பாடல் 1:
சென்று வா கிறிஸ்தவனே உலகை வென்றுவிட்டாய் நீ விசுவாசத்தால்!
1.
உற்றார் உறவினர் நண்பரெல்லாம் சுற்றி நின்று வழியனுப்ப,
உற்ற துன்பத்தில் ஆறுதலாய், உதவும் திருச்சபை அருகிருக்க!
இறைவனின் புனிதரே துணை வருவீர்! தேவனின் தூதரே வந்தழைப்பீர்!
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்! ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்!
2.
படைத்த தந்தை உனை ஏற்பார்! மீட்டத் திருமகன் உனைக் காப்பார்!
அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார்! அனைத்துப் புனிதரும் உனைச் சேர்வார்!
நித்திய அமைதியில் சேர்ந்திடுவாய் நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய்
ஆண்டவர் எமையும் அழைக்குங்கால் அவரோடுன்னையும் சந்திப்போம்
பாடல் 2:
கருணைத் தெய்வமே கண்பரும் - எங்கள் பாவங்களை நீர் பொருத்தருளும்
1.
உடலும் அறிவும் மனமும் - ஒன்று சேர்ந்து உம்மை எதிர்த்ததையா - 2
தேவ வாக்கின் வழியை - மனம் பன்முறை அறிந்தும் வெறுத்ததையா
பாவச் சேற்றை நாளும் - எம் வாழ்வே கொண்டு நிறைந்ததையா
2.
பாதை தெளிவுறத் தெரிந்தும் - அதைப் பார்த்து நாங்கள் நடக்கவில்லை - 2
உண்மை விளக்கு எரிந்தும் - அதன் ஒளியின் அருகே வாழவில்லை
இறைவன் அன்பை அறிந்தும் - அதை உணர்ந்தப் பின்னும் திருந்தவில்லை
3.
அன்பு செய்யும் இறைவா - உனை மறந்து சென்றதை எண்ணுகின்றோம் - 2
நீதி நிறையும் தலைவா - எம் பாவம் நினைந்தே கலங்குகின்ரோம்
தூய வாழ்வின் நிறைவே - உன் மன்னிப்புத் தருவாய் உயிர் பெறுவோம்
பாடல் 3:
இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக - அவர் இறைவா உம்மிடம் வந்தடைக - 2
1.
நின் ஒளி அவர் மேல் ஒளிர்ந்திடுக புவி நிதம் அவர் நினைவில் நிலைத்திடுக
தீயவை யாவும் விலகிடுக - அவர் நிதம் உம் மகிழ்வில் நிலைத்திடுக
2.
விண்ணகச் சீயோன் நகரினிலே நிதம் பண்ணால் உம் புகழ் அவர் இசைக்க
புனித வான தூதருடன் - உம்மை புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக
3.
உலகில் அவர்கள் இறந்தாலும் - இறை உம்மில் என்றும் வாழ வேண்டும்
சாவு கதவினை அடைத்தாலும் - உம் சந்நிதி வாயில் திறக்க வேண்டும்.
பாடல் 4:
புகை மூட்டமும் பனிக் கூட்டமும் சில நாழியில் பறந்தோடிடும்
நாம் வாழ்க்கையும் சில காலமே ஓ நெஞ்சமே (2)
1.
மலை மீது பிறக்கின்ற நதிகள் கடலோடு உறவாடத் துடிக்கும்
கடல் மீது பறக்கின்ற அலைகள் கரையோடு உறவாட முடியும்
கடலானது கரையானதும் - என் இயேசுவே - 2
2.
அருள் தீபம் ஏந்திய வாழ்வு இருளாகிப் போனதும் ஏனோ?
அறிவோடு தொடங்கிய வாழ்வு திரையாகி நின்றதும் ஏனோ?
இருளானதும் திரையானதும் - என் பாவமே - 2
3.
