புனித பெலிக்ஸ் (Vaiois)
(1127 – 1212)
இவர் சிறுவயதிலேயே உலக செல்வங்களைத் துறந்து காட்டிற்கு சென்று செபத்திலும் தவத்திலும் அமைதியாக தனிவாழ்வு நடத்தி வந்தார். இவரது 71-வது வயதில் புனித மாத்தா அருளப்பர் இவரைத் தேடி வந்தார். ஸ்பெயின் நாட்டிலும், வட ஆப்பிரிக்காவிலும் மகமதியர்களிடம் அடிமைகளாய் இருந்தவர்களை மீட்பதற்கென்று தொடங்க இருந்த சபைக்கு நம் புனிதரது உதவியை அருளப்பர் விரும்பிக் கேட்டார். இவர்கள் கண்ட காட்சிக்குக் கீழ்ப்படிந்து இருவரும் உரோமைக்குச் சென்றார். பாப்பானவர் இவர்களை அன்புடன் வரவேற்றார். சபையை அங்கீகரித்து அருளப்பரை சபையின் தலைவராக்கினார். சபை உறுதிப்படுத்தப்படவும் நம் புனிதர் உதவியாக இருந்தார்.
சிந்தனை:
மகமதியர்களுக்கு அடிமைகளாக இருப்பதை விட பசாசுக்கு அடிமைகளாக இருப்பது அதிக பயங்கரத்துக்குரியது. கெட்ட கிறிஸ்தவர்கள் பசாசுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் மீட்கும்படி நம் பரலோக அன்னை பரிந்து பேசுவாளாக.
செபம்:
பாவ விலங்கறுப்பாய் - குருடர்
பார்த்திட ஒளி விடுப்பாய்
சாவுறுந் தீமையெல்லாம் - நீக்கி
சகல நன்மை அளிப்பாய்