பாரதி என்று ஒரு கவிஞன் இருந்தான் .
..'சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் ' என்று தான் பாடினான்.
--
'பொன்னியின் செல்வன் பேரவை' யாம்!'... ஒரு அண்டை நாட்டை படையெடுத்து வெற்றி கொண்டோம் என்பதை கொண்டாட என்ன இருக்கிறது?
அறிஞர் கலாம் கூறுகிறார் .
'.நமது நாட்டில் 2500 வருடங்களுக்கு முன்பே மாபெரும் பேரரசுகள் தோன்றிவிட்டன... ( மகதம்)...ஆயினும் வெளிநாட்டின் மீது , படையெடுத்து , அடிமைப் படுத்துவது , ராஜ நீதியாக என்றுமே ஏற்கப்பட்டதில்லை. ..நம்மால் முடியாது என்பதாலா ? கண்டிப்பாக இல்லை... கூடாது என்பதால். ..( இதற்கு 'தமிழ் மன்னர்கள் மட்டும் விதிவிலக்கு ' என்று இடித்துரைக்கிறார். ..).
இந்திய சாம்ராஜ்ய வரலாறுகளை எங்கே தொடங்கலாம்?
இமயத்திற்குத் தெற்கிலும் , கடலுக்கு வடக்கிலும் ,உள்ள பிரதேசத்தில் பாரதி என்ற மக்கள்
வாழ்கிறார்கள் என்கிறது விஷ்ணு புராணம் . ( இயற்றப்பட்ட காலம் கி.பி.200).
நாம் அறிந்தவரை, அது மகத பேரரசில் தொடங்குகிறது. ( ஏறத்தாழ கி.மு 600).
அது புத்தர் , மகாவீரர் போன்ற மாபெரும் துறவியரும், சிந்தனையாளர்களும் ,
வாழ்ந்த காலம். ... தமிழ் நாட்டிற்கு அப்போது வரலாறு எதுவும் இருந்ததா? ..
மகத பேரரசை கைப்பற்றிய , சந்திரகுப்த மௌரியன் காலத்தில் , ( கி.மு. 350-300) சாணக்கியன்
'அர்த்த சாஸ்திரம்' என்ற பொருளாதார நூல் எழுதினான். அதில் பாண்டியனின் கபாடபுரம் என்ற இடத்தில் முத்தும், வைடூர்யங்களும் , நன்கு நெய்த துணிகளும் கிடைக்கும் என்றும் , கடல் வணிகம் நடக்கிறது என்றும் எழுதியுள்ளான். ...
அதே காலத்தில் சந்திரகுப்த மோரியனின் அரசவையில் கிரேக்க தூதுவராக பணியாற்றிய மெகஸ்தனிஸ் பாண்டிய நாட்டைப்பற்றி செவி வழி செய்தி ஒன்று தருகிறார். '' Heraclesகிருஷ்ணனின் மகள் அங்கு அரசாள்வதாகவும் , மதுரையை சுற்றி உள்ள 350கிராமங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் முறை வைத்து , அரண்மனைக்கு தேவையான பண்டங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன' என்று சொல்கிறார்.( நீலகண்ட சாஸ்த்ரி)..)
, வடநாட்டில், யமுனை நதிக்கரையில் , ஸூரசேன ராஜ்ஜியம் என்று சிற்றரசு , மகதப் பேரரசு தோன்றுவதற்கு முன் இருந்தது. . கி.மு.600ல் ,வட நாட்டில் 16 ஜன பாதங்கள் இருந்தன .
North of the ocean and south of the Himalayas is the land of Bharat
அங்கம், மகதம், காசி, மல்ல,
மத்ஸ்ய ( மீன்), அவந்தி, வத்ச, கோசலம்,
குரு , பாஞ்சாலம் ( பஞ்சாப்), வ்ருஜி,
காந்தாரம்( ஆப்கானிஸ்தான் ), காம்போஜம் ,
ஸூரசேனம் ,சே டி , அஸ்மாகம் ( மகாராஷ்டிரம்..நாசிக் )
=================================================
---
இந்த படத்தை நன்கு நினைவில் இருத்துங்கள் ..யமுனை நதிக்கரையில் மதுரை. ..தெற்கே பாண்டிய நாட்டிலும் 'மதுரை'... தென்மதுரை !.. இன்னும் சொல்லப்போனால் , இந்தோனேஷியாவிலும் , ஒரு மதுரை!..எனவே,
பாண்டியர்களும் ,ஆயர் குலத்தவர்களும் , யமுனை நதிக்கரையில் இருந்து
தென் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்ற கருத்து தவறாக இருக்க முடியாது. இது நடந்தது , கி.மு. 600ல் இருந்திருக்கலாம். .அதற்கும் சற்று முன்னதாக இருக்கலாம்.
மகதம் பற்றி கூகிளில் தேடினேன். ஒரு அருமையான படம் கிடைத்தது. புராணம்தான்.
"LEGENDS ARE NOT HISTORY...BUT THE HISTORIAN CANNOT ENTIRELY IGNORE THE RACIAL MEMORIES OF THE PAST, THOUGH OBSCURED BY........"...says Nilakanta Sastry. ( I liked that sentence).
மகாபாரதத்தில், ஜராசந்தன் என்று ஒரு மன்னன் இருந்தான். ( கௌரவர்களின் நண்பன் .
