்திசையும் புரிவோம். (3)