தானனன்னா தன நன நா தானனன்னா தன நன நா
தானனன்ன தானனன்ன தனனன தன னன தன னன தானனன்னா தன நன நா
எங்கள் முகம் பாரம்மா எங்கள் குறைதீர் அம்மா
புனிதை நீ அல்போன்ஸ் அம்மா
எங்கள் கல்வி நன்றாக, என்றும் பண்பில் முன்னேற
அருள் செய்வாய் அல்போன்ஸ் அம்மா
பாதம் பணிந்தோம் உன் குழந்தைகளாய்
நீர் பரிந்துரைப்பாய் வான் தந்தை இடமாய்
குழந்தைகள் மீது அன்பு கொண்ட அல்போன்ஸ் அம்மா….மா
எங்கள் முகம் பாரம்மா எங்கள் குறைதீர் அம்மா
புனிதை நீ அல்போன்ஸ் அம்மா
எங்கள் கல்வி நன்றாக என்றும் பண்பில் முன்னேற
அருள் செய்வாய் அல்போன்ஸ் அம்மா
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஐந்து களத்தில் பாடம் கற்கும் பண்பு வேண்டும்
பெற்றோர் உள்ளம் சந்தோஷத்தை காண வேண்டும்
உண்மை மாறா நெஞ்சத்தோடு பேசவேண்டும்
உள்ளங்களில் பக்தி குடி கொள்ள வேண்டும்
எங்கள் அன்புத் தாயே நீர் ஏற்பாயே
இறைவனிடம் நீ பரிந்துரைத்து இவை அனைத்தும் எங்கள் வழி கிடைத்து
உன்னால் எங்கள் உள்ளம் மகிழ் வாகட்டுமே
மன்னித்து நீ மண மகிழந்து மழலையம்மா
அன்று குடமாடளூரில் நீயும் தானே குழந்தை அம்மா
குழந்தை நாங்கள் உன்னை போல் ஞானம் பெற
தவறேனும் செய்யாவண்ணம் காப்பாற்றம்மா
தந்தை இறைவன் தயவாலே
கேட்கின்ற வரங்கள் யாவும் பெற்று
உயர்வில் நாங்கள் விண்ணை அடைந்து
அல்போன்ஸ் அம்மா உன்னருளால் சிறக்கட்டுமே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
எங்கள் முகம் பாரம்மா எங்கள் குறைதீர் அம்மா
புனிதை நீ அல்போன்ஸ் அம்மா
எங்கள் கல்வி நன்றாக என்றும் பண்பில் முன்னேற
அருள் செய்வாய் அல்போன்ஸ் அம்மா.. அருள் செய்வாய் அல்போன்ஸ் அம்மா
ஆரம்ப செபம்
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே!
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே!
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே!
எல்லோரும்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதல்வர்: எல்லாம் வல்ல தந்தையே, புனித அல்போன்சம்மாளின் வாழ்வு மூலமாகவும், அவரது துறவற சேவையின் வழியாகவும் உமது கொடைகளைப் பொழிந்து எங்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவீராக. மோட்ச வீட்டின் மீதான நம்பிக்கையில் எங்களை வழி நடுத்தும். எங்கள் இதயங்களை இறையன்பால் பற்றி எரியச் செய்வீராக. புனித அல்போன்சம்மாளை நீர் புண்ணிய வழியில் நடுத்தி சென்றது போல எங்களையும் நல்வழியில் நடுத்தியருளும். நாங்கள் தாழ்ச்சியிலும் எளிமையிலும் பிரமாணிக்கத்துடன் உமக்கு ஊழியம் புரிந்து புனிதத்திலும் விவேகத்திலும் தெய்வபயத்திலும் நாளுக்கு நாள் முன்னேறி சென்றிட எங்களுக்கு அருள் புரியும். ஆமென்.
முதல்வர்: பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடுத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.
அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதை செம்மையாய் நடுத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
எல்லோரும்: எங்கள் அன்றாடு உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடுமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்லோரும்: தூய மரியே! இறைவனின் தாயே! பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக,
இப்பொழுதும், எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: ➕ தந்தைக்கும் ➕மகனுக்கும் ➕தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
எல்லோரும்: தொடக்கத்திலிருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் இருப்பதாக ஆமென்.
