http://koottanchoru.wordpress.com/
ஆகஸ்ட் 9, 1925
மாலை சுமார் 7 மணி முப்பது நிமிடங்கள்.
ஆலம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த 8ஆம் எண் புகைவண்டி கக்கோரி கிராமத்தை கடந்து கொண்டிருந்தது. கக்கோரி கிராமம் லக்நோவிலிருந்து சுமார் 14 மைல் தொலைவில் உள்ளது. புகை வண்டியில் பயணிகளாக இருந்த இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் இரவு சிற்றுண்டிக்கு தயாராகி கொண்டிருந்தனர். அதே தருணத்தில் அதே புகை வண்டியில் பத்து பேர் அடங்கிய புரட்சி குழு ஒன்று அன்றைய திட்டமிட்ட புரட்சிக்கு தங்களை தயார் செய்து கொண்டிருந்தது. அதன் தலைவன் ஒரு புரட்சிக் கவிஞன். தக்க சமயம் வந்தவுடன் புரட்சிக் குழுவின் உறுப்பினர்களை திட்டமிட்டபடி அவரவர்களுக்கு உரிய இடத்திற்கு பிரிந்து செல்ல உத்தரவு கொடுத்தான். அவர்களுடைய அன்றைய திட்டம் – ஆங்கிலேய அரசை எதிர்த்து நடத்தும் தங்கள் புரட்சி நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு அந்த புகைவண்டியில் எடுத்துச் செல்லப்படும் அரசு நிதியை சூரையாடுவதாகும்.
நான்கு பேர் அடங்கிய குழு புகைவண்டியின் கார்ட் இருக்கும் எஞ்சின் பகுதிக்கு சென்றது. வண்டியை நிறுத்துமாறு அவருக்கு உத்தரவு கொடுத்தனர். வண்டி நின்றது. கொள்ளைகூட்டம் என்று கருதி பயணிகள் அமைதியாக இருந்தனர். திட்டமிட்டபடி எல்லாம் நடப்பதாக உணர்ந்த தலைவன் அடுத்த கட்ட நடவடிக்கையான ஆங்கிலேய அரசின் பணப் பெட்டியை அபகரிக்கும் பணியில் இறங்கினான். பணம் அடங்கிய ஒரு இரும்பு பெட்டியை கண்டு பிடித்தார்கள். அதனை உடைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. மிக உறுதியாக இருந்த அந்த பாதுகாப்பு பெட்டியை பெரிய சுத்தியல் கொண்டு பலமாக அடித்தனர். பெட்டி சற்றும் தளராவில்லை. திட்டமிட்ட நேரம் முடிந்து கொண்டிருந்தது. மிகுந்த பதட்டத்தில் இருந்த அந்த புரட்சிக் குழு என்ன செய்வதென்று திகைத்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக மேலும் ஒரு தடங்கல்.உருவாகியது. திடீரென்று டெஹ்ராடூன் செல்லும் விரைவு புகைவண்டி எதிர் திசையில் தோன்றியது. புரட்சிக் குழு உயிர் சேதமில்லாமல் தாங்கள் வந்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் எதிரில் வரும் புகைவண்டி வந்து மோதி தாங்கள் மட்டுமல்லாமல் அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களும் பலியாகிவிடுவார்களோ என்று செய்வதறியாது மிகவும் கவலையடைந்தான் தலைவன். ஆனால் அதிஷ்டவசமாக எதிரில் வந்த புகைவண்டி அருகிலிருந்த வேறோரு தடத்தில் வந்தது. அதன் கார்ட் 8ஆம் எண் புகைவண்டி நிற்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்து அவர் புகைவண்டியையும் நிறுத்தி உதவிக்கு வந்து விடுவாரோ என்று கவலை கொண்டான். அதிர்ஷடவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. பின்னர் அவர்கள் வெற்றிகரமாக பெட்டியிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாயினர். இந்தச் சம்பவம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கக்கோரி ரயில் கொள்ளை என்று வர்ணிக்கப்பட்டது.
ஆனால் மிக விரைவில் கொள்ளை கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது. தலைவன் தூக்கிலேற்றப்பட்டான். அன்று சிறைக்கு வந்திருந்த அவனுடைய தாய் அவனைப் பார்த்து கல்ங்கவில்லை. மாறாக அவனுடைய வீர நடவடிக்கைகளைப் பாராட்டினார். அவன் வந்தே மாதரம் என்று முழங்கி கொண்டே தூக்கு கயிற்றை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டான்.
அந்த புரட்சி கூட்டத்தின் தலைவன் ராம்பிரசாத்