ஒரு நூறு ஆண்டுகள் இன்று ஓர் ஆண்டில் இறந்தவர் உண்டு
எதிர்காலம் நம் கையில் இல்லை இறைவனே நிகழ்கால எல்லை
இறையோடு நாம் இணைந்தோடினால் - ஓ இன்பமே - 2
பாடல் 5: (no mp3)
உத்தரிக்கும் தலத்தினிலே செய்தக் கொடுமையானப் பாவங்களால்
நித்தமும் வேதனையால் துடித்து சுத்தமும் ஆகும் வரை
அதனைப் பார்க்காது கொடுமை அடைந்திடும் ஆன்மாக்கள்
நித்திய கதி சேர நாமும் செபிப்போமே
ஒறுத்தல்கள் சுத்தமாய்ச் செய்துமே தினமும் ஓயாது வேண்டுவோம்!
திருப்பலி செய்துமே நன்கு வேண்டிடுவோம் மறவாது
வறுமையால் வாடிடும் ஏழைக்கு வழங்குவோம் தானங்கள்
அருமையுடன் ஆன்மாக்களுக்குக் கொடுத்து ஆண்டவரிடம் மன்றாடுவோம்
கருமம் பாவம் தோசம் நீங்கி மோட்ச கதியிலே சேரத் துணை நிற்போம்!
செபமும் செபமாலை செபித்துச் சிறப்பாக வேண்டுவோம்
உபரியாய் நாம் செய்யும் நல்ல உதவிகளை மறக்க மாட்டார்.
எப்பவும் நினைத்தவர் மறுபடி ஏழைகளுக்கு உதவிடுவார்.
இப்பொதும் எப்போதும் ஆன்மாக்களை நினைத்துமே செபித்திடுவோம்!
உத்தரிக்கும் ஆன்மாக்கள் உரிய தண்டனை முடிந்துமே
ஆத்மாவின் முகம் பார்த்து அக்களித்து உதவிடுவோம்.
உத்தமமாய் நாம் வாழ உன்னத வழிகாட்டி
நித்தமும் வேண்டுவோர் நினைவில் கொள்ளுவீர்!
பாடல் 6:
இறைவா இவரது திருப்பயணம் இனிதே அமைந்திட இறைஞ்சுகிறோம்!
1.
பாஸ்காப் பயணம் இதுவே தான், கிறிஸ்தவர் செல்லும் வழி இது தான் - 2
இறப்பைக் கடந்து உயிர்ப்பிற்கு, இசைந்து செல்லும் வழி இது தான்.
2.
அடிமைத் தலையை அறுத்தெரிந்து, ஆண்டவன் மக்கள் அன்றொரு நாள் - 2
உரிமை நாடு கடந்து சென்றார், உண்மை இங்கு நடப்பது தான்!
3.
சிலுவை சுமந்த வழியினிலே, சீர்மிகு உயிர்ப்பும் பிறந்ததுவே! - 2
சிலுவை பதித்த சுவடுகளில் சீடர் இருவரும் செல்கின்றார்!
4.
துன்பத்தின் வழியாய் திருச்சபையும், தூரப் பயணம் போவது போல் - 2
பயணத்தின் முடிவில் இவ்வடியார் பரகதி சேர்ந்திட இறைஞ்சிடுவோம்!
5.
விண்ணக விருந்து உண்டிடவே, விரைந்து செல்லும் இவ்வடியார் - 2
திருமகன் வந்து பார்க்கையிலே, திருமண உடையுடன் திகழ்ந்திடவே!
6.
ஆண்டவர் அழைத்த நேரத்திலே, அணையா விளக்குடன் ஆயத்தமாய் - 2
உடனே செல்லும் ஊழியராம், உண்மையில் பேறுபெற்றவரே!
7.
அந்நிய நாட்டின் எல்லைதனை, அடியார் இவரும் கடந்துவிட்டார் - 2
தாயகம் திரும்பும் பயணியிவர், தவறாது தன்வீடு சேர்ந்திடவே!
8.
எனக்கு வாழ்வு கிறிஸ்துவே தான்! என்றும் அவரோ டிருப்பதுதான்! - 2
இழப்பு அனைத்தும் அவரின்றி இறப்பு ஆதலின் ஆதாயம்!