முதல்வர்: ஓ என் ஆண்டவராகிய இயேசுவே! உம் திரு இதயத்தின் காயத்தினுள் என்னை நீர் மறைப்பீராக. அன்பும் மதிப்பும் பெறுவதற்கான ஆசையினின்று என்னை விடுவித்தருளும். பேரும் பெருமையும் தேடுவதற்கான முயற்சியினின்று என்னைக் காப்பாற்றும். நான் சிறு அணுவளவேனும் உம் திரு இதயத்தினது அன்புத்தீயின் ஒரு பொறியும் ஆகும் வரையில் என்னை நீர் தாழ்த்துவீராக. எல்லாப் படைப்புகளையும் என்னையும் மறந்து விடுவதற்கான அருளை எனக்கு தந்தருளும். சொல்ல முடியாத இன்பமாகிய இயேசுவே, உலக ஆறுதல்கள் அனைத்தையும் எனக்கு கசப்பாக மாற்றியருளும். நீதியின் கதிரோனாகிய என் இயேசுவே! உம் திருகதிர்களால் என் உள்ளத்துக்குத் தெளிவையும் புத்திக்கு ஒளியையும் அளித்து என் இதயத்தைத் தூய்மைப்படுத்துவீராக. உம்மீது கொண்டு அன்பினால் என்னை எரிய செய்து உம்முடன் என்னைச் சேர்த்துக்கொள்ளும்.
எல்லோரும்: ஆமென்.
முதல்வர்: ஆண்டவரே உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே உம்மில் நம்பிக்கை கொள்கிறேன்
எல்லோரும்: நான் வெட்கமுற விடாதேயும். என் பகைவர் என்னைக்கண்டு நகைக்க விடாதேயும்.
முதல்வர்: உண்மையிலேயே உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை காரணமின்றி துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
எல்லோரும்: ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும். உம் வழிகளை எனக்கு கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்கு கற்பித்தருளும். ஏனெனில் நீரே என் மீட்பராம் கடவுள். உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கிறேன்.
முதல்வர்: ஆண்டவரே உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினைத்தருளும். ஏனெனில் அவை தொடக்கம் முதல் உள்ளவையே.
எல்லோரும்: என் இளமை பருவத்தின் பாவங்களையும் என் குற்றங்களையும் நினையாதேயும். உமது பேரன்பிற்கு ஏற்ப என்னை நினைத்தருளும். ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர்.
முதல்வர்: ஆண்டவர் நேர்மையுள்ளவர். ஆகையால் அவர் பாவிகளுக்கு நல்வழியை கற்பிக்கின்றார்.
எல்லோரும்: எளியோரை அவர் நேரிய வழியில் நடுத்துகின்றார். எளியோர்க்கு தமது வழியை கற்பிக்கின்றார். ஆண்டவரது ஒழுங்கு முறையை கடைப்பிடிப்போருக்கு அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளவதாய் விளங்கும்.
முதல்வர்: ➕தந்தைக்கும் ➕மகனுக்கும் ➕தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
எல்லோரும்: தொடக்கத்திலிருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் இருப்பதாக
ஆமென்.
முதல்வர்: அன்பார்ந்தவர்களே இறைவன் தம் புனிதர்கள் வழியாக பல புதுமைகளைச் செய்து வருகின்றார். நம் மண்ணின் புனிதை புனித அல்போன்சாவின் பரிந்துரையை மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் நாடுவோம்.
முதல்வர்: இறைவா! நீர் புனித அல்போன்சாவைப் புனித நிலைக்கு உயர்த்தினீர். நாங்களும் தூய வாழ்வு வாழவும், இறைவேண்டுதலிலும், பக்தி முயற்சிகளிலும், மென்மேலும் வளர தூய்மையின் ஆவியைப் புதுப்பிக்கும் ஆவியை எம்முள்ளே படைத்தருள வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: புனித அல்போன்சா நோயின் மிகுதியிலும் கொடிய வாதைகளிலும் இறை நம்பிக்கையிலும் உறுதியாய் நிலைத்திருந்தது போல நாங்களும் துன்ப தூயரங்களில் இறைவனின் திருவுளத்தை ஏற்று வாழ வரமருள வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: அன்பு இயேசுவே நீர் எம் பாவங்களுக்காக உம்மையே அன்று கால்வாரியில் பலியாக்கினீர். புனித அல்போன்சா உம்மைப்போல் பிறருக்காக தம்மையே தகன பலியாக்கினார். நாங்களும் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பிறருக்கு வழங்கும் மனம் தந்தருள வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முதல்வர்: எம்மைக் காக்க வந்த இயேசுவே! நீர் உம் பாடுகளின் பயணத்தில், தந்தையே என் விருப்பபடியல்ல, ஆனால் உம் விருப்பப்படியே ஆகட்டும் என்று கூறியது போல புனித அல்போன்சாவும் இறை திருமறைபடி வாழ்ந்தார். நாங்களும் அனைத்து செயல்களிலும் திருமறையின் படிப்பினைகளின்படி வாழவும், இறைவனின் அதிமிகு மகிமைக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
முதல்வர்: அன்பின் இறைவா! புனித அல்போன்சா அனைத்து மாணவர்கள் மீதும் அன்பும் பரிவும் கொண்டிருந்தார். அனைத்து மாணவ மாணவியரையும் ஆசீர்வதித்து நல்வழி நடத்த வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
(நமது தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடுவோம்)
முதல்வர்: இறைவா உமது அளவில்லாத மகிமைகளுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் புனித அல்போன்சாவை எங்கள் முன் மாதிரியாகவும் பாதுகாவலியாகவும் தந்தீரே! அவரின் பரிந்துரையால் நாங்கள் அன்பிலும் இரக்கத்திலும் சிறந்தவர்களாய் வாழ்ந்து இறையரசின் விழுமியங்களின்படி வாழ வரமருள வேண்டுமென்று எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்.
