தவக்கால பாடல்கள்
தவக்கால பாடல்கள்
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
1. தாகம் தாகம் என்றீர், எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர், பரிகாரப் பலியானீர்
2. காயங்கள் பார்க்கின்றேன், கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே, துடிக்கும் தாயுள்ளமே
3. அணைக்கும் கரங்களிலே, ஆணிகளா சுவாமி
நினைத்துப் பார்க்கையிலே, நெஞ்சம் உருகுதையா
4. நெஞ்சிலே ஓர் ஊற்று, நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கனுமே, மறு ரூபம் ஆகனுமே
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2
1. வலது கரத்தின் காயமே
அழகு நிறைந்த இரத்தினமே
இடது கரத்தின் காயமே
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்.
2 வலது பாதக் காயமே
பலன் மிகத் தரும் நற்கனியே
இடது பாதக் காயமே
திடன் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்.
3. திரு விலாவின் காயமே
அருள் சொரிந்திடும் ஆலயமே
திரு விலாவின் காயமே
அருள் சொ¡¢ந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்.
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
இயேசுவின் அன்பை...
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் - 2
மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ
இயேசுவின் அன்பை...
1. அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு - 2
கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு
2. அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் எழுந்தென்னை வளைத்திடுமன்பு - 2
சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு
3. எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காகத் தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு - 2
எனக்காக உயிரையே தந்த தேவன்பு
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
திரும்பிப் பார்க்க மாட்டேன் - 2
சிலுவையே முன்னால் உலகமே பின்னால் - 2
இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே
1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை அடியேன் உள்ளத்திலே
ஆண்டவர் இயேசு அடைக்கலப் பாறை ஆதலின் குறையில்லை - 2
ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால் - 2
அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே
2. தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம்
சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும் ஆயன் அவரன்றோ - 2
ஆயனே முன்னால் அலகையே பின்னால் - 2
அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே ஆறுதல் அடைந்தேனே
உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் - 2
1. உலகின் பாவம் போக்கும் இயேசுவே... - 2
2. மனிதனாய் மண்ணில் பிறந்த இயேசுவே... -2
3. வியர்வையாய் திரு இரத்தம் சிந்திய இயேசுவே... - 2
4. முள்முடி தலையில் தாங்கிய இயேசுவே... - 2
5. என் பாவ சிலுவையை சுமந்த இயேசுவே... - 2
6. எனக்காக சிலுவையில் அறையுண்ட இயேசுவே... - 2
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
1. பாரச் சிலுவையோ என் பாவச் சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச் சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் - 2 - எங்கு போகிறீர்
2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
உம் சிரசில் முள்முடி நான் சூட்டினேன் - உம் உள்ளம்
3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உம் விலாவைக் குத்தினேனே - உம் உள்ளம்
4. கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால் - உம் உள்ளம்
5. அசுத்தப் பேச்சுகள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக் காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே - உம் உள்ளம்
எங்கே சுமந்து போறீர்?
சிலுவையை நீர் எங்கே சுமந்து போறீர்?
பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க
எங்கே போறீர்?
1. மனிதப் பாவத்தாலே, மரணத் தீர்வை பெற்று
தூய செம்மறி போலே, துக்கத்துடன் வருந்தி
எங்கே போறீர்?
2. பாரச் சிலுவை மரம் பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அணைத்து, பாரத்துடன் நடந்து
எங்கே போறீர்?
3. கல்வாரி மலை நாடி தள்ளாடித் தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களை தனிமையாய் சுமந்து
எங்கே போறீர்?
4. மாமரி கன்னி அன்னை மகனின் கோலம் கண்டு
மாதுயருடன் வாடி மனம் நொந்து வருந்த
எங்கே போறீர்?
5. உதிரம் ஆறாய் சிந்தி உள்ள வீரமிழந்து
சீரோன் சீமோன் துணையை ஏற்று வழி நடந்து
எங்கே போறீர்?
6. கர்த்தரே உம் வதனம் இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெரோணிக்காள் வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போறீர்?
7. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்தப் பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
எங்கே போறீர்?
8. புண்ணியப் பெண்மணிகள் புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும், நேசக் கண்ணீர் சொரிந்து
எங்கே போறீர்?
9. சிலுவைப் பாரத்தாலே, மாமரி ஏக மைந்தன்
மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும்
எங்கே போறீர்?
10. நீட்டாடைக் கழற்றவே கோடிக் காயங்களாலே
இரத்தம் ஆறாய் பெருக வேதனையால் வருந்தி
எங்கே போறீர்?
11. நீட்டிய கால் கரத்தில் நீண்ட இரும்பாணிகள்
நிஷ்டுராமாய் அறைய நேசத்திலே வெந்து
பலியானீர்!
12. சிலுவைப் பீடம் ஏறி மும்மணி நேரம் தொங்கி
நேசப் பிதாவை வேண்டி ஆருயிர் ஒப்படைத்து
பலியானீர்!
13. உமது மடிமீதில் மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால் ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்!
14. கர்த்தரின் உடல்தனை கல்லறைக்குள் அடக்கி
உத்தானம் ஜீவனுமாய் உயிருடன் எழுந்து
எப்போ வருவீர்?
15. கல்லறைக்குள் அடங்கா இறைவனின் மைந்தனே
உத்தானம் ஜீவனுமாய் உயிருடன் எழுந்து
காட்சி தந்தீர்!
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்
1. செந்நீர் வியர்வை சொரிந்தவரே
2. புண்படக் கசையால் துடித்தவரே
3. முள்முடி சூடிய மன்னவரே
4. துன்பச் சிலுவை சுமந்தவரே
5. தன்னுயிர் தியாகம் புரிந்தவரே
6. மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தவரே
7. நற்கருணை வாழ் நல்லவரே
என்னை நேசிக்கின்றாயா - 2
கல்வாரிக் காட்சியைக் கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா
1. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் - 2
தேடி மீட்டிட பிதா என்னை அனுப்பியதால்
ஓடி வந்தேன் மானிடனாய்
2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா
3. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
உம்மை நேசிக்கின்றேன் நான் - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனா.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு
4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்
5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு
6. நிலையாய் பதிந்தது உம் வதனம் -அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்
7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்
9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்
10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
11. பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து
14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு – நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
எனது சனமே நான் உனக்கு
என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்கு துயர் தந்தேன்?
எனக்குப் பதில் நீ கூறிடுவாய்
1. எகிப்து நாட்டில் நின்றுன்னை
மீட்டுக்கொண்டு வந்தேனே
அதனாலோ உன் மீட்பருக்கு
சிலுவை மரத்தை நீ தந்தாய்?
2. நாற்பது ஆண்டுகள் நான் உன்னை
பாலைவனத்தில் வழிநடத்தி
உனக்கு மன்னா உணவூட்டி
வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்
3. நான் உனக்காக எகிப்தியரை
அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன் நீ என்னை
கசையால் வதைத்துக் கையளித்தாய்
4. பார்வோனை செங்கடலிலாழ்த்தி
எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம்
குருக்களிடத்தில் கையளித்தாய்
5. நானே உனக்கு முன்பாக
கடலைத் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர்
ஈட்டியினாலே திறந்தாயே
6. மேகத்தூணில் வழிகாட்டி
உனக்கு முன்னே யான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதிமன்றம்
என்னை இழுத்துச் சென்றாயே
கருணை தெய்வமே கண் பாரும்
எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்
1. உடலும் மனமும் அறிவும் ஒன்று சேர்ந்து
உம்மை எதிர்த்ததையா - 2
தேவ வாக்கின் வழியை மனம்
பன்முறை அறிந்தும் வெறுத்ததையா
பாவச்சேற்றை வாழ்வில் எம் வாழ்வே
கொண்டு நிறைத்ததையா
2. பாதை தெளிவுறத் தொ¢ந்தும் அதைப்
பார்த்து நாங்கள் நடக்கவில்லை - 2
உண்மை விளக்கு எரிந்தும் அதன்
ஒளியின் அருகே வாழவில்லை
இறைவன் அன்பு அழைத்தும் அதை
உணர்ந்த பின்னும் திருந்தவில்லை
கல்வாரிக்குப் போகலாம் வாரீர் - என்
காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட
1. பொல்லார் பகைவர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே
நல்லாயன் மீட்பர்தனை கொல்லும் வாதை காண - 2
2. சிவப்பங்கி தா¢த்தோராய் சிரசில் முள்முடி பூண்டு
தவத்தில் உயர்ந்த ஞானன் தவிக்கும் முகத்தைப் பார்க்க - 2
3. பாரச் சிலுவை தனை தோளில் சுமந்து மிகக்