பாடல் 7:
இறைவா இறந்தவர்க்கமைதி தாரும்
மனமிரங்கி உன் திருவடிதனில் சேரும் ஓ...
1.
வாழ்வென்னும் பயணம் முடிந்து விட - மறு
வாழ்வின்று இவர்க்கு தொடங்கிடட்டும் - 2
கல்லறையில் இவர் உடல் செல்ல - 2 - உம்
இல்லத்தில் ஆன்மா இடம் பெறட்டும்
இறைவா... இறைவா... இறைவா... இறைவா... - 2
2.
உம் வழி உலகில் தினம் நடந்து என்றும்
உம் பணி செய்தவர் இவர் இறைவா
நன்று என் மகளே வா என்று - 2 - நீர்
நடத்திச் செல்வீர் உம் வீட்டினுக்கே
இறைவா... இறைவா... இறைவா... இறைவா... - 2
பாடல் 8:
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது
மனமிரங்கி ஆண்டவரே இன்ப சாந்தி தாரும் -2
1.
விரிந்த திரு கைகால்கள் விலாவில் இருந்தோடும்
விலையில்லா உதிரத்தால் அவர்களை விண் சேரும் - 2
எரிகின்ற நெருப்பினிலே புழுப்போல வாடி
2.
எள்ளளவும் சுகமின்றி ஆறுதலைத் தேடி
புரிந்த சிறு பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
புலம்பி அழும் அவர்களுக்கு அருள்மாரி பெய்து - 2
பாடல் 9:
முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா...
உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கிறேன் இயேசய்யா
முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன்
1.
நானே உயிர் தரும் ஊற்று என்ற வார்த்தையின் பொருள் என்னவோ? - 2
உம் ஊற்றில் பருகும் எனக்கென்றும்
இறப்பில்லையோ... இருளில்லையோ... தாகமில்லையோ...
2.
நானே உயிர் தரும் உணவு என்ற வார்த்தையின் பொருள் என்னவோ? - 2
உம் உடலை உண்ணும் எனக்கென்றும்
பசியில்லையோ... துயரில்லையோ... துன்பமில்லையோ...
பாடல் 10:
சுவாமி பாதாளங்களினின்று உம்மை நோக்கி கூப்பிடுகின்றேன்
சுவாமி என் சத்தத்தை கேட்டருளும்
எனது விண்ணப்பத்தின் பேரோலியை
உமது செவி தந்து கேட்டருளும் (சுவாமி...)
ஆண்டவரே நீர் எங்கள் குறைகளை பாராட்டுவீராகில்
உமக்கு முன் நிலைநிற்க இயல்பவன் யார்? (சுவாமி...)
ஆனால் உம்மிடத்தில் மன்னிப்பு உள்ளதால்
பயபக்தியுடனே உம் பணிபுரிவோம் (சுவாமி...)
ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன்
அவர் ஒளிகளை நம்பினேன் (சுவாமி...)
உதய காலத்தை எதிர்நோக்கும் சாமகாவலைவிட
என் ஆன்மா ஆவலாய் ஆண்டவரை எதிர்பார்க்கிறது (சுவாமி...)
உதய காலத்தை எதிர்நோக்கும் சாமகாவலைவிட
இஸ்ராயல் ஆண்டவரை எதிர்பார்பதாக (சுவாமி...)
ஏனெனில் அவர் தயை நிறைந்தவர்
மீட்பும் அவரிடம் ஏராளாம் (சுவாமி...)
அக்கிரமங்கள் அனைத்திலுமிருந்து
ஸ்ராயேலை அவரே மீட்டருள்வார் (சுவாமி...)
பாடல் 11:
இறைவா உமது அடியார் இவருக்கு இரங்கி அமைதி அளித்தருளும்
மண்ணக கோயிலில் ஏற்பது போல் விண்ணக கோயிலில் இடம் அருளும்
1.
திரு நீராடி புனிதம் அடைந்து திரு அருட்சாதனம் பலவும் பெற்று
அழியா வாழ்வை பெற்ற தலத்தில் அழியும் உடலைச் சுமந்து வந்தோம்
2.
