64-EXCERPTS FROM DR.KALAAM'S BOOK

நூறு கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசம் ...தொழில் முன்னேற்ற முனைப்பும், அதிக அளவில் குவிந்திருக்கும் அறிவியல் திறனும் கொண்ட ஒரு தேசம்...அது மட்டுமல்ல அணு சக்தி படைத்த ஒரு தேசம்...என இத்தனை ஆற்றல்கள் இருந்ததும் ,எந்த அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டுமோ அந்த இடத்தை இந்தியா எட்டவில்லை.உலக அரங்கில் நமக்குள்ள செல்வாக்கு எப்படி என்று பார்த்தால், வேறு எந்த நாடும் நம்மைப் போல உரிய மதிப்பில்லாமல் இவ்வளவு கீழே பின் தங்கியிருக்காது என்றேதோன்றுகிறது.

பொக்ரான் இரண்டாவது அணு வெடிப்பு சோதனைக்கு பிறகு மேற்கத்திய நாடுகள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பற்றி ஒரே மாதிரி பேசுகின்றன. பாகிஸ்தானுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தையும் நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும் என்பதைநிரூபித்துக்கு காட்ட வேண்டியது, நமது தேச நலனுக்கு முக்கியமானதில்லையா ?நாம், உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்கள்;மிகவும் பக்குவப்பட்டவர்கள்.சமய சார்பற்ற தேசத்தினர்,ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படை அம்சங்களைக்கட்டிக் காப்பவர்கள் என்பதை இந்த உலகிற்கு நிஜமாக்கிக் காட்ட வேண்டாமா...?

சென்னை ,அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 2002 மார்ச் மாதத்தில் பாடம் நடத்திய சமயத்தில் 'தொழில் நுட்பமும் அதன் பரிமாணங்களும் ' (Technology and its Dimensions ) என்ற தலைப்பில்தொடர்ச்சியாகப் பத்து விரிவுரைகள் வழங்கினேன்.தொடர் விரிவுரையின் கடைசி நாள் கருத்துப் பரிமாற்ற வகுப்பில், தொழில் நுட்பங்களின் இரட்டைப் பயன்பாடு பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம் . அப்போது ஒரு மாணவர் கேள்வி ஒன்றைஎழுப்பினார்:

"ஸார்,1988 மே மாதத்தில் இந்தியா நடத்திய அணு குண்டு சோதனை மிக மோசமான செயல் என்று டாக்டர் அமர்த்யா சென் சொல்லியிருப்பதை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நோபல் பரிசு பெற்ற்றுள்ள சிறந்த பொருளாதார மேதையானஅவர்,வளர்ச்சி பற்றிய சிந்தைகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுபவர்.அப்படிப் பட்ட ஒருவரின் கருத்தைப் புறக்கணித்துவிட முடியாது ...அவருடைய கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?"

இந்தக் கேள்விக்குப் பின்வரும் விளக்கமளித்தேன்."பொருளாதார வளர்சிக்குக் களத்தில் டாக்டர் அமர்த்யா சென்னின் அருமை,பெருமைகளை நான் ஒப்புக்கொள்கிறேன் .தொடக்கக் கல்விக்கு மிகவும் முக்யத்துவம் கொடுக்கப்பட வேண்டும்என்பது போன்ற அவருடைய ஆலோசனைகளை மதித்துப் போற்றுகிறேன் .அதே சமயத்தில் ,மேற்கத்தியக் கண்ணோட்டக் கோணத்திலிருந்து இந்தியாவை டாக்டர் சென் பார்த்துள்ளார் என்று எனக்குத் தோன்றுகிறது.தனது பொருளாதாரவலிமையைப் பெருக்கிக் கொள்வதற்காக இந்தியா அணைத்து நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.

ஆனால் ,இந்தியாவின் கடந்த கால அனுபவங்களை நாம் மறந்துவிடாமல் நினைவிற் கொள்ள வேண்டும்.

அணு ஆயுதப் பரவல எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய பண்டித ஜவஹர்லால் நேரு,அணைத்து நாடுகளுமே அணு ஆயுதங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் .அணு ஆயுதம் இல்லாத உலகம் வேண்டும்என்று அறைகூவல் விடுத்தார்.அதற்கு என்ன பலன் கிடைத்தது என்பதும் நாம் அறிந்ததே .

அமெரிக்க மண்ணில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுத சாதனங்களையும் ,ரஷ்ய மண்ணில் இன்னும் ஒரு பத்தாயிரம் அணு ஆயுத சாதனங்களையும் குவித்து வைத்திருகிறார்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது .

பிரிட்டன்,சீனா ,பிரான்ஸ் ,பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளில் அணு ஆயுதங்களை நிறைய வைத்திருக்கின்றன.

