BARATHY ON BOLSHEVIK REVOLUTION

இனி பாரதியின் கட்டுரைகளிலிருந்து சில குறிப்புகள்.

********************************************************

"SIMILARLY,( like the deamnd for social equalty)

the demand for Economic equality also is spreading fast in the world. It is in Europe that it is happening seriously. The concept that all the natural resources and wealth of a nation should be shared by all the people of the land is known as Socialism. You can call it Co-operative principle too. When the demand arose first in Europe , the people and capitalists opposed it ferociously. In due course, people began to appreciate the good aspects of the concept and so it is gaining ground all round.

"இது போலவே செல்வத்தைக் குறித்த வேற்றுமைகளையும் இல்லாமற் பண்ணிவிடவேண்டும் என்ற கொள்கையும் ,உலகத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது. ஐரோபாவிலேதான், இந்த முயற்சி வெகு மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு தேசத்தில் பிறந்த மக்கள் அனைவருக்கும், அந்த தேசத்தின் இயற்கைச்செல்வ முழுவதையும் பொது உடமை யாக்கி விட வேண்டும் என்ற கொள்கைக்கு இங்கிலிஷில் ' சோஷலிஸ்ட்' கொள்கை என்று பெயர். அதாவது கூட்டுறவு கொள்கை. இந்த கூட்டுறவு வாழ்வு கொள்கை ஐரோப்பாவில் தோன்றியபோது , இதை அங்கு முதலாளிகளும் மற்றபடிபொது ஜனங்களும் மிக ஆத்திரத்துடனும், ஆக்ரஹத்துடனும் ,எதிர்த்து வந்தனர். நாளடைவில், இக்கொள்கையின் நல்லியல்பு, அந்த கண்டத்தாருக்கு மென்மேலும் தெளிவுபட்டு, வரலாயிற்று....எனவே இதன் மீது ஜனங்கள் கொண்டிருக்கும் விரோதம் ,குறைவு பட்டுக்கொண்டு வரவே ,இக்கொள்கை மேன் மேலும் பலமடைந்து வருகிறது.

ஏற்கனவே , ரஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் , ஸ்ரீமான் த்ரோஸ்கி (TROTSKY)

முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் , தேசத்து

விளை நிலமும், பிற செல்வங்களும், தேசத்தில் பிறந்த அத்தனை

ஜனங்களுக்கும் பொது உடைமை ஆகிவிட்டது

In Russia, the republican government under the leadership of Lenin and Trotsky, all the land and wealth of that land has been nationalized.

இக்கொள்கை , ஜெர்மனியிலும்,ஆஸ்திரியாவிலும், துருக்கியிலும் அளவற்ற வண்மை கொண்டு வருகிறது. ,.ருஷ்யாவிலிருந்து, இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. .வட ஆசியாவில் பிரம்மாண்டமான

பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ரஷ்யாவின் ஆதிக்கத்தை சேர்ந்தது

ஆதலால், ,அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்துவிட்டது.

அங்கிருந்து இக்கொள்கை மத்திய ஆஅசியாவிலும் பரவிவருகிறது.

It is gaining great strength in Germany and Austria. From Russia it has spread to Asia also. The gigantic land mass of Siberia belongs to Russia. Therefore it has come into practice already. From there, it is spreading in Central Asia also.

ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய வல்லரசுகள், இந்த

முறையை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்தது வரக்கூடும் என்று பயந்து,

அதன் பரவுதலை தடுக்குமாறு பல விதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகிறார்கள்

The Imperialist powers in England and France are doing everything in their power to stop the growth of the movement out of fear of its consequence on their hegemony.

"ரஷ்யாவில் சமீபத்திலே ,அடுக்கடுக்காக நிகழ்ந்துவரும் பல புரட்சிகளின் காரணத்தால், ,அவ்விடத்து சைன்யங்களில் பெரும் பகுதியார், தொழிற்கட்சியையும் அபேதக்கொள்கைகளையும் சார்ந்தோராகிவிட்டனர்.

இதனின்றும்,அங்கு ராஜ்யாதிகாரம் , தொழிற்கட்சிக்கு கிடைத்துவிட்டது.

தேசத்து நிதியனைத்தையும் சகல ஜனங்களுக்குப் பொதுவாகச் செய்து

,எல்லாரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கிறார்கள்.

தேசத்து பிறந்த சர்வ ஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது

உண்மையாய்விடின், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமற் போகும்படி சகலரும் தொழில் செய்துதான்

ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால் , தேசத்துத் தொழில் மிகவும்

அபிவிருத்தி அடைந்து , ஜனங்களின் க்ஷேமமும் சுகங்களும் மேன்மேலும்

மிகுதியுறும்.