நித்திய வாழ்வின் உணவை உண்டு நித்தம் உமது வார்த்தையைக் கேட்டு
இனி வரும் வாழ்வில் நம்பிக்கை தந்த இல்லத்தில் இவரைக் கொண்டு வந்தோம்
3.
பாவப் பொறுத்தல் பலமுறை தந்து பரமன் அன்பை இவர்க்கு அருளிய
தலமாம் கோயில் நோக்கியே வந்தோம் தயவாய் இவர் பிழை பொறுத்தருள்வீர்
4.
கிறிஸ்துவின் மறைவுடல் அங்கமிவரை திருச்சபை மக்கள் பரிவுடன் கொணர்ந்தோம்
என்றும் அழியா கிறிஸ்து உடல் போல் இன்றும் இவர் மகிமை பெறவே
5.
வானவர் கூடி வரவேற்றிவரை ஆபிரகாமின் மடியில் வளர்த்தி
ஏழை லாசர் அடைந்த பேற்றை எம்மவர் இவரும் அடைந்திடவே
6.
எரியும் தீபம் கரத்தில் ஏந்தி ஏனத்தில் எண்ணெய் நிறையத் தாங்கி
நினையா நேரம் வந்திடும் தலைவரை அணையா விளக்குடன் சந்திக்கச் செல்வோம்
பாடல் 12:
நிறைமிகு அமைதியில் சேர்ந்திடுவாய் நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய் - 2
1.
இறைவனில் இறப்போர் பேறுபெற்றோர் - இனி இவருக்கு மீண்டும் உழைப்பில்லையே
ஆற்றிய நன்மைகள் பின்தொடர - இளைப்பாற்றியை அவர்கள் கண்டிடுவார்
2.
சாவே உனது கொடுக்கெங்கே - எனச்சாற்றும் பாறைகள் அதிர்ந்திடுமே
உயிர்ப்பின் எக்காளம் ஒலித்தங்கே - இவ்வுலகோர் தம்மை எழுப்பிடுமே
3.
விண்ணக விருந்தின் முன்சுவையே - இங்கு மண்ணிலே நுகர்ந்திட விரைந்திடுவோம்
எண்ணிலா புனிதர் கூட்டத்திலே - அங்கு கண்ணீரும் சாவும் மறைந்திடுமே
பாடல் 13:
வாழ்வோர் இறந்தோர் நலம்பெற இறைவா வாழ்த்தி வைத்தோம் காணிக்கையை
1.
நிலத்தில் விழுந்த கோதுமை மணி நிறைந்த பலனைத் தந்திடவே - 2
மடிந்து மண்ணில் மறைந்தால் தான் மக்கள் பலரின் உணவாகும்
2.
மண்ணில் புதைந்த இறை மகனும் மகிமை கொண்டே உயிர்த்து வந்தார்
இறந்த அவரின் அடியாரும் இனிதே மகிமை அடைந்திடுவார்
பாடல் 14:
சாகா வரம் தரும் உணவு - நல் தேவாமிர்த உணவு
1.
பாலை நிலத்தில் அன்று பரமன் தந்தார் உணவு
போதிய உணவும் உண்டு போனார் மக்கள் மாண்டு
2.
வானம் பொழிந்த உணவு வாழ்வு நல்கும் உணவு
இறைவன் அன்றோ உணவு இதனால் அங்கு நிறைவு
3.
உடலே உண்மை உணவு உதிரம் உண்மை பானம்
அருந்தி அவரில் நிலைத்தால் அழியா உயிர்ப்பு உண்டு
4.
ஆண்டவர் வருகையை நினைந்து அருந்தும் ஆயத்த விருந்து
போகும் வழியின் உணவு சேரும் வீட்டின் முன்சுவையே
5.
இனி வரும் விருந்தில் நாமும் இறைவனை என்றும் புகழ்ந்து
இனிமேல் சாவே இல்லா இல்லம் வாழ்வோம் இனிது
பாடல் 15:
இறைவனின் புனிதர்களே துணையாய் நிர் வருவீர்
தேவனின் தூதர்களே எதிர்கொண்டு வருவீர் - 2
இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள் - 2 (இறைவனின்...)
