வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்
இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்" என்பார். வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.
காணாமற்போன ஆடு
லூக்கா 15 1-7
இயேசு இந்த உவமையை ஏன் கூறினார்? வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். எனெனில், பாவிகளோடு உண்பது யூதர்களுக்குத் தடைசெய்யப் பட்டிருந்தது.
பாவிகளுடன் உண்பது ஏன்? என்ற கேள்விக்கு மூன்று உவமைகளில் இயேசு பதிலளித்தார் இதுவே முதல் உவமை
இயேசு கூறிய உவமை - உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார் (லூக்கா 15 4-5)
உவமையின் விளக்கம் - நல்ல ஆயன் நானே என்று கூறிய இயேசுவே ஆயர். இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார் (மத்தேயு 15-24). இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்றி, இறையாட்சியின் நற்செய்தியையும் புதிய-உடன்படிக்கையின் பாவமன்னிப்பையும் அறிவித்தார். காதுள்ளவன் கேட்கட்டும் என்று சத்தமிட்டார்.
இஸ்ரயேலில் இருந்த வரிதண்டுவோரும் பாவிகளும் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டவுடன், தம் பாவங்களை அறிந்து, மனம் மாறினார்கள்.. இவர்களே காணாமற்போன ஒரு ஆடு. இயேசு வரிதண்டுவோரின் பாவங்களைத் தம் தோள்மீது ஏற்றுக்கொண்டார், இறையாட்சிக்கு அவர்களை வழிநடத்தினார். விண்ணுலகில் மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. விண்ணிலிருந்து இறங்கிவந்த நோக்கம் நிறைவேறியதால், பாவிகளுடன் இயேசு விருந்து உண்டு மகிழ்ந்தார். விண்ணுலகில் மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.
மனம்மாறத் தேவையில்லாத நேர்மையாளர் யார்? லூக்கா 15-7
விண்ணுலகில் கடவுளால் ஏற்கப்படுவோர் யார்? நேர்மையாளரா? பாவிகளா? இதற்கு எவரும் பதில்கூறமுடியாது. எனென்றால். கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே என்றார் இயேசு (லூக்கா 18 19). உலகில் நேர்மையாளரே இல்லை ஒருவன்கூட இல்லை எல்லாரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டுப்போயினர். என்றார் திருத்தூதர் பவுல் (உரோமர் 3 10,12,) எனவே, கடவுளின் முன் அனைவரும் பாவிகளே.
எனவே இயேசு மக்களை இரண்டு பிரிவினராக அறிவித்தார்.
1. பாவிகள் – இவர்கள் நற்செய்தியை கேட்கும்போது, தம் பாவத்தை அறிந்து மனந்திரும்ப வாய்ப்பு உண்டு. இவர்களே காணாமற்போன ஆடு. இவர்களைத் தேடியே இயேசு உலகத்தில் வந்தார்.
2.வெளிவேடக்காரர் – இவர்கள் தம் பாவத்தை அறிவதில்லை, காணாமற்போனதையும் அறிவதில்லை. மற்றவர்களைக் குறைகூறித் தம்மை உயர்வாக எண்ணுகிறார்கள். எனவே, இவர்களை நேர்மையாளர் என்றும் மனம்மாறத் தேவையில்லாத நேர்மையாளர் என்றும் இயேசு கேலியாக அறிவித்தார். இவர்கள் மனம் மாறுவது கடினம்.
இயேசுவின் வஞ்சப்புகழ்ச்சி- அயோக்கியனைப் பார்த்து, யோக்கியன் வாரான் செம்பை எடுத்து உள்ளே வை என்று கிராமத்திலுள்ள மக்கள் கேலிசெய்வார்கள். இது வஞ்சப்புகழ்ச்சி என்று கூறப்படுகிறது. அதுபோலவே, இயேசு இரண்டுமுறை வெளிவேடக்காரப் பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் புகழ்வதுபோல் இகழ்ந்தார். முதலில் நேர்மையாளர் என்றும், பின்பு, மனம்மாறத் தேவையில்லாத நேர்மையாளர் என்றும் கேலிசெய்தார்.
