வ.வே.சு.ஐயரும், ஹிந்து சமூகத்தில் இருந்த ஜாதியத்தையும் ,தீண்டாமையையும் அறவே வெறுத்தவர்தாம். 1910ல் லண்டனில், பாரிஸ்டர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த போது, காந்திஜி தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்த சமயம், எந்த வழி இந்திய விடுதலைக்கு உகந்தது என்று விவாதித்தவர். பின்னர் தலைமறைவாக பாண்டிச்சேரி வந்து இளைஞர்களுக்கு புரட்சி இயக்கப் பயிற்சி அளித்தவர். காந்தி யுகம் 1920 தொடங்கியவுடன், அவரது வழியை ஏற்று காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றியவர். . பிரெஞ்ச் அரசால், அல்ஜீரியாவிற்கு நாடு கடத்தப் படலாம் என்ற சூழலில், அவசரமாக திருக்குறளை ஆங்கில்த்தில் மொழி பெயர்த்தவர். கம்ப இராமாயண
கட்டுரைகள் எழுதியவர்.ஜாதி, மத வேறுபாடுகள் காணாதவர். தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்ற இஸ்லாமியப் பெரியவர் புகழுரை பி.எஸ்.மணியின் நூலில் உள்ளது. குருகுலம் பிரச்னை எழுப்பப்பட்ட காலத்தில், திருவிக அவருக்கு ஆதரவாக நின்றார். .1925ல் அகால மரணம் அடைந்தபோது பாரதிதாசன் இரங்கற்பா உள்ளது. தரகு முதலாள்த்துவம் அவரை வீண்பழி சுமத்தி, இழிவு படுத்தியது. அநீதி சில நேரம் வெல்கிறது. !
----------------------------------------------------------------------
உத்தரப் பிரதேசத்தில், ஐந்து கட்சிகள்தான் அறியப்படுகின்றன. 1) முலாயம் யாதவ் சமாஜவாதி கட்சி 2) மாயவதியின் பஹுஜன் சமாஜ் கட்சி, 3) இந்திய தேசிய காங்கிரஸ் 4) பி.ஜே.பி. 5) அஜித் சிங் கட்சி . முதல் நான்கு கட்சிகளும் கடந்த பத்து ஆண்டுகளில், மாநில சட்டசபைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும், தனியாகவே போட்டியிடுகின்றன. எனவே ஒவ்வொரு கட்சிக்கும் ,மக்களிடையே எவ்வளவு வாக்குகள் உள்ளன என்று ஓரளவு கணிக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில், கடந்த 20 வருடங்களாக , கூட்டணி அரசியல்தான் நடந்து வந்துள்ளது...ஊடகங்கள் அனைத்தும், ஒரு கட்சியின் வாக்கு என்று ,அதன் வேட்பாளர் பெற்ற வாக்குகளைக் குறிப்பிடுகின்றன. .எடுத்துக் காட்டாக , திமுக ,கூட்டணியில், காங்கிரஸ் வேட்ப்பாளர்கள் பெற்ற வாக்குகளை அந்தக் கட்சியின் வாக்கு வங்கியாக எழுதுகின்றனர். அதே போன்று ,காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை ,திமுக வாக்குவங்கி எனக் குறிப்பிடுகின்றனர். இது தவறான முறை. திமுக போலல்லாமல் ,காங்கிரஸ் ஒரு அகில இந்தியக் கட்சி. அதன் முதன்மையான குறிக்கோள் ,நடுவண் அரசை அமைப்பது. எனவே ,தமிழ்நாட்டில் குறைந்த இடங்களை ஏற்றது.
---------------------------------------------------------------------------------------
SIVAKAM'S DECISION..WELCOME! சரியான முடிவு. !எத்தனையோ தலித் இயக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், தலித் மக்களின் பிரச்னைக்கு அடிப்படையே , விவசாய நில உடைமை இல்லாததுதான், என்பதையும், மத்திய காங்கிரஸ் அரசினால், தலித் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், அவர்களின் கல்வி, மரூதுவம், இருப்பிடம் போன்ற மேம்பாட்டிற்காக ,தரப்படும் நிதி உதவி, இங்குள்ள திருவிடக் கட்சிகளின் சதியினால், சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை, அதைவிட அநீதி, அந்தத் தொகை மைய அரசுக்குத் திருப்பி அனுப்பப் படுகிறது என்ற சுடும் உண்மையை , ஆதாரங்களுடன் ஒவ்வொரு அரங்கிலும் கடந்த பல வருடங்களாகப் பேசி வருபவர் திருமதி.சிவகாமி , ஐ.ஏ.எஸ். அவர்கள்., .தமிழ்நாட்டின் தலித் மக்கள் , உண்மையில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் அணியில்தான் இருக்க வேண்டும். கிருஸ்தவ, இஸ்லாமிய சகோதரர்களும் , காங்கிரஸ் அணியில்தான் இருக்க வேண்டும். இன்றல்ல.. காந்திஜி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை ஏற்ற நாள் முதலே , தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை என்பதை முன்னிறுத்தி காங்கிரஸ் இயக்கமும் அதை நாடுமுழுவதும் ஏற்க வைத்த பெருமை காந்திஜியினுடையது. சொல்வது.. தோழர் ரணதிவே!.வாழ்த்துக்கள்!