ஸ்டார்ட் II (START II )ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆன சமீபத்திய ஒப்பந்தங்கள் எல்லாம் அணு ஆயுத சாதனங்களின் எண்ணிக்கை இரண்டாயிரமாகக் குறைப்பதைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.இந்த ஒப்பந்தங்கள்கூட முடங்கிக் கிடக்கின்றன.

அணு ஆயுதமே இல்லாத நிலையை எட்டுவதரற்காகக் இந்தியாவின் 1998 மே அணு வெடிப்பு சோதனைகளை எதிர்ப்பவர்களெல்லாம் அமெரிக்கா ,ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஒரு இயக்கத்தை நடத்தட்டும்

.நமது அண்டை நாடுகள் இரண்டும் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் வைத்திருக்கின்றன என்பதை நாம் நினைவு வைத்துக் கொள்வது மிக முக்கியம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருதேசமாகத் தான் இந்தியா இருக்க வேண்டுமா ?

கடந்த மூவாயிரம் வருடங்களில் அடுத்தடுத்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்த வண்ணம் இருந்தார்கள். பிரிட்டன், பிரான்ஸ், டச்சு, போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகள் தத்தம் எல்லைகளை விரிவு படுத்திக்கொள்வதற்காக இங்கு படை எடுத்து வந்தனர்.அனால் இந்தியா ஏன் மற்ற நாடுகள் மீது படையெடுத்து செல்லவில்லை ?(தமிழ் மன்னர்களின் ஆட்சியின் ஒரு சில விதிவிலக்குகள் உண்டு ) படையெடுத்துச் செல்லும் அளவிற்கு நமது மன்னர்கள்துணிவில்லாதவர்கள் என்பதாலா ?

தலைமுறை தலைமுறையாக அன்னியர்கள் தங்களை ஆட்சி செய்வதன் நிஜமான உட்கருத்தையும் , அதன் விளைவுகளையும் சகிப்ப்புத் தன்மை கொண்டிருந்த இந்தியர்கள் சரியாகப் புரிந்து கொண்டதே இல்லை என்பது தான் உண்மை.

ஆனாலும் ,நீண்ட நெடிய சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு நாம் விடுதலை பெற்றோம்.நமக்கான எல்லைப் பகுதிகளுடன் ஒரு தேசமாக ஒன்றினைந்தோம்.பொருளாதாரச் செழிப்பு என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே இருந்து விட முடியுமா?

தேசத்தின் வலிமையைக் காட்டிக் கொள்வதற்கான ஒரே வழி ,அதைப் பாதுகாபதற்கான பலம் பெற்றிருப்பது தான். வலிமை என்பது ராணுவ பலமும், பொருளாதார வளமும் சேர்ந்த ஒன்று தான்.

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்ஸிலின் முடிவுகளையும், கொள்கைகளையும் தீர்மானிக்கும் சர்வ வல்லமை படைத்த நாடுகள் எவை தெரியுமா? அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் தான் பாதுகாப்பு கவுன்சிலை ஆட்டிப்படைக்கின்றன. இதுவரையிலும், பாதுகாப்பு கவுன்சிலில் நமக்கு இடம் கிடைத்ததில்லை. ஆனால் இப்போது இந்தியாவை ஓர் உறுப்பினறாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகள் சிபாரிசு செய்வதை என்னவென்று சொல்வது? எப்படிவந்தது இந்த மாற்றம்?

இதையொட்டிய இன்னொரு சம்பவத்தை விளக்க விரும்புகிறேன்.கடற்கரைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றுவிட்ட என் நண்பர் அட்மிரல் எல்.ராமதாஸ்,ஒரு விஷயத்தைச் சொன்னார் .1998 மே மாதத்தில் நடத்தப்பட்ட அனுகுண்டு வெடிப்புச்சோதனையை எதிர்த்து நாடாளுமன்றம் முன்பு ஒரு குழுவினரோடு ஆர்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறினார்.அணு சாயுத சாதனங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை ஏராளமாகத் திரட்டி வைத்திருப்பதை எதிர்த்து ,அவரும்அவருடைய குழுவினரும் வெள்ளை மாளிகை முன்பும்,கிரம்ளின் முன்பும் முதலில் ஆர்பாட்டம் நடத்த வேண்டும் என்று அவரிடம் பதிலளித்தேன்.

உயர்ந்த நிலையை எட்டுவதற்காக நாம் எழுச்சி பெற வேண்டும் என்று எமது தேசமக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் .இந்திய மக்களனைவரும் தங்களுடைய அபாரமான ஆற்றல்களுடனும் ,அளப்பரிய திறமைகளுடனும் எழுச்சி பெறுவதற்கானஅழைப்பு இது .தேசங்களின் எழுச்சி அல்லது விழ்ச்சிக்கு வழிவகுக்கும் சக்திகள் எவை ?ஒரு தேசத்தை வலிமை படைத்ததாக மாதரும் அம்சம்கள் எவை?வலுவான ஒரு தேசைதில் மூன்று அம்சங்களைக் காண முடிகிறது .அவை:அந்தத் தேசத்தின்சாதனைகளில் ஒரு கூட்டுப் பெருமிதம்,ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்து செயல்படும் ஆற்றல்.

தேசமாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி,மிக உயர்ந்த நிலையை எட்ட வேண்டுமென்றால் கடந்த காலத்தின் புகழ் பெற்ற நாயகர்கள் ,மகத்தான சாதனைகள் ,அரும் பெரும் சாகசங்கள் ,அசாத்திய வெற்றிகள் பற்றிய பெருமிததத்தைஞாபகத்தில் நிலை நிருத்திக்கொள்ள வேண்டும் .

மிக உயர்ந்த சிகரங்களை ஏட்டும் அளவுக்கு பிரிட்டன் மக்கள் எழுச்சியடைந்ததற்குக் காரணம் ,போற்றி புகழ்ந்து பெருமிதமடையும் அளவுக்கு நெல்சன் பிரபு அல்லது வெலிங்டன் கோமான் போன்ற நாயகர்கள் அவர்களுக்குக் கிடைத்திருந்ததுதான். ஒரே நாடு ,ஒரே கலாச்சாரம் என்ற பெருமையில் ஜப்பானியர்களுக்கு உந்து சக்தி கிடைத்திருப்பதால், ஒரு வேதனையான, ராணுவத் தோல்வியை ,பொருளாதார வெற்றி என்ற பெரும் சாதனையாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடிந்தந்து.

உயர்ந்த நிலைக்கு முன்னேறியுள்ள அணைத்து நாடுகளுமே ஒரு இலட்சிய உணர்வை .

ஊட்டிக் கொண்டிருக்கின்றன.ஜப்பானியர்களிடம் பெருமளவுக்கு இது ஊறிப் போயுள்ளது. ஜெர்மனியர்களுக்கும் அப்படித்தான்.முப்பது ஆண்டுகளில் ஜெர்மனி இரண்டு தடவை நாசமாக்கப் பட்டது .ஆனாலும் கூட அந்த மக்களுக்கு ,தங்களுடையதலைவிதியைப் பற்றிய நம்பிக்கை குலைந்ததே கிடையாது.இரண்டாவது உலக யுத்த சாம்பலிலிருந்து புத்துயிர் பெட்டரு வீறு கொண்டெழுந்த ஜெர்மனி ,பொருளாதார பலமும்,அரசியல் உறுதியும் படைத்த தேசமாக புது வடிவம் பூண்டது.ஒரு உயர்ந்ததேசமாக ஜெர்மனியால் எழுச்சி பெற முடியுமென்றால் இந்தியாவால் அப்படிச் சாதிக்க முடியாதா என்ன?

அணைத்து சமுதாயத்தினரும் பெருமிதப் பட்டுக்க் கொள்ளும் வகையில் ,ஒரு பொதுவான ஞாபகத்தை வரலாற்று சக்திகள் நமக்கு வழங்காமல் இருப்பது நமக்கு துரதிர்ஷ்டம் .நமது அனைத்துச் சமுதயதினரிடமும் ஓராயிரமாண்டு காலமாகவெகு ஆழத்தில் வேரூன்றியிருக்கும் நமது பாரம்பரிய ஆணிவேரின் மகத்துவத்தைத் தெரிந்து கொள்ளும் ஒரு தேடல் தாகத்தை கிளப்பிவிடும் அளவிற்கு ,நமது சரித்திர பெருமைகள் அணைத்துத் தரப்பு மக்களுக்கும் சொல்லப்படவில்லை.அந்தஞாபகத்தைக் கிளறிவிடும் வகையில் கடந்த ஐம்பது வருடங்களில் போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனது குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பித்து ,பிறகு உயர்நிலைப்பள்ளி ,அதையடுத்து ,தொடர்ந்த கால கட்டங்கள் என சுமார் எழுபது வருடங்களில் நமது பல மதங்களை பற்றியும் கற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்கு வாய்த்தது .எந்த மதமாகஇருந்தாலும் அதன் மையக் கருத்தாக ஒளி வீசுவது ஆன்மிக மேம்பாடு என்ற அம்சம்தான் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் .இந்தியாவில் சமய சார்பின்மையின் அடித்தளமாக அமைத்திருக்க வேண்டியது ஆன்மீகம்தான் என்பதையும் நாம்புரிந்துகொள்ள வேண்டும்.

