17-MS-மாநிலத்தை வாழவைக்க,இத்தனை நாள் ஆன பின்னும்

அண்ணல் காந்தியடிகள் மறைந்த போது

கல்கி இயற்றிய பாடல்கள்

=======================================

( எம்.எஸ் .சுப்புலட்சுமியின் அமரத்வம்

வாய்ந்த சோக கீதம்)

=====================================

மாநிலத்தை வாழவைக்க வந்த மகாத்மா l

    1. மாநிலத்தை வாழவைக்க வந்த மகாத்மா!

      1. மாந்தர் குலம் உய்ந்திடவே வந்த மகாத்மா!

      2. தீனர்களின் தந்தையான காந்தி மகாத்மா!

      3. தீயவர்க்கும் நன்மை எண்ணும் தெய்வ மகாத்மா!

      4. வானுலகைத்தாமனுகிச் சென்றபோதிலே

      5. வாசலிலே நின்று வரவேற்றவர் யாரோ ?

      6. வானவரும் தேவியரும் வந்து வணங்கி

      7. வாசமலர் தூவி ஜய போற்றி சொன்னாரோ!

      8. பாலன் பிரஹலாதன் தங்கள் பாத மலரை

      9. பணிந்து கண்ணீர் அருவி சொரிந்து நின்றானோ!

      10. முன்னொரு நாள் அன்பு நெறி தந்தருளிய

      11. மோன புத்தர் இமை திறந்து , முகம் மலர்ந்தாரோ?

      12. சின்னசிறு வயதினிலே தம்மை மணந்த எங்கள்

      13. அன்னையாம் கஸ்துரிபாயும் கரம் குவித்தாரோ!

      14. மாநிலத்தை வாழவைக்க வந்த மகாத்மா!

      15. எங்கள் மகாத்மா! தெய்வ மகாத்மா!

      16. =============================================================================

  1. இத்தனை நான் சொன்ன பின்னும் ஏழை நெஞ்சே ஏன் துயரம்

  2. ***********************************************************************

      1. இத்தனை நாள் ஆன பின்னும்

      2. ஏழை நெஞ்சே ஏன் துயரம்.?

      3. எத்தனை நீ அழுதாலும்

      4. உத்தமர் தான் வருவாரோ!

      5. தன்னுயிரை மன்னுயிர்க்கே

      6. தந்தவர்தான் மாய்ந்தவரோ?

      7. இன்னுயிரும் எமக்களித்த

      8. ஏந்தலன்றோ காந்தி மஹான் !

      9. அன்பினிலே அவர் இருப்பார் !

      10. அருளினிலே விளங்கிடுவார்!

      11. துன்பமுற்ற பேதையர்தம்

      12. துயரிலே திகழ்ந்திடுவார்!

      13. சின்னஞ்சிறு மதலையரின்

      14. சிரிப்பினிலே மலர்ந்திடுவார்!

      15. கன்னியர்கள், அன்னையர்தம்

      16. கண்ணீரில் கரைந்திடுவார்!

      17. ஏழையர்க்கே இரங்கிடுவோர்

      18. இதயங்களில் வீற்றிருப்பார்!

      19. ஊழியர்கள் உழவோரின்

      20. உழைப்பினிலே ஜ்வலித்திடுவார் !

      21. இத்தனை நான் சொன்ன பின்னும்

      22. ஏழை நெஞ்சே ஏன் துயரம்!

        1. =================================

      23. KALKI WROTE TWO IMMORTAL SONGS ON THE PASSING AWAY OF MAHAATHMA GANDHI. IT WAS SET TO GREAT MUSIC, AS USUAL BY S.V.VENKATARAMAN.

      24. THE FIRST SONG

      25. இத்தனை நான் சொன்னபின்னும்

      26. ஏழை நெஞ்சே ஏன் துயரம்

      27. ( SINDHU BAIRAVAI RAAGAM)

      28. THE SECOND SONG WAS

      29. மாநிலத்தை வாழவைக்க

      30. வந்த மகாத்மா

      31. ( DHARMAVATHY RAGA)

      32. PLEASE DONT FAIL TO LISTEN! THEY ARE PRECIOUS GEMS!