வெல்லமுடியாத வீரன். .. வீமனும், மாயவனும், மாறுவேடத்தில், அவன் இடத்திற்கு
செல்கிறார்கள். வீமனும், ஜராசந்தனும் துவந்த யுத்தம் செய்கிறார்கள். ..மாயவன், ஒரு
ரஹஸ்ய குறி காட்டி , வீமனின் வெற்றிக்கு வழிசெய்கிறான்.
ஜராசந்தன் , மகத ராஜ அரசன். ..அவனது உபத்ரவம் தாங்க முடியாமல், சூரசேன , மத்ஸ்ய பகுதியின்,யாதவர்கள் , குஜராத்தின் துவாரகை பகுதியை சென்றடைந்தார்கள். என்று கதை .
அப்படியே நம்பச் சொல்லவில்லை. இருந்தாலும், ஒரேயடியாக நிராகரிப்பது, தவறு.
...இப்படிப்பட்ட கதைகளுக்கு, ஏதோ ஒரு காரணம் இருக்கும்,...தெளிவாக இருக்காது. நன்கு ஆராய்ச்சி செய்ததால் ,... தொடர்பு புலப்படும்.
Magadha was a kingdom ruled by Vedic civilization kings. Jarasandha was the greatest among them during epic times. His capital was Rajagriha or Rajgir a modern hill resort in Bihar. Jarasandha's continuous assault on the Yadava kingdom of Surasena resulted in their withdrawal from central India to western India. Jarasandha was a threat not only for Yadavas but also forKurus. Pandava Bhima killed him in a mace duel aided by the intelligence of Vasudeva Krishna. Thus Yudhisthira, the Pandava king, could complete his campaign of bringing the whole of Indian kingdoms to his sway Jarasandha had friendly relations with Chedi king Shishupala, Kuru king Duryodhana and Angaking Karna. After the epic age, in Kali Yuga, Magadha became the foremost of Indian kingdoms
பாண்டியர்களுக்கும் ,வட நாட்டின் கங்கை சமவெளி நாகரிகத்திற்கும் , 2500 வருட தொடர்பு உள்ளது. எந்த விதமான , விரோதமும் கிடையாது. சங்க இலக்கியம் ஊன்றி படித்தால் , வ ட நாட்டின் சமண, பௌத்த, வைதீக கருத்துக்கள் , அன்றே தமிழ்நாட்டில் நிலவி வந்தது தெரியவரும்.
அசோக சக்ரவர்த்தியின் காலத்தில் , ஆப்கானிஸ்தானம் முதல் , இன்றைய கர்நாடகம் , ஆந்திரம் வரை, மௌர்ய சாம்ராஜ்யம் , பரந்து விரிந்திருந்தது. ....
இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்லவ பகுதியான , தொண்டை மண்டலம், அசோக சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
கி.மு. 600 இலேயே , புத்தர் , மகாவீர, போன்ற சிந்தனையாளர்களையும் , அலெக்ஸான்டர் வியந்த வீரன் பாஞ்சால ஜீலம் நதிக்கரையின் புருஷோத்தமன் என்ற போரஸ் மன்னனையும், அசோகன் போன்ற சக்ரவர்தியையும், தந்த இந்திய வடநாடு , நமக்கு அன்னியமில்லை.
இவை இல்லாமல் , நமக்கு பெருமை ஏது?
SANCHI STHUPA OF MAURYAN PERIOD
The most important sources are the Puranas, the Buddhist Chronicles of Sri Lanka, and other Jain and Buddhist texts, such as the Pāli Canon. Based on these sources, it appears that Magadha was ruled by theHaryanka dynasty for some 200 years, c. 684 BC – 424 BC.
Siddhartha Gautama himself was born a prince of Kapilavastu in Kosala around the 5th century BCE, during the Haryanka dynasty.
( ராமாயணத்தில் , ராமனின் தாயார் கௌசல்யா , ( கோசல புத்ரி).
புத்தர் பிறந்ததும் அங்கேதான் என்பது இனிமையாக இருக்கிறது. )
In 326 BC, the army of Alexander approached the boundaries of Magadha. The army, exhausted and frightened at the prospect of facing another giant Indian army at the Ganges, mutinied at theHyphasis (modern Beas) and refused to march further East. Alexander, after the meeting with his officer, Coenus, was persuaded that it was better to return and turned south, conquering his way down the Indus to the Ocean.
வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுபடி, கி.மு. 600 அளவில் , இன்றைய ஒரிசா வின் வடக்கு பகுதியில் இருந்து, கடல் வழியே . விஜயன் என்பான், இலங்கையில் குடியேறினான். அங்கு இருந்த , பூர்வ குடி மக்களிடையே ஒரு அரசை அமைத்துக்கொண்டான். .. இன அடிப்படையில்,
அவர்கள் நாகர்கள் . ( நாகர்கள் என்போர் , தமிழர் அல்லர்...... பூர்வ குடி மக்கள்).
விஜயன் , பாண்டியனின் மகளை மணந்து கொண்டான் என்கிறார் , கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சதாசிவ பண்டாரத்தார். .. ஆண்டு தோறும் அந்த நாட்களில் , தனது மனைவியின் தகப்பனுக்கு பரிசுகள் அனுப்பி கௌரவித்தான் என்பார்.
