99-Q-சூர்யா சென்

http://koottanchoru.wordpress.com/

ஏப்ரல் 18 1930

சிட்டகாங்க் குழு என்று வழங்கப்பட்ட இயக்கம் மூன்று வெவ்வேறு அணிகளை அன்றைய இரவு புரட்சிகர நடவடிக்கைகளுக்கு தயார் செய்திருந்தது. அதன் தலைவர் மாஸ்டர்டா என்று அனைவராலும் அன்புடன் அழைககப்பட்டு வந்தார். மாஸ்டர்டாவின் ஆணைப்படி தாக்குதல் இலக்குகளான பிர்ட்டிஷ் அரசின் AFI இராணுவ தளவாடம், காவல் நிலையம் மற்றும் தந்தி அலுவகம் ஆகியவற்றை நோக்கி மூன்று அணிகளும் கிளம்பின. அணிகளின் முக்கிய அங்கத்தினர் மாஸ்டர்டா, ஆனந்தா சிங், கலிப்படா சக்ரபர்த்தி, கணேஷ் கோஸ், அம்பிகா சக்ரபர்த்தி, பினோத் சௌத்திரி, முதலானோர்கள். முதல் அணியும், இரண்டாம் அணியும் முறையே காவல் நிலையத்தினையும், தந்தி அலுவலகத்தையும் வெற்றிகரமாக தாக்கி காவல் நிலையத்திலுள்ள ஆயுதங்களை கைப்பற்றினர்.

இரண்டு அணிகளும் பின்னர் ராணுவ தளவாடங்கள் இருக்கும் AFI armoryயை சென்றடைந்த மூன்றாம் அணியுடன் இணைந்தன. தகுந்த நேரம் வந்ததும் ராணுவ முகாமை கடுமையாக் தக்கத் தொடங்கினர். துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், பிற முக்கிய போர் ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பின்னர் துப்பாக்கியின் தோட்டாகளை அது இருக்கும் இடம் தெரியாததால் கைப்பற்ற தவறினர். என்றாலும் இந்திய தேசியக் கொடியை ஏற்றி Union Jack கொடியை கீழிறக்கி இடைப்பட்ட புரட்சி அரசாங்கத்தை மாஸ்டர்டா அறிவித்தார்.

பின்னர் மாஸ்டர்டாவும் அவர் படையும் தலைமறைவாகி ஜலலாபாத் மலைகளில் மறைந்திருந்து போராடி வந்தனர். மூன்று வருட்ங்களாக கொரில்லா போர் முறையில் பல்வேறு வகைகளில் பிர்ட்டிஷ் படைகளுக்கு இடையூறு கொடுத்தனர். ஆனாலும் பிரிட்டிஷ் பெரும்படைக்கு முன் ஈடுகொடுக்க முடியாமல் காடுகளிலும், மலகளிலும் பதுங்கி வாழ்ந்தனர். முடிவில் மாஸ்டர்டா தன் நண்பர் தரக்கேஷ்வர் தஸ்டிடருடன் கைது செய்யப்பட்டார்.

மாஸ்டர்டாவும், தரக்கேஷ்வரும் ஜனவரி 12, 1933ஆம் ஆண்டு சௌலியாகஞ்ஜ் சிறையில் தூக்கிலடப்பட்டு, அவர்கள் உடல்களை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிந்தது ஆங்கிலேய அரசாங்கம்.

மாஸ்டர்டா தூக்குமேடையில் சொன்ன வார்தைகள் இதோ – “சாவை ஒரு நண்பனாக தழுவிக்கொள்கிறேன். இந்த நேரத்தில் நான் உங்களுக்கு விட்டு செல்வதென்ன? ஒன்றே ஒன்று. என் கனவு. ஒரு பொன்னான கனவு. சுதந்திர பாரதம் என்ற கனவு. முன்னேறுங்கள் தோழர்களே!. அடிமைத்தனம் விலகி விடுதலை மலரும் நாள் வந்துக் கொண்டிருக்கிறது”

மாஸ்டர்டா என அழைக்கப்பட்டவர் சூர்யா சென்.