RSR
=====
"அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சமஸ்கிருதம் தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்திலேயே குரல் கொடுத்தார். சமஸ்கிருத த்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களே என்று பிடிஐ நிருபர் கேட்கும்போது அண்ணல் அம்பேத்கர், அதில் என்ன தவறு என்று திருப்பிக் கேட்டார். இதுபற்றிய செய்தி அன்று பலப் பத்திரிகைகளிலும் வந்துள்ளது...அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருத த்தை ஆதரித்தது மட்டுமல்ல, அவர் சொல்கிறார் : ‘சமஸ்கிருதம் காவியங்களின் புதையல்; அரசியலுக்கு, த த்துவத்திற்கு, இலக்கணத்திற்கு இது தொட்டில்; நாடகங்களுக்கு, தர்க்க இயலுக்கு, திறனாய்வுக்கு இது ஒரு வீடு’ என்று சமஸ்கிருதத்தை புகழ்கிறார். (நூல் : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, பக். 25, ஆங்கில மூலம் : தனஞ்செய்கீர், தமிழாக்கம் : க.முகிலன், வெளியீடு : மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி)
-----------------------------------------------------------------------