------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில பத்திரிகையில், தமிழ்நாட்டின் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பற்றி "silent majority' என்று கூறியிருந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆதரவு குறைந்து விட்டது என்று எதை வைத்து கூறுகிறார்கள்? அப்படி ஒரு தேர்தல் இதுவரை நடக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ், திமுக கூட்டணியாகத்தான் போட்டியிட்டு இருக்கிறார்கள். ..காங்கிரஸ் அகில இந்தியக் கட்சியானதினால், மைய அரசில் பெரும்பான்மை அரசு அமைப்பதற்கே முதன்மை கொடுத்து ,அதற்குப் பிரதியாக, மாநிலத்தில், திமுக ஆட்சியை ஆதரித்தனர். அவ்வளவே. இப்போதுதான், தனியாக் தேர்தலில் போட்டியிடுகின்றனர். .தென் மாவட்டங்களில், முதற்பெரும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. கன்யாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி , ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கண்டிப்பாகக் கிடைக்கும். தென் மாவட்டங்களைப் பிரதிநிதிப் படுத்தும் காங்கிரஸ் தலைவர்கள், இல்லாதது பெரும் குறை. மதுரை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, பகுதிகளை, கட்சிப் பிரச்சாரம் திட்டமிட்டு நடக்கவேண்டும்.
-------------------------------------------------------------------------------------
மாயாவதி அவர்கள், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில், மொத்தம் உள்ள 80 இடங்களில், 20 இடங்களில் வெற்றி பெற்றார். ..அதைவிட குறிப்பிடத்தக்கது...45 இடங்களில் , இரண்டாவது இடத்தில் வந்தார். இது , நமது பத்திரிகைகளில் இருட்டிப்பு செய்யப்படும் மாபெரும் சாதனை. ..இந்த 'இடதுகள்' , உண்மையில் அவரைப் பிரதமராக முன்னிறுத்தி , மூன்றாவது அணியை அமைத்திருக்க வேண்டும். இடது இயக்கம் உண்மையிலேயே வளர வேண்டும் என்று விழைபவர்கள், இந்தியாவின் இதயமாகிய உத்தரப்ரதேஷில் கவனம் செலுத்தி, அங்குள்ள நிலமில்லா விவசாயிகள், தலித் மக்கள், இஸ்லாமியச் சிறுபான்மையினர் , அனைவரையும் இணைத்து 18 கோடி மக்கள் கொண்ட மாநிலத்தில், ஒரு மாபெரும் இடதுசாரி இயக்கத்தைக் கட்டுயிருக்க வேண்டும். தோழர் ஈ.எம்.எஸ். , இதைப் பல தடவை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், இந்த போலி இடதுகள், அந்தப் பக்கமே போகவில்லை. போதாகுறைக்கு, தலித் விரோத முலாயம் கட்சிக்கு வால் பிடித்து காணாமல் போய்விட்டனர். ..பொருளாதாரக் கொள்கை, ஊழல் இவற்றால், காங்கிரஸ் வேண்டாம் என்கிறார்கள். மதவாதம் ,அதே பொருளாதாரக் கொள்கை கொண்ட பி.ஜே.பி. வேண்டாம் , மாயாவதியை ஆதரியுங்கள்
-------------------------------------------------------------------------------
கன்யாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, தேனீ, திருப்பூர், நாமக்கல், வேலூர், ஆகிய 12 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற இருக்கிறது. இதற்கு மேலும் ஐந்து தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. ..1) ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. எனவே , குறிப்பிட்ட தொகுதிகளில், திராவிட இயக்க வாக்குகள் சிதறும். 2) இந்தத் தொகுதிகளின் வேட்பாளர்கள், பாரம்பர்யம் உள்ளவர்கள். நல்ல பெயர் உள்ளவர்கள். 3) தென் மாவட்டங்களில் எப்போதுமே , திராவிட இயக்கங்களுக்கு இயல்பான அடித்தளம் இருந்தது கிடையாது. காங்கிரஸ் மூலமாக அதை அபகரித்துக் கொண்டனர். 4) மேலும், தென் மாவட்டங்களில், திமுக பெரும் குழப்பத்தில் உள்ளது. இதன் பயன் , காங்கிரசுக்கே கிடைக்கும். 5) கிருஸ்தவ சமூகத்தின் வாக்குகள், அதிமுக ,மற்றும் பிஜேபி க்கு கண்டிப்பாகக் கிடைக்காது. அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கே கிடைக்கும். 6) இஸ்லாமியர் வாக்குகள், மோடி வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், அந்த வாக்குகள், இதுவரை பி.ஜே.பி.யுடன் கூட்டு இல்லாத கட்சிக்கே கிடைக்கும். அது காங்கிரஸ் மட்டுமே!