எனவே, நண்பர்களே, இலங்கையின் சிங்களவரும் , தமிழ்நாட்டின் பாண்டியரும் , பொதுவான இந்திய பாரம்பரியத்திலும் இனத்திலும் வந்தவர்கள் தான். வேற்று நாட்டவர் அல்ல....
நாட்டின் தென்கோடியில் , பாண்டிய , சோழ , சேர , சத்யபுத்ரா ( கோசர்கள்? தர்மபுரி?), குலவழி சமூகங்கள் இருந்தன என்றும் , அரசர் என்று ஒருவர் இல்லாததினால் , தனது தூதுவரை அனுப்ப
இயலவில்லை என்றும் அசோகன் குறிப்பிடுகின்றான். ..ஆனால் தனது சொந்த மகனையும் ( (அவர் பெயர் மகிந்தன் .....மகேந்திரன் என்பதின் மறுவாக இருக்கலாம்)).....மகளையும்( சுங்கமித்ரை) , இலங்கையில் அனுராதபுரத்தில் சிங்கள அரசவைக்கு, புத்த மத நற்செய்தி தூதுவர்களாக அனுப்பிவைத்தான்.
எனவே, அசோகன் காலத்திலேயே, இலங்கையில், சிங்கள அரசு அமைந்திருந்தது. சேர, சோழ ,பாண்டியர்களின் , குலவழி அரசும் இருந்தது.
இனி, புறநானூற்று செய்தியின்படி, சேர மன்னனின் முன்னோன் , மகா பாரத போரில், நடு நிலையெடுத்து ,இரு சைன்யங்களுக்கும், உணவளித்தான் என்றும் , போரில் இறந்துபட்ட
மூதாதையர்களுக்கு , தர்ப்பணம் செய்தான் என்பதும் செய்தி. .... மகா பாரத போர் கி.மு. 1000 அளவில் நடந்திருக்கும் என்பது வரலாற்று ஆசிரியர்களின் அனுமானம். .. இதில் நடந்திருக்க முடியாதது எதுவுமே இல்லை....
வட நாட்டினர் , கி.மு. 600க்கு முன்னர், தக்காணத்தில், விந்திய, மலை மற்றும் அடர்ந்த தண்டகாரன்யத்தை தாண்டி , சாலை வழியாக , வருவதில் மிகுந்த இடர்ப்பாடு இருந்தது.
எனினும், சிறிது சிறிதாக , அவர்கள் முதலில், தேவகிரி ( prathisthaan) பகுதியிலும் ,( மூலகம் என்று பண்டைய பெயர்). ...பின்னர் அஸ்மாகம் என்ற நாசிக் பகுதியிலும் ( விதர்பா) பரவினர். நான் சொல்வது, கி.மு.600 ... புத்தர் காலம்
கி.மு.700ல், பாஞ்சாலம், சிந்து, யமுனை கரையில், இரானிய, இராக்கிய மக்கள் கலப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது... ( பின்வரும் பகுதியை படியுங்கள்).
மெஸபொடேமியா என்ற இன்றைய இராக் நாட்டில், மூன்று பகுதிகள் உண்டு. வட பகுதி அசிரியா என்றும், மத்திய பகுதிசால்டியா என்றும் , தென் பகுதி சுமேரியா என்றும் அழைக்கப்பட்டது. A.C.DAS ... என்ற ஆராய்ச்சியாளர், இந்த மூன்று அரசுகள் தான் , இந்தியாவின்
தென் கோடியில் , பாண்டிய (சுமேரிய)சேர(அசிரிய) சோழ (சால்டேயா)அரசுகளாக அமைந்தன என்று கூறுகிறார். .
மெஸபொ மி யா என்றால், ,' இரு நதிகளுக்கு இடையேயான' என்று பொருள். ..இராக் நாட்டில் , யூ ப்ரடிஸ் ,டிக்ரிஸ் என்று இரு பெரும் நதிகள் பாயும் சமவெளியில், கி.மு. 3000ல்,ஏறத்தாழ
சிந்து வெளி நாகரிகத்தின் சம காலத்தில், .. ( எகிப்திய நாகரிகத்தின் சமகாலத்திலும் கூட ).
சுமேரியன் சமவெளி நாகரிகம் தோன்றி ஆயிரக்கணக்கான வருடங்களாக , வளர்ந்திருந்தது.
வ ட மொழியில் நகரங்கள் புறம் என்று அழைக்கப்படுகின்றன. 'தமிழில் ஊர்' என்ற சொல், மற்றும் சிற்றூர் என்ற சொல்லும் வழங்குகின்றன. ...'ஊர்' என்பது . மத்திய இராக பகுதியில் (BABYLONIA), அமைந்திருந்த நகரம். .. ( நேரு)...
தென் இராக் அருகில், இரான் ஓரத்தில், 'ELAMITE CIVILIZATION' அமைந்திருந்தது என்கிறார் நேரு. ... புராணங்களில், வரும் சொற்களான அரக்கர், அசுரர் என்பனவெல்லாம் . இந்த பிராந்திய வரலாற்றோடு எதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கவேண்டும். ( இப்போதெல்லாம் , குவைத், கத்தார், என்று பல பேர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள் அல்லவா? அந்த இடம் பழய காலத்தில், ஈழம் என்ற பெயரில் இருந்ததாம். ..கடல் வழியாக , இந்த பகுதியின் சில கலாசார மரபுகள், தக்கணத்தில் வந்திருக்கக வாய்ப்பு உள்ளது.
