அவசர நிலை முடிவுக்குக் கொணர்ந்து, இந்திரா காந்தி நடத்திய நாடாளுமன்றத் தேர்தலில், வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது உண்மையெனினும், அது நமது தேர்தல் முறையின் குறைபாடு என்பதை மீண்டும், மீண்டும் குறிப்பிட்டு விளக்க வேண்டியுள்ளது. .உத்தரப் பிரதேசம், பீகார், இரண்டு மாநிலங்களிலும், சேர்த்து 130 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன. இவை எல்லாத் தொகுதிகளிலும், எதிக்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திராவை எதிர்த்தன. காங்கிரசுக்கு வாக்கு வங்கி கிட்டத்தட்ட 40% எப்போதும் உண்டு. ..அந்த மாநிலங்களில், இஸ்லாமியர், மற்றும் தலித் மக்கள் சேர்ந்து இந்த சதவீதம் கிட்டும். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து போட்டியிட்டதால் மட்டுமே இந்திரா வட மாநிலங்களில் ஆட்சி இழக்க நேரிட்டது. தென் இந்திய மாநிலங்களில், இந்திரா காந்திக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ஜனதா ஆட்சி கவிழ்ந்தவுடன், நடந்த அடுத்த நாடாளுமன்றத் தேர்வில், இந்திரா காங்கிரசின் வாக்குகள் அப்படியே இருந்தது மட்டுமல்லாமல், 2% கூடியிருந்தன! இதுதான் உண்மையான நிலவரம். ..சென்ற தேர்தலையே பார்ப்போமே! உத்தரப் பிரதேசத்தில், மாயாவதியின் பஹுஜன் சமாஜ கட்சி,..(-->2)
------------------------------------------------------------------
.2) உத்தரப் பிரதேசத்தில், அதற்கு முந்தைய தேர்தலில், 20 இடங்களில் வெற்றி பெற்று , 45 இடங்களில், இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது! ஒரு இமாலய சாதனை. ஆனால், சென்ற தேர்தலிலும், அதன் வாக்குகள் அப்படியே இருந்தும் , நாடாளுமன்றத்தில் அதற்க்கு ஒரு இடம் கூட இல்லை. வாக்குகள் 40% பெற்ற ஒரு கட்சி, இடங்கள் பெறாததினால், "துடைத்து எறியப்பட்டு விட்டது" என்று திரும்பத் திருமப் பொய்க்கதை பிரச்சாரம் செய்யும் பத்திகைகள், நிருபர்கள், விமர்சகர்கள் இவர்களின் உள்நோக்கம் என்ன? அறிவுஜீவிகள், ஒரு பக்கம்,கட்சிகள் வாங்கிய விகிதாசார முறையில் இடங்கள் தரப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டு, இந்திரா தோற்றார் , என்று குதூகலிப்பது , அரசியல் சார்பு நிலையைக் குறிக்கிறதே தவிர, உண்மை நிலை அல்ல. .
தமிழ்நாட்டிலும் கூட, ஒரு கட்சி ஒவ்வொரு தொகுதியிலும் 40% வாங்கி அடுத்த கட்சி 35% வாங்கினால், எல்லா இடங்களிலும், முதல் கட்சி வென்று சட்ட சபையில், 100% கிடைக்கும் சூழ்நிலை ஏற்படின், அது நியாயமான மக்கள் ஆட்சியல்ல.
..வாக்களிக்காதவர்களை விட்டு விடுவோம். வாக்களித்த மக்களில் 60% எதிரணியில் இருக்கிறார்கள் . என்பதுதானே உண்மை? (->3)
3) பல நாடுகளில், விகிதாசார முறை உள்ளது என்று அறிகின்றோம். நாம் அதை கண்டிப்பாக ஏற்கவேண்டும்... தேர்தலில் கட்சிகள் மட்டுமே போட்டியிட வேண்டும். வேட்பாளர்கள் என்று யாரும் கூடாது.
தேர்தலுக்கு முன்னர் கூட்டணி எதுவும் கூடாது.
ஒவ்வொரு கட்சியும் தனித் தனியே ஒவ்வொரு இடத்திலும் போட்டியிடுவதால், அந்தந்தக் கட்சிக்கு எவ்வளவு % வாக்குகள் என்பது சரியான சித்திரம் தரும்.
மேலும், வேட்பாளர்கள் யாரும் இல்லாததினால், ஜாதி, மதம், பண பலம் , அடியாள் பலம் இவற்றின் அடிப்படையில் இன்றுள்ள முடிவுகள் நிச்சயம் மாறும்.
.முடிவுகள் வந்த பிறகு, ஒவ்வொரு கட்சியும், தனது பிரதிநிதியை மன்றத்திற்கு அனுப்பும். ..கட்சிதாவுதல் நடக்க முடியாது. ..
படித்தவர்கள், பொது வாழ்வில் நேர்மையானவர்கள், மன்றத்திற்கு வர வழி கிடைக்கும்.
தேவைப் பட்டால், தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால், கூட்டணி அரசு அமையலாம். .. பொத்தாம்பொதுவாக தேர்தல் முடிவுகள் மட்டும் அறிவிக்காமல், பொறுப்புள்ள பத்திரிகைகள், ஒவ்வொரு தொகுதியின் படம், போட்டியிட்ட கட்சிகள், பெற்ற வாக்குகள், மாற்ற விகிதம்,. மற்ற மாநிலங்களைப் பற்றிய செய்திகள், வாசகர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.