D K PATTAMMAL'S FIRST SONG--Desa sevai seiya vaareer(vMv)--THIYAGA BHOOMI 1939

D K PATTAMMAL'S FIRST SONG--Desa sevai seiya vaareer(vMv)--THIYAGA BHOOMI 1939 ...UPLOADED BY VEMBAR MANIVANNAN.. FANTASTIC JOB. BECAUSE EVEN BITS OF THAT FILM ARE SAID TO BE NON-AVAILABLE

**********************************************************

https://www.youtube.com/watch?v=5MXIm7f4Yb8

-----------------------------------------------------------------------------

INTRODUCTION TO THE UPLOAD BY VEMBAR MANIVANNAN

"டி கே பட்டம்மாள் அவர்கள் பாடிய முதல் திரையிசைப் பாடல்...

********************************************************************

"தேசசேவை செய்ய வாரீர்"

தியாக பூமி (1939)

பாடலாசிரியர் : கல்கி

இசை : பாபநாசம் சிவன் & ராஜகோபால அய்யர்

பாடியவர் : டி கே பட்டம்மாள்

நடிப்பு : பாபநாசம் சிவன்

தியாக பூமி (1939)

**************************

1-1-1939 முதல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக கல்கி அவர்கள் எழுதிய "தியாக பூமி" கதை...

திரைப்படமாக கே சுப்ரமணியம் அவர்களின் இயக்கத்தில் 20-5-1939- ல்

சென்னை கெயிட்டி தியேட்டரில் திரைக்கு வந்தது

********************************************************************

தஞ்சை மாவட்டம் நெடுங்கரை கிராமத்தில் வாழ்ந்த சாம்பு சாஸ்திரிகள் (பாபநாசம் சிவன்)

தனது ஒரே மகள் சாவித்ரியை(எஸ் டி சுப்பு லக்ஷ்மி) ஸ்ரீதரன் என்ற வங்கியில் வேலை செய்யும் வாலிபனுக்கு ( கே ஜே மகாதேவன் பி ஏ) திருமணம் செய்து கொடுக்கிறார். மனைவி சுத்த கர்நாடகமாக இருப்பது , மேல் நாட்டு மோகம் கொண்ட ஸ்ரீதரனுக்கு பிடிக்கவில்லை.

சுசி (ஜெயலக்ஷ்மி) என்ற நாகரீகப் பெண்ணை காதலிக்கிறான்.

விளைவு...கைக்குழந்தையுடன் விரட்டப்படுகிறாள் சாவித்திரி...தந்தையிடம் குழந்தையை சேர்த்துவிட்டு சென்னை செல்கிறாள்...

தொடரும் ஆறு வருடங்களில் உமாராணி என்ற பெயர் மாறி பெரும் பணக்காரி ஆகிறாள்...

உமாராணி தனது மனைவி என அறிந்துகொள்ளும் ஸ்ரீதரன் சேர்ந்து வாழ அழைக்கிறான்..

மனைவி மறுத்ததால் தாம்பத்திய உரிமை கேட்டு நீதிமன்றம் செல்கிறான்...

கோர்ட் இருவரையும் இணைந்து வாழ வலியுறுத்துகிறது...

பல பெண்களின் தியாகத்தால் விளைந்த பூமி இது என சொல்லி மகள் சாவித்திரியை

திருந்திய கணவனிடம் சேர்ந்து வாழுமாறு சொல்கிறார் சாம்பு சாஸ்திரிகள்...

சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்லும் உமாராணி

அங்கே அதே காரணத்திற்காக சிறையிலிருக்கும் கணவனை பார்க்கிறாள்...

இருவரும் மனம் இணைய ... சுபம்...

********************************************************************************************

படத்தின் இறுதிக்காட்சியில் இடம் பெற்ற சுதந்திரப்போராட்ட பேரணிகள் மற்றும் படம் பார்த்த ரசிகர்களிடம் விளைந்த எழுச்சி

ஆங்கில அரசை பயமுறுத்தியதால் 12 வாரங்களாக அரங்கம் நிறைந்து ஒடி கொண்டிருந்த தியாக பூமி படம் தடை செய்யப்பட்டது...

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே தடை விலக்கப்பட்டது...

*******************************************************

HERE IS A BLOG BY DR. PASUPATHI , RESIDENT IN CANADA WITH HIS MIND AND SOUL IN TAMILNAD.