கொடுமையாய் இருக்கின்ற கொடூரத்தைப் பார்த்திட - 2
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களையும் பார்க்கின்றன -2
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தன் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தன் காலின் காயங்கள் பார்க்கின்றாரே - 2
2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் - 2
3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளிவீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் - 2
4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் - 2
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்
இளைப்பாற்றி கொடுக்கின்றார்
1. இரு கரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய்
இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்
2 வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய்
வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்
3. துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய்
அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்
தயை செய்வாய் நாதா
என் பாவங்களை நீக்கி
1. அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னை பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்
2. என் குற்றம் நானறிவேன் வெள்ளிடைமலை போல்
தீவினையை மறவாதென் மனது என்றும் - உம்
புனிதத்தைப் போக்கி நான் பாவியானேன் நீர்
தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன்
3. உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் - என்
ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாக புனிதமாவேன்
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே - 2
1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே - 2
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் - 2
2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும் - 2
கருத்தாய் விசா¡¢த்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே - 2
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் - 2
1. வருந்தி சுமக்கும் பாவம் நம்மைக்
கொடிய இருளில் சேர்க்கும் - 2
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் - 2
2. குருதி சிந்தும் நெஞ்சம் நம்மைக்
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
அவர் பாதம் வந்து சேரும் - 2
பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடிப் பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே
கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய் நாதனே
மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே
1. துஷ்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே
கஷ்டமாய் அடித்தபோது காய்ந்த செந்நீர் என் துணை - கெட்டுப் போனோம்
2. சென்னிமேற் கொடிய யூதர் சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத்தால் சர்வ பாவம் நீங்குமே - கெட்டுப் போனோம்
3. ஐந்து காயத்தால் வடிந்த அரிய இரத்தத்தினால்
மிஞ்சும் எங்கள் பாவம் தீர்க்க வேண்டுகிறோம் இயேசுவே - கெட்டுப் போனோம்
பாரீர் கெத்சமனே பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும்
பாடுகள் எனக்காக
2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்
செய்தேன் என்றாரே
3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தனரே
4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து செபித்தாரே
பாதகர் மீட்புறவே
5. அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரீன்றியே
நொந்து அலறுகின்றார்
யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா.. இறைவா - 2
1. அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தரவேண்டும்
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரவணைப்பாய் - 2
2. மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா
குணமதிலே மாறாட்டம்
குவலயம் தான் இணைவதெப்போ - 2
3. வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல்
உலகிருக்கும் நிலை கண்டு
உனது மனம் இரங்காதோ - 2
வியாகுல மாமரியே
தியாகத்தின் மாதாவே
சிலுவை அடியினிலே
சிந்தை நொந்தழுதாயோ - 2
1. பன்னிரு வயதில் ஆலயத்தில் - அன்று
அறிஞர்கள் புகழ்ந்தவரை - 2
கரங்களை வி¡¢த்தே கள்வனைப் போல் - 2
கழு மரத்தினில் கண்டதனால்
2. திருமணப் பந்தியில் கனி இரசமே - அன்று
அருளிய திருமகனே - 2
குருதி சிந்தி கடற்காடியினை - 2
இன்று பருகிடக் கண்டதனால்
3. கண்ணீரை சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே - 2
மண்ணவர்க்காக தன்னுயிரை - 2
இன்று மாய்த்திடக் கண்டதனால்