RARELY DO WE FIND TAMIL NEWS DAILIES EDUCATING READERS ABOUT THE POLITICAL DEVELOPMENTS IN OTHER STATES OF INDIA. MALAI MALAR CAME OUT WITH THIS BRILLIANT ARTICLE ON 18-11-2015... OF COURSE, THE PREDICTIONS MAY TURN AWRY BUT THE GENERAL TREND OF ANALYSIS SEEMS TO BE PROVEN TO BE PRECISE BY RECENT DEVELOPMENTS. KUDOS TO RAHUL GANDHI FOR DARING TO THINK DIFFERENTLY. ..THE GREATEST MENACE TO INDIA IS THE NAZI GANG LED BY BJP AND ITS ALLIES. THE FOREMOST TASK THEN IS TO DEFEAT THEIR PLAN AND WIN OVER THE OPPORTUNISTIC FENCE SITTERS. WE WISH RAHUL GANDHI GRAND SUCCESS. ..NOW FOR THE MALAIMALAR ARTICLE RETYPED VERBATIM.
===================================
'தமிழ்நாடு , புதுவையில், தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டு.
விரைவில் அறிவிப்பு வெளியாகிறது. புது டில்லி...நவம்பர் -18-2015
-------------------------------------------------------------------------------------
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்ய ஜனதா தளம் ஆகியவற்றுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து, பா.ஜ, க, வை முறியடித்தது. இதையடுத்து, தமிழ்நாடு, மற்றும் புதுவையில், தி,மு,க. வுடன் கூட்டு சேர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தல் மாநில அளவில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது அகில இந்திய அளவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்ய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மகா கூட்டணி 178 இடங்ககைக் கைப்பற்றியது. .. பா. ஜ.க. , லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 58 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 3 இடங்களை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ( விடுதலை) கட்சி கைப்பற்றியது. 4 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். கூட்டணி தவிர்க்கக முடியாது என்பதை பீகார் தேர்தல் வலுவாக உணர்த்தியுள்ளது.
மற்ற கட்சிகளுடன் கூட்டு சேரத் தயங்கி வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மற்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டு சேர வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார். ..
..இன்னும் 5 மாதத்தில், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய நான்கு மாநில சட்டமன்றங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுவை சட்ட மன்றத்திற்கும், தேர்தல் நடைபெறுகிறது. ...
தமிழ்நாட்டில் மீண்டும், திமுகவுடன் கூட்டுசேர காங்கிரஸ் விரும்புகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவைப் பொறுத்த வரை ,எப்போதுமே கூட்டணி அரசியல்தான் மேலோங்கியுள்ளது. ...மார்க்சிஸ்ட் தலைமையிலான, கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான், பிரதான போட்டி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தலில், இந்த இரண்டு அணிகளுக்கும் மாற்றாக பா.ஜ.க. எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. .....திருவனந்தபுரம் மாநகராட்சியில், முதலிடத்தை, மார்க்சிஸ்ட் கூட்டணியும் இரண்டாம் இடத்தை பா.ஜ.க.வும், மூன்றாம் இடத்தை காங்கிரஸ் கூட்டணியும் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. ......
அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் தருண் கோகாய் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. ...காங்கிரஸ் எம்.எல்.ஏ .க்கள் பலர் பா.ஜ.க. வுக்கு தாவி வருகின்றனர். அஸ்ஸாமில் பா.ஜ.க. வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வை முறியடிக்கும் பொருட்டு, பத்ருதீன் அஜ்மலின், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டு சேர காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. அஸ்ஸாமில் முஸ்லிம்கள் சுமார் 30 சதவீதத்தினர் உள்ளனர். இது பா.ஜ.க.வுக்கு பாதகமான அம்சமாகும். மற்றபடி, இதர வகுப்பினரிடையே பா.ஜ.க.வின் செல்வாக்கு வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. ......
புதுவையில், எந்தக் கட்சியுடன கூட்டு சேர்வது என்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் பரிசீலனை செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் போல புதுவையிலும், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. .
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது, மம்தாவின் திரினாமுல் காங்கிரசுடன், காங்கிரஸ் கட்சி கூட்டு வைத்திருந்தது. மேற்கு வங்காளத்தில், திரிணமுல் காங்கிரசுக்கும் ,மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையேதான் பிரதான போட்டி நடக்கிறது. .....
திரினாமுல் காங்கிரசுடன் கூட்டு வைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரசுடன் கூட்டு வைக்க மம்தா பானர்ஜி தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே, மேற்கு வங்காளத்தில், சட்ட மன்றத் தேர்தலை , தனியாகத் தான் காங்கிரஸ் சந்திக்கும் என்று கூறப் படுகிறது. ....
இம்மாதம் ( நவம்பர் 2015) 21ந் தேதி, உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகளுடன், ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார். ..இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், 2017ல் சட்ட மன்றத் தேர்தல் நடக்கிறது. சமாஜ்வாடி கட்சிக்குப் பின்னடைவு ஏறேப்படும் சாத்தியம் வலுத்து வருகிறது.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையை ஆதரித்ததைப் போல , உத்தரப் பிரதேசத்தில், பஹுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தலைமையை ஆதரிக்க காங்கிரஸ் முன்வரும், என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பா.ஜ.க.வின் எழுச்சியை மட்டுப்படுத்த முடியும் என்று ராகுல் காந்தி கருதுகிறார்.
பல்வேறு மாநிலங்களிலும், பா.ஜ.க.வின் எழுச்சியைத் தடுத்து நிறுத்தி விட்டால், 2019ல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதுதான், காங்கிரசின் கணக்காகும். இதன் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ராகுல் காந்தி முற்பட்டுள்ளார்.