15-"கடவுளும், அமானுஷ்யமும்:////A CLASSIC FROM INNAMBURAN

"கடவுளும், அமானுஷ்யமும்:////

ANOTHER GEM FROM INAMBURAN.....

SPARE A FEW MINUTES & READ

"கடவுளும், அமானுஷ்யமும்:////

மூன்று சகோதர்களும் ஆஸ்பத்திரியில் கிடந்த போது, கத்தோலிக்க துறவிமார் வருவார்கள்.

ஃபாதர் ஜாலி என்பவர், ‘Trust in God; Trust Absolutely’ என்று சொல்லிக்கொண்டே வருவார். வார்டே முறுவலிக்கும்.

ஒரு இஸ்லாமியர் எங்களுக்கு துவா (ஆசி) வழங்குவார்.

பார்த்தசாரதியின் படுக்கையில் ஒரு காலேஜ் பையனை சேர்த்தார்கள். அப்பா அங்கே வேண்டாம் என்று கெஞ்சினார். வேறு இடமில்லை. அவன் தந்தை ஒரு கத்தோலிக்கர். கேரளாவில் பிரபல வக்கீல். தினந்தோறும் என் படுக்கைக்கு வந்து சத் விஷயங்கள் சொல்வார். மத போதனை செய்யவில்லை. It is he, who cast my moral fiber. அவர் கொடுத்த நூல்கள் என் வம்சாவளிக்கும் உதவியன. பல வருஷங்கள் தொடர்பில் இருந்தார். அவரது பையன் பிழைக்கவில்லை. அவரது மனைவி வரவில்லை. அப்போது தான் அவளுக்கு ஒரு குழந்தை. அவரது மனோதிடத்தைப் பார்த்து, பாளையங்கோட்டையே வியந்தது. ஒரு சமயம் நான் டில்லி போனபோது, ஒரு பிரபல வக்கீல் வந்து என்னைப் பார்த்தார். அவர் தான் அந்த குழந்தை. அவர் குடும்பம் என்னை தான் மூத்த மகனாக கருதியது என்றார்.

அம்மா தெய்வநாயகம் பிள்ளையைப் பற்றி சொன்னது சரியே. வீட்டில் அம்மை போட்டிருக்கிறது. வெளியில் போகக்கூடாது என்று மரபு. வீட்டின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் டோனாவூர் வந்தார்.

அவர் வந்து நின்றாலே, சாந்தி நிலவும்.

துள்ளி வருவது வேல் அல்ல.

சாக்யமுனியின் ஒளி வட்டம்.

பல வருடங்களுக்கு பின், ஒரு முதிய அந்தணரைப்போல சென்னை வந்தார். குடும்பத்துடன் சென்று அவரை வணங்கினேன். அவர் சொன்னார், இவர் தான் எனக்கு ‘முத்திரை’ போடுவார் என்று. நெல்லைச்சீமையில் சிறுவர்களையும் பன்மையில் தான் குறிப்பிடுவார்கள்.

டோனாவூரில் 40 வது நாளாக நினைவு இழந்து கிடந்த கமலா ஒரு நாள் காலை (ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் புரிந்தது) இட்லி, மிளகாய் பொடி கேட்டாள். வேறு ஒன்றுமில்லை.

கத்தோலிக்க கன்யாஸ்திரீக்கள் கொடுத்த ஸிஸ்டர் (now Saint) அல்ஃபான்ஸாவின் உடையின் ஒரு சிறிய துண்டு கொடுத்தார்கள். அதை தலையணைக்கு அடியில் வைத்தேன், முந்திய இரவில்.

டோனாவூரோ ப்ராடெஸ்டெண்ட் மிஷன். அவர்கள் சிரித்தார்கள்.

அங்கும் ஒரு கடவுள். ஆண்கள் அண்ணாச்சி, பெண்கள் அத்தை. வாடகை ஒரு ரூபாய் ஒரு நாளுக்கு, அதுவும், ஒரு குடிலுக்கு; சின்னத்தோட்டம் வேறே.

பணக்காரனுக்கு ஒரு சார்ஜ்; ஏழைக்கு ஒரு சார்ஜ்.

இமாலயம் ஏறிய டாக்டர் சோமர்வில், நெய்யூரிலிருந்து அங்கு வருவார். கண்டிப்பாக, வாராவாரம் பில் செட்டில் செய்யவேண்டும். ஒரு வாரம் பில் ரூபாய் 281 போல. நினவு இல்லை. ‘

ராஜூ! ஏன் ஒரு மாதிரி பார்க்கிறாய்?’ என்றாள் ஜெர்மானிய நூரானி அத்தை. ‘பணம் இல்லையே’ என்றேன், கண்ணில் நீர் துளிக்க. 15 வயது. ரோஷக்குடும்பம். பில்லை வாங்கிக்கொண்டே, செட்டில் செய்யணும் என்று சொல்லி, பில்லை திருப்பிக்கொடுத்தார். பில்லில் 2, 8 அடிக்கப்பட்டு, 1 மட்டும் தான் இருந்தது. ஒன்றோ, ஒன்பதோ. அது பாயிண்ட் அல்ல. நான் சொன்னேன், ‘அத்தை! இதை வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். எல்லாரிடமும் சொல்வேன்’ என்று. அம்மா சொல்படி, உங்களிடமும் சொல்லிவிட்டேன்.

நேயம் தமிழில் இருந்தால் என்ன?

வடமொழியில் இருந்தால் என்ன?

ஹீப்ரூவில் இருந்தால் என்ன?

கடவுள் எங்கே இருக்கிறான்?

தெய்வநாயகம் பிள்ளையும், நூரானி அத்தையும்,

இடம், பொருள், ஏவல் என்று பேசப்பட்டால், தெய்வம் இல்லையா?

ஜடாமுனியும், மருத்துவ சாமியும்,

ஸைண்ட் அல்ஃபான்ஸாவும், அமானுஷ்யரா?

. அது சரி, அமானுஷ்யத்திற்கு தமிழ் என்ன?

பார்த்தேளா? குறிப்பு நீண்டே விட்டது. நானும் பேச ஆரம்பித்து விட்டேன். இது நிற்க.

இன்னம்பூரான்

குறிப்பு 1: அப்பா எனக்கு ‘Home They Brought Her Warrior Dead’ [Alfred Tennyson], ‘Ye know, We stormed Ratisbon’ [Robert Southey], ‘We are Seven’ [Oliver Goldsmith] சொல்லிக்கொடுத்து இருக்கிறார். முடித்தது இல்லை. உணர்ச்சி வசப்படுவார்."