ஆரம்பப்பாடல்
ஆஆஆஆஆஆ
தேவனின் வழியில் சிறந்து விளங்கும்
திருச்சபையின் நேச பக்தனே
புனித குரியாகோஸே - 2
எளிமையாய்இருக்கும் நின் கர்த்தர் பெயரில்
பொழிவீர் அன்பு ஆசிரும்
புனித குரியாகோஸே - 2
1. விண்ணக பிதாவே பரிசுத்த ஆவியே
உம்பாதம் நாங்களும் பின்தொடர்வோம்
எம்இருள் வழியினில்,
உம்பிரசன்ன ஒளியில்,
நல்ல மாதிரி எங்களுக்கு பொன் வெளிச்சம்.
2. தேவ பிதாவை அப்பா என்று
அன்பு கொண்டு கூப்பிடும்
அனைவருக்கும், தியாக திருவிருந்தை
திருசமுகமாக ஏற்படுத்தி
இங்கே - புதியதொரு உலகம் படைத்தீர்
புனித குரியாகோஸ் நவநாள் செபம்
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.
தொடக்க செபம்
முதல்வர்: புனித குரியாகோஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித குரியாகோஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித குரியாகோஸ் அடிகளாரே
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: ஆண்டவரே, நீர் புனித குரியாகோஸ் எலியாஸை எங்கள் பரலோக காவலராக தந்தமைக்கு நன்றி கூறுகிறோம். புனிதருடைய ஆற்றல் வாய்ந்த பரிந்துரையின் மூலம் எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புனித குரியாகோஸ் எலியாஸே, நீர் உமது வாழ்நாள் முழுவதும் கடவுளின் பார்வையில் புனிதமாக இருந்தீர். கடவுளின் சித்தத்தில் வேரூன்றிய புனித வாழ்வை நாங்கள் நடத்துவதற்கு உம் தவமிகு வாழ்வு எங்களுக்கு ஒரு முன்உதாரணமானதாக அமைகிறது. ஓ புனித குரியாகோஸ் எலியாஸே, உமது பிள்ளைகளாகிய நாங்கள் தூய்மையான இதயத்துடன் புனித வாழ்வு நடத்த வேண்டுமென்றும் மேலும் இந்த நவநாள் மூலமாக எங்கள் வேண்டுதல்களைப் பெற்றுத்தரும்படியும் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
(உங்கள் வேண்டுதல்களை மௌனமாகச் சொல்லவும்)
புனித குரியாகோஸ் அடிகளாரை நோக்கி செபம்
முதல்வர்: சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, புனித குரியாகோஸ் அடிகளார் உம் முன்னிலையில் ஒரு புனித வாழ்க்கை வாழ்ந்து, பரிசுத்த திருச்சபைக்கு சேவை செய்வதன் மூலம் உமது அன்புக்கு பாத்திரமான ஊழியராக ஆனார். உம்முடைய இந்த பரிசுத்த ஊழியரின் ஆதரவில் தஞ்சம் புகுந்த எங்களை இரக்கத்துடன் கண் நோக்கும். ஓ புனித குரியாகோஸ் அடிகளாரே, குறையாத மகிழ்ச்சி குன்றாத மன சுதந்திரம் மெய்யான மன நிறைவு என்ற பண்புகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தீரே! கிறிஸ்துவின் மீது உயிருக்கு உயிரான அன்பும் ஆழமான உறவும் கொண்டு விளங்கினீரே! நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும், துக்கமுள்ளவர்களை ஆறுதல்படுத்தவும், குழந்தைகள் இல்லாத தம்பதிகளை ஆசீர்வதிக்கவும், மாணவர்களுக்கு ஞானத்தை வழங்கவும், பொருளாதார கஷ்டங்களில் இருப்பவர்களுக்கு தங்குமிடம் வழங்கவும், மேலும் நமது பரிசுத்த திருச்சபையின் சேவைக்காக எங்கள் குடும்பங்களிலிருந்து குழந்தைகளை அழைக்குமாறும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆமென்.