ஈழம் என்ற பெயர் , elamite civilization கூட தொடர்பாக இருக்கலாம் இராக்கிலும், சுமேரிய, அச்றிய,பாபிலோனிய , அரசுகள் தங்களுக்குள் பல போர்கள் நடத்திக்கொண்டேதான் இருந்தன. ..அவை மிகவும் கொடூரமானவையாகவும் இருந்தன.
அஸ்ஸிரியர்கள், இந்த விஷயத்தில் மிகவும் மோசமான பெயர் எடுத்திருந்தனர். ..
NEBUCHADNEZZAR என்ற அஸ்ஸிரிய மன்னனின் காலம் . சுமார் கி.மு.600... ஈழ அரசு ( இராக்கில்)
பாபிலோனியர்களால் ஏற்கனவே முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. எந்த ஒரு தடயமும் இப்போது கிடைப்பதற்கில்லை. ( காண்க நேரு...உலக வரலாறு ...).
சில ஆய்வாளர், NEBUCHADNEZZAR என்ற பெயர் நெடுஞ்செழியன் என்ற பெயரை ஒத்திருக்கிறது என்கின்றனர்.. .அதைவிட , நெடுன்செறன் என்ற பெயர் , பொருத்தமாக இருக்கும் . ஏன் எனில் அவன் அஸ்ஸிரிய மன்னன். .. கி.மு.600ல். இன்றைய இரான் ( பெர்சியா)ஒரு வல்லரசாக ஏற்பட்டு , இந்தியாவில் கூட, பாஞ்சாலம் , சிந்து பகுதியில் பரவி இருந்தது. .
http://en.wikipedia.org/wiki/Achaemenid_Empire
( இவர்கள் தான், பபிலோனியாவிலும், எகிப்திலும் அடிமைகளாக துன்பப்பட்ட யூதர்களை
அடிமைத்தளையில் இருந்து விடுவித்தனர் என்ற செய்தி , மேலே உள்ள லிங்க் கில் உள்ளது.
இன்றோ, யூதர்களின் இஸ்ரேல் நாட்டை அழித்தே தீருவேன் என்று பெர்சிய ( இரான்) கருவுகிறது.
வரலாறு சுவைமிக்க பிரயாணம்தான்!)
இந்த பெர்சிய ( இரானிய) பேரரசு மேற்கே பரவி, இராக்கிய அரசுகளுக்கு விடை கொடுத்து, துருக்கி ( அன்றைய LYDIA),வழியாக , கிரீஸ் நாட்டுடன் மோதியதும் , அப்போது ஸ்பாரடா , ஏதென்ஸ் நகரங்கள் , இரானியரை முறியடித்து, அலெக்சாண்டர் மூலம் பழி தீர்த்துக்கொண்டதெல்லாம்,எழ்தப்பட்டுள்ள வரலாறு. ( கிரேக்கம்).
பெர்சிய பேரரசின் ஒரு பகுதியாக , இந்தியாவின் பாஞ்சாலமும் சிந்து மாகாணமும் இருந்தன.
பின்னாளில், அசோகன் , XERXES என்ற இரானிய மன்னனின் உதாரணத்தில் , தனது அரசையும்
அதன் தர்மத்தையும் அமைத்துக் கொணடான் என்று ஒரு பார்வை உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
HEIMENDORF என்ற 1940ல் இங்கு இருந்து பணியாற்றிய மானுடவியல் ஆய்வாளர் , இந்தியாவின் தென்கோடியில், கடல் வழியாக , இராக் பகுதியினர் , குடியேறி இருக்கலாம் என கருதுகிறார். ... நமது காலத்தில் , ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், போர்சுகீசியர் , டட்சுக்காரர் எல்லோரும் ஒரே நேரத்தில் , இந்திய கடல் ஓரங்களில் கோட்டைகள் அமைத்து , படிப்படியாக , உள்நாட்டில் வளர்ந்தது போல, இராக்கிய மொழி, கலாச்சாரம், மக்கள் போன்றவை, படிப்படியாக தமிழ் மண்ணில் வளர்ந்துள்ளது.
கி.மு. 600க்குப்பின் , பண்டைய இராக்கியர்கள், வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைந்து விட்டனர்.....அவர்கள்தான் கடல் வழியே இந்திய தென்கோடியில் குடியேறியிருக்க வேண்டும்.
எனினும் , சமீபத்திய அகழ்வு ஆராய்ச்சியின்படி, ஹரப்பா நாகரிகம் , குஜராத்தில், துவாரக
துறைமுகத்தில் நிலவியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ..எனவே கி.மு. 1000ல், தமிழ்
மன்னர்கள் , சிந்து , யமுனை பகுதியில் இருந்து , கடல் வழியே கேரளம்,பாண்டியம் மற்றும்
சோழ நாட்டின் கடற்பகுதியில் ஆட்சி அமைத்திருக்கலாம்.
சங்க இலக்கியம் , கடல் வாணிகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறது. ..( நெய்தல்).
இதுபோன்ற சான்றுகளால் , சங்க கால மூவேந்தர் ஆட்சி, தமிழ் மண்ணில் , கி.மு. 1000-600 பகுதியில், வட இந்தியாவிலிருந்தும், இராக் பகுதியில் இருந்தும் , படிப்படியாக இங்கு அமைந்தது என அமைகிறது. ..இனம், மற்றும் மொழிக்கலப்பு ஏராளமாக அப்போதே ஏற்பட்டுவிட்டது.
