INDIRAGANDHI'S EMERGENCY RULE

( to those who make much of Indira losing the electins in North India after the lifting of emergency)

**************************************************

7th General Elections were held on 3rd and 6th Jan 1980.

59.6% of the voters participated in the General Elections.

..Since the Janata party got split into various factions due to their internal fight and political ambition, people got frustrated with the instability of the Government.

people voted Indira Gandhi back to power.

Congress and her alliance parties won 374 seats.

Congress alone got 353 seats (42.7% vote share),

as against 189 seats (41% vote share) in 1977.

Though the vote share of Congress has marginally increased only by 1.7%, because of the split of opposition parties, Congress could bag 353 seats."....

Janata Party and its allies got only 34 seats. Janata party individually got ony 31 seats (19% vote share), as against 295 seats (41.3% vote share) in 1977.

The reduction of vote share has happened due to the split of Janata Party into various factions. Left parties bagged 53

**************************************************

now read on! ...Note that Indira's vote share INCREASED after the Janatha rule!

அந்த நாட்களில் , ( 1967-முதல் இந்திரா நாட்டிற்காக தன இன்னுயிரை ஈந்த வரை) , அரசியலை தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தவர்களுக்கு, ராஜ்நாராயண், சரண்சிங், லோஹியா சோஷலிஸ்டுகள், படு முட்டாள்தனமான அதி தீவிர இடதுகள், ஜனசங்கக் கும்பல், காங்கிரஸ் கட்சியின் பிற்போக்குக் கும்பல், ராச் கோபாலாச்சாரி மினு மசானி போன்ற அமெரிக்க கைக்கூலிகள், சோவியத் எதிர்ப்பு சக்திகள், ( சீன ஆதரவாளர்கள் உட்பட) ..அடித்த கூத்து நன்றாக நினைவிருக்கும்.

என்னய்யா உங்களது மக்களாட்சி? நமது தேர்தல் முறை தவறு. (WINNER TAKES ALL).

தென் இந்திய மாநிலங்களில், மிகப் பெரும்பான்மை மக்கள் , அவசர நிலைப் பிரகடனத்தை வரவேற்றனர்.

வட மாநிலங்களிலும் கூட, எந்த ஒரு காங்கிரஸ் ஆதரவு மக்களும், இந்திராவிடமிருந்து விலகவில்லை, வாக்கு வங்கி அப்படியே இருந்தது.

.அந்த அவசரநில ஆண்டுகளில், புரட்சி வேஷம் போட்டுத்திரிந்த வெடிகுண்டு பயங்கர வாதிகள், மத வெறிக்கும்பல்கள், அமெரிக்கக் கைக்கூலிகள் அனைவரையும் , எந்தக் கொம்பனாக இருந்தாலும், ராஜ குடும்பக் கொம்பியாக் இருந்தாலும், சாதாரண சிறையில் போட்டு ஒடுக்கி வைத்த வீராங்கனை இந்திரா காந்தி.

அவர் தேர்தலில் தோற்றது .பற்றி மட்டுமே எழுத்

தெரிகிறது...!..

எப்போதுமே இந்திய அரசியல் அரங்கில், நேரு தவிர வேறு அனைவரும், ஒன்று காந்தி வேஷம் போடும் "தர்ம கர்த்தாக்கள்', அல்லது ஜனநாயக வேஷம் போட்டு , மறைமுகமாகவோ நேரடியாகவோ, முதலாளித்துவத்தை அதிலும் அமெரிக்க சார்பு முதலாளித்துவத்தை ஆதரிக்கும் சோவியத் எதிர்ப்பாளர்கள் ( இரண்டாம் அகிலம் ),

அல்லது நான்காவது அகிலத்தின் டிராட்ஸ்கிய ஐந்தாம் படை, (

இலங்கை இடதுசாரிகள் , டிராட்ஸ்கிய வாதிகள் என்று தங்களை அறிவித்துக் கொண்டாலும், உண்மையில், நேர்மையான இனவாதமில்லா இடதுசாரி,ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாளர்கள் ),

ஹிட்லரை முன்மாதிரியாகக் கொண்டு , இந்தியாவின் சிறுபான்மை மக்களை விரட்டி அடிப்பதை தனது இலக்காக இன்றளவும் கொண்டுள்ள ஜன சங்க பரிவாரங்கள்

, நேருவின் நிலச் சீர்திருத்தச் சட்டங்களால், வசதி பெற்ற குலாக்குக் கும்பல்கள்,

பிரிவினைப் பேய்கள்,

..இவர்கள் அனைவரும் கொள்கையெல்லாம் காற்றில் பறக்க விட்டு, தங்களது அமெரிக்க எஜமானனின் சொல்படி அமைத்த அவியல் கூட்டணியினால் , இந்திரா காந்தி உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் என்ற கேந்திரமான மாநிலங்களில் தோற்க நேர்ந்தது

ஆனால், மிக மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே , அவியல் கூட்டணி உடைந்தது. .இந்திரா காந்தி ,

அதே வட மாநிலங்களில் , மீண்டும் வெற்றி வாகை சூடி பதவிக்கு வந்தார். .அது மட்டுமல்ல. அவர் பதவியில் இல்லாத போது, இரண்டு முறை , ஜனதா கட்சி வேட்பாளர்களை 'சொல்லிச் சொல்லித்' தோற்கடித்த கதை தெரியுமா?