உம்மைத் தம்மிடம் அழைத்த இயேசுவே உம்மை ஏற்றுக் கொள்வாரே - 2
தூதர் உம்மை ஆபிரகாம் மடியில் கொண்டு சேர்ப்பாராக - 2 (இவர் ஆன்மாவை...)
நித்திய சாந்தியை ஆண்டவரே இன்று இவர்க்கு அருளுவீராக - 2
முடிவில்லாத மீட்பின் ஒளி இவர் மேல் ஒளிர்ந்திடுக - 2 (இவர் ஆன்மாவை...)
பாடல் 16:
1.
கல்லறை மேட்டினில் மனுக்குலம், கண்ணீர் சிந்தும் காட்சியினை
கருணைக் கண்ணால் நோக்கினார், கவலையைக் கர்த்தர் போக்கினார்.
2.
அன்று கல்லறை அருகினில், அவரும் கண்ணீர் விட்டழுதார்.
துன்புறும் மனிதர் கண்ணீரைத் துடைக்க அன்றே முன்வந்தார்.
3.
நானே உயிரும் உயிர்ப்பாவேன். நம்புவோர் இதனை இறந்திடார்.
என்றே உரைத்து இறந்தவனை, எழுப்பி உண்மை அறிவித்தார்.
4.
மூன்று நாட்கள் கல்லறையை மூடிக் கிடந்த இருளகற்றி
முன்பே உரைத்த வாக்கின்படி மூவுலகாள்பவர் உயிர்த்து வந்தார்.
பாடல் 17:
1.
முன்னாள் வனத்தில் நீர் மன்னா தந்தீர் இன்னாள் எம் அன்னமாய் உம்மை ஈந்தீர்
நேசாதி நேசனே! ஆசார தேவனே! இராஜாதி இராஜனே! நாளும் ஸ்தோத்திரம்!
2.
ஓர் திரை மேகத்தில் ஜோதி மறைத்-தோதினீர் கற்பனை மோயீசற்கே
நேசாதி நேசனே! ஆசார தேவனே! இராஜாதி இராஜனே! நாளும் ஸ்தோத்திரம்!
3.
நாதா உம் ஜோதியை மா அப்பத்தே ஏதுக்காய் மறைத்தீர் மீண்டும் இப்போ
நேசாதி நேசனே! ஆசார தேவனே! இராஜாதி இராஜனே! நாளும் ஸ்தோத்திரம்!
4.
தாபோர் மலையில் உம் நேர் உருவம் பார்க்கொண்ணா துள்ளியோ நீர் ஒளித்தீர்
நேசாதி நேசனே! ஆசார தேவனே! இராஜாதி இராஜனே! நாளும் ஸ்தோத்திரம்!
5.
எம்பால் நீர் காட்டும் மா அன்பிற்கீடாய் எம் பணி ஆற்றினோம் அன்பிலார் யாம்
நேசாதி நேசனே! ஆசார தேவனே! இராஜாதி இராஜனே! நாளும் ஸ்தோத்திரம்!
6.
பூங்காவில் நீர் மிக ஏங்கி வாட பாங்காய் ஓர் ஆறுதல் தந்தோமில்லை
நேசாதி நேசனே! ஆசார தேவனே! இராஜாதி இராஜனே! நாளும் ஸ்தோத்திரம்!
7.
ஓங்கும் சிலுவையில் ஏங்கும் போதும் ஆங்கோர் ஆறுதல் யாம் ஆற்றவில்லை
நேசாதி நேசனே! ஆசார தேவனே! இராஜாதி இராஜனே! நாளும் ஸ்தோத்திரம்!
பாடல் 18:
தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோருக்கு
ஓயாத் தஞ்சமும் ஆதரவும் நீயே (2)
1.
தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து
தூய வளன் கதியினில் சேர்ந்து - உன்னை
துதித்திட அருள் செய்வாய் புரிந்து
2.
உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
காலமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக்
கரையினால் துறை சேரார் இன்னும்
3.
தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ
உந்தன் தயைவிட்டால் துயர் விட்டு போமோ
தூய கருணை நிறைதாயே - இவர்
துயர் எல்லாம் நீங்க வருவாயே
பாடல் 19:
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா விண்ணில் தேவன் இன்பம் தருவார்
அன்று உன்னை அழைத்த தேவன் இன்று உன்னை அழைக்கின்றார்
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா விண்ணில் தேவன் இன்பம் தருவார்
1.
இன்று உறவு நாளை பிரிவு மனிதன் வாழும் எட்டிலே - 2
என்றும் அழியா உறவு உண்டு இறைவன் வாழும் வீட்டிலே (மண்ணில் வாழ்ந்து)
2.
படைப்பின் இறைவன் படைப்பைக் காண கடைக்கண் ஒன்றைக் காட்டினான் - 2
பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு படைத்தவனிலே மூழ்கினான் (மண்ணில் வாழ்ந்து)
பாடல் 20: (no mp3)
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் ஆண்டவரே
முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக
இறைவா சீயோனில் உம்மைப் பாடுதல் ஏற்றதாம்
எருசலேமில் உமக்கு பொருத்தனை செலுத்தப்படும்
நீர் எம் மன்றாட்டைக் கேட்டருளும்
மாந்தர் அனைவரும் உம்மிடம் வருவார்.
பாடல் 21:
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா நீர் இவர் பரிசாய் இருந்தருளும்
1.
உம் மகன் இவர்க்கென உயிர் துறந்தார் தம் உதிரமும் உடலும் பலி ஈந்தார் - 2
இறப்பில் அவருடன் ஒன்றித்த இவர் உயிர்ப்பிலும் இணைந்து மாட்சியுற (நித்திய சாந்தி)
2.
செபங்களும் புகழ்ச்சிப் பலிகளுமே யாம் செய்தோம் இறந்தோர் சாந்தியுற - 2
எம் பலிப்பொருள் இதை ஏற்றருளும் எளியயோர் எம் செபங்களைக் கேட்டருளும் (நித்திய சாந்தி)
பாடல் 22:
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2
1.
குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
எந்த நிலை தான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2
2.
அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2
பாடல் 23:
இயேசு அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
ஆவலாய் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கின்றார் - 2
1.
இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே - 2
இதய அமைதி இனிதே அடைய
இயேசு அழைக்கின்றார் - 2
2.
கவலை மிகுந்தோரே கலங்கித் தவிப்போரே - 2
கவலை நீக்கிக் கலக்கம் போக்கக்
கடவுள் அழைக்கின்றார் - 2
3.
உலகின் மனிதரே உன்னையே எண்ணிப் பார் - 2
உலகம் அனைத்தும் உனக்கானாலும்
உனக்கு என்ன லாபம்? - 2
பாடல் 24:
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பை...
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் - 2
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ - இயேசுவின்
1.
அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு - 2
கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு - இயேசுவின்
2.
அலை கடலை விடப் பரந்தப் பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு - 2
சிலையெனப் பிரம்மையில் நிறுத்திடும் அன்பு - இயேசுவின்
3.
எனக்காக மனுவுருத் தரித்த நல்லன்பு
எனக்காகத் தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காகப் பாடுகள் ஏற்றப் பேரன்பு - 2
எனக்காக உயிரையேத் தந்த தேவனன்பு - இயேசுவின்
பாடல் 25:
இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள் மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2
1.
இறைவனுக்கிதயம் உண்டு - அந்த
இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால்
இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2
2.
கடவுளின் கருணை உண்டு - அந்தக்
கருணைக்கும் உருவம் உண்டு - 2
அவர் உருவத்தில் உதித்தேழும் உயிரதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு - 2
3.
இரவினில் தீபம் உண்டு - இந்த
இல்லத்தில் ஒளியும் உண்டு - 2
எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால்
எந்தத் துயரிலும் காவல் உண்டு - 2
4.
