23-BARATHY-LIFE SKETCH,SPIRITUAL GUIDES

REMEMBERING BARATHY.............(RSR)

இன்று கவியரசன் பாரதியின்

பிறந்த நாள்.(1882). ( 11-12-2012)

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

=====================================================வ.உ.சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம்கூட உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும்; அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்''. இது இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றவர்களின் பாராட்டுரைகளோ, மக்களின் கருத்துகளோ அல்ல; 1908-ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த வெள்ளைக்கார நீதிபதி ஃபின்ஹே தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளாகும்.

=================================================

பாரதி தனது 23வது வயதில் காசியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றான்.(1905)

அங்கிருந்து கல்கத்தா சென்று விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவை சந்தித்து ஆசியும் ஆவேசமும் பெற்றான்.(1905). சென்னை திரும்பியவுடன் , வ உ சி யுடன் 1907ம ஆண்டு புனே நகரில் நடந்த மாநாட்டிலும் பங்கேற்றான். அங்கு திலகர் தலைமையை ஏற்று தீவிரவாதியாக தனது பணியை

தொடங்கினான். 1907ம ஆண்டு வங்கத்தின் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக பேசியதற்காக திலகர் பெருமான், 6 ஆண்டுகள் பர்மா மாண்டலே

சிறையில் தனது 52 வது வயதில் அடைக்கப்பட்டார் . சிதம்பரனாரும் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார். அரசின் அடக்குமுறை அதிகமானதால் புதுவை சென்று "இந்தியா" பத்திரிகையை நடத்தினான். (புதுவையில் புரட்சியாளர்கள் பலர் அன்று இருந்தனர் .

வாஞ்சிநாதன் அங்குதான் ஆயுதப்பயிற்சி பெற்றான்.)

1917ம் ஆண்டில் லெனின் தலைமையில் நடந்த போல்ஷெவிக் புரட்சி பற்றி சாதகமாக எழுதினான். அங்கு நடந்த கொடுமையான உள்நாட்டு போர் பற்றியும் அறிந்திருந்தான். போரில் லெனின் வெற்றி

பெற்றதை அறியும் முன்னரே மரணம் அடைந்தான்.(1921).

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கமும் நடந்த காலை அவன் உடல் நிலை பாதிக்கப்பட்டு 39 வயதிலேயே மறைந்து விட்டான்.

**************************************************

பொதுவுடப் மைபுரட்சியின் ஆதரவாளன்,

சர்வ சமய சமரசவாதி,

தீவிர தேச பக்தன்,

தாழ்த்தப்பட்ட மக்களின் துயர் துடைக்க குரல்

எழுப்பிய ஜாதி எதிர்ப்பாளன் ,

சர்வதேசிய ஆதரவாளன்,

ஆன்மிக வாதி,

மூட நம்பிக்கைகளை சாடிய பகுத்தறிவுவாதி.

தமிழ்த்தாயின் தவப்புதல்வன்.

தேசிய ஒருமைப்பாட்டின் மொத்த உருவம்..

****************************************************

என்றும் அவனது போதனையை மனதில் இருத்தி அவனது கனவை மெய்ப்படுத்த சூளுரைப்போம்.

************************************************************

கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாடும், பாரதியின் கொல்கத்தா விஜயமும் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கொல்கத்தா சென்ற பாரதியார் சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதாவை சந்திக்கிறார். தனது குருவாகவே ஏற்றுக் கொள்கிறார் பாரதி.

""அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்

கோயிலாய் அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறா யெமதுயர் நா

டாம் பயிருக்கு மழையாய் யிங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

பெரும் பொருளானப் புன்மைத்தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

நிவேதிதையைத் தொழுது நிற்பேன்''

என்று குரு வணக்கம் செலுத்துகிறார் பாரதி.

=========================================================

Swami Vivekananda's most unique contribution to the creation of new India was to open the minds of Indians to their duty to the downtrodden masses. Long before the ideas of Karl Marx were known in India, Swamiji spoke about the role of the labouring classes in the production of the country’s wealth. Swamiji was the first religious leader in India to speak for the masses, formulate a definite philosophy of service, and organize large-scale social service.====

===========================================================

==========================================================

BARATHY MET GANDHI VERY BRIEFLY IN CHENNAI BUT FORESAW THAT ONLY GANDHI CAN ROUSE THE PEOPLE AND BUILD A MASS MOVEMENT FOR FREEDOM! HE DID NOT LIVE TO SEE THAT HOWEVER !

=================================================================

BARATHY'S POEMS பாரதி கவிதைகள்

******************************************************************

======================================================================

BARATHY READ THIS POEM IN PERSON IN A PUBLIC MEETING IN CHENNAI BEACH ON THE OCCASION OF VISIT BY BIPIN CHANDRA PAL DURING THE BOYCOTT MOVEMENT IN BENGAL 1907

STILL RELEVANT TODAY. (FDI ISSUE)

கர்ப்பகத்தருப்போல் எது கேட்பினும்

கடிது நல்கிடும் பாரத நாட்டினில்

பொற்புரப்பிறந்தோம் எமக்கு ஓர் விதப்பொருள்

அன்னியர் ஈதல் பொறுத்திடோம்

அற்பர்போல் பிறர் கரம் நோக்கி

அவனி வாழ்தல் ஆகாது என

வற்புறித்திட தோன்றிய தெய்வமே !

வங்கமே! வாழிய வாழிய !

======================================================================