----------------------------------------------------------------------
திமுகவின் மொத்த வாக்குகளே 25% என்றுதான் கூறப்படுகிறது. காங்கிரசுக்கு 18% உண்டு. ..அதிமுக 30% இருந்தது. அதனால்தான், இதுவரை, காங்கிரஸ் உள்ள கூட்டணியே வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்புகூட பேராயர் சற்குணம், காங்கிரசுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ..இரண்டு நாட்களுக்கு முன்னர் டில்லி இமாம், காங்கிரசுக்கு வாக்களிக்க இஸ்லாமியருக்கு அறிவுரை கொடுத்துள்ளார். .தமிழ்நாட்டில் உள்ள திருமா கூட , சமீபத்தில்தான் ராகுல் காந்தியைச் சந்தித்து பேசியுள்ளார். தென் தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர் ,எண்ணிக்கையில் மிகவும் வலுவான நிலையில் இருந்தாலும், அவர்கள் பல பிரிவுகளாக சிதறிக்கிடக்கிறார்கள், சாதாரண மக்கள், அப்படியொன்றும், அவர்கள் பின்னால் இல்லை. காங்கிரஸ் பின்னால் இருக்கிறார்கள்...தலித், சிறுபான்மையினர் திமுக பின்னால் என்றால் அதுவே 30% வரும்,..அப்படியில்லை. .
----------------------------------------------------------------------
FISSURES IN TNA IN SRILANKA... "ஜெனிவா தீர்மானத்திற்கு இந்தியாவுடன் சேர்ந்து வாக்காளிக்காமல் புறக்கணித்த தென்னாபிரிக்காவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் 9ஆம் திகதி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
நடந்து முடிந்த ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் தென்னாபிரிக்கா விலகிக்கொண்ட நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளமை தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யும் துரோகம் என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
====================
SIVAJILINGAM CAN GET OUT FROM TNA AND LET TAMILS IN SRILANKA LIVE IN PEACE WITH PROSPERITY...RSR
---------------------------------------------------------------------------------
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி , காலம் காலமாக காங்கிரஸ் கோட்டை. ..இந்தப் பகுதியில் உள்ள முக்குலத்தோர், நகரத்தார், வல்லம்பர், முத்தரையர் சமூகத்தினர் , அனைவரும், வழக்கமாக காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வாக்களிக்கின்றனர். ஓரளவு, தே .மு.க மற்றும் மதிமுக வாக்குகள் இருந்தாலும், பெரும்பான்மை காங்கிரஸ் கட்சிக்கே கிடைக்கும். ..தேர்தல் முடிவுகள் வரும்போது, தமிழ்நாட்டில், காங்கிரஸ் குறைந்தது 10 இடங்களில் வெற்றி பெறுவதைக் காண்போம். அனைத்து தமிழ் நாளேடுகளும் வரிந்து கட்டிக்கொண்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனி வரமுடியாது என்று பிரச்சாரம் செய்தாலும், நாடாளுமன்றத் தேர்வில், திராவிடக் கட்சிகள் ,டெல்லி போய் , ஊழலைத் தவிர எதுவும் செய்யப் போவதில்லை என்பது, வாக்காளர்களுக்கு நன்கு தெரியும். .இந்தப் பகுதியில், பி.ஜே.பி. எங்குமே கிடையாது. அப்படிக் கிடைக்கும் வாக்குகள் தேதிமுக அல்லது மதிமுக வாக்குகளே. அவர்கள் கூட, இந்தப் பகுதியின் பி,ஜே.பி.வாக்காளருக்கு ஆதரவு தருவது , அநேகமாக நடக்காது. அதிமுக வேட்பாளர் அறிமுகம் இல்லாதவர். ..திமுக வேட்பாளர் , பழம்பெரும் காங்கிரஸ் தியாகியின் புதல்வர் .அவரது வாக்குகள் பிரியும்.
---------------------------------------------------------------------------------------------
நமது நாட்டின் பாதுகாப்பிற்கும், நலன்களுக்கும் மிகவும் மோசமான பாதிப்பு வரும் என்று இருந்தாலொழிய, வேறு எந்த நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும்படி அதன் உள்நாட்டுப் பிரச்னைகளில், பெரியண்ணன் பாணியில் தலையிடக்கூடாது என்ற கொள்கை ,பண்டித நேருவினால் பல ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக , பஞ்ச சீலம் என்ற பெயரில் வகுக்கப்பட்டுள்ளது. ..பங்களாதேஷ் விஷயத்திலும், 1971ம் ஆண்டில் , ஒரு கோடி அகதிகள், நமது நாட்டிற்குள், தஞ்சம் புக நேர்ந்து, மாபெரும் பாதுகாப்பு மற்றும், சமூக ,பொருளாதார தீவிரப் பிரச்னை தோன்றிய போதும் கூட, இந்திரா காந்தி,பாகிஸ்தானின் கூட்டாளிகளான அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அதன் தலைவர்களின் உதவியை நாடி மறுக்கப் பட்டபோது மட்டுமே , முஜிபுர் ரஹ்மானுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்து ,பங்களாதேஷ் உதயமாக வழி வகுத்தார். மேலும், முஜிபுர் ரஹ்மான் ஒன்றுபட்ட பாகிஸ்தானின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் ,அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தார். ஜனநாயக முடிவு, புட்டோவினாலும், ராணுவத்தாலும் மட்டுமே மீறப் பட்டது. .இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இன்டர் மல்ஹோத்ரா கட்டுரை விளக்குகிறது. (மேலும்)