பாவிக்குப் பொறுத்தல் உண்டு - அந்தப்
பரலோக வாழ்வும் உண்டு - 2
நாங்கள் கூவிடும் குரலைக் கேட்பதற்கு
இந்தக் கோவிலில் தெய்வம் உண்டு - 2
பாடல் 26:
என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
1.
என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா என்றென்றும் இன்பமல்லவா - 2
2.
என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே - 2
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா - 2
பாடல் 27:
எதை நான் தருவேன் இறைவா - உன் இதயத்தின் அன்பிற்கீடாக
எதை நான் தருவேன் இறைவா - 2
1.
குறைநான் செய்தேன் இறைவா - பாவக் குழியில் விழுந்தேன் இறைவா - 2
கறையாம் பாவத்தை நீக்கிடவே - 2
நீ கல்வாரி மலையில் இறந்தாயோ... இறந்தாயோ...
2.
பாவம் என்றொரு விசத்தால் - நான் பாதகம் செய்தேன் இறைவா - 2
தேவனே உம் திருப்பாடுகளால் - 2
எனைத் தேற்றிடவே நீ இறந்தாயோ... இறந்தாயோ...
பாடல் 28:
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ
தனது பிள்ளை அவள் மறப்பாளோ
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
1.
குன்று கூட அசைந்து போகலாம் குகைகள் கூட பெயர்ந்து போகலாம் - 2
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே அசைவதில்லை பெயர்வதில்லையே - 2
2.
தீ நடுவே நீ நடந்தாலும் ஆழ்கடலைத் தான் கடந்தாலும் - 2
தீமை ஏதும் நிகழ்வதில்லையே தீதின்றியே காத்திடுவேன் நான் - 2
பாடல் 29:
மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் - கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எம்மை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயn - கன்னி மாதாவே சரணம்
1.
மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோயுறக் கண்டோம் - 2
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் - 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் - 2
2.
நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலம் எல்லாம் துன்பங்கள் ஒழிய - 2
உயிர் உடல் அனைத்துமே உவப்புடன் அளிப்போம் - 2
உம் இருதயத்தில் இன்றெம்மை வைப்போம் - 2
பாடல் 30:
மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரம் தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன்பாக எமைப்பாரும்
1.
வானோர் தம் அரசே தாயே எம் மன்றாட்டை தயவாய்க் கேளும்
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல் எக்காலத்துமே தற்காரும் (மாதாவே துணை)
2.
ஒன்றே கேட்டிடுவோம் தாயேயாம் ஓர் சாவான பாவந்தானும்
என்றேனும் செய்திடாமல் காத்து எம்மை சுத்தர்களாய்ப் பேணும் (மாதாவே துணை)
பாடல் 31:
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ
1.
பன்னிரு வயதில் ஆலயத்தில் - அன்று
அறிஞர்கள் புகழ்ந்தவரை - 2
கரங்களை விரித்தே கள்வனைப் போல் - 2
கழுமரத்தினில் கண்டதினால்
2.
கண்ணீரைச் சிந்திய மனிதருக்கு - அருள்
செய்திட்டத் திருமகனை - 2
மண்ணவர்க்காகத் தன்னுயிரை - 2
இன்று மாய்த்திடக் கண்டதினால்
பாடல் 32:
யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா... இறைவா... இறைவா... இறைவா...
1.
அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் - 2
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ, ஆதரித்தே அரவணைப்பாய் - 2
2.
மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதய்யா - 2
குணமதிலே மாறாட்டம், குவலயம் தான் இணைவதெப்போ - 2
3.
வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல் - 2
உலகிருக்கும் நிலை கண்டு, உனது மனம் இரங்காதோ - 2
பாடல் 33: (no mp3)
வாடும் உள்ளங்களே வாரீர் இறைவனிடம்
தேடும் உள்ள அமைதி தேவன் தந்திடுவார்
1.
வருந்தி சுமை சுமப்போர் வாரீர் இறைப்பாற
விரும்பி அழைக்கின்றார் விரைந்தே நீர் வருவீர்
தமது உருவாக உன்னைப் படைத்த அவர்
தவிக்க விடுவாரோ தரணியில் வாடி விழ
2.
