இயேசு உவமை கூறுவதற்குக் காரணம் என்ன? உவமை என்பது சிறு கதை ஆகும். வார்த்தையைவிட கதைகளே நம் உள்ளத்தில் என்றும்-அழியாமல் நிலைநிற்கின்றன. முயல் - ஆமை கதையும், நரி- திராட்சைப்பழம் கதையும் என்றும் மறக்கப்படுவதில்லை. எனவே,. புத்தகமும் பேனாவும் இணையதளமும் இல்லாத அக்காலத்தில், இயேசு, உவமையின் வாயிலாக மக்கள் உள்ளத்தில் உண்மையை விதைத்தார்.
1. தண்டின்மேல் வைக்கப்பட்ட விளக்கு
மாற்கு 4 21-25
உண்மையை மறைப்பதற்காகவே இயேசு உவமையைக் கூறினார் என்று சிலர் நினைத்தார்கள். எனவே, சீடர்கள் அவரருகே வந்து, ’ஏன் மக்களோடு உவமையின் வாயிலாகப் பேசுகின்றீர்?’ என்று கேட்டார்கள். உண்மையை மறைப்பதற்கல்ல, வெளிப்படுத்துவதற்கே உவமையைக் கூறுகிறேன் என்று இயேசு கூறினார். தம் பதிலைக்கூட ஒரு உவமையாக அறிவித்தார்.
விளக்கு உவமை - எஎவரும் விளக்கைக் ஏற்றி, அதை மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ, நிலவறையிலோ வைப்பதில்லை. அல்ல, மாறாக, அறையின் உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பார்கள் அல்லவா? உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து தமக்குரியது என்று அவர் நினைப்பதும் எடுக்கப்படும். (மாற்கு 4 21-25)
எவரும் விளக்கைக் ஏற்றி, அதை மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ, நிலவறையிலோ வைப்பதில்லை. அல்ல, மாறாக, அறையின் உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பார்கள் அல்லவா? உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து தமக்குரியது என்று அவர் நினைப்பதும் எடுக்கப்படும். (மாற்கு 4 21-25)
உள்ளவருக்குக் கொடுக்கப்படும்”
உண்மையை அறியும் ஆர்வம் உள்ளோரே இயேசுவின் உவமையை அறியமுடியும். எனவே, இயேசு தம் உவமையைக் கூறியபின் “காதுள்ளோர் கேட்கட்டும்” என்று பலத்த குரலில் அறிவித்தார் கேட்கிற உங்களுக்கு மிகுதியாகக் கொடுக்கப்படும் என்றார். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். “அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து போடுவார்கள்” என்று இயேசு அறிவித்தார். அதுபோலவே,. வள்ளுவரும் வெள்ளத்தனையது மலர்நீட்டம், மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு என்றார்.
இல்லாதவரிடமிருந்து தமக்குரியது என்று அவர் நினைப்பதும் எடுக்கப்படும் – ஆர்வம் இல்லாதவர்களும் தற்பெருமை கொண்ட அறிஞர்களும் உண்மையை அறியமுடியாது. என்று இயேசு அறிவித்தார். இயேசுவின் காலத்திலிருந்த குருக்களும், பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் யூதர்களும் கோவிலில் இருந்தபோதும், திருச்சட்டங்களை படித்திருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை அறிந்துகொள்ளவில்லை. கண்ணிருந்தும் குருடராயும், காது இருந்தும் செவிடராயும், உண்மையை அறியும் ஆர்வமில்லாதவராயும் இருந்தார்கள். அவர்களுக்கு இயேசுவின் உவமைகள், கடைசிவரை உவமையாகவே இருந்தன, எனவே விண்ணரசை அவர்கள் இழந்தார்கள்..
இக்காலத்திலும் பலர் இயேசுவின் உவமையை அறிய விரும்புவதில்லை. எனவே, திருத்தூதர் பவுல், “நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி, அழிவுக்குரியோருக்கேயன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை” என்று கூறினார் (2 கொரிந்தியர் 4 3).