ஜெனோவாவின் புனித கத்தரின் (1447-1510)
இவள் பெற்றோரது விருப்பத்திற்கு இணங்கி 16-ஆம் வயதில் மணமுடித்தாள். கணவனோ கடுங்கோபகுணம் கொண்டவன். 10 ஆண்டுகளுக்குப் பின் இவள் கண்ட காட்சியில் கடவுளது அளவற்ற அன்பையும் நன்மைத்தனத்தையும் நன்கு அறிய வந்தாள். அதில் இருந்து எஞ்சிய வாழ்நாள் எல்லாம் தேவசிநேக அக்கினியால் இவள் பற்றிபெயரிந்தாள் என்று சொல்லலாம். ஒவ்வொரு நாளும் திவ்விய நன்மை வாங்கி வந்தாள். அங்குள்ள நோயாளிகளை வீரத்துடன் மருத்துவமனையின் பொறுப்பை ஏற்று பராமரிப்பாள். 1497-ஆம் ஆண்டிலிருந்து 1501-ஆம் ஆண்டு வரை பயங்கர கொள்ளை நோயில் நகர மக்களில் ஐந்தில் நான்கு பேர் உயிர் இழந்தார்கள். அப்பொழுது அங்கே நோயாளிகளுக்கு அரிய சேவை செய்து வந்தாள்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களைப் பற்றி அநேக காரியங்கள் இவருக்கு வெளியிடப்பட்டன. அவற்றை இரண்டு புத்தகங்களில் எழுதித் தந்திருக்கிறாள். இவளை ‘உத்தரிக்கிற ஸ்தலத்தின் அப்போஸ்தலர்’ என்று அழைப்பார்கள்.
சிந்தனை:
“புண்ணியத்திற்கு சன்மானமாக மறு உலகில் நாம் அடைய இருப்பதை ஒருவன் காண்பானானால் அவன் நற்செயல்கள் செய்வதிலேயே இரவும், பகலும், ஆபத்தையும், களைப்பபையும் கவனியாமல் வேலையாக இருப்பான்”. (புனித ஜெனோவா கத்தான்)
செபம்:
ஆண்டவரே, நாங்கள் நேரத்தைப் பயன்படுத்தி ஏராளமாய் நன்மை செய்யும் வரத்தைத் தாரும்.