2) கடந்த 25 ஆண்டுகளில், பாகிஸ்தானில் எத்தனையோ விரும்பத்தகாத அரசியல் நிகழ்வுகள், நேர்ந்துள்ளன. அங்குள்ள ஐ.எஸ்.ஐ. என்ற உளவுத்துறை, இந்தியாவில், பல மோசமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இருப்பினும்கூட,நமது நாடு, அவர்கள் நாட்டின் பிரச்னைகளில் தலையிடவில்லை. 'அந்நாட்டின் மக்களே ,மனம் உணர்ந்து சரியான வழியில் செல்வார்கள் ,அதற்குண்டான அறிகுறிகள் நிறைய உள்ளன 'என்பதே நமது காங்கிரஸ் மைய அரசின் , சரியான கொள்கை. .சென்ற இரண்டு முறை ,அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாகளித்திருந்தாலும், அதன் அத்துமீறிய ஷரத்துகளை நீக்கிய பின்னரே வாக்களித்தது. இப்போதும் அதற்கு முயற்சி செய்து ,அமெரிக்கா ஏற்காததினால் மட்டுமே ,புறக்கணித்தது. இந்த விஷயத்தில், நமது வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ஐ.நா. பிரதிநிதி ,மிகவும் சிறந்த பொறுப்பான விளக்கங்கள் தந்துள்ளனர். ..இது சீனாவை கட்டுப்படுத்த அல்ல, சீனாவுடன், ஒன்று சேர்ந்து ஆசியப் பிராந்தியத்தில், அமெரிக்க, ஆங்கிலேய ,பிரெஞ்சு ,ஜெர்மானிய ஊடுருவல் மீண்டும் நேராதபடி பாதுகாக்க எடுக்கப் பட்ட நிலைப்பாடு. அதனால்தான், ஜப்பான் , போன்ற நாடுகளும் அதே நிலை கொண்டுள்ளன.
-------------------------------------------------------------------
'ஆபெரேஷன் பூமாலை" ...ராஜீவ் காந்தியின் மறக்க முடியாத ,மறக்கக் கூடாத ,நற்செயல். அறியாமையினாலோ அகந்தையினாலோ, அற்பத்தனத்தினலோ , உண்மை மறைக்கப் படுகிறது. 1985ஂ ஆண்டில், இலங்கையின் அரசுப்படைகள், ( அப்போது ஜெயவர்தன ஆட்சி). யாழ் நகரைச் சுற்றி வளைத்து ,வெற்றிகரமான முற்றுகை இட்டார்கள். அந்தப் பகுதியில் ,புலிகள் தலைவர் மற்றும் பல தளபதிகள் சிக்கிக் கொண்டார்கள். மக்களும் அதனால் பயங்கரமாகப் பாதிக்கப் பட்டார்கள்,. அப்போது, ராஜீவ் காந்தி, சர்வதேச மரபுகளை மீறி, முதலில் கப்பல் மூலம் மக்களுக்கு உணவு தானியங்கள் அனுப்பி வைத்தார். ஆனால், இலங்கை அரசு , கப்பலை அனுமதிக்கவில்லை. வேறு வழியில்லாமல், ராஜீவ், விமானம் மூலம் உணவுப் பொருட்களை மூட்டை மூட்டையாக யாழ் பகுதியில் மக்களுக்கு கிடைக்கச் செய்து, ராணுவத்தின் முற்றுகை ,மக்களை பாதிக்காத வகையில் காப்பாற்றினார். கவனியுங்கள். 'குண்டு போடவில்லை'! ..
------------------------------------------------------------------------
சிதம்பரம், வாசன், போன்று அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்று பதுங்காமல், நேர்மையுடனும், நெஞ்சுரத்துடனும், இந்திய அரசின் வெளிநாட்டு அமைச்சகமும், அதன் அதிகாரிகளும், எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவாகத் தாங்கள் பேசியிருப்பது, சிறப்பானது. உறுதியாக நில்லுங்கள். !. அமெரிக்கத் தீர்மானம் , கண்டிப்பாக ஒரு நாட்டின் சுயாதீனத்தை மீறும் செயல். .ரஷ்யா, சீனா, ஜப்பான், க்யூபா, பாகிஸ்தான், இந்தோனேசியா, கென்யா, போன்ற நாடுகளும், எதிர்த்தோ அல்லது புறக்கணித்தோ வாக்களித்துள்ளன. இலங்கை ஜனநாயக நாடு. தமிழர் பகுதியில் கிழக்கிலும், வடக்கிலும், மேற்கிலும், நியாயமான தேர்தல் நடந்துள்ளது. ராஜபக்ஷே கட்சியில், முன்னாளைய புலிகள் இயக்கத் தலைவர்களும், போராளிகளும், இப்போது இணைந்து செயலாற்றுகிறார்கள். ஆனால், தமிழ் தேசியக் கூட்டணி இன்னமும், பிரிவினை வாதத்தைக் கைவிடவில்லை. புலிகள் இயக்கத்தை நியாயப் படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்,. இந்த சூழலில், எந்த ஒரு நாடும், தன்னைத்தானே அழித்துக்கொள்ள அதீத சுதந்திரம் ,பிரிவினைவாதிகளுக்கு தர இயலாது. தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வாசித்துப் பாருங்கள்...RSR
-------------------------------------------------------------------------
WELL DONE...இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது ஏன்? - மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் விளக்கம்........"ஒரு சர்வதேச அமைப்பு, ஜனநாயக ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் அதன் இறையாண்மைக்கு எதிராக விசாரணை நடத்திட அனுமதித்தால் அடுத்து அதே போன்ற ஒரு நிலைமை இந்தியாவுக்கும் நாளை ஏற்படக்கூடும் என்பதை யும் யோசித்துப் பார்த்துத்தான் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை. "..
