M.S.SUBBULAKSHMI IN THE PREMIERE OF HINDI VERSION OF FILM "MEERA' AT NEWDELHI ( 1947).
PLEASE DOWNLOAD INTO YOUR DRIVE AND THEN PLAY.
(ON-LINE WILL NOT BE GOOD.)
==========================================================
1) கிரிதர கோபாலா ( மோகனம்)
2) எனது உள்ளமே (செஞ்சுருட்டி)
3) அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் ?
( பெஹாக் , திலங் )
4) காற்றினிலே ( மிஸ்ர ஜோன்புரி)
5) மறைந்த கூண்டில் இருந்து ( கமாஜ்)
6 ) மறவேனே எந்நாளிலுமே ( பரஜ)
7) உன்னையே என் உயிர் ( சந்த்ர ஹான்ஸ )
8) உடல் உருக , உள்ளம் உருக
( ஸஹானா , நாதநாமக்ரியா )
9) அந்தநாளும் வந்திடாதோ (சிந்து பைரவி )
10) எங்கும் நிறைந்தாயே
11) ஜனார்தனா , கருணையே புரிவாயோ
============================================================
கிரிதர கோபாலா
கிரிதர கோபாலா
(RAAGA MOHANAM) மோகனம்
https://www.dropbox.com/s/8x9niv6jz2sz9hq/giridhara%20gOpAla.flv
**************************************************************************************************
2)
எனது உள்ளமே , நிறைந்த இன்ப வெள்ளமே
எனது உள்ளமே , நிறைந்த இன்ப வெள்ளமே
( RAAGA SENCHURUTTI) செஞ்சுருட்டி
https://www.dropbox.com/s/lrxiwyhdi49vutf/enadhu%20uLLame.mp4
( a comment by a listener in web!)
"Listen, an angel is singing !"
--------------------------------------------
மலரே இரு விழி பங்கஜ மலரே திருமுகமும் !
மலரே இரு கரம் தாமரை மலரே திருவடிகள் !
மந்த ஹாசம் பொங்கும் அந்த சுந்தர முக அரவிந்தமிதை
எனது உள்ளமே !
அன்னை ,தந்தை பதியும அவன் ,
அருளும் துணை நவநிதியும் அவன் ,
இன்பமும் ,அழகும் அவனே !
எழில் நிறை பணிமணி அவனே!
மீராப்ரபு கிரிதர கோபாலனை வரதனை
நினைதொறும் , எனது உள்ளமே!
( LYRIC BY PAPANASAM SIVAN)
*************************************************************************************************
3) அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் ?
( பெஹாக் , திலங் )
THIS SONG HAS TWO PARTS. THE FIRST PART IS IN RAGA "BEHAG":.AND THE SECOND PART IS IN RAGA "TILANG" ( YADHUNANDHANA)
அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் ?
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்?
யானை அன்று ஆதிமூலமே என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே !
வீணர்கள் சபையில் திரௌபதி கதற
மானம் காத்தது யாரே?
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்?
--
பிரஹலாதனை பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரண்னே !
தாரினியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சொல் கதாதரனே !
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்?
(LYRIC BY KALKI)
****************************************************************************
She is always kind, immersed in an inward divine bliss.
When she is disturbed in her prayer, she could be annoyed and angry with flashing eyes, too!
https://www.dropbox.com/s/qme8yst313udd5t/dialog.flv
************************************************************************************************
4)
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
RAAG ( MISRA JONPURI) மிஸ்ர ஜோன்புரி
https://www.dropbox.com/s/uomrbc66bhpwcmn/kaaTRinilE%20varum%20geetam.flv
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம் !
கல்லும் கனியும் கீதம் !---
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் !
பண்ணொலி பொங்கிடும் கீதம் !
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினில் இன்பக்கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்!
------------------------------------------------
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்,
வான வெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ! என் சொல்வேன்! மாயபிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
------------------------------------------------
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவும் நதிக்கரையில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான் !
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகும என் உள்ளம் !
LYRIC BY KALKI
*********************************************************************************
மறவேனே என்னாளிலுமே !
( RAAGAM - பரஜ் )
This soul-stirring song is set in Paraj rag. (Similar to Nathanaamakriya of Carnatic music. )
When Meerabai comes to know that Lord Krushna has made her
immune to poison, she is absolutely thrilled! Wont we all be?
It is then that she bursts into this song .
And dances round and round and round and round in ecstasy!
Have you seen MS dance , in trance?
It is here for just a few fleeting moments.
மறவேனே என்னாளிலுமே !
கிரிதாரி உனதருளே!
நஞ்சை நீ உண்டனையோ!
இந்த பஞ்சையைக்காத்தனயோ !
ஒரு விந்தை புரிந்தனயோ !
ஒரு விந்தை புரிந்தனயோ !
மறவேனே என்னாளிலுமே !
கண்ணா என் கண்மணியே!
உந்தன் கண்ணால் கண்டுரையே!--
உன்னைப்பண்ணால் துதித்திடுவேன் !
உன்னைப்பண்ணால் துதித்திடுவேன் !
மறவேனே என்னாளிலுமே !
ஆரங்கள் சூட்டிடுவேன் !
அலங்காரங்கள் செய்திடுவேன்!
பல கீதங்கள் பாடிடுவேன்!
பல கீதங்கள் பாடிடுவேன்!
மறவேனே என்னாளிலுமே !
ஜய மீராபிரபு கிரிதாரி !ஜய மீராபிரபு கிரிதாரி !