இன்றைய ஒரிசா பகுதியில் , கி.மு. 150 அளவில், காரவேலன் என்றொரு மன்னன் இருந்தான்.
அவனது கல்வெட்டு ஹாதிகும்பா என்ற இடத்தில் உள்ளது. அதில் அவன் கலிங்க அரசின் பாதுகாபிற்கு எதிராக , அன்றைய நாளில் , 130 வருட பழமையான தமிழ் மூவேந்தர் கூட்டுப்படை இருந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றான். ( நீலகண்ட சாஸ்திரி).
சங்க காலத்தில் , கி.மு 50 அளவில்,ஏலேல சோழ மன்னன், இலங்கை மீது படைஎடுத்து, சென்றதாக வரலாறு உள்ளது. . ..அதற்குப்பின், கரிகாலன் கி.பி.200 படையெடுத்து சென்று,
போர்கைதிகளை , கொண்டு வந்து , காவிரி நதியில் கல்லணை கட்டினான் என்றும் கூறப்படுகிறது. ... பண்டைய காலங்களில் , இம்மாதிரியான , பிரம்மாண்டமான கட்டிட செயல்பாடுகள் , போரில் வெல்லப்பட்ட அடிமைகளால் தான் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எகிப்தின் பிரமிடுகள் என்று வியக்கிறோம்! ஆனால் , எகிப்திய பாலைவனத்தில் , சொல்லொணா
துன்பம் அனுபவித்த யூதர்களின் கண்ணீர் கதைதான் , விவிலியத்தின் பழைய ஏற்பாடு.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இனி நீலகண்ட சாஸ்த்ரி, ராமசந்திர தீட்சிதர், சேஷ ஐயங்கார், ராமஸ்வாமி ஐயர்,ராகவ ஐயங்கார் , ஸ்ரீனிவாச ஐயங்கார் போன்ற அறிஞர்கள், பல விஷயங்களை சொல்லி, இன்றைய சைவ, வைணவ மரபுகளும், நாம் ஹிந்து மதம் என்று இன்று அறியும் மதமும் , எவ்வளவு நெருக்கமாக , சுமேரிய மரபுகளோடு ஒத்து வருகின்றன என்பதை எடுத்து காட்டுகின்றனர்.
கவனமாக படிக்கவேண்டிய பகுதி..
1) இங்கு நாம் இனம் பற்றி பேசவில்லை. மொழிக்குடும்பம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
2) சம்ஸ்க்ருதம் என்றாலே , வேதம் , ஸ்ம்ருதி என்ற கருத்து தவறு.
3) வைதீகம் என்பது வேறு. ஆகமம் என்பது வேறு.
ஆதி சங்கரர் ( கி.பி.600) , காலத்தில்தான், பார்ப்பனர்கள், வைதீக ஸ்மார்த்த விஷயங்களில் இருந்து ஓரளவு விடுபட்டு, சிவன் , பார்வதி, விஷ்ணு, லக்ஷ்மி ,
முருகன், போன்ற தெய்வங்களை ஏற்கத்தொடன்கினர். அதுவரை, பார்ப்பனர்,
மநு ., ஆபஸ்தம்பன், காத்யாயணன், நாரதர், போன்றவர்கள் இயற்றிய
'ஸ்ம்ருதி' களை யே , பின்பற்றி வந்தனர்.
( "தீயைக்கும்பிடும் பார்ப்பார் ", என்பான் பாரதி)...அதுகொண்டே, பி.டி ..ஸ்ரீனிவாச ஐயங்கார்,
ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கும், ஹிந்து கோ வில்களுக்கும் , எந்த தொடர்பும் கிடையாது என்பார்.
ஒரு வகையில், ஸ்மார்த்த பார்ப்பனர், 'விக்ரஹ ஆராதனை' என்ற உருவ வழிபாட்டு முறைக்கு
எதிரானவர்கள்தாம். !... பண்டைய காலம் தொட்டு, பார்ப்பனர்கள் ஒவ்வொரு நாளும் , வீட்டில் தீ வளர்த்தது , அதன மூலமாக வானுலக இயற்கை சக்திகளுக்கு , படையல் செய்வது , நியதி.!....
வசதி இல்லை, செய்வதில்லை என்பது வேறு விஷயம். ...
கற்றல், கற்பித்தல் , வேள்வி செய்தல் வேள்வி செய்வித்தல், தானம் தருதல் தானம் பெறுதல்
என அறுவகை செயல்கள்தான் . பார்ப்பனர்களுக்கு விதிக்கப்பட்டது என்பது, தமிழ் இலக்கிய மரபும் கூட.!
சங்க கால தமிழகத்திலேயே , இந்த சைவ, வைஷ்ணவ, சாக்த, கௌமார, காணபத்திய,
வழிபாடு முறைகள்,( சிவன், திருமால், கொற்றவை, குமரன் என்ற முருகன், பிள்ளையார்) பெருமளவு மக்களிடையே ஏற்க்கப்பட்டிருந்தன என்று நம்புவதற்கு
தேவையான சான்றுகள் இலக்கியத்தில் இல்லை.... அப்படி ஏதாவது ஒரு பாடல் இருந்தால்,
அது ஒரு பார்ப்பனர் பாடியதாக இருக்கும்.. அல்லது ஒரு கிழார் பாடியதாக இருக்கும். ( கிழார்
என்போர் அன்றைய வேளாள பெரியோர்கள்).. வேத நெறியை ஏற்காதவர்கள். கண்டிப்பாக
விநாயகர் வழிபாடு, சங்க காலத்தில் கிடையாது..
ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது.... கி.மு. 200ல் ,தமிழ்நாட்டில் , களப்பிரர் ஆட்சி அமைந்தது. அவர்கள் திருப்பதி மலை பக்கத்தில் இருந்து வந்தவர்கள்.( ராயல சீமா பகுதியாக இருக்கலாம்) . களப்பிரர் காலத்தில்,
அவர்கள் ஒன்று பட்ட நாடு , சட்டம் ,நிர்வாகம் எதுவுமே கொண்டிருக்கவில்லை. அந்த காலத்தில், சமணர்களுக்கும் , பௌத்தர்களுக்கும் ,, வைதீக பார்பனர்களுக்கும் , விவாதங்களும் போட்டிகளும் நடந்து கொண்டேயிருந்தன. ஆனால் , மக்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. !.. ராஜ்யமே இல்லை. ..வியாபாரிகள் இருந்தனர். சங்க கால சேர, சோழ,
பாண்டிய மன்னர்கள் , ஓரளவு அனுமதித்த வர்ணாஸ்ரம தர்மம். .. களப்பிரர்களால் ஏற்கப்படவில்லை.
சங்க கால மூவேந்தர்கள் , பார்ப்பனர்களுக்கு அளித்திருந்த , விளைநில தானங்களை , களப்பிரர் தலைவர்கள் , மறுத்துவிட்டு, பிடுங்கிக்கொண்டனர். ...எனவே தான் , பார்ப்பனர்கள், களப்பிரர் ஆட்சியை, ' கலியுக ஆட்சி ' என வர்ணித்தனர். ...களப்பிரர் காலத்தில் , பெருமளவு,
சமண, பௌத்த , துறவிகள் தமிழ்நாட்டில் இருந்தனர்.
இந்த 'இருண்ட காலத்தில்தான்' , ஐம்பெரும் காப்பியங்கள் , சிலப்பதிகாரம், மனிமேகலை ,
குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி போன்றவை எழுதப்பட்டன. இவை அனைத்துமே
சமண பௌத்த நூல்கள் என்பது குறி ப்பிடத்தக்கது. இவ்வாறு 400 ஆண்டுகள் சென்றுவிட்டன.
ஏராளமான நீதி நூல்கள் உதித்தன...கி.பி. 100 லேயே, மகாயான பௌத்தம் , சமஸ்க்ருதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. சமணர்களும் அவ்வாறே. .. இலங்கையில் , மாறாக , புத்த பகவான்
பிரசாரத்திற்கு பயன்படுத்திய பாலி மொழிதான் , பெரும்பாலும் இருந்தது.
அந்த 400 வருடங்களில்தான் வஜ்ரநந்தி என்ற சமண முனிவர் 'திராவிட சங்கம்' அமைத்தார்
சங்கம் என்ற சொல்லே தமிழ் அல்ல ..!.. வட நாட்டின் பல நல்ல விஷயங்கள் , சமண, பௌத்த துறவிகள் மூலம் , தமிழ் நாட்டில் பரவின. ..
தமிழ்நாட்டில் சங்க காலம் இருந்த பொது, ( கி.மு.200 முதல் கி.பி.200 வரை) கர்நாடகம் ஆந்திரம், மராட்டியம், மத்ய பிரதேசம்,
அடங்கிய நிலப்பரப்பில் , ஸாதவாகன சாம்ராஜ்யம் , 400 வருடங்கள் நிலைத்து நின்று,
சமணம், பௌத்தம், வேதியம் அனைத்தையும் அரவணைத்து, மேற்க்குகரையிலும்,
கிழக்குகரையிலும் , பெருமளவில் , கடல் வாணிபம் செய்து, ஒரு அபாரமான ஆட்சி தந்தது.
கி.பி. 100ல் , ஹாலன் என்ற சாதவாகன அரசன் ' கத சப்த சதி ' என்ற கவிதா நூலை எழுதினான்.
அது , பிசாசி , ப்ராக்ருதம் என்ற மக்களின் பேச்சுவழக்கு வடமொழியில் எழுதப்பட்டது.
அதன் தம்ழாக்கத்தை நான் படித்திருக்கிறேன். ...சங்க இலக்கிய அகத்துறை வாய்ப்பாடு பாடல்கள் போல் அல்லாமல், கத சப்தசதி, இயல்பாகவும், உடல் வர்ணனை குறைவாகவும், கௌரவமாகவும் இருந்தது. ..
.வேத சமயத்தில், கோவில்களுக்கு இடமேது ? ஆனால் இந்தியா முழுவதும் கோவில்கள் நிறைந்து , செல்வங்கள் அனைத்துமே கோவில்களில்தானே உள்ளன?
இதுதான் , இந்தியா , சுமேரியாவிலிருந்து , கற்றுக்கொண்ட சமூக அமைப்பு......இதுதான் திராவிட
கலாசாரம் ..இது தமிழ்நாட்டின் கலாசாரம் மட்டுமல்ல. . இந்தியா முழுவதும் உள்ள அமைப்பு.
பின்னாட்களில், கிருஸ்துவ சமயம் கூட இதே அமைப்பை ஏற்றுக்கொண்டது. ...
