முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே!
அனைவரும்: ஆமென்.
முதல்வர்: இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திரு மகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவு கூறுகின்றோம். அவர் நடந்து சென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின் சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச் சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்.
எங்கே சுமந்து போறீர்?
சிலுவையை நீர் - எங்கே சுமந்து போறீர்
பொங்கும் பகைவராலே,
அங்கம் நடு நடுங்க
எங்கே போறீர்.
மனித பாவத்தாலே
மரணத் தீர்வை பெற்று
தூய செம்மறி போலே,
துக்கத்துடன் வருந்தி
எங்கே போறீர்
➕ முதல் நிலை
இயேசு அநியாயத் தீர்வையிடப் படுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோ அறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும், வழியும் உண்மையுமான உம்மையே நாங்கள் பின்பற்றவும் தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பாரச் சிலுவை மரம்,
பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அணைத்து,
பாரத்துடன் நடந்து எங்கே போறீர்
இயேசுவின் தோள்மீது பாரச்சிலுவையைச் சுமத்துகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவை எங்கள் பாவங்களின் விளைவு என்பதை உணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப் பழி சுமத்தாமல் இருக்கவும் எங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கல்வாரி மலை நாடி
தள்ளாடித் தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களைத்
தனிமையாய் சுமந்து எங்கே போறீர்
இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம் குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால் வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மாமரி கன்னி அன்னை
மகனின் கோலங்கண்டு
மாதுயருடன் வாடி
மனம் நொந்து வருந்த
எங்கே போறீர்
இயேசு தன் தாயைச் சந்திக்கிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! உம்மை ஈன்றெடுத்த அன்னை மா¢யா உம் துன்பங்களைக் கண்டு மனமுடைந்தார். அந்த அன்னையின் அரவணைப்பில் நாங்கள் என்றும் மகிழ்வு கொள்ள அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
உதிரம் ஆறாய் சிந்தி,
உள்ளம் உரமிழந்து
சீரேன் சீமோன் துணையை,
ஏற்று வழி நடந்து
எங்கே போறீர்
இயேசுவுக்கு சீமோன் உதவுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்து செல்ல சீமோன் என்பவர் துணை செய்தார். எங்கள் சகோதரர் சகோதா¢களின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திட எங்களுக்குத் துணை செய்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கர்த்தரே உம் வதனம்,
இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெரோணிக்காள்
வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போறீர்
வெரோணிக்காள் இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறாள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும் கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணி அன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார். எங்கள் வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் கவலையால் வாடும் அனைவரின் துன்பங்களையும் துடைத்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த,
பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும்
வீரத்துடன் எழுந்து எங்கே போறீர்
இயேசு இரண்டாம் முறை விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களை அழுத்தியதால், நீர் மீண்டும் ஒரு முறை கீழே விழுந்தீர். ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும் கண்டு துவழ்ந்து விடாமல் துணிந்து எழுந்து, உம்மேல் நம்பிக்கை வைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
புண்ணிய ஸ்தீரிகள் பலர்,
புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும்,
நேசக்கண்ணீர் சொரிந்து
எங்கே போறீர்
இயேசு தன்னைப் பின் தொடரும் பெண்களுக்கு ஆறுதல் சொல்கிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கா¢ய துன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர். தன்னலம் பாராது பிறர் நலம் நோக்கவும் துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்கு நல்மனதைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திட அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
சிலுவைப் பாரத்தாலே,
மாமாரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில்,
முகம் படிந்தெழுந்து
எங்கே போறீர்
இயேசு மூன்றாம் முறை விழுகிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால் உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள் பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள் சிந்தனை,சொல் செயல் அனைத்திலும் நாங்கள் தூய்மையோடு வாழவும் பாவத்தை வெறுத்து உம் அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நீடாடை கழற்றவே,
கோடாகோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய் பெருகி,
வேதனையால் வருந்தி எங்கே போறீர்
இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! உம் உடைகளைக் களைந்தவர்கள் உம்மை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமை, அரசியல் அடக்கு முறை, அதிகாரப்பாணி போன்ற அவலங்களால் மனித உரிமையும் மாண்பும் உறியப்பட்டு நிர்வாணமாக்கப்படுகின்ற எம் சகோதரர் சகோதாரியரை நினைத்துப் பார்க்கின்றோம். உம் உடன்பிறப்புகளாகிய அவர்களது மாண்பினைக் காத்துப் போற்றிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
நீட்டிய கால் கரத்தில்,
நீண்ட இரும்பாணிகள்
நிஷ்ட யூதர் அறைந்தும்,
நேசத்திலே வெந்து பலியாகினீர்
இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்ட போது உம்மை ஆணிகளால் துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்களை குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால் நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகிய சிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியது போல நாங்களும் எங்கள் துன்ப துயரங்களை உம் சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களை இடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
சிலுவைப் பீடமேறி,
மும்மணி நேரம் தொங்கி
வான் பிதாவை வேண்டி,
ஆருயிர் ஒப்படைத்து பலியாகினீர்
இயேசு சிலுவையில் மரிக்கிறார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர் சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின் பிள்ளைகளாக்கிட நீ எம்மில் ஒருவராக மாறினீர். சிலுவையில் தொங்கிய போது நீர் உரைத்த சொற்களை நினைத்துப் பார்க்கின்றோம். ''தாகமாயிருக்கிறது'' என்று கூறிய இயேசுவே, எங்கள் ஆன்ம தாகத்தை வளர்த்தருளும். 'எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறி உயிர்நீத்த இயேசுவே, நாங்கள் கடவுளின் திருவுளத்தை இறுதிவரை நிலைத்து நின்று நிறைவேற்றிட அருள்தாரும். ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
மரி தாய் மடிமீதில்,
மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால்,
ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்
இயேசுவைத் தன் தாயின் மடியில் கிடத்துகிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம் அன்னை மரியாள் தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார். அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காக உயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வு வழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும் பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திட அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கர்த்தரின் உடல்தனை,
கல்லறைக்குள் அடக்க
உத்தானம் ஜீவனுமாய்,
உயிருடன் எழுந்து
எப்போ வருவீர்
இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில் வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகி அழிந்து போகவில்லை. நாங்களும் திருமுழுக்கின் வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம். பாவத்தில் இறந்தோம். ஆனால் நீர் புத்துயிர் பெற்று எழுந்தது போல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு அளித்து, புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்ற வாழ்வு இவ்வையகம் பெற்று மகிழ்ந்திட அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
கல்லறைக்குள் அடங்கா,
இறைவனின் மைந்தனே
உத்தானம் ஜீவனுமாய்,
உயிருடன் எழுந்து காட்சி தந்தீர்.
இயேசு சாவை வென்று உயிர்த்தெழுகின்றார்
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
முதல்வர்: அன்பு இயேசுவே! கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணர நீர் வந்தீர். உமக்கு எதிராகச் செயல்பட்டு உமக்குக் கொலைத்தண்டனை விதித்தபோதிலும், நீர் சாவின்மீது வெற்றிகொண்டீர். எங்களைப் பாவத்தின் அடிமைத்-தளையிலிருந்து விடுவித்து எங்களுக்குப் புதுவாழ்வு தந்தீர். உயிர்த்தெழுந்த ஆண்டவராகத் தந்தையின் வலம் அமர்ந்து எங்கள் அரசராக ஆட்சி செய்கின்றீர்.
உலகம் முடிவு வரை எந்நாளும் நீர் எங்களுடன் இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளீர். உமது அன்புச் சீடராக நாங்கள் வாழவும் நீர் சென்ற வழியில் நடக்கவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.
முதல்வர்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
அனைவரும்: எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.
முதல்வர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாற்றியை அடைவார்களாக.
அனைவரும்: ஆமென்.
செபிப்போமாக!
ஆண்டவரே! சிமியோன் தீர்க்கத்தரிசனம் சொன்னபடியே, தேவரீர் பாடுபட்டபொழுது, மகிமைப் பிரதாபமுள்ள கன்னித்தாயின் மகா மதுரமான ஆத்துமம், வியாகுல வாளால் ஊடுருவப்பட்டதே!
அவள் வியாகுலத்தையும் வேதனையையும் வணங்குகிற நாங்கள், சிலுவையை சுமுத்திரையாய் நேசித்து சகல புனிதர்களின் மகிமையுள்ள பேறுகளினாலும், மன்றாட்டுக்களினாலும் உமது திருப்பாடுகளின் பலனை அடையும்படி தயைபுரிந்தருளும். ஆமென்.
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக மன்றாடுவோம்.
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் பேறு பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே,
தூய மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
முதல்வர்: இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு, நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக - புனித வியாகுல மாதாவே!
அனைவரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.