விண்ணில் பறந்துயரும் பறவை இனங்களையும்
மண்ணில் வாடி விழும் வண்ணப் பூக்களையும்
காட்டில் வளர்ந்துயரும் மரம் செடிக் கொடிகளையும்
ஊட்டி உணவளித்து உயிர் வாழ்ந்திடச் செய்கையிலே
பாடல் 34:
அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க - 2
உன் தாயின் உதிரத்தால் உனைத் தெரிந்தார்
உன் வாழ்வில் உறவாய் உன்னில் இணைந்தார் - 2
தீயின் நடுவே தீமை இல்லை திக்கற்ற நிலையில் துயரம் இல்லை
தோல்வி நிலையில் துவண்டு வாழும் துன்பம் இனியும் தொடர்ந்திடாது
காக்கும் தெய்வம் காலமெல்லாம் - 2
கரத்தில் தாங்கிடுவார் அன்பின் கரத்தில் தாங்கிடுவார்
தூர தேசம் வாழ்க்கைப் பயணம் தேவன் நேசம் உன்னைத் தொடரும்
பாவம் யாவும் பறந்து போகும் பரமன் அன்பில் பனியைப் போல
வாழும் காலம் முழுதும் உன்னில் - 2
வசந்தம் வீசிடுமே அன்பின் வசந்தம் வீசிடுமே
பாடல் 35:
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் - 2
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - 2 - நான்
மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் - 2
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2
1.
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - 2
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2
2.
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - 2
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2
பாடல் 36:
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
என்னிடம் எல்லோரும் வாருங்கள்
என்னிடம் எல்லோரும் வாருங்கள்
1.
உங்களை நான் இளைப்பாற்றுவேன்
உங்களை நான் காப்பாற்றுவேன்
உங்களை நான் தேற்றிடுவேன்
உங்களை நான் ஏற்றிடுவேன்
2.
உங்களை நான் நடத்திச் செல்வேன்
உங்களை நான் அன்பு செய்வேன்
உங்களை நான் அரவணைப்பேன்
உங்களை நான் வாழச் செய்வேன்
3.
உங்களை நான் வளரச் செய்வேன்
உங்களை நான் ஒளிரச் செய்வேன்
உங்களை நான் மலரச் செய்வேன்
உங்களை நான் மிளிரச் செய்வேன்
பாடல் 37:
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்
இளைப்பாற்றிக் கொடுக்கின்றார்
1.
இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் - 2
இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்
2.
வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் - 2
வந்தவர் இருக்கின்றார் விரைந்திட தாமதமேன்
3.
துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய்
அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார் - 2
பாடல் 38:
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி - 2
1.
அன்புடனே ஏழை என் மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோசமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்
2.
என் குற்றம் நான் அறிவேன் வெள்ளிடை மலை போல்
தீவினையை மறவாதென் மனது என்றும் - உம்
புனிதத்தைப் போக்கி நான் பாவியானேன் - நீர்
தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன்
3.
உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் - என்
ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவை ஊட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனி வெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்
பாடல் 39:
மனமே மனமே மயங்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
கண்ணே கண்ணே கலங்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
பால் தரும் அன்னை மறந்தாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
தாங்கும் தந்தை கைவிட்டாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
நீ திகையாதே கண்ணீர் வழியாதே - 2
இயேசு உன்னோடு இருக்கின்றார்
சொந்தமும் பந்தமும் மறந்தாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
உறவுகள் நண்பர்கள் கைவிட்டாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் - 2
நீ திகையாதே கண்ணீர் வழியாதே - 2
இயேசு உன்னோடு இருக்கின்றார்
பாடல் 40:
கலங்காதே மனமே திகையாதே மனமே
கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார்
1.
கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே - 2
கடைசி வரை உன்னை கைவிடமாட்டார் - 2
2.
அநாதி தேவனே உனது அடைக்கலம் - 2
அவரது புயங்கள் உந்தன் ஆதாரம் - 2
3.
அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே - 2
ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே - 2