Due to the successive revolutions in quick sequence occuring in Russia, the armed forces there have all become firm supporters of Socialist parties. Thus, political power has passed into the hands of Socialists there. They have made it compulsory that all the citizens should earn their livelihood by the sweat of their brow. When all the wealth is thus Nationalized, the difference between the poor and rich will vanish . Industrail and other form of wealkth will grow fast and this will benefit all the people. and their strandard of living will improve.

எனவே, ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையவையல்ல.

So, the ideology of the Socialists in Russia is not all that bad.

---- "ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் நாட்டில்

ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே , தீங்கு தருவனவாம்.

ருஷ்ய கொள்கைகளை இப்போது அனுஷ்டிக்கப்படும் ருஷ்ய முறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால், அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடித்து போவார்கள்.

..but the endless strife and war that they have created there in order to implement their ideal is bad. If the Rusiian Socialist ideology is made to establish itself all over the world by their present method, by the time they realize that ideal, 75% of the population would be dead.

வெளிநாட்டுப்போர் அத்தனை பெரிய விபத்து அன்று.

நாட்டுக்குள்ளேயே செல்வர்களும் ஏழைகளும் ஒருவரை ஒருவர் வெடிகுண்டுகளாலும் துப்பாகிகளாலும் பீரங்கிகளாலும் தூக்கு மரங்களாலும் கொல்ல தொடங்குவார்களாயின், அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?"

External war is not so very dangerous. But, if the poor and the rich start attacking each other by bombs, rifles , guns and gallows, will it not become endless tragedy?

(உண்மையான சமுதாயபுரட்சி , வெளிநாட்டுப்போர ல்ல , அது மிகவும் கசப்பும் வெறியும் மிகுந்த உள்நாட்டு யுத்தமே என்பார் நேரு-RSR)).

Hence, I do not approve of this method of spreading socilaism by war , murder and force. My policy is that whatever be the reason, there should be no strife and murder among people.

When that is so, adoption of such methods by proponents of divine principle of Equality and Fraternity , is, in my opinion, is incngruous.

ஆனால் , இந்த முறைமை , போர் , கொலை, பலாத்காரம் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்கு சம்மதம் இல்லை. எந்தக்காரனத்தைக்கொண்டும் மனிதருக்குள்ளே சண்டைகளும், கொலைகளும் நடக்கக்கூடாது என்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க, ஸமத்வம், ஸ ஹோதரத்வம் என்ற தெய்வீக தர்மங்களை கொண்டோர்,, அவற்றை குத்து , வெட்டு, பீரங்கி, துப்பாக்கி களால் பரவ செய்யும்படி முயற்சி செய்தல், மிகவும் பொருந்தாத செய்கை என நான் நினைக்கிறேன்.

பலாத்காரமாக் முதலாளிகளின் உடமைகளையும் , நிலஸ்வங்களின் பூமியையும் பிடுங்கி,தேசத்திற்கு பொதுவாக செய்ய வேண்டும் என்ற கொள்கை ரஷ்யாவில் வெற்றி பெற்றதற்கு பல பூர்வ கா ரணங்கள் இருக்கின்றன. நெடுங்காலமாகவே ருஷ்ய தேசத்தில் ஆட்சி புரிவோரின் நிகரற்ற கொடுன்கொன்மையாலும் அநீதங்களாலும் செல்வர்களின் குரூர தன்மையாலும் , பல ராஜாங்க புரட்சிகள் நடந்து வந்திருக்கிற படியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பது சுலபமாகிவிட்டது.

There were many reasons for the success of

Forcible Expropriation of the capitalists and

landlords in Russia. The acceptance of this method there became easy due to the endless and unparalleled cruelty and the occurence of many attempts at forcible overthrow there.

மற்ற ஐரோப்பிய தேசங்களில், முதலாளிகளும் செல்வர்களும், இன்னும் முற்றிலும் பலஹீனம் அடைந்து போகவில்லை. பெரும்பாலும் அவர்களிடத்திலேயே எல்லா பலங்களும் சக்திகளும் அமைந்திருக்கின்றன.

But in the other European Nations , the capitalists and landlords and the rich have not been enfeebled much.அங்கெல்லாம் சோஷலிஸ்ட் கூட்டுறவு வாழ்க்கை கட்சி , ருஷ்யாவிலுள்ள சக்தியும் பராக்கிரமுமும் பெற்று விடவில்லை. In those countries, the Socialist ideology has not become as powerful and strong as in Russia.

அங்ஙனம் பெறுவதற்கு இன்னும் பல வருஷங்கள் செல்லும் என்றே தோன்றுகிறது.