முதல்வர்: தூய அல்போன்சாவே, தூய வாழ்வின் முன்மாதிரியே, துறவியருக்குக் கலங்கரையே, துன்பங்களால் புடமிடப்படுபவரே, கோதுமை மணி போல் அரைக்கப்பட்டு உம்மையே இயேசு வாழும் அப்பமாக மாற்றத்துணிந்தவரே, ஏழைகளின் ஏந்தலே, துயரப்படுவோரின் துணையாளரே, நன்மை செய்ய துணிவோருக்கு நல் வழிகாட்டியே, உம்மை நம்பி ஓடும்படி வந்தோம். கவலையோடும் கண்ணீரோடும் கலக்கத்தோடும் வந்த எமக்கு ஆறுதல் தாரும். அமைதியின்றி ஆதரவின்றி வந்த உம் பிள்ளைகளைப் பாரும். எம்மை உம் கருணை கரங்களால் அரவணைத்தருளும். வறுமையாலும் நோயாலும் தனிமையாலும் முதுமையாலும் முன்னேற வழியின்றி முடங்கிக்கிடக்கும் நாங்கள் உம் முன் வந்து முழந்தாழிட்டோம்.
வாடிவிடும் எம் மலரை வாடாமலர் ஆக்கும், தேடிவரும் உம் சொந்தங்களை வற்றாத அன்பினால் தேற்றும், நாடிவரும் எல்லோருக்கும் நல்வாழ்வைத் தந்து வழிகாட்டும். மாறா அன்பில் வாழ்ந்த இறைப்புனிதையே, உம்மை நம்பி வந்த எமக்காக எப்போதும் இறைவனை மன்றாடுவீராக.
எல்லோரும்: ஆமென்
மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும்
விண்ணகத்தில் இருக்கும் பிதாவாகிய இறைவா
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த மகனாகிய இறைவா
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய இறைவா
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
புனித மரியாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அசிசியின் புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அசிசியின் புனித கிளாரம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோனியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பாரத நாட்டின் மணிமுத்தாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கேரள திருச்சபையின் மணிமுடியாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குடுமாளூரில் பூத்த தாமரையாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சம்மனசுகளின் இராக்கினி ஆலய அன்பியத்தின் பாதுகாவலியாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நோயாளிகளின் பாதுகாவலியான புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறை வரத்தினால் மும்மாரி பொழியச் செய்யும் புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இயேசுவுக்காக வேதனை ஆயிரம் ஏற்ற புனித அல்போன்சம்மாளே- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனுக்காக தியாகப் பலியான புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சிலுவையின் பாதையில் நடுந்தவராகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தியாக பலி பீடுத்தில் அற்புதமான புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பொறுமையின் சிகரமாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தியாகத்தின் துரும்பினை வாழ்வாக்கிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பொன்கதிர் வீசும் தாரகமாகிய புனிய அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மக்கள் சுதந்திரத்தை சுவைக்க, தன் சொந்த சுகங்களை மறந்தவராகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விண்ணில் உயர்ந்த விண்மலராகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருப்பலியின் மூலம் இறை இயேசுவை நாம் காண செய்த புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தரணியில் நன்மை பொழிந்தவராகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தரித்திரத்தின் முன்மாதிரியாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கீழ்ப்படிதலின் இளநிலவாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரிசுத்தத்தை என்றும் காத்தவராகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிரார்த்தனையாகிய மலர்களை கிறிஸ்துவுக்கு அர்ச்சனை செய்தவராகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கருணையின் நிறை குடமாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித கிளாரம்மாளின் சபையின் விரிந்த நறுமலராகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னியர்களின் முன்மாதிரியாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித பிரான்சிஸ்குவின் பாதையில் சமாதானத்தை பரப்ப பணிபுரிந்த புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வேதனையால் துடிக்கும் மக்களின் அடைக்கலமாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தியாகம் தன்னுடைய விதியென்று, அன்பின் கீதங்களாகிய புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அனுதினம் உயரும் பிரச்சனைகள், பரிகாரத்தின் கருவாக்கி, நீதி