-----------------------------------------------------------

http://s-pasupathy.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF

======================================================

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

கல்கியின் ’தியாகபூமி’ ஆனந்தவிகடனில் 1939-இல் வெளிவந்தது. சரியாக அறுபது வருடங்களுக்குப் பின் 1999-இல் எழுதிய ஒரு கட்டுரையில் ரா.கி.ரங்கராஜன் அந்த நாவலைப் படித்த அனுபவங்களைக் கூறுகிறார். படியுங்கள்!

தியாகபூமி

ரா.கி.ரங்கராஜன்

மயிலாப்பூர் மாடவீதி வட்டாரங்களில் வெள்ளிக்கிழமை இரவு, எட்டு ஒன்பது மணியானால், ஒரு குரல் ஒலிக்கும். ‘ஆனந்தவிகடன்! ஆனந்த விகடன்’ என்று ஒரு சைக்கிள் பையன் கூவிக் கொண்டே விற்பனை செய்வான். வாடிக்கையாக வாங்குவோரின் வீடுகளில் ஒரு பிரதி போட்டு விட்டுப் போவான்.

. . .// . ..

கோடை விடுமுறைக்காகச் சென்னைக்கு வந்திருந்த எட்டாம் வகுப்புச் சிறுவனான நான் அதற்காகவே விழித்துக் கொண்டிருப்பேன். ஓவியர் வரைந்த படங்களுக்குப் பதிலாகப் புகைப்படங்களுடன் --திரைப்படத்துக்கான ஸ்டில் படங்களுடன் --வந்து கொண்டிருந்த ‘தியாக பூமி’ கதையைப் படத்துக்காக ஒருமுறையும் கதைக்காக ஒரு முறையுமாக விழுந்து விழுந்து படிப்பேன்.

பாபநாசம் சிவன், எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா

(உமாராணியாகி விட்ட சாவித்திரி மகள் சாருவுடன்)

அப்போதெல்லாம் ‘ஆனந்தவிகடன்’ ஏராளமான பக்கங்களுடன் மிகத் தடிமனாக வெளிவரும். பெரும்பாலான பக்கங்களில் கல்கியின் கைவண்ணம் மிளிர்ந்திருக்கும். ஆகவே, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை வரை வரிவரியாய்ப் படித்து ரசிப்பதிலேயே பொழுது கழியும்.

விடுமுறை முடிந்து கும்பகோணத்துக்குத் திரும்பியபோது ஆனந்த விகடனை -- குறிப்பாகக் கல்கியின் எழுத்தை -- தேடிப் பிடித்துப் படிப்பதில் பித்துக் கொண்டவனாக ஆனேன். ‘தியாக பூமி’ என்னை அடிமை கொண்டது. கதையம்சத்தில் உள்ள சுவாரஸ்யம் மட்டுமல்ல; பாத்திரங்களும் வாக்கியங்களின் ஜாலங்களும் தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் கூட மனசுக்குள் வட்டமடிக்கிற மாதிரி இருந்தன.

ஏழை சம்பு சாஸ்திரி தன் மகள் சாவித்திரிக்கு வரன் பார்த்து, அந்த மாப்பிள்ளைக்காக ஒரு பட்டு வேட்டி வாங்கி வைத்திருக்க, அவருடைய வீட்டோடு இருக்கும் ஒரு பையன் அதைப் பிரித்துத் தன் மார்பின் மீது போர்த்திக் கொண்டதும் சாவித்திரிக்குக் கோபம் வந்த காட்சி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. ‘சீ, கொடுடா அதை!’ என்று அவன் கையிலிருந்து அந்தப் பட்டு வேட்டியை அவள் பறித்துக் கொள்கிற வேகம்! ஏழை சாவித்திரியாக இருந்தவரையில் உதாசீனப்படுத்திய கணவன் அவள் பணக்காரி உமாராணியாக உயர்ந்ததும் ‘நீ மிதித்த பூமியை நான் பூஜிக்கத் தயாராயிருக்கிறேன்’ என்று அவளிடம் கெஞ்ச, ‘நீங்கள் மிதித்த பூமியை நான் மிதிக்கக் கூடத் தயாராயில்லை!’ என்று அவள் திருப்பியடிக்கும் சீற்றமும் -- எப்படி அந்தக் கட்டங்களை மறக்க முடியும்?

[ நன்றி: கல்கி]

*********************************************************

DO NOT MISS THIS.

( AND PLEASE DO NOT CONFUSE THIS THYAGABHOOMI OF S.D.SUBBULAKSHMI (1039) WITH SEVA SADHANAM OF M.S.SUBBULAKSHMI(1938)

https://en.wikipedia.org/wiki/Thyagabhoomi