புனித மாக்சிமுஸ் (-462)
இவர் பிரான்ஸ் நாட்டில் ப்ராவன்ஸ் என்னும் இடத்தில் பிறந்தார். சில ஆண்டுகளாக புண்ணிய வாழ்வு நடத்தி வந்தார். உலகில் இருந்து கொண்டே காட்டில் உள்ள ஒரு சந்நியாச மடத்திற்குச் சென்றார். மடத்தின் தலைவர் இவரை அன்புடன் ஏற்றுக் கொண்டார். 426-ஆம் ஆண்டு தலைவர் பேராயர் ஆனார். எனவே மாக்சிமுஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பேரும் கீர்த்தியும் எங்குளம் பரவியது. ஏராளமான மக்கள் மடத்திற்கு வந்தார்கள். இவரது ஆட்சியின் கீpழ் சந்நியாhசிகள் புண்ணிய பாதையில் முன்னேறி வந்தனர். ஏழு ஆண்டுகளுக்குப்பின் ஆயர் இறந்தார். இவரையே ஆயராக்க உறுதி செய்தார்கள். இவரோ விரைந்து இத்தாலி நாட்டிற்கு போனார். மக்கள் இவர் பின்னே ஓடி இவரைப் பிடித்து ஊருக்குக் கொண்டு வந்தார்கள். கட்டாயத்தின் மேல் ஆயர் பதவியை ஏற்றார். எப்பொழுதும் மயிர்ச் சட்டை தரித்து மடத்திலிருந்து போலவே எளிய வாழ்வு நடத்தினார்.
சிந்தனை:
இவர் பதவியிலிருந்து தப்பிக்க ஓடி ஒளிந்து கொண்டார். எனினும் தேவசிநேகத்தை அறிந்து பதவியை ஏற்றுக் கொண்டார். நாம் அனைத்திலும் கடவுளின் கரத்தைக் காண்போம்.
செபம்:
ஆண்டவரே, நாங்கள் அனைத்திலும் உமக்கும் பெரியவர்களுக்கும் கீழ்ப்படியும் வரத்தை; தாரும்.