Dr.AMBEDKAR on LINGUISTIC STATES

RSR

====

அம்பேத்கர் பற்றி நாம் அறிந்துள்ளது மிகவும் குறைவு. ..இந்தியாவின் தலித் மக்களின் விடுதலைக்காக , வாழ்நாள் முழுதும் போராடியவர் என்று அறிவோம். .மேலும் , நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை , கிட்டத்தட்ட தன்னந்தனியாக , கடின உழைப்பின் மூலம் உருவாக்கியவர் என்பதும் நாம் அறிவோம். ..

நாம் அறியாத சில விஷயங்கள்.

. 1) அவர் ஒரு சோஷலிச அனுதாபி.

2) மிகவும் ஆழமான இந்திய தேசிய பற்றாளர்.

3) ஜனநாயகம், முறையான தேர்தல் முறைகள், சட்டத்தின் ஆட்சி போன்ற அடிப்படையில் , கறாரான கொள்கைகள் உடையவர்.

4) பிரிவினை வாதத்தை அடியோடு வெறுத்தவர்.

5) பல்வேறு சிறுபான்மையினரின் உரிமைகள், பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டவர்.

6) மகளிர் விடுதலை , முன்னேற்றம் முதலிய விஷயங்களில் , மிகவும் முற்போக்கு கொள்கைகள் உடையவர்.

7) ஜாதி முறை எப்படி தோன்றியது ? ஒவ்வொரு ஜாதியும் தனக்குள்ளேயே திருமண உறவு கொளவதால் அது நீடிக்கிறது. எனவே கலப்பு த் திருமணம் மட்டுமே , இதற்க்குத் தீர்வு என்று தீர்மானமாக கூறியவர்.

----------------------------------------------------------------------------------------

இருக்கட்டும்.

ஆந்திரத்தில் பொட்டி ஸ்ரீ ராமுலு என்ற காங்கிரஸ் தொண்டர், தெலுங்கு பேசும் மக்கள் அனைவருக்குமான , ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்று , உண்ணா விரதம் இருந்து உயிர்விட்ட பின், நேரு வேண்டாவெறுப்பாக மொழிவாரி மாநிலங்கள் அமைவதை ஏற்றுக்கொண்டபோது, இந்த பிரச்னை பற்றி " மொழிவாரி மாநிலங்கள் அமைவது பற்றிய சிந்தனைகள்' (" THOUGHTS ON LINGUSTIC RE-ORGANIZATION OF STATES' ) என்ற ஒரு சிறந்த, நடுநிலையான ,சிந்தனையைத் தூண்டும் நீண்ட கட்டுரை ஒன்றை அவர் எழுதினார்...

அந்த கட்டுரையில், அவரது ஜனநாயகப் பண்பும், நடுநிலையும், இந்திய தேச ஒற்றுமை , ஒருமைப்பாடு பற்றிய அவரது உறுதியான நிலைப்பாடும் தெளிவாக வெளிப்படுகின்றன .

தமிழ்நாட்டில் , இப்போது நிலவும் மொழி அடிப்படையிலான பல தவறான கருத்துக்களை , அவர் அன்றைய நாட்களிலேயே , எதிர்பார்த்து , விமர்சித்துள்ளது , வியப்பாயுள்ளது. .

----------------------------------------------------------------------------------

இந்திய நிலைமைகளில், மொழி-அடிப்படையிலான தேசியம் , ( தமிழ் தேசியம், கன்னட தேசியம், வங்க தேசியம் ) , தலித் விடுதலைக்கு , உதவாது. மாறாக , அவர் வகுத்துக்கொடுத்த , இந்திய அரசியல் சட்டத்தில் , தலித் மக்களுக்கு அவர் பெற்றுத்தந்த சில சலுகைகளையும் இழக்க நேரிடும்.

தனக்குப்பின், அரசியல் சட்டம் , திருத்தப்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவேதான் , 'அடிப்படை உரிமைகள்' என்று பல விஷயங்களை , வெறும் பாராளுமன்றப் பெரும்பான்மைக்கு அப்பால் ,அவர் மாற்ற முடியாத உரிமைகளாக வகுத்தளித்தார்.

-----------------------------------

தமிழ்நாட்டில், பல தலித் இயக்கத் தலைவர்களும், தொண்டர்களும் , ஆர்வலர்களும், தலித் நலம் விழைவோரும் , அறிந்திராத அல்லது இருட்டடிப்பு செய்யும் , மேற்கூறிய கட்டுரையின் சில முக்கியமான பகுதிகளை ,என்னால் இயன்ற அளவு, தமிழில் மொழிபெயர்த்து இங்கு தருகிறேன்.

-------------------------------------------------------------------------------------------------

DR.AMBEDKAR ON LINGUISTIC RE-ORGANIZATION OF STATES...HE WAS A STAUNCH INDIAN NATIONALIST....SEE THE FOLLOWING QUOTE..I AM TRYING TO TRANSLATE IMPORTANT PORTIONS INTO TAMIL. WILL BE READY SOON. ..NOW TO AMBEDKAR.

------------------------------------------------------------------------------------------------------------------------------

"Having stated the advantages of a linguistic State I must also set out the dangers of a linguistic State.A linguistic State with its regional language as its official language may easily develop into an independent nationality. The road between an independent nationality and an independent State is very narrow. If this happens, India will cease to be Modern India we have and will become the medieval India consisting of a variety of States indulging in rivalry and warfare.This danger is of course inherent in the creation of linguistic States. There is equal danger in not having linguistic States. The former danger a wise and firm statesman can avert. But the dangers of a mixed State are greater and beyond the control of a statesman however eminent."