குழுவினருடைய வேண்டுதல் (விண்ணப்பங்கள்)
முதல்வர்: கருணையுள்ள தந்தையே, திருத்தந்தை பிரான்சிஸ் அடிகளார், எம் ஆயர் உள்ளிட்ட எல்லா ஆயர்கள், குருக்கள், துறவிகள் எல்லோரும் தூய வாழ்வு வாழ்வதற்கும், உமது அரசைப் பரவச் செய்வதற்கும் தேவையான எல்லாக் கொடைகளையும் புனித குரியாகோஸ் அடிகளாரின் வேண்டுதலால் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: நாங்கள் உமது அன்பு சீடரான புனித குரியாகோஸ் எலியாஸின் ஆன்மீக வாழ்வை பின்பற்றி, உமது அன்பில் வளர, கீழ்ப்படிதலின் முன்மாதிரியான எங்கள் புனிதரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: குடும்பங்களில் அன்பு, அமைதி, ஒற்றுமை தலைத்தோங்க புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களின்படி ஒரு நல்லொழுக்க வாழ்க்கையை நாங்கள் நடத்துவதற்கு புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: ஆண்டவரே, நாங்கள் உமது ராஜ்யத்தைக் கட்டியெழுப்பவும், பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாப்புக் கவசத்தின் கீழ் இருக்கவும், புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: ஆண்டவரே நீர் அனுமதிக்கும் துன்பங்கள், வேதனைகள் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் நன்றியுடன் இருக்க, புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: ஆண்டவரே, புனித குரியாகோஸ் எலியாஸை போன்று உமக்கு கீழ்ப்படிந்து நடக்க வரமருள வேண்டுமென்று புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: நமது புனித திருச்சபைக்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அனைவருக்காகவும் புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் அனைவருக்கும், அவர்களின் நோய்கள் எல்லாவற்றுக்கும் சுகமும், பராமரிப்பும், பூரணகுணமும் பெற்றுத் தந்தருள புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் தூய ஆவியார் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று, புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: புனித குரியாகோஸ் அடிகளாரிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக் கூறுவோம்.
முதல்வர்: இறைவா, உம்மிடம் நாம் சமர்ப்பித்த இவ்வேண்டுதல்களுக்குக் கனிவுடன் செவிகொடுத்து, புனித குரியாகோஸ் அடிகளாரின் வேண்டுதலால் அவற்றை நாம் பெற்றுக்கொள்ள எமக்கு அருள் தாரும். இதைத் தூய ஆவியுடன், ஒரே இறைவனாக என்றும் வீற்றிருப்பவரும், ஆட்சி புரிபவருமான, உம் திருமகன், எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
குழந்தைகளுக்கு கல்வி வரம் வேண்டி செபம்
முதல்வர்: குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என்று கூறிச் குழந்தைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டு அவர்களை ஆசிர்வதித்தவரான எங்கள் அன்பான இயேசுவே, குழந்தைகளை தூய ஆவியின் கொடைகளால் நிரப்பி, அவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்க அருள் புரியும். ஓ புனித குரியாகோஸ் அடிகளாரே, கல்வியின் முக்கியத்துவத்தையும் கடவுளுடைய ராஜ்யத்தை கட்டியெழுப்புவதில் அது வகிக்கும் பங்கையும் நீர் அறிந்திருந்தீர். கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலத்திலும் பொதுமக்கள் கல்வி கற்பதற்கு உம்மால் முடிந்த அனைத்தையும் செய்தீர். நீர் ஞானமும் விவேகமும் நிறைந்த ஒரு சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தீர்.
அனைவரும்: புனித குரியாகோஸ் அடிகளாரே, குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அனைத்து விதமான இடையூறுகள், ஏமாற்றங்கள், பயத்தையும் குழந்தைகள் மனதில் இருந்து நீக்கி, படிப்பில் நன்கு பிரகாசிக்கும்படி செய்ய எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடியருளும். ஆமென்.