நமது இலட்சிய உணர்வு மங்கிப் போயிருப்பதால் ,நமது கலாச்சாரத்திற்கும் ,நமக்கும் நாம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாம் கைவிட்டு விட்டோம்.கடந்த காலத்தைப் பற்றிய பெருமிதம் இல்லாமல் ,எதிர்காலத்தைப் பற்றியநம்பிக்கையும் இல்லாமல்,ஒரு பிளவுபட்ட மக்கள் சமுதாயமாக நம்மை நாமே காண முன்வந்தால்,விரக்தி ,வேதனை,ஏமாற்ற்றம்,அல்லாது வேரி எதை நம்மால் எதிர் பார்க்க முடியும்?

இந்தியாவில் ஆதார ,அடிப்படை கலாச்சாரம் என்பது காலத்தைக் கடந்து நிற்கும் ஒன்று.இஸ்லாமிய மதம் இங்கு வருவதற்கு முன்பே கிருஷ்துவ மதம் இங்கு நுழைவதற்கு முன்பே செழித்தோங்கியிருந்த கலாச்சாரம் அது.கேரளாவின் சிரியன்கிறிஸ்தவர்கள் போன்ற ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தங்களுடைய இந்தியத் தன்மையைப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் உறுதியுடன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .அவர்களைச் சேர்ந்த திருமணமான பெண்கள் மங்கள சூத்திரம் (தாலி )அணிந்து கொள்வதாலோ ,அல்லது ஆண்கள் ,கேரளா பாணியில் வேட்டி கட்டி கொள்வதாலோ ,மற்ற கிறிஸ்தவர்களை விட எந்த விதத்தில் சிரியன் கிறிஸ்தவர்கள் குறைந்தவர்கள்?

கேரளா முதல்வர் அந்தோனியும்,அவரை சேர்ந்தவர்களும் கேரளா கலாச்சாரத்தின் அங்கமாக இருப்பதால் அவரொன்றும் மத விரோதி இல்லையே...!ஒரு கிறிஸ்தவராக இருப்பது ஒன்றும் அவரை அன்னியரக்கி விடவில்லை.மாறாக, அடகுஅவருடைய இந்திய தன்மைக்குக் கூடுதலாக ஒரு பரிமாணம் கொடுக்கிறது.இசையமைப்பாளர் எ.ஆர் ரஹ்மான் ஒரு முஸ்லிமமாக இருக்கலாம்.

இருந்தாலும்,அவர்,வந்தே மாதரம் பாடும்'போது,அந்தக் குரல் அனைத்து இந்தியர்களின்,அவர்கள் எந்த கடவுளை நம்புகிறவர்களாக இருந்தாலும், ஆன்மாவில் எதிர்ரொலிக்கிறதே !

மக்களை பிளவுபடுத்துவதில் குறியாய் இருக்கும் சித்தாந்தவாதிகளிடமிருந்துதான் ,நமது ஒற்றுமை உணர்வுக்கும் ,குறிக்கோள் உணர்வுக்கும் பேராபத்து கிளம்புகிறது .தனது பாதுக்காப்புக் குடையின் கீழ் அனைத்து குடி மக்களுக்கும்முழுமையான சமத்துவத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குகிறது .ஆழமான சமய உணர்களைப் புறக்கணித்துவிட்டு மேலோட்டமான ,வெளிப்புற மத அடையாளங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு இப்போது பரவிவருவது, கவலை அளிக்கும் நிலவரம். நம் அனைவரையும் இந்தியர்களாக நடந்து கொள்ள வைக்கும் ,நமது பாரம்பர்யத்தக் கருத்திற்கொண்டு மத அடிப்படையிலான அணுகுமுறையைக் கைவிட்டு ஒரு கலாசார அடிப்படையிலான கண்ணோட்டத்தைநம்மால் ஏன் வளர்த்துக் கொள்ள முடியாது ? வேறுபட்டு,பிளவுபட்டு, விலகிப் போவதை நாம் நிறுத்திக் கொள்வதற்கான தருணம் வந்துவிட்டது.ஒற்றுமையை உருவாக்கும் ஒரு தொலை நோக்குதான் நமது தேசத்திற்கு இப்போது தேவைப்படுகிறது.

எல்லாவிதங்களிலும் அதன் அற்புதமான புகழ் ,பெருமையையும் நாம் ஏற்றுக் கொண்டு,அதன் கடந்த காலத்தை ஓர் அடித்தளமாகப் பகிர்ந்து கொள்ளும்போது, அமைதியும்,செழிப்பும் நிறைந்த எதிர்காலத்தை ...ஆக்க சக்தி பொங்கும்எதிர்காலத்தை...செல்வம் கொழிக்கும் எதிர்காலத்தை...பகிர்ந்து கொள்வதற்கு நம்மால் முன் வர முடியும்.நமது கடந்த காலம் நம்முன் எப்போதுமே இருக்கிறது.அரசியல் சுய லாபத்திற்காக அதை நாசப் படுத்தி விடாமல் தன்னம்பிக்கையுடன் பேணிப்பாதுகாத்து வளர்க்க வேண்டியது முக்கியம்.