முத: ஆண்டவரே இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்!
முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா...
எல்: இந்த ஆன்மா மீது இரக்கமாயிரும்.
முத: உலகை மீட்டத் திருமகனாகிய இறைவா...
எல்: இந்த ஆன்மா மீது இரக்கமாயிரும்.
முத: தூய ஆவியாராகிய இறைவா...
எல்: இந்த ஆன்மா மீது இரக்கமாயிரும்.
முத: மூவொரு கடவுளாகிய தூய இறைவா...
எல்: இந்த ஆன்மா மீது இரக்கமாயிரும்.
பதில்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்/வேண்டிக்கொள்ளுங்கள்.
முத: புனித மரியே, இறைவனின் தாயே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: வியாகுல அன்னையே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: இடைவிடா சகாயத் தாயே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: விண்ணகத்தின் அரசியே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித மிக்கேலே, புனித கபிரியேலே, புனித இரஃபேலே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
முத: இறைவனின் எல்லா வானதூதர்களே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
முத: புனித திருமுழுக்கு யோவானே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித யோசேப்பே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: எல்லா மூதாதையர்களே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
முத: எல்லா இறைவாக்கினர்களே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
முத: புனித பேதுருவே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித பவுலே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித யோவானே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித யாக்கோபே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித ஸ்தேவானே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: அனைத்து திருத்தூதர்களே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
முத: அனைத்து நற்செய்தியாளர்களே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
முத: புனித சுவக்கீன், அன்னம்மாளே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
முத: பதுவையின் புனித அந்தோணியாரே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித பிரான்சிஸ் சவேரியாரே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: அசிசியின் புனித பிரான்சிசே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: அசிசியின் புனித கிளாரம்மாவே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: லொயோலாவின் புனித இஞ்ஞாசியாரே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: அவிலாவின் புனித தெரசம்மாளே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: கொல்கொத்தாவின் புனித தெரசம்மாளே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: இறைவனின் எல்லா புனிதர்களே புனிதைகளே...
எல்: இந்த ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
பதில்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: பாவம் அனைத்திலுமிருந்து...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: முடிவில்லாத இறப்பிலிருந்து...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய திருப்பிறப்பினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய திருமுழுக்கினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய திருத்தவத்தினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: கெத்சமேனியில் நீர் சிந்திய இரத்த வியர்வையினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய உடலில் நீர் பெற்ற கசை அடியினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய தலையில் நீர் தாங்கிய முள்முடியினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய தியாகச் சிலுவைச் சாவினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய மாட்சி மிகுந்த உயிர்ப்பினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய விண்ணேற்றத்தினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்முடைய தூய ஆவியாரின் வருகையினாலே...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: தொழுநோயாளியைக் குணப்படுத்திய நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: பார்வையற்றவனுக்குப் பார்வையளித்த நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: பேய்களை விரட்டிய நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: இறந்த இலாசரை உயிர்ப்பித்த நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: நல்ல கள்வனின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்த நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: மகதலா மரியாவை மன்னித்த நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: உம்மை மறுதலித்தப் பேதுருவை மன்னித்த நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: நம்பிக்கை குன்றியத் தோமாவை மன்னித்த நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
முத: காணாமல் போனவர்களைத் தேடி மீட்க வந்த நீர்...
எல்: இந்த ஆன்மாவை மீட்டருளும்.
பதில்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத: எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவே...
எல்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத: உம்மில் விசுவாசம் கொண்டு இறப்பவர்களின் நம்பிக்கையான இயேசுவே...
எல்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத: உம்மை நம்புவோரின் மீட்பரான இயேசுவே...
எல்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத: புனிதர்களின் மகிழ்ச்சியான இயேசுவே...
எல்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத: ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றான இயேசுவே...
எல்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத: இவருடைய குற்றங்களும் பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமென்று...
எல்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத:ஒளியும், அமைதியும், மகிழ்வும் நிறைந்த இடத்துக்கு இவரை வரவேற்க வேண்டுமென்று...
எல்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத: வருத்தமும், வேதனையும் நிறைந்த அனைவரும் உம்முடைய அளவில்லாத இரக்கத்தைப் பெற்று ஆறுதல் அடைய வேண்டுமென்று...
எல்: உம்மை மன்றாடும் எங்களுக்கு செவிசாய்த்தருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எல்: எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும் படியாக...
எல்: இறைவனின் தூய அன்னையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முத: மன்றாடுவோமாக! இறைவா, உம் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் படைத்து, மீட்டு, வாழ்வளித்துப் பாதுகாப்பவர் நீரே. இறந்து போன உம் அடியார் _________________ (இறந்தவரின் பெயரைச் சொல்லி) அவர்களின் ஆன்மாவுக்கும், இறந்த அனைத்து விசுவாசிகளின் ஆன்மாக்களுக்கும் மனம் இரங்கி, உமது மன்னிப்பை அளித்து, அவர்களை உமது இறை அரசில் சேர்த்தருளும். அவர்கள் எதிர்பார்க்கும் உமது இரக்கத்தையும் மன்னிப்பையும் எங்களது இந்த நம்பிக்கை நிறைந்த செபம் பெற்றுத் தருவதாக. உம்மோடு, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய், என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.