நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நெஞ்சுக்கு நீதியும் ,தோளுக்கு வாளும்,
நிறைந்த சுடர்மணிப்பூண் !.
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ! .
.வஞ்சனையின்றிப் பகையின்றி சூதின்றி
வையக மாந்தரெலாம்
,தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர்
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
வெள்ளை மலர் மிசை வேதக் கருப்
பொருளாக விளங்கிடுவாய்
.தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்!
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதெந்தன நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்
சக்தி ஓம், சக்தி ஓம், சக்தி ஓம்!