------------------------------------------------------------------------
மரண தண்டனை இனி மேல் இந்தியாவில் கிடையாது '. என்ற முடிவு , தெளிவாக சட்டம் மாற்றப்பட்ட பிறகே வழக்கத்திற்கு வரவேண்டும். குற்றவியல் வழக்குகள், துரதிர்ஷ்ட வசமாக, ஒவ்வொரு வழக்கிற்கும் ஒவ்வொரு விதமாக , வழக்காடப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன. சர்வதேச சதி மூலம் நிறைவேற்றப்படும் அரசியல் தலைவர்கள் கொலைகள், மற்ற சாதாரண கொலைகளிலிருந்து வேறு கோணத்தில் பார்க்கப்படவேண்டும். மரண தண்டனை கூடாது என்றால், ஆயுள் தண்டனையாவது தரப்படவேண்டும். ..ஆயுள் தண்டனை ,உண்மையாகவே 'ஆயுள்' தண்டனையாக இருக்க வேண்டும். ..அதாவது இறக்கும் வரை!. அதோடு கூட, சில வகைப்பட்ட ஆயுள் தண்டனைகள், எக்காரணத்தைக் கொண்டும், யாராலும், நீர்த்துப் போக விடக்கூடாது. ..இவர்களை தூக்கில் போடுவதால், ராஜீவ் காந்தியின் இன்னுயிர் திரும்பி வரப்போவதில்லை. என்று ராகுல் கூறியுள்ளார். ஆனால், தண்டனையே இல்லாமல், வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக , பிரிவினை சக்திகளுக்கு ஊக்கமளிப்பதாக , அமையக்கூடாது. நமது நாட்டின் நீதி அமைப்பு, மிகவும் சிறந்தது. . எகிப்தில், இரண்டு நாட்கள் முன்பு, ஒரே நாளில் 500 அரசியல் 'குற்றவாளிகள்' மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளனர். !
-------------------------------------------------------------------------
இந்தியா மிகவும் தைரியமானதும் , தொலைநோக்குள்ளதும், நியாயமானதுமான நிலை எடுத்துள்ளது. .இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமோ என்று தோன்றியது. அதற்கு மாறாக , இந்த நல்ல முடிவு அமைந்துள்ளது. எனினும்,இந்த முரண்பாடு தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். சென்ற ஆண்டுகளில், மைய அரசின் ஸ்திரத் தன்மை வேண்டி, திருவிடக்கட்சிகளின் கூச்சலுக்கு ஓரளவு மதிப்பளிக்க வேண்டியிருந்தது. இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடுங்கும், திருவிடங்கள், மைய அரசுக்கு எதிராக , சட்ட விரோத தீர்மானங்களை , சட்டசபையில் 'கூச்சல் வோட்' மூலம் நிறைவேற்றும் அளவுக்குச் சென்றுள்ளன. வரும் தேர்தலில், காங்கிரஸ் மீண்டும் அரசு அமைக்கும்,. தமிழ்நாட்டில் ஓரளவு வாக்குகள் குறைந்தாலும், கவலை இல்லை. சில மாதங்களுக்குள்ளேயே நிலைமை சாதகமாக மாறும். இன்றைய தமிழக இளைஞர்கள், பிரிவினையைப் புறக்கணிப்பார்கள். குழப்பம் ,அமைதியின்மை, கலவரம் ,எல்லாம், வேலை இல்லாத அரசியல்வாதிகளுக்கு. மட்டுமே முக்கியம். படிப்பு, திறமை, உழைப்பு, தெளிவான வாழ்கை இலக்கு கொண்டு, நம்பமுடியாத வாய்ப்புகள் பெற்றுள்ள இது விவேகமுள்ள சமூகம் !
------------------------------------------------------------------------
கோயம்புத்தூரில் இரு குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த மனோகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பை, தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், சீமான், பாரிவேந்தர், தமிழருவி மணியன், திருமாவளவன் ஆகியோர் ஏற்பார்களா? என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது....WELL DONE!
-----------------------------------------------------------------
WELL DONE,INDIA! " இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்தது...தீர்மானத்தை தவிர்த்ததைக் குறித்து, ஐ.நாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா கூறியதாவது:
"இந்தத் தீர்மானம் ஒழுங்கற்று, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருப்பதால் இந்தியா இதை தவிர்க்கிறது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் உயர் ஆணையர் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து தலையிட்டு, விசாரணை நடத்தி, கண்காணிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த தீர்மானங்களைப் போல் இல்லாமல், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளது.
இறையாண்மையில் தலையிடும் விதமாக இருக்கும் அணுகுமுறை எதிர்வினையை அளிக்கும் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. சர்வதேச நாடுகள் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்று ஒத்துழைப்பு என்கிற அடிப்படை கொள்கையிலிருந்து விலகுவது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதித்து, பாதுகாக்க மனித உரிமைக் கவுன்சில் எடுத்து வரும் முயற்சிகளை குறைந்த்து மதிப்பிடுவதாகவே இருக்கும்" என்று அவர் கூறினார்.