கிடைப்பதற்காக செபிக்கும் புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறுதி தினத்தில் நின் மக்களாய், நாங்கள் இறை சந்நிதியில் வந்து சேர்வதற்காய் இறைவனை இரைஞ்சும் புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மாணவர்களின் பாதுகாவலியான புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இளையர்கள் அறிவிலும் பண்பிலும் முன்னேற, அயராது உழைத்த புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குழந்தைகள் மீது அலவில்லா பற்றுக்கொண்ட புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித தேவசகாயம் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அருளாநந்தர் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித கூரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித தோமா அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அன்னை தெரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முக்தி பேறுபெற்ற கார்லோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி'
முதல்வர்: புனித அல்போன்சாவே! நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும் மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்குகொண்டு நீர் எங்கள் மத்தியில் இருந்து தேர்த்து கொள்ளப்பட்டீரே. புண்ணியத்தில் வளர்ந்த நீர் இறைவனால் புனித நிலைக்கும் மோட்ச பாக்கியத்திற்கும் அழைத்து கொள்ளப்பட்டீரே. எங்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் இறைவனிடம் எமக்காய் பரிந்து பேசும். ஓ! துன்பங்களால் தூய்மையடைந்த தூயகமே, உம்மை போல் நாங்களும் இறைவனில் முற்றிலும் சரணடைந்து தூய வாழ்வு வாழ வழி நடுத்தும். கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும் எம் பாவங்களின் மன்னிப்பிற்காகவும் அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் மீட்பிற்காகவும் எங்கள் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்று இறை மகிமைக்காக வாழும் வரம் தாரும். ஆமென்.
இறுதிச் செபம்
முதல்வர்: திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படியாகவும், அன்னை மரியாளின் பரிந்துரை செபம் என்றும் நமக்கு கிடைக்கும்படியாக,
முதல்வர்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
அனைவரும்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
முதல்வர்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
அனைவரும்: தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முதல்வர்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
அனைவரும்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
தானனன்னா தன நன நா தானனன்னா தன நன நா
தானனன்ன தானனன்ன தனனன தன னன தன னன தானனன்னா தன நன நா
எங்கள் முகம் பாரம்மா எங்கள் குறைதீர் அம்மா
புனிதை நீ அல்போன்ஸ் அம்மா
எங்கள் கல்வி நன்றாக, என்றும் பண்பில் முன்னேற
அருள் செய்வாய் அல்போன்ஸ் அம்மா
பாதம் பணிந்தோம் உன் குழந்தைகளாய்
நீர் பரிந்துரைப்பாய் வான் தந்தை இடமாய்
குழந்தைகள் மீது அன்பு கொண்ட அல்போன்ஸ் அம்மா….மா
எங்கள் முகம் பாரம்மா எங்கள் குறைதீர் அம்மா
புனிதை நீ அல்போன்ஸ் அம்மா
எங்கள் கல்வி நன்றாக என்றும் பண்பில் முன்னேற
அருள் செய்வாய் அல்போன்ஸ் அம்மா
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஐந்து களத்தில் பாடம் கற்கும் பண்பு வேண்டும்
பெற்றோர் உள்ளம் சந்தோஷத்தை காண வேண்டும்
உண்மை மாறா நெஞ்சத்தோடு பேசவேண்டும்
உள்ளங்களில் பக்தி குடி கொள்ள வேண்டும்
எங்கள் அன்புத் தாயே நீர் ஏற்பாயே
இறைவனிடம் நீ பரிந்துரைத்து இவை அனைத்தும் எங்கள் வழி கிடைத்து
உன்னால் எங்கள் உள்ளம் மகிழ் வாகட்டுமே
மன்னித்து நீ மண மகிழந்து மழலையம்மா
அன்று குடமாடளூரில் நீயும் தானே குழந்தை அம்மா
குழந்தை நாங்கள் உன்னை போல் ஞானம் பெற
தவறேனும் செய்யாவண்ணம் காப்பாற்றம்மா
தந்தை இறைவன் தயவாலே
கேட்கின்ற வரங்கள் யாவும் பெற்று
உயர்வில் நாங்கள் விண்ணை அடைந்து
அல்போன்ஸ் அம்மா உன்னருளால் சிறக்கட்டுமே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
எங்கள் முகம் பாரம்மா எங்கள் குறைதீர் அம்மா
புனிதை நீ அல்போன்ஸ் அம்மா
எங்கள் கல்வி நன்றாக என்றும் பண்பில் முன்னேற
அருள் செய்வாய் அல்போன்ஸ் அம்மா.. அருள் செய்வாய் அல்போன்ஸ் அம்மா
முதல்வர்: ➕ அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே, ➕ எங்கள் சத்ருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ➕ எங்கள் சர்வேசுரா! ➕ தந்தை, ➕ மகன், ➕ தூய ஆவியின் பெயராலே!
எல்லோரும்: ஆமென்.