வெடிகுண்டு ஜார்ஜ் தோற்ற கதை தெரியுமா? ...அமெரிக்கக் கைக்கூலிகளால் அவரை அரசியலில் வீழ்த்த முடியவில்லை. ..எனவே கொன்று விட்டார்கள். இதுதான் உண்மை.

.அவசர நிலை காலத்தில், தென்னிந்தியாவில் சாதாரண மக்களுக்கு எத்தனை நன்மைகள் விளைந்தன என்று நேர்மையான கட்டுரை வெளியிடவேண்டும். ..புள்ளி

விபரங்களுடன். !

---------------------------------------------------------------------------------------

நெருக்கடி காலத்தில், 'வலது'( cpi) மற்றும் இடது (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், எவரெல்லாம் கைது செய்யப்பட்டு ( என்ன காரணத்திற்காக) சிறையில் இருந்தார்கள் என்பது பற்றி , நெருப்பாற்றில் எதிர் நீச்சல் , கட்டுரைக் குறிப்பில் ஒன்றும் இல்லை. என்ன விஷயம்? கைது செய்யப்பட்டது 'சும்மா' பாவலாவுக்கவா? தெளிவு படுத்தினால் நலம். மேலும், திரு எம்.ஜி. ஆர். அவர்கள், அதிமுக செயல்குழு அறிக்கையின் மூலம், இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஆதரித்தார் என்பதும் குறிப்பாகச் சொல்லப்படவேண்டும். ..மைய அரசு ஜனதா பக்கம் போனதினால், மைய அரசைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற காரணத்தினால் மட்டும், அவர் ஜனதா அரசை ஆதரித்தார். மனதளவில், அவர் என்றும் காங்கிரஸ்காரர். இந்திரா காந்தியின், ராஜீவ் காந்தியின், ஆதரவாளர். ..மிகுந்த பெருந்தன்மையுடன் , மாநில தேர்தலில், 66% தனக்கு என்றும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரசுக்கு 66% என்றும் தெளிவான் கொள்கை கொண்டு சற்றும் பிழராதவர். ..ஆவடி காங்கிரசில், நேருவின் , சோஷலிச பாணி பொருளாதாரம் என்பதை ஏற்ற காமராஜர், இந்திரா பக்கம் நின்றிருக்க வேண்டும்...'அறம் கூற்றாயிற்று'. !

---------------------------------------------------------------------------

" வழக்கமான விசாரணைக் கைதிகளோடும் தண்டனைக் கைதிகளோடும் ஒப்பிடுங்கால் தடுப்புக் காவல் கைதிகள் என்ற முறையில் மிசா கைதிகளுக்குச் சிறப்பான வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டன.

நல்ல உணவு,

நாள்தோறும் புலால் அல்லது நெய்,

புகை பிடிக்க உதவித்தொகை,

புகை பிடிக்காதோர்க்கு விவா அல்லது ஹார்லிக்ஸ்.

ஒவ்வொரு கொட்டடியிலும் மின்விசிறி. நாற்காலி, மேசை,

வாரந்தோறும் திரைப்படம்.

இல்லத்தார், உறவினர்களுடன் வசதியான நேர்காணல்.

குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித்தொகை.

குற்றச்சாட்டோ வழக்கு விசாரணையோ இல்லாத தடுப்புக் காவல் சிறை என்பதால் இத்தனை வசதிகள், சலுகைகள்!

திருச்சிராப்பள்ளிச் சிறையைப் பொறுத்தவரை அப்போதிருந்த கண்காணிப்பாளர் 1965-ல் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஓராண்டு காலத்துக்கு மேல் கடலூர் சிறையில் தடுப்புக் காவலில் இருந்தபோது அங்கு பொறுப்பில் இருந்தவர். அதிலும் அனந்த நம்பியார் மிசாவில் திருச்சி சிறைக்கு வந்த பின் மிசா கைதிகளுக்கான மதிப்பு உயர்ந்துவிட்டது.".....தியாகு அவசர நிலைக்காலத்தில், மிசா கைதிகள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்பதை நேர்மையாக எழுதியுள்ளார். நன்றி.