-----------------------------------------------------------------------------------------
WELL DONE,INDIA! " இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்தது.
ஜெனிவாவில் இன்று இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது நடந்த வாக்குப் பதிவை இந்தியா உட்பட 12 நாடுகள் தவிர்த்தது. ஆனாலும் 23 நாடுகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேறியது.
இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறை இத்தகைய தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்துள்ளது. 2009, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில், இலங்கை போர் குற்றங்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூன்றுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தது. இந்த முறை தீர்மானத்தை தவிர்த்ததைக் குறித்து, ஐ.நாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா கூறியதாவது:
"இந்தத் தீர்மானம் ஒழுங்கற்று, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருப்பதால் இந்தியா இதை தவிர்க்கிறது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் உயர் ஆணையர் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து தலையிட்டு, விசாரணை நடத்தி, கண்காணிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த தீர்மானங்களைப் போல் இல்லாமல், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளது.
இறையாண்மையில் தலையிடும் விதமாக இருக்கும் அணுகுமுறை எதிர்வினையை அளிக்கும் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. சர்வதேச நாடுகள் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்று ஒத்துழைப்பு என்கிற அடிப்படை கொள்கையிலிருந்து விலகுவது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதித்து, பாதுகாக்க மனித உரிமைக் கவுன்சில் எடுத்து வரும் முயற்சிகளை குறைந்த்து மதிப்பிடுவதாகவே இருக்கும்" என்று அவர் கூறினார். "
--------------------------------------------------------------------
"5 வருடங்களில் 1,000 ரூபாய் கூட சம்பள உயர்வு பெறாத பல வெள்ளை சட்டை பணியாளர்களை எனக்குத் ெரியும்."...தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வேலை பார்க்கும் 95% ஆசிரியர்களின் நிலை இதுதான். ஐந்து வருடங்களுக்கு முன் 6000 மாதச்சம்பளம். இன்றும் அதே!. கொடுமையிலும் கொடுமை. ..இதே ஐந்து ஆண்டுகளில், அரசு ஊழியர்கள் பஞ்சப்படி 100% உயர்ந்துள்ளது. ..இது என்ன அரசு? இந்த அரசியல் கட்சிகள் எல்லாம், கம்யூனிஸ்ட் உட்பட, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்போது பார்த்தாலும் ஐ.டி கம்பனி பற்றியே பேசாதீர்கள். அங்கும் கூட பல கம்பனிகளில், 12 மணி நேர வேலை. ஓயாத பணிச்சுமை. ..பணி மதிப்பீடு என்ற பெயரில், மனத்தளவில் வன்முறை. ..ஏதோ சிலர் வெளிநாடுகள் போகிறார்கள். ஆனால், 90% பொறியியல் பட்டதாரிகள் வேலையே இல்லாமல்தான் இருக்கிறார்கள். எவரும் இது பற்றி பேசுவது இல்லை. தனியார் கல்லூரிகள், மற்றும் பள்ளிகளின் நிர்வாகம், கண்டிப்பாக , ஊழியர்களின் சம்பளத்தை தங்களது வலைத்தளத்தில் வெளியிட நிர்பந்திக்கவேண்டும்..சம்பளத்தை வங்கிக் கணக்கில் போடவேண்டும். அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும். .
----------------------------------------------------------------------------------
கடந்த 5 நாடாளுமன்றத் தேர்தல்களில், தமிழ் நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விபரத்தைப் பார்த்தால், காங்கிரஸ் பேரியக்கம் , என்றுமே நமது மக்களிடம் ஆதரவு இழக்கவில்லை என்பது புரியும். அகில இந்தியக் கட்சியாதலின், நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் முன்னுரிமை கொடுக்கிறது . 1907 முதல 1967 வரை , தமிழ்நாடு என்றால், அது காங்கிரஸ் கோட்டை. ..நேரு மறைந்து, இந்திரா ஆட்சிக்கு வந்த இடைக்காலத்தில், ஏற்பட்ட ஹிந்தி மொழி ஆட்சிமொழிக் குழப்பத்தில், திருவிட இயக்கம் , , ஊர்க்காரன் எல்லாரையும் கூட்டிக்கொண்டு ஆட்சியில் புகுந்து கொண்டது. .அறிஞர் அண்ணாவின் ஆட்சி இரண்டே வருடங்கள்தான். பின்னர் 1971ல் காமராஜ் தேவையில்லாமல், இந்திராவுக்கு எதிராக ,மதவாத , அமெரிக்க ஆதரவு, வலதுசாரிகளுடன் சேர்ந்து , மாபெரும் தவறு செய்ததால், தமிழக காங்கிரஸ் தேயத் தொடங்கியது. .இருந்தும், காங்கிரஸ் கூட்டணியே எப்போதும் வெற்றிக் கூட்டணி. (தா.மா.க , காங்கிரஸ் தான்). இப்போது காங்கிரஸ் தனது வலுவை அனைவருக்கும் உணர்த்தும்.
இன்று நாமக்கல் தொகுதி பற்றி தினத் தந்தியில் வந்துள்ள விபரங்களைப் பாருங்கள்.