குடும்பங்களுக்கான செபம்
முதல்வர்: ஆண்டவரே, புனித குரியாகோஸை குடும்பங்களின் பாதுகாவலராக வழங்கியதற்கு நன்றி கூறுகிறோம். தம் எளிமையான வாழ்வின் வழிகாட்டல் மூலமாக எல்லோரையும் கிறிஸ்துவில் ஒன்றினைத்த புனித குரியாகோஸ் அடிகளாரே, உமது பாதுகாப்பின் கரம் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இருப்பதாக. குடும்பங்களில் அமைதி, அன்பு, ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டியும், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறவர்களாகவும், கணவன் மனைவியிடையே அன்பு வளரவும், பிள்ளைகள் ஒழுக்கம் உடையவர்களாக வளரவும் மன்றாடியருளும். மேலும் வாழ்க்கையின் கஷ்டங்களை நாங்கள் சமாளிப்பதற்கான நம்பிக்கையையும், எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கும் கிருபையையும் எங்களுக்கு வழங்க வேண்டும் என எம் மீட்பராம் இயேசு கிறிஸ்துவிடம் வேண்டுதல் செய்து இவற்றைப் பெற்றுத் தர உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
நன்றியறிதல்
முதல்வர்: நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும்…
அனைவரும்: எங்கள் புனிதர் குரியாகோஸ் அடிகளாரின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும்…
அனைவரும்: எங்கள் புனிதர் குரியாகோஸ் அடிகளாரின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: மனத்தாழ்ச்சியின் பிம்பமான புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக திருச்சபைக்கு நீர் வழங்கிய அனைத்து அருள் வரங்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும்
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: துன்பங்களினால் துவண்டுவிடாத புனித குரியாகோஸ் அடிகளாரின் மன்றாட்டால் நோயாளிகள் பெற்ற நலத்திற்காக
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: குடும்பங்களில் அன்பை வளர்க்கும் புனித குரியாகோஸ் அடிகளாரின் மன்றாட்டால் அனைத்து குடும்பங்களுக்கும் நீர் கொடுத்த பாதுகாப்பிற்காக
அனைவரும்: ஆண்டவரே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல்வர்: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள நன்மைகளுக்காக புனித குரியாகோஸ் அடிகளாரின் வழியாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்
(மௌனமாக நன்றி சொல்லுதல்)
நோயாளிகளை ஆசீர்வதித்தல்
முதல்வர்: செபிப்போமாக. எம் மீட்பரே, பரிசுத்த ஆவியின் வரங்களால் எங்களின் நோய்கள், இயலாமையைப் போக்கியருளும். எங்களது காயங்களைக் குணமாக்கியருளும். எங்களது பாவங்களை மன்னித்தருளும். உடலிலும், மனதிலுமுள்ள எல்லா வேதனைகளையும் போக்கியருளும். ஆன்ம, உடல் சுகத்தை முழுமையாகத் தந்தருளக் கருணை கூர்ந்தருளும். உமது கருணையால் குணமாகித் எங்களது அன்றாடப் பணிகளை மீண்டும் புரிய எங்களுக்குப் பலம் தந்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற நீரே இதனைத் தந்தருள்வீராக. ஆமென்.
அனைவரும்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாதுகாக்க நம் நடுவிலும், நம்மைக் காப்பாற்ற, நமக்குள்ளும் நமக்கு வழிகாட்ட நம் முன்னும், நமக்கு காவலாயிருக்க நம் பின்னும், நம்மை ஆசீர்வதிக்க நம் மேலும் இருப்பாராக. எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி நம்மை ஆசீர்வதித்து பாதுகாத்து நம்மை வழிநடத்துவாராக.
அனைவரும்: ஆமென்.
