புனித கத்தரீன் மறைசாட்சி (-310)
அலெக்சாந்தரியா நகரில் பிறந்த கத்தரீன் மிகுந்த கல்வியறிவு படைத்தவள். பேரரசன் மாக்சிமினுஸ் கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதை கண்டு அவனை அணுகி, மோட்சம் அடைய கிறிஸ்துநாதரை விசுவாசிக்க வேண்டும் என்று கூறினாள். இவளது அறிவைக் கண்ட அரசன் வியந்து, நாட்டிலுள்ள அறிஞர்களை அழைத்து இவளோடு தர்க்கமிட சொன்னான். இவளோ தன் சொற்களால் அவர்களை மனந்திருப்பினாள். அவர்கள் கிறிஸ்தவகளாகி வேதத்திற்காக உயிரை தியாகம் செய்தார்கள். கத்திரீi உபாதிக்கும்படி அரசன் கட்டளையிட்டான். கட்டி அடித்தார்கள். கூரிய வாள்களைக் கொண்ட சக்கரங்களால் இவளை உபாதிக்க அரசன் முயன்றபோது இவளது செபங்களால் அந்த இயந்திரம் நொறுங்கியது. பின்னர் இவளது தலையை வெட்டிக் கொண்டார்கள்.
சிந்தனை:
தனது கல்வித் திறமையால் அநேக அறிஞர்களை கடவுளிடம் கொண்டு வந்தாள். கல்வியறிவு படைத்தவர்கள் இவளைக் கண்டு பாவிக்கலாம்.
செபம்:
ஆண்டவரே, அனைவரும் தங்கள் திறமையை உமது மகிமைக்காக பயன்படுத்துவார்களாக.