----------------------------------------------------------- "இதுவரை, மொழிவாரி மாநில சீரமைப்பின் நன்மைகளைப் பார்த்தோம்.

இப்போது நான் , அதன் அபாயங்களைப்பற்றிச் சொல்லப்போகிறேன்.மாநில மொழியை தனது ஆட்சிமொழியாக் கொண்ட ஒரு மொழிவாரி மாநிலம், விரைவிலேயே ஒரு தனி நாடாக மாறிவிடலாம். தனித்துவ தேசியத்திற்கும் , தனி நாட்டிற்கும் உள்ள இடைவெளி மிகவும் குறுகியது. அவ்வாறு நேரும்போது, இன்று நாம் கொண்டுள்ள நவீன இந்தியா மறைந்து,பழைய காலத்திய ஒருவரோடு ஒருவர் சச்சரவும் போரும் நிகழ்த்திக்கொண்டிருந்த ,பற்பல ராஜ்யங்களின் கலவை ஆகிவிடும். மொழிவாரி மாநில அமைப்பில் உள்ள இயல்பான அபாயம் இது. இதைத் தவிர்க்க, பல மொழிபேசும் மாநிலம் என்றால் ,அதுவும் மோசம்தான் .மொழிவாரி தேசியத்தின் அபாயத்தை , உறுதியும் ,நல்லறிவும் கொண்ட சமூகத் தலைவர்கள் ,தவிர்க்க முடியும் .ஆனால் பல மொழி பேசும் மாநிலங்களில் எழும் பிரச்னைகளை , எவ்வளவுதான் பிரபலமான தலைவர்களாக இருந்தாலும் , அவர்களால், இவ்வாறு தீர்க்க முடியாமல் போகும்."

------------------------------------------------------------------------------

"How can this danger be met? The only way I can think of meeting the danger is to provide in the Constitution that the regional language shall not be the official language of the State.The official language of the State shall be Hindi and until India becomes fit for this purpose, English. Will Indians accept this? "

----------------------------------------------------------------

"இந்த அபாயத்தை எப்படி தவிர்ப்பது? எனக்குதெரிந்த ஒரே வழி ,என்னவென்றால் , 'ஒரு மாநிலத்தின் மொழி, அதன் ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது' என்று நமது அரசியல் சட்டத்தில் ஒரு ஷரத்து உண்டாக்குவதுதான்..... அரசின் ஆட்சிமொழி ஹிந்தியாகத்தான் இருக்க வேண்டும். இந்தியா முழுமையும் இதற்கு தயாராகும் வரை, ஆங்கிலம் பயன்படுத்தப் படவேண்டும்...இந்தியர்கள் இதை ஏற்பார்களா? "

==========================================================

"If they do not, linguistic States may easily become a peril.One language can unite people. Two languages are sure to divide people. This is an inexorable law. Culture is conserved by language. Since Indians wish to unite and develop a common culture, it is the bounden duty of all Indians to own up Hindi as their language.Any Indian who does not accept this proposal as part and parcel of a linguistic State has no right to be an Indian. He may be a hundred per cent Maharashtrian, a hundred per cent Tamil or a hundred per cent Gujarathi, but he cannot be an Indian in the real sense of the word except in a geographical sense."

----------------------------------------------------------------

"அவர்கள் இதை ஏற்காவிடின் மொழிவாரி மாநிலங்கள் மிகப் பெரும் அபாயமாகிவிடும். ஒரு மொழி , மக்களை இணைக்கும்!.இரண்டு மொழிகளாயின், மக்களைப் பிளக்கும் !

இது தவிர்க்கமுடியாத விதி ..பண்பாடு மொழியால் காப்பாற்றப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரு பொதுவான பண்பாட்டை வளர்த்தெடுக்க விருமபுவதினால் , ஹிந்தியை தங்களது மொழியாக ஏற்பது அவர்களுடைய கடமையாகும். மொழிவாரி மாநில அமைப்பில், இந்த யோசனையை ஏற்காத எந்த ஒரு இந்தியனும் , தான் ஒரு இந்தியன் என்று கூறிக்கொள்ள உரிமை கிடையாது. அவர் ஒரு 100% மராத்தியாக

இருக்கலாம். 100% தமிழனாக இருக்கலாம். அல்லது 100% குஜராத்தியாக இருக்கலாம். ஆனால்,வெறும் பூகோள அடிப்படையில் மட்டுமல்லாது ,உண்மையான இந்தியனாக இருக்க இயலாது. "

-------------------------------------------------------------

"If my suggestion is not accepted, India will then cease to be India. It will be a collection of different nationalities engaged in rivalries and wars against one another.God seems to have laid a heavy curse on India and Indians, saying 'Ye Indians! ye shall always remain divided and ye shall always be slaves!'

----------------------------------------------------------------

"என்னுடைய இந்த பிரேரணை ஏற்கப்படாவிடின் இந்தியா , ஒரு உண்மையான இந்தியாவாக இருக்காது. ஒருவரோடு ஒருவர் விரோதப் போக்கு கொண்டு, போர்

புரியும் ,பல தேசிய இனங்களின் கலவையாக மட்டுமே இருக்கும். .."ஒ! இந்தியர்களே! நீங்கள் எப்போதுமே பிரிந்து கிடந்து, எப்போதுமே அடிமைகளாக வாழ்வீர்களாக' என இறைவன் விதித்திருக்கிறார்போல தோன்றுகிறது ".

------------------------------------------------------------------------------

I was glad that India was separated from Pakistan. I was the philosopher, so to say, of