ஜய மீராபிரபு கிரிதாரி !ஜய மீராபிரபு கிரிதாரி !
********************************************************************************
மறைந்த கூண்டில் இருந்து
This lovely song is in Rag Kamaj. கமாஜ்)
https://www.dropbox.com/s/vpwtn2etoygtc0d/maraintha-again.flv
மறைந்த கூண்டில் இருந்து
விடுதலை அடைந்த பறவை விரைந்தோடுதே !
நிறைந்த வெளி நீல வானிலே ,
தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே!
-- மடை திறந்த வெள்ளம் போல் என்னுள்ளம்
கண்ணனின் பரந்த கருனைக்கடல் நாடுதே!
பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர்
உவந்து ஆனந்தக்ககடலாடுதே !
LYRIC BY KALKI
=======================================================
சராசரம்
உன்னையே எனது உயிர் ( பியாரே தர்ஸன)
( RAAG CHANDRAHAUNS)
Pyare darsan deejo in hindi meera!Wow!!
PYAARE DHARSANA JEEYO ( in Hindi Meera)
A GREAT SONG.
************************************************************************************
லீலைகள் செய்வானே, கண்ணன்
லீலைகள் செய்வானே, கண்ணன்
http://www.youtube.com/watch?v=R3danDjegYw&NR=1
**********************************************************************************
எங்கும் நிறைந்தாயே ! எங்கு மறைந்தாயோ
https://www.dropbox.com/s/gtkxdztkrtcminw/Enggum%20Niraithaye_Meera%20%28Tamil%29%20MS%20Subbu.flv
எங்கும் நிறைந்தாயே ,
இன்று எங்கு மறைந்தாயோ!
எங்கும் உன்னை நான் தேடி அலைந்தேனே !
தயாநிதியே !
மண்ணுலகிலும் வானோர் வாழ்
விண்ணுலகிலும் நீயல்லாமல்
கண்ணும் மனமும் எதையும் நாடாதே !
பிரபோ முராரே !
******************************************************************************
உடல் உருக ,உள்ளம் உருக ,
( THIS IS A RAGAMAALIKA) THREE STANZAS.
BEGINS WITH PANTHUVARALI பந்துவராளி
SAHAANA ஸஹானா AND
ENDS WITH EVER MOVING RAGA NATHANAAMAKRIYA ( நாதநாமக்ரியா)("இடர்க்கடலில் மீராவை ")
http://www.youtube.com/watch?v=aPWp12e-tQQ
உடல் உருக , உள்ளம் உருக
ஊண் எல்லாம் நெக்குருக
குழல் ஊதி இசை பாடி எனை தேடிவந்து
கடல் வண்ணத்திருமேனி
எழிற்கோலம் காட்டி (பந்துவராளி )
கனவினிலே எனை மணந்த கண்ணா !
கிரிதரனே!
படமுடியாத்துயரம் இந்தப்பேதை
படவில்லையோ
பாவி உயிர் உன் பிரிவால் தேய்வ்தறிந்திலையோ ! (ஸஹானா )
இடர்க்கடலில் மீராவை தவிக்கவிட்டே
இன்று எங்கு சென்றாய்! என்னரசே!
எங்கு நீ சென்றாய்! என்னரசே!
எங்கு மறைந்தனயோ! (நாதநாமக்ரியா)
LYRIC BY KALKI
*************************************************************************************************
அந்த நாளும் வந்திடாதோ !
KALKI'S TAMIL LYRICS FOR THIS SONG IS PURE BLISS!
THIS SONG IS IN RAGA SINDHU BAIRAVI (ஸிந்துபைரவி
-------------------------------------------------------------------------------------------
--https://www.dropbox.com/s/uotrhl3u1hwjun0/Brindavanathil%20Meera%20Tamil%20MS%20Subbu.flv
அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
..... வரதனைத்தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ !
( there is a saxaphone interlude here barely for a few seconds..
A stroke of genius by S.V.Venkataraaman).
வானவர் நாணிடும் மங்கையரோடு ,
மா தவத்தோரும் மயங்கிடுமாறு ,
தேனின் இனித்திடும் தீங்குழலூதி ,
மானிடமே பரிமேலெனச்செய்தான் !
--
கானகம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேயத்திட அன்று
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு !
போதமில்லா ஒரு பேதை மீரா !
பிரபு கிரிதாரி ,ஹ்ருதய சஞ்சாரி !
வேதம் வேதியர் திரிசனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த
அந்த நாளும் வந்திடாதோ !
LYRIC BY KALKI
http://www.youtube.com/watch?v=xx6mEHPaKIw*
*********************************************************************************
ஜனார்தனா!..கருணையே புரிவாயோ !
ஜனார்தனா!..கருணையே புரிவாயோ
http://www.youtube.com/watch?v=ltzYk_m9OSc
===========================================================
some comments in web about this song and scene
=====================================
".MS amma is truly everyone's mother.What high pitch my lord!!!Truly awesome!!A true gem.What perfection in singing without even one note going wrong.Just awesome.A true yogini,tapaswini.Hmmmm..........my mind's DB has no more words.Only can say MS Rocks!!!!!simply rocks!!!"
------
hm so it is tamil version of suno meri manovyatha . . :)
I dont understand tamil but liked it as much as the hindi version :)
Thanks a lot :)))
my god no one played meera like her :)
why not? even MS amma was a saint in a way . .
She introduced bhakti to people like me . . Only god knows how many lives amma must have changed . . and the no. goes increasing even after shes no more . . even i became her fan after her demise . . I wish i could see her at least once, from a distance at least . .
************************************************************************************************