அதுதான், சர்ச்.
சமணமும் , பௌ த்தமும் , வணிகர்களின் சமயங்களாகும். ..
ஆனால், திராவிட , ஆகம சமயம், விவசாயம் சார்ந்ததாகும். ...இதன்படி, வயல்வெளிகள் அனைத்தும், கோவில்களுக்கே சொந்தம். .. கோவில் அதிகாரிகளே , இதன் மேற்பார்வையாளர்கள். .. கோவில் நிலங்களில் வேலை பார்ப்பவர்கள், நிரந்தர ஊழியர்கள் . அவர்கள் கூலிக்காக உழைக்கவில்லை. ..தெய்வ நம்பிக்கையினால் உழைப்பு தந்தார்கள். .. இத்தகைய சமூகத்தை பாதுகாப்பது, அரசனின் கடமை. மக்கள் அரசனாக ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், குருமார்களின் அனுமதி வேண்டும். அரசனின் மரியாதை குருமார்களின் மூலமே கிடைத்தது. .. கோவில் நிலமல்லாத , இடங்களில் விவசாயிகள் இருந்தால் அவர்கள் , ஆறில் ஒரு பங்கை , அரசுக்கு தரவேண்டும். .... பார்ப்பனர்கள், கிராமங்களில், விவசாய சம்பந்தமான , வானிலை மற்றும் நீர்ப்பாசன விஷயங்களை கவனித்து கொண்டார்கள். ..
இலங்கையில் ஏற்கப்பட்டு இன்றளவும் உயிர்ப்புடன் நிலவும், பௌத்த மதம் , ஹீனயானம் என்ற தொடக்ககால உண்மையான பௌத்தமாகும். ( காண்க .. கோஸாம்பி யின் , 'பண்டைய இந்தியா' ). இந்த பிரிவில் , பௌத்த துறவியர் , மடங்களில் தங்கமட்டுமே முடியும். அங்கு அவர்களுக்கு உணவு படைக்கப்பட மாட்டாது. .. துறவிகள், தினமும் , மக்களிடம் சென்று, அவர்கள் தரும் உணவை மட்டுமே புசிக்கவேண்டும். ..
குறிப்பாக , பௌத்த மதத்தில் அன்றும், என்றும் வர்ணாஸ்ரம தர்மமோ , தீண்டாமையோ கிடையாது.
****************************************************************************************
கவனியுங்கள்...உங்கள் சங்க காலம் தொடங்கும் முன்னரே ( கி.மு.200), மகத , மௌர்யா சாம்ராஜ்யங்கள் தோன்றிவிட்டன. அதன் உச்சகட்ட வெளிப்பாடாக , அசோகனின் பேரரசும்,
அவனது தர்ம ஆட்சியையும் ஏற்பட்டுவிட்டன. ...போர் வேண்டாம் என்றான் அசோகன். ஆனால் அப்போது, இந்த சேர சோழ பாண்டிய அரசுகள் , , இந்த மண்ணின் பூர்வ குடிகளான பாரி, ஓரி, காரி, குமணன், வேய் , அதியமான், போன்ற பூர்வகுடி தலைவர்களுக்கு எதிராகவும், தங்களுக்குள்ளும், ஓயாத போரிட்டுக்கொண்டிருன்தனர். .....இன்றைய ஜாதி சண்டை போன்றதுதான் அது. ...மிகவும் சிறிய எல்லையில் இது நடந்தது. ... Geography சிறிதேனும் படிக்கவேண்டும். அப்போதுதான் , இது எவ்வளவு சில்லறை சண்டை என்று புரியும்.
சாதவாகன பேரரசு , தமிழ் நாடு விஷயங்களில் தலையிடவில்லை. இலங்கையிலும்
தலையிடவில்லை...
சிலப்பதிகார செய்தியின்படி, சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்கு சிலை எடுத்து சிறப்பித்தபோது, இலங்கையின் சிங்கள அரசனான கஜபாஹு என்பவனும் வந்திருந்து,
அதே செய்தியை இலங்கையிலும் பரப்பினான் என்று உள்ளது. ..( கிழக்கு இலங்கையில்
தமிழர் பகுதியில், கண்ணகி வழிபாடு இன்றும் இருப்பதாக சொல்லப்படுகிறது.).
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
களப்பிரர் ஆட்சி , கி.பி.600ல் , காஞ்சிபுர பகுதியில் பல்லவர்களாலும், தமிழ் பகுதியில், பாண்டியர்களாலும் முடிவுக்கு வந்தது. ...களப்பிரர்கள் எங்கும் போய்விடவில்லை. இங்குதான் இன்னமும் இருக்கிறார்கள். !
கி.மு 200 முதல் , கி.பி.200 வரை, தமிழ்நாட்டில் சங்க காலம். ....தக்கணத்தில் ( கர்நாடகம், ஆந்திரம்,மராட்டியம், மத்திய பிரதேசம்).. சாதவாகன சாம்ராஜ்யம். ..
அப்போது வடமேற்கு இந்தியாவிலும், கங்கை சமவெளியிலும், .. இரான், கிரேக்கர்கள்
போன்றோர அரசு அமைந்திருந்தது. கனிஷ்க என்ற அரசன் , வடமேற்கு பகுதியில், அரசாண்டான்,
அதன் மூலம், சீன கிரேக்க, இரானிய, இராக்கிய மரபுகளின் கலவை ஏற்பட்டது.