It appears that it will take a long time for that to happen. தவிரவும் , அங்ஙனம் ஸோஷலிஸ்ட் கட்சியார் பலமடைந்தபோதிலும், அந்த பலத்தை உபயோகிப்பது நியாயமில்லை என்று நான் சொல்லுகிறேன்.

I feel that even if they gain such strength , it is not fair on their part to use that power ஏனென்றால், பிறர் உடமையை தாம் அபகரித்து வாழவேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர்களும், சர்வ ஜனங்களும் ஸமமான சௌகர்யங்களுடன் வாழவேண்டும் என்ற கருத்து இல்லாத பாவிகளும், தம்முடைய கொள்ளை விருப்பங்களை நிறைவேற்றும பொருட்டு , வாள் , பீரங்கி, துப்பாக்கியால் அநேகரை கொலை செய்து, ஊர்களையும் ,

வீடுகளையும் கொளுத்தியும் அநியாயங்கள் செய்வது , நமக்கு அர்த்தமகக்கூடிய விஷயம்.

We can understand the adoption of methods like killing people using swords, guns, and rifles, and arson, by scoundrels who think nothing of swindling others and are inherently anti-social and selfish sinners/

ஆனால், எல்லா மனிதரும் உடன் பிறந்த ஸஹோதரர் ஆவார்கள் என்றும், எல்லாரையும் ஸமமாகவும், அன்புடனும் நடத்தவேண்டும் என்று கருதும் தர்மிஷ்டர்கள், தம்முடைய கருனாதர்மத்தை நிலை நிறுத்த , கொலை முதலிய மகா பாதகங்கள் செய்வது, நமக்கு சிறிதும் அர்த்தமாகாத விஷயம். கொலையாலும் , கொள்ளையாலும் அன்பையும் , சமத்தவத்தையும் ஸ்தாபிக்க போகிறோம் என்று சொல்வோர், தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.

But, adotion of such violent methods by idealists who want to establish the reign of Fraternity, Equality and universal love among all people, is incomprehensible to us. I think that people who say they can estbalish the kingdom of heaven in earth by murder and loot are fools who do not know what they are doinfg.

'இதற்கு நாம் என்ன செய்வோம்? கொலையாளிகளை அழிக்க கொலையைத்தானே கைக்கொள்ள நேருகிறது? அநியாயம் செய்வோரை , அணியாயத்தாலே தான் அடக்கும்படி நேரிடுகிறது ' என்று ஸ்ரீ மான் லெனின் சொல்லுகிறார்.

" In what way are we responsible? We have to adopt cruel methods to finish off cruel people" says Lenin.

இது முற்றிலும் தவறான கொள்கை.

கொலை , கொலையை வளர்க்குமே தவிர ,அதை நீக்க வல்லாது. . This is wrong approach. Murder will only lead to Murder . It can never remove it. .

அநியாயம், அநியாயத்தை விருத்தி பண்ணுமே அல்லது அதை நீக்காது.

பாபத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும்.

We cannot remove injustice by injustice. We must strive to win over Evil by Justice.

மேலும் ரஷ்யாவிலும்கூட , இப்போது ஏற்ப்பட்டிருக்கும் சோஷலிஸ்ட் ராஜ்யம்

எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையது என்று கருத வழியில்லை.

Moreover even in Russia, there is no reason to believe that the socialist government will last for ever.

சமீபத்தில் நடந்த மகாயுத்தத்தால் , ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் , பணபலமும், ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்துபோய் , மஹாபலஹீனமான நிலையில் நிற்பதையோட்டி , மிஸ்டர் லெனின் முதலியோர், ஏற்படுத்தியிருக்கும் 'கூட்டு வாழ்க்கை

குடியரசை ' அழிக்க மனமிருந்தும், வலிமையற்றோராக நிற்கின்றனர்.

Due to the huge loss in manpower, wealth and military resources, because of the recent great war, the European powers are now powerless to attempt the attack on Socialist Russia now though they very much want to.

நாளை , இந்த வல்லரசுகள், கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்திலேயே , ரஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும், நிலசுவான்தார்களும் , இந்த அரசுகளுக்கு துணையாக நிற்பர. இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் ,கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப்ரவாஹங்களும் ஏற்ப்பட இடமுண்டாகும். லெனின் வழி சரியான வழி இல்லை ."

But as soon as the gain some strength, they will immediately pounce on Russian socialist government. The expropriated capitalists and landlords in Russia will join hands with them and this will lead to much more wars, atrocities and blood letting. The path shown by Lenin is not correct."

============================================