அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்
மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா -2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா
இறைவாக்குச் சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா -2
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா
அன்பும் நட்பும் எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்
1. கிறிஸ்துவின் அன்பு நமையெல்லாம்
ஒன்றாய் கூட்டிச் சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம்
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே
ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்
அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத் துடனே யாம்
ஒருவரை ஒருவர் நேசிப்போம்
2. எனவே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய சச்சரவுகள் ஒழிந்திடுக
பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்
கிறிஸ்து நாதர் இருந்திடுக
3. முக்தி அடைந்தோர் கூட்டத்தில்
நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்
மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும்
நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய
பேரானந்தம் இதுவேயாம
இயேசுவின் இருதயமே - என்றும்
இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால் - எங்கள்
ஆனந்தம் நிலை பெறுமே
இறைவனுக்கு இதயமுண்டு - அந்த
இதயத்தில் இறக்கமுண்டு - என்றும்
இறங்கிடும் இறைவன் இருப்பதினால் - எங்கள்
அனைவர்க்கும் வாழ்வு உண்டு
பாவிக்கு பொறுத்தல் உண்டு - அந்த
பரலோக வாழ்வு உண்டு - நாங்கள்
கூவிடும் குரலை கேட்பதற்கு - இந்த
கோவிலில் தெய்வமுண்டு
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும், வெண்
தணலிலும் மனம் குளிரும் – 2
உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்
என்னைக் காத்திடு என் இறைவா!
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் -2
வலையினில் விழுகின்ற பறவை – அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை
6. என் விழியே
என் விழியே இயேசுவை நீ பாரு
என் நாவே இயேசுவை நீ பாடு (2)
1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு - 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு
இயேசிடம் உனை வழங்கு
2. என் கரமே இயேசுவின் மொழி எழுது - 2
என் காதே இயேசுவின் மொழி கேளு
இயேசுவின் மொழி கேளு
3. என் காலே இயேசுவின் வழி செல்லு - 2
என் உயிரே இயேசுவின் பதம் நாடு
இயேசுவின் பதம் நாடு
கிறிஸ்துவின் ஆத்துமமே என்னை அர்ச்சியும்
கிறிஸ்துவின் தேகமே என்னை ரட்சியும்
கிறிஸ்துவின் இரத்தமே என்னை பூர்ப்பியும்
திருவிலாத் தீர்த்தமே என்னை தூய்ப்பியும்
கிறிஸ்துவின் பாடுகள் என்னைத் தேற்றிட
அருள்நிறை இயேசுவே என்னை தேற்றிடும்
அரிய காயங்களுள் என்னை வைத்திடும்
பிரிந்திடா வண்ணமாய் என்றும் கட்டிடும்
பொருது சத்ருவிடம் நின்றே காத்திடும்
மரண வேளையிலே என்னை கூப்பிடும்
பரகதியில் நிதம் உம்மை வாழ்த்தவே
வருகவென்றன்போடு என்னை ஏவிடும்
அன்பான புரவலரே
திருச்சிலுவை பக்தரே
விவிலிய முனிவரே
யோசேப் வாஸ் அடிகளாரே
1. புகழ்கிறோம் பாடுகிறோம்
வேண்டுகிறோம் நாடுகிறோம்
எங்களை இறைமையில் வளர வையும்
யேசுவில் வாழசெய்யும்
2. இந்தியாவில் பிறந்தவரே
கோவாவில் வளர்ந்தவரே
இலங்கையின் திருத்தூதரே
கனாராவின் கர்த்தர் உருவே- புகழ்
3. மரியாளளின் பக்தரே
மாற்றத்தின் வித்தகரே
தேசங்களின் இறைதூதரே
மனிதரின் இறை காட்டியே-புகழ்
4. ஏழைகளின் போதகரே
நோயாளியின் மருத்துவரே
கஷ்டபடுவோரின் காவலரே
கல்விகண் திறந்தவரே-புகழ்
6. புதுமைகளின் நாயகரே
புரட்சிகளின் தலைவரே
வீழ்ச்சியின் எழுச்சியே
மலர்ச்சியின் மகிமையே-புகழ்
7. அணுகினோர் அடைக்கலமே
இறைவனின் கருணையே
தேடுபவர் பொக்கிஷமே
வாடுபவர் மகிழ்ச்சியே-புகழ்
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
தேவனின் வழியில் சிறந்து விளங்கும்
திருச்சபையின் நேச பக்தனே
புனித குரியாகோஸே - 2
எளிமையாய்இருக்கும் நின் கர்த்தர் பெயரில்
பொழிவீர் அன்பு ஆசிரும்
புனித குரியாகோஸே - 2
1. விண்ணக பிதாவே பரிசுத்த ஆவியே
உம்பாதம் நாங்களும் பின்தொடர்வோம்
எம்இருள் வழியினில்,
உம்பிரசன்ன ஒளியில்,
நல்ல மாதிரி எங்களுக்கு பொன் வெளிச்சம்.
2. தேவ பிதாவை அப்பா என்று
அன்பு கொண்டு கூப்பிடும்
அனைவருக்கும், தியாக திருவிருந்தை
திருசமுகமாக ஏற்படுத்தி
இங்கே - புதியதொரு உலகம் படைத்தீர்