மத்திய ஆசியாவிலிருந்தும், வீரமிக்க குழுக்கள், இந்திய மண்ணில் தாக்குதல் தொடுத்து,
இங்கேயே தங்கி விட்டனர். ... உண்மையில், இன்றைய இந்தியா , நாட்டின் வடக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் , ஆயிரக்கணக்கான வருட ங்களாக, . படையெடுத்து வந்து,
இங்கு கலந்துவிட்ட மக்களின் ஒரு கூட்டு சமூகமேயாம். ..
பர்மாவும் , இலங்கையும் அவ்வளவாக , பாதிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.
--
கி.பி.200 முதல் கி.பி.600 வரை ( அதாவது , தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி நடந்தபோது,
கங்கை சமவெளியிலும், மத்திய இந்தியாவிலும் , குப்த பேரரசு ஏற்ப்பட்டது ..
இதுதான் , அசோகன் அரசிற்குப்பிறகு, இந்தியாவின் பொற் காலம். ..இலக்கியத்திலும்,
விக்ஞானதிலும், அற்புதமான சாதனைகள் செய்யப்பட்டன. ... அந்த நூற்றாண்டுகளில்,
தக்கானமும், தமிழ் நாடும் .. மிகவும் பின்தங்கியிருந்தன. ( 400 வருடங்கள்).
சமுத்ரகுப்தன் காலத்தில், குப்த சாம்ராஜயம் , காஞ்சிபுரம் வரை விரிவடைந்திருந்தது.
வட மொழி,( சம்ஸ்க்ருதம்) இந்தியாவின் , அறிவு ஜீவிகளின் மொழியாக தன்னை உறுதிப்படுத்திக்கொண்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கி.பி.200ல் , சாதவாகன பேரரசு, மறைந்தபின்னர், தக்கணத்தில், பற்பல அரசுகள் தோன்றி மறைந்தன. . அவற்றில் முக்கியமானது, இன்றைய ஷிமோகா, தார்வார் , ஹுப்ளி, பகுதியில் அமைக்கப்பட்ட கடம்பர் ஆட்சி. ( கி.பி.345 ...கி.பி.525)...இன்று நாம் கர்நாடகம் என்று அழைக்கும்
பகுதியே , இந்த கடம்பர் ஆட்சி. .
. தமிழ் நாட்டு எல்லையில், பல்லவர்கள் அப்போதே வந்துவிட்டார்கள்.
முன்பே கூறியபடி, இன்றைய தொண்டை மண்டலம், அசோக சாம்ராஜ்யத்தின் தெற்கு எல்லையாக இருந்தது. ..காஞ்சி புரம் அப்போது தோன்றியதுதான். .. பல்லவர்கள் , இன அடிப்படையில் இரானியர்கள். ( அவர்கள் தூய சம்ஸ்க்ருதம் பேசியவர்கள்.).. அன்றைய
வழக்கப்படி, யார் மன்னனாக இருக்கலாம் என்பது, பார்ப்பனர்களின் கதிகா என்ற சபையினால் தான் முடிவு செய்யப்படும். .. இன்றைய கர்நாடகத்தின் மத்திய பகுதியில், கதம்பர்கள் வம்சத்தில்
பார்ப்பன ராஜாவே நேரடியாக ஆட்சி செய்த ராஜ்ஜியம் இருந்தது. அதன் தலை நகரம்
வைஜயந்தி பட்டணம் என்று இருந்தது. .( கல்கியின் சிவகாமியின் சபதம் படியுங்கள்) . சாளுக்கியர்களின் ( மராத்தியர்) தாக்குதலில் அது
அழிந்துபோனது. .. இவ்வாறு , முதலில் குப்த பேரரசிலிருந்தும், பின்பு அதன் நட்பு பகுதியான
வாகாடக ( மத்ய பிரதேசம்) , மற்றும் மாளவம் ( உஜ்ஜயினி) , வழியாக, வட நாட்டின்
வளர்ந்த சமூக , பொருளாதார, அரசியல், தத்துவ, இலக்கிய மரபுகள் , கடைசியாக தமிழ்நாட்டை
வந்து அடைந்தன.... இதுதான் இப்போது ஹிந்து மதம் என்று அறியப்படும் சைவ , வைணவ,
ஸாகத, கௌமார , காணபத்திய , ஆக்னேய , கலவை.
தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் தோன்றிய வரலாறு இதுதான். ..எனவே, வட நாடு எந்த விதத்திலும், தமிழ்நாட் டிற்கு கடன் பட்டதில்லை. ..நாம்தான் , எல்லாவற்றையும், அங்கிருந்து
ஆயிரக்கணக்கான வருடங்களாக , பெற்று வருகிறோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கி.பி. 600ல் , பாண்டிய அரசு தோன்றிய பிறகுதான், இலங்கையோடு உறவும், பகையும் அவ்வப்போது ஏற்பட்டன. இதில் இனப்பிரச்னை எதுவும் இல்லை... சேர , சோழ , பாண்டியர் சண்டை போன்றதுதான். . சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பாண்டியர் வரலாறு என்ற சிறு நூலில் இருந்து , சில பகுதிகளை இப்போது தருகிறேன்... இது, சோழ, பாண்டிய, சிங்கள அரசுகளுக்குள்
நிகழ்ந்த , போர்கள் பற்றிய விபரம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.
...