செப்பு மொழி பதினெட்டுடையாள் எனின்
சிந்தனை ஒன்றுடையாள்
மன்னும இமயமலை எங்கள் மலையே !
மாநிலமீததுபோல் பிரிதில்லையே !
.இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே !
இங்கிதன் மாணபிற்கு எதிர் எது வேறே ?
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே !
பார் மிசை ஏதொரு நூலிது போலே !
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே !
மாரத வீரர் மலிந்த நன் நாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு
நாரத கான நலம் திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு !
பூரண ஞானம் பொலிந்த நன் நாடு
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே!
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே !
***************************************(செஞ்சுருட்டி )
you can download the song here. .look for the file.
************************************************************************************************