இயேசுவின் வஞ்சப்புகழ்ச்சி 1 - கலிலேயாவில் மத்தேயுவின் வீட்டில் இயேசு விருந்து உண்ணும்போது, வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? என்று பரிசேயர் இயேசுவைக் குறைகூறினார்கள் (மத்தேயு 9 11) தம் பாவங்களை அறியாமல், மற்றவர்களை பாவி என்று குறைகூறியபடியால், பரிசேயர்களை நேர்மையாளர் என்று இயேசு கேலியாக அறிவித்தார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அவர்களுக்குப் பதிலளித்தார் (மத்தேயு 9 13). ஆனால், பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவின் கேலியை அறியவில்லை. தம்மை நேர்மையாளர் என்று இயேசு புகழ்வதாக எண்ணி, மகிழ்ந்தார்கள்.
இயேசுவின் வஞ்சப்புகழ்ச்சி 2 - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் பரிசேயர்கள் தம் பாவத்தை அறியவில்லை, மற்றவர்களை பாவிகள் என்று குறைகூறுவதையும் விட்டுவிடவில்லை. எனவே, யூதேயாவில் இயேசு பாவிகளுடன் உரையாடும்போது, பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே என்று மறுபடியும் முறுமுறுத்தார்கள் (லூக்கா 15-2). இம்முறை இயேசு அவர்களை நேர்மையாளர் என்று கூறாமல், மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர் என்று தெளிவாக அவர்களைக் கேலிசெய்தார். மனம் மாறத் தேவையில்லாத்தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட,மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். என்றார் (லூக்கா 15-7)
பரிசேயரைப்போன்ற வெளிவேடக்காரர் தொண்ணூற்றொன்பது பேர் வந்தாலும், விண்ணுலகில் சிறிதளவுகூட மகிழ்ச்சி ஏற்படாது என்றும் கேலியாக அறிவித்தார். எனென்றால், தம்மை நேர்மையாளர் என்று நம்புவோருக்கு விண்ணுலகில் இடமில்லை. மனம் மாறிய பாவியே அங்கு ஏற்கப்படுவான் என்ற உண்மையை இயேசு அறிவித்தார். ஆனால், பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவின் கேலியை அறியவில்லை. தம்மை மனம்மாறத் தேவையில்லாத நேர்மையாளர் என்று நம்பினார்கள். இக்காலத்திலும் பலர் தம்மை அவ்வாறே நம்புகிறார்கள்.
பரிசேயர்களின் வெளிவேடத்தை இயேசு நேரடியாக அறிவித்தபோது, அவர்கள் அதை அறியவோ, மனம் மாறவோ விரும்பவில்லை. மாறாக, இயேசுவின்மீது கோபம் கொண்டார்கள். எனவே, ஒருசில நாள்களில் இயேசு கொல்லப்பட்டார். இவ்வாறு, இயேசுவின் புதிய உடன்படிக்கையின் மன்னிப்பை பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இழந்தார்கள். இயேசு இந்த உவமையைக்கூறி 2000 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆயினும், இக்காலத்திலும் சிலர் தம்மை மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர் என்று நம்பி மகிழ்கிறார்கள்.
இயேசுவின் தீர்ப்பு – பரிசேயர்களின் வெளிவேடத்தைக் குறித்தே தம் மலைப்பொழிவில் இயேசு மக்களை மிகுதியாக எச்சரித்தார். கோவிலில் வேண்டுதல் செய்த பரிசேயரும் ஆயக்காரனும் என்ற உவமையிலும் பரிசேயரின் வெளிவேடம் கூறப்பட்டுள்ளது. இயேசு தாம் இறப்பதற்கு முன்னர், பரிசேயரின் உண்மையான பெயரை எருசலேம் கோவிலில் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்களை வெளிவேடக்காரர், மதிகேடர், குருட்டு வழிகாட்டிகள், பாம்புகள், விரியன்பாம்புக் குட்டிகள் என்று கூறி, அவர்களின் வெளிவேடத்தை மத்தேயு 23 அதிகாரத்தில் இயேசு வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பரிசேயர்களின் வெளிவேடத்தை இயேசு நேரடியாக அறிவித்தபோது, அவர்கள் அதை அறியவோ, மனம் மாறவோ விரும்பவில்லை. மாறாக, இயேசுவின்மீது கோபம் கொண்டார்கள். எனவே, ஒருசில நாள்களில் இயேசு கொல்லப்பட்டார். இவ்வாறு, இயேசுவின் புதிய உடன்படிக்கையின் மன்னிப்பை பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இழந்தார்கள். இயேசு இந்த உவமையைக்கூறி 2000 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆயினும், இக்காலத்திலும் சிலர் தம்மை மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர் என்று நம்பி மகிழ்கிறார்கள்.