1-அத்தியாயம் -1

சோவியத் ராஜாங்கம் ,அது உருவான நாள் முதற்கொண்டே சண்டை போட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஜெர்மனியரையும், புரட்சியை எதிர்த்து மல்லுக்கு நின்றவர்களையும் எதிர்த்து சோவியத் யூனியன் ஆயுதம் தாங்கிப் போர் புரிந்தது. பிறகு சற்று வளர்ந்து, கால் ஊன்றி நிற்கும் தசை வந்தபோது, மேற்கத்திய வல்லரசுகளின் முற்றுகையும் பொருளாதார மதில்களையும் எதிர்க்க , தன நாட்டு வளத்தையே வளர்க்கும் பொருளாதார

முறையை அனுஷ்டித்து, ராஜதந்திர தூதர்களை அனுப்பி ,அந்த நாடுகளின் பொருளாதார பந்தக வியூகத்தைத் தகர்க்க முயன்றது. பூர்ண வளர்ச்சி அடைந்ததும், மன்சுகோவிலும் ஜப்பானியரை உதறித் தள்ளிவிட்டு, தன்மீது பேய்ப் பசியோடு, கழுத்தில் விழுந்து கிழிக்க முயன்ற நாஜிகளுடன்

போர் தொடுக்கத் தயாராயிற்று. நாம் சமாதான காலங்கள் என்று சொல்லுகிறமே அதில் ரஷ்யா அனுபவித்தது எல்லாம் சண்டைதான். பெயரளவில் போர் என்ற நாமகரணம் இல்லையே தவிர , மற்றபடி அதே நிலைதான்.

ரஷ்ய உள்நாட்டுக் காவல்படை, ராஜாங்கம் உருவான காலத்திலிருந்தே இருக்கிறது. 1921ம் வருஷம் முதல் 1940 வரை ரெட் புடிலோவ் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் ,லெனின்கிராட் நகருக்கு அருகாமையில் உள்ள தோப்புகளில்