மன்றாட்டு மாலை
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அந்தோணியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தோமா அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: முக்தி பேறு பெற்ற கார்லோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஆன்மீக வாழ்வில் சிறந்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பரிசுத்த நற்கருணை நாதரின் தூதராகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: திருக்குடும்பத்தின் பக்தராகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கார்மலின் தாயின் அன்பு மகனாகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கேரள மாநிலத்தில் உள்ள கைநாக்கரி என்னும் கிராமத்தில் பிறந்தவரான புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இறைப்பணி மட்டுமன்றி சமூகத் பணியிலும் சிறந்து விளங்கிய சீர்திருத்தரான புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: 1864இல், ஒவ்வொரு கோவிலிலும், ஒரு கல்விக் கூடம் தொடங்கி அனைவருக்கும் இலவசக்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இந்திய கத்தோலிக்க திருச்சபையில் முதன்முறையாக மன்னானத்தில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவரான புனித குரியாக்கோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கீழ்ப்படிதலின் முன்மாதிரியான புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பணிவு மற்றும் சமர்ப்பணத்தின் சின்னமாகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தர்மத்தின் எடுத்துக்காட்டாகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: எதிரிகளையும் அன்பு செய்யும் புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அடிமைபோல் பணிபுரிய மாசற்ற தேவதாயின் முன் தம்மைத் தாமே அர்பணித்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஆதரவற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் புகலிடமாக விளங்கும் புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: விசுவாசத்தின் ஊற்றிடமாக விளங்கும் புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பரிசுத்த ஆவியின் கொடைகளைப்பெற்ற புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பரிசுத்த திருச்சபையின் உண்மை ஊழியரான புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: துக்க, வேதனைகள், துயரங்களைத் தயவுள்ள தந்தை போல் செவிகொடுத்து, அவர்களை ஆறுதல்படுத்திய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இறையன்பை அனுபவித்துத் தம் எளிமையான வாழ்வின் வழிகாட்டல் மூலமாக எல்லோரையும் கிறிஸ்துவில் ஒன்று சேர்த்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பிள்ளைப் பேறற்ற துரயத்தால் மனவேதனைக்கு உள்ளான தம்பதியினருக்காக இறைவனிடம் வேண்டி, அவர்களுக்கு உதவி பெற்றுக் கொடுத்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சகோதர அன்பிலும், தேவ தயவிலும் காலத்தைச் செலவிட்டு, இறை சமூகத்தில் வீற்றிருந்து எம் எல்லோருக்கும் மோட்ச உரிமை கிடைக்க வழியாயிருக்கும் புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குகளுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக.
அனைவரும்: புனித குரியாகோஸ் அடிகளாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: எல்லாம் வல்ல தந்தையே! புனித குரியாகோஸ் அடிகளாரின் ஆதரவை நாடும் பிள்ளைகள் எல்லோரும் அவருடைய மன்றாட்டினால் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். ஆமென்.
இறுதி செபம்
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை செபம் என்றும் நமக்கு கிடைக்கும்படியாக,
1 கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழைச் சொல்லவும்.
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
அனைவரும்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
அனைவரும்: தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
அனைவரும்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
நிறைவுப்பாடல்
ஆஆஆஆஆஆ
தேவனின் வழியில் சிறந்து விளங்கும்
திருச்சபையின் நேச பக்தனே
புனித குரியா கோசே - 2
எளிமையாய்இருக்கும் நின் கர்த்தர் பெயரில்
பொழிவீர் அன்பு ஆசிரும்
புனித குரியா கோசே - 2
1. விண்ணக பிதாவே பரிசுத்த ஆவியே
உம்பாதம் நாங்களும் பின்தொடர்வோம்
எம்இருள் வழியினில்,
உம்பிரசன்ன ஒளியில்,
நல்ல மாதிரி எங்களுக்கு பொன் வெளிச்சம்.
2. தேவ பிதாவை அப்பா என்று
அன்பு கொண்டு கூப்பிடும்
அனைவருக்கும், தியாகதிரு விருந்தை
திருசமுகமாக ஏற்படுத்தி
இங்கே - புதியதொரு உலகம் படைத்தீர்
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
அனைவரும்: ஆமென்.