---------------------------------------------------------------------------------
FROM DINAMANI EDITORIAL TODAY...USEFUL DATA "சமீபத்திய புள்ளிவிவரப்படி, உலகில் ஆறாவது பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது. ஆண்டொன்றுக்கு 39 லட்சம் மோட்டார் வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கார்கள் மட்டுமே 18.07 லட்சம்.
இந்திய மோட்டார் வாகன உற்பத்தியில் ஏறத்தாழ 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தமிழகத்தில்தான் தயாராகிறது என்பதும், 2016ஆம் ஆண்டில் தமிழகத்தின் மோட்டார் வாகன உற்பத்தி 30 லட்சத்தைத் தொடக்கூடும் என்பதும் மகிழ்ச்சி அளிக்கும் தகவல்களே. மோட்டார் வாகன உற்பத்தியால், தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்புப் பெறுவது மட்டுமல்ல, இந்தத் தொழிற்சாலை
களைச் சார்ந்து பல சிறிய உதிரிப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன. 2011இன் புள்ளிவிவரப்படி, 3,695 மோட்டார் வாகன உதிரிப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன."
---------------------------------------------------------------------------------
இந்தியா அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக , ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளுடன் ஒன்று சேர்ந்து ,இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ..ராஜபக்ஷே கூறுவது போல , போர் பயங்கர வாதத்திற்கு எதிரானதே தவிர, இலங்கையின் தமிழர்களுக்கு எதிரானதல்ல. ..வடக்கு மாகாணத்தில், புனரமைப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளில் வாழும் செல்வந்தத் தமிழர்கள், ஒன்று பட்ட இலங்கையில், தமிழர்கள் வளமுடன் வாழ பொருளாதார வகையில், அங்கு நவீனத் தொழில்களில் முதலீடு செய்து. , சிங்கள மக்களிடையே பிரிவினை அச்சம் முற்றும் அகல வழி காண வேண்டும். ..அந்நியத் தலையீடு இந்தியாவினால் கடுமையாக எதிர்க்கப் படவேண்டும்.
--------------------------------------------------------------------------
அயல்நாட்டு உறவுகள்,விஷயத்தில், நமது நாட்டின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகளும், ஒரே மாதிரி சிந்தனையும், நடவடிக்கையும் கொண்டிருக்க வேண்டும். வாஜ்பாய் அரசு இருந்த போது, அவர் சீனா, பாகிஸ்தான், மற்றும் அனைத்து அண்டை நாடுகளோடும், காங்கிரஸ் போலவே நட்பு பாராட்டி வந்ததை நினைவில் கொள்வோம். ரஷ்யாவிற்கும் வாஜ்பாய் விஜயம் செய்தார். இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், பங்களாதேஷ், மலேசியா, ஆப்கானிஸ்தான், சீனா, இரான், ரஷ்யா முதலிய நாடுகளுடன், நாம் எக்காலத்தும், நல்லுறவு பேணவேண்டும். தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஏற்படுத்தி, பாதுகாப்பு, தொழில் முன்னேற்றம், வர்த்தகம், நல்வாழ்வு ,இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளும், வளம் பெற, முயற்சி செய்யவேண்டும்.அமெரிக்க, ஆங்கிலேய, பிரெஞ்சு, ஏகாதிபத்தியங்கள்,மீண்டும் இங்கே நுழைந்து, நம்மைச் சீரழிக்க விடக் கூடாது. ..திட்டவட்டமாக, வைகோ, ராமதாஸ் போன்றோரின் தனி ஈழக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். காலம் கடந்து விடவில்லை. ..தேதிமுக தவிர மதிமுக , பாமக இரண்டு கட்சிகளையும் கூட்டணியில் இருந்து நீக்கிவிடுங்கள். குறிப்பாக, மதிமுக இருக்கும் கூட்டணி, 'கட்டுசொற்றில் பெருச்சாளி'
---------------------------------------------------------------------------------------------------
WELL DONE!...LONG LIVE TRANS-NATIONAL WORKING PEOPLE'S SOLIDARITY!...DOWN WITH FISHRIES CAPITALIST MAFIA AND TAMILNAD PLOTICIANS WHO SUPPORT SUCH MAFIA RAISING TAMIL-NATIONALIST HYSTERIA! "தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி, போராடி வரும் ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பாரம்பரிய மீன்பிடி முறைகளை மட்டுமே பின்பற்றி வந்த தமிழக மீனவர்களுக்கு 1964ல், இந்தியா - நார்வே மீன்பிடி திட்டத்தின் கீழ், நவீன மீன்பிடி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழக விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு மடி உள்ளிட்ட வலைகளையும், இழுவைப் படகுகள், டைனமைட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தியதால் மீன் வளமும், மீன் குஞ்சுகள் வளர்வதற்கான இயற்கை வளமும் கடலுக்கடியில் இருக்கும் சூழல் மண்டலம் பாதிக்கப்பட்டது.
