1. அம்மா உந்தன் அன்பினிலே
அம்மா உந்தன் அன்பினிலே
அருள்வாய் எமக்கு அடைக்கலமே
1. இறைவன் படைத்த எழிலே எழிலே
இயேசுவைத் தந்த முகிலே முகிலே
தூய்மை பொழியும் நிலவே நிலவே
துணையே வாழ்வில் நீயே
2. புவியோர் எங்கள் புகழே புகழே
புனிதம் பொங்கும் அழகே அழகே
உம் மகன் புதிய உறவில் உறவில்
எம்மையும் வதியச் செய்வாய்.
2. அலையொளிர் அருணனை அணிந்திடுமா
அலையொளிர் அருணனை அணிந்திடுமா
மணிமுடி மாமரி நீ (2)
வாழ்க்கையின் பேரரசி - வழுவில்லா மாதரசி - 2
கலையெல்லாம் சேர்ந்தெழு
தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய் (அலையொளிர்)
அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே - 2
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட
வல்ல உன் மகனிடம் கேள் (அலையொளிர்)
அகோரப் போர் முழங்கி அல்லலும் தோன்றுதன்றோ - 2
எல்லோரும் விரும்பிடும் நல்லதோர் அமைதியை
சொல்லாமல் அளித்திடுவாய் (அலையொளிர்)
3. அழகின் முழுமையே தாயே
அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எமக்களித்தாயே
இருளே சூழ்ந்திடும் போதே
உதயத் தாரகை போலே (2)
அருளே நிறைந்த மாமரியே
அருள் வழி காட்டிடுவாயே
அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம் (2)
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்
4. அன்னை மாமரி
அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)
1.
எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2)
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய் மரியே, எம்மை அரவணைத்துக் காப்பாய் நீயே (2)
2.
அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்
அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே (2)
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய் மரியே, எம்மை அரவணைத்துக் காப்பாய் நீயே (2)
5. அன்னைக்குக் கரம் குவிப்போம்
அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் – 2
1.
கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
2.
பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்.
ஆவே கீதம் பாடியே
உன் புகழைப் பாடுவேன் - உன்
அன்பின் பெருமை அகிலம் விளங்கும்
மாண்பைப் போற்றுவேன் - ஆவே ஆவே ஆவே
1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்கொளியே (2)
அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா
2. தாயெனவே யாம் அழைத்தோம்
தாயன்பில் வாழுவோம்
மாய உலகினில் காத்திடுவாய் அம்மா
7. இதயம் மகிழுதம்மா
இதயம் மகிழுதம்மா, துயர்
கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா
தாயெனும் போதினிலே
மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா... (இதயம்)
வாழ்வெனும் பாதையிலே
ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா... (இதயம்)
8. உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்தக் கப்பலைக் காத்தாய் (2)
பால் கொண்டக் கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் – 2
கடல் நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2
9. ஞானம் நிறை கன்னிகையே
ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்
பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்
வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்
10. மாசில்லா கன்னியே
மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே!
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே!
மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
அதியில்லாதோனை மாதா நீ பெற்றாய்
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே!
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே!
அருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே!
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே!
11. மாதாவே சரணம்
மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல்
காப்பாயே அருள் ஈவாயே - கன்னி
மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம்
செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே
நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும்
உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில்
இன்றெமை வைப்போம் - மாதாவே
12. மாதாவே துணை நீரே
மாதாவே! துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரம் தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா!
ஏற்றன்பாக எமைப் பாரும்.
வானோர் தம் அரசே! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக்காலத்துமே தற்காரும்.
ஒன்றே கேட்டிடுவோம் தாயே நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்.
13. மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மா மணியே (2)
அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த ஆரணங்கே (2)
உருவிலா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே!
பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)
இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி
வானக வாழ்வை அளிப்பாயே!
14. நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்
நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்
எந்நாளுமே அன்னையின் புகழ்பாடுவோம்
நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்னைக்குப்
புகழ்ப்பாக்கள் பாடிடுவோம்
ஆ அன்னையே வாழ்க
அருளால் நிறைந்த அன்னையே நீ வாழ்க
1. இறைவனின் திருவுளத்தை
நிறைவேற்றிட மனமுவந்தாய் - என்றும்
மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட
குறையின்றிக் காத்திடுவாய்
2. தரணிக்குத் தாயானாய் - திருத்
தாய்மையைப் பாடுகின்றோம் - என்றும்
திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிடத்
தாயே உன் அருள் தாராய்
தாவீதின் குலமலரே - ஒளி
தாங்கிடும் அகல் விளக்கே
எனைக் காத்திடும் ஆரணங்கே
அருள் சரந்திடும் தேன்சுனையே
1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
கறை சிறிதில்லாக் காத்திருந்தார் (2)
மறையவர் புகழும் மாமணி
கரை சேர்ப்பதுவே உன் பணியே
2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே
நற்கனி சுதனை எமக்களித்தாய்
கற்றவர் மற்றவர் யாவருமே
பொற்பதம் சேர்ந்திட வேண்டும்மா
தாரகை சூடும் மாமரியே
தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய் (2)
1. தேவனை உலகுக்கு அளித்தவளே
தேடிய துணையைக் கொடுப்பவளே (2)
வாடிய மகவை அணைப்பவளே
வாழிய ஞானியர் காவலியே
2. தென்னகக் கன்னி கடலலையும்
பன்னெழில் இமய மாமலையும் (2)
மின்னெழிலாளெம் தாயகமும்
உன் புகழ் பணிந்தே பாடாதே
ஒரு நாளும் உனை மறவேன்
தாயே ஒருநாளும் உனை மறவேன்
1. கடல் நீர்ல் மிதந்தாலும் வானமதில்
பறந்தாலும் (2)
உலகமெலாம் அறிந்தாலும் (2)
உத்தமனாய்ப் பிறந்தாலும்
2. நினைப்பவைகள் நடந்தாலும்
நிலைகுலைந்தே மடிந்தாலும் (2)
என்னைப் பிறர்தான் இகழ்ந்தாலும் (2)
இனிதாகப் புகழ்ந்தாலும்
3. சோதனைகள் சூந்தாலும்
வேதனைகள் அடைந்தாலும் (2)
சாதனைகள் படைத்தாளும்
சரித்திரமாய் முளைத்தாலும் (2)
வான்லோக ராணி வையக ராணி
மண் மீதிலே புனித மாது நீ (2)
1. விண்ணொளிர் தாரகை தாயே நீ
தண்ணொளிர் விசிடும் ஆரணி (2)
பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வ ராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ
2. வானவர் போற்றிடும் ராக்கினி
மண்ணவர் வாழ்த்திடும் ராக்கினி (2)
பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வ ராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