http://koottanchoru.wordpress.com/
ஜூன் 8, 1907
பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக வந்தே மாதரம் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதிவந்த அதன் ஆசிரியர் வன்முறையையும் சட்டத்திற்கு புறம்பான போக்குகளையும் தூண்டி விடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த்து. ஆனால் ஆசிரியர் கலங்கவில்லை. அவர் எதற்க்கும் தயாராகவே இருந்தார்.
பின்னர் ஒரு நாள் காலையில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் பத்திரிக்கை அலுவலகத்தை சோதனை இட்டு பல்வேறு தஸ்தாவேஜூக்களையும், புத்தகங்களையும் கைப்பற்றியது. செய்தியைக் கேள்விப்பட்ட ஆசிரியர் கலங்கவில்லை. ஆனால் விரைவில அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று ஊகித்தார்.
ஆகஸ்ட் 16, 1907ல் வந்தே மாதரம் அலுவலகத்திற்கு ஒரு துப்பறியும் இலாகா அதிகாரி வந்தார். கையில் ஒரு அரஸ்ட் வாரண்ட் இருந்தது. வந்தே மாதரம் பத்திரிக்கை அலுவலகத்தில் மேற்பார்வை இலாகாவிலிருந்த இருந்த ஹேமச்சந்த் பாக்சியிடம் வாராண்டின் சாராம்சம் விளக்கப்பட்டது.
“உங்கள் ஆசிரியர் யுகாந்தர் தீவிரவாத குழுவின் கட்டுரைகளை மொழிபெயர்த்து வந்தே மாதரம் பத்திரிக்கையில் வெளியிடுகிறார்.’இந்தியா இந்தியர்களுக்கே’ என்ற கட்டுரையில் வன்முறை தூண்டி விடப்பட்டதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதாகவும் இந்த வாரண்டில் இருக்கிறது” என்றார் அந்தத் துப்பறியும் அலுவலர்.
பின்னர் அந்த ஆசிரியரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் கலங்கவில்லை. சரணடைவதற்கு தயாராக இருந்தார். தகுந்த நேரத்தில் அந்தத் துப்பறியும் இலாகா அதிகாரியிடம் சென்று சரணடையவும் செய்தார்.
யுகந்தர் குழு உறுப்பினர்கள் குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா ஷாக்கி ஆகியோர்கள் மாஜிஸ்த்ரேட் கிங்ஸ்போர்டு மீது குண்டு எறிந்து கொலை செய்ய முயன்றதற்க்காக போடப்பட்ட வழக்கில் அந்தக் கொலைகளை தூண்டி விட்டவர் என்ற காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட இவர் ஆன்மாவின் சுதந்திரத்திற்க்காகவும் தொண்டுகள் பல புரிந்தார். பின் நாட்களில் பாண்டிச்சேரியில் வந்து ஆரோவில் ஆசிரமத்தை தொடங்கினார். அங்கே ஆண்மிகத்தையும் இந்து ஞானத்தையும் சீடர்களிடம் பரப்பினார். ஆரியா என்ற பத்திரிக்கையை தொடங்கினார். மேலும் கீதை பற்றிய கட்டுரைகள், வேதத்தின் ரகசியங்கள், என்று பல்வேறு தகவல்களை உலகுக்கு அளித்தார்.
வந்தே மாதரம் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த அந்த விடுதலை வீரர் பின்னர் ஸ்ரீ அரபிந்தோ என்று அழைக்கப்பட்ட அரபிந்தோ கோஷ்.
(For ItsDiff Radio – 05/25/2011)