இதனால், கடல் வளம் அழிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மீனவர்கள் இரட்டைமடி, சுருக்குமடி, இழுவைப் படகுகள் முதலியவற்றைப் பயன்படுத்த மத்திய-மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும் விசைப்படகு மீனவர்கள் பலர் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பின்பற்றி வருவதாக தொடர்ந்து பாரம்பரிய மற்றும் நாட்டுப் படகு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, ராமேஸ்வரம் தீவு நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டம், மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம், பாம்பனில் கடலில் இறங்கிப் போராட்டம், நம்புதாளை கடற்கரையில் ஆர்பாட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் மனு அளிக்கும் போராட்டம் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
தற்போது தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கக்கோரி போராடி வரும் ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆதரவாக, இலங்கை தமிழகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிளிநொச்சியிலிருந்து 'தி இந்து' செய்தியாளரிடம் பேசிய போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் கூறும்போது, "இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் படகுகளால் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டிற்கும் உண்டு.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இரட்டை ராட்சத மடிவலை, சுருக்கு வலை, இழுவலை ஆகியவற்றுக்கு எதிராக எங்கள் தாயக தமிழ் உறவுகள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணமாக எதிர்வரும் 31.03.2014 அன்று யாழ்பாணத்தில் இருக்கும் இந்திய தூதரகம் முன்பாக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் நடத்த உள்ளது" என்றார்.
முன்னதாக பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்யக்கோரி மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை இன்று மீண்டும் துவங்கினர். இதனால் நாட்டுப்படகுகள் ஆழமில்லாதப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ராமேஸ்வரம் தீவு நாட்டுப்படகு மீனவர்கள் மார்ச் 28ம் தேதி சென்னையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் பெருந்திரள் மனு அளிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------
BAGATH SINGH AND GANDHIJI...காந்திஜியைப் பொறுத்தவரை, அவரது கொள்கை ருஷ்ய அறிஞர் டால்ஸ்டாய் , மற்றும் பல புகழ் பெற்ற ஐரோப்பிய சிந்தனையாளர்கள் ஏற்ற 'கிருஸ்தவ அராஜ்ய வாதம்' எனப்படும் கொள்கையாகும். அண்ணல் காந்திஜி, கோழைத்தனத்தால் , அஹிம்சாவழியிலான மக்கள்திரள் இயக்கம் என்ற வழிமுறையை முன்மொழியவில்லை. .நமது சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம் , வங்கத்திலும், மராட்டியத்திலும், தீவிரவாதமாக இருந்தது. .(1905). அனுஷீலன் சமிதி, ஜுகாந்தர் சமிதி, போன்ற ,புரட்சியாளர் சங்கங்களில், நூற்றுக் கணக்கான அற்புத இளைஞர்கள், ஆயுதப் பயிற்சி பெற்று, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை விரட்டி அடிக்க, அக்கிரமம் செய்யும் அதிகாரிகள், மற்றும் அடிவருடிகளை ஒழிப்பது என்பதே சரியான வழி என்று சிந்தித்தாலும், தனி நபர் அழித்தொழிப்பு , பலன் தராது, ஒரு பெரிய ராணுவ அளவில்,ஆயுதங்கள் பெற்று , ஒரு மக்கள் புரட்சியை உருவாக்க வேண்டும் என்று விரைவிலேயே உணர்ந்தனர். இதன் விளைவாக ஜுகாந்தர் சமிதியின் ,நூற்றுக்கணக்கான புரட்சியாளர்கள்,
உழைக்கும் வர்க்க அடிப்படையில், மக்களைத் திரட்டி, அரசைக் கைப்பற்றுவது என்ற லெனினிச கொள்கையை ஏற்று 1917ல் முடிவு செய்தார்கள். (தொடர்கிறது)
1887ம் ஆண்டில் நடந்த ரஷ்யப் புரட்சி இயக்கத்தில், லெனினின் அண்ணன் அலெக்சாந்தர் ,தூக்கிலிடப்பட்டார். பகத் சிங் போலவே , அவர் மன்னிப்பு கேட்க மறுத்து, தியாகியானார். அப்போதிலிருந்தே ,லெனின்,' தனிநபர் பயங்கர வாதம் பலன்தராது, வர்க்க ஸ்தாபனம் வேண்டும். வெகு ஜன எழுச்சி வேண்டும், , அரசியல் அதிகாரத்தை ,உழைக்கும் மக்கள் கைப்பற்றுவது' என்று வழியில், கொள்கை வகுத்து இயக்கத்தைக் கட்டினார். 1907-1917 இடையில், திலகர் பெருமான், வ.உ.சி. போன்று தேசபக்தர்கள், கொடும் தண்டனைக்கு உள்ளாகி, , மக்கள், அஞ்சி வாழ்ந்த பொது, காந்திஜி , மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்க , சாத்வீகப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். எடுத்த எடுப்பிலேயே , ரௌலட் சட்ட எதிர்ப்பு அகில இந்திய ஹர்த்தால், மூலம், எந்த ஒரு அவருக்கு முந்தைய புரட்சி இயக்கமும் சாதிக்காத மகத்தான மக்கள் எழுச்சி அவரால் ஏற்பட்டது. கோடிக்கணக்கான மக்களைத் தட்டி எழுப்பி , இயக்கத்தில் பங்கேற்க வைத்தது, அண்ணலின் வழி. மாற்று வழியில், செயல்படுவோரைக் காப்பாற்ற அதுவும், அவர்களே விரும்பாதபோது, ஒரு தேசிய இயக்கத்தின் அடிப்படையை மாற்றமுடியாது.(.நரோத்யா வோல்யா பற்றி லெனின)
--
*RSR*
------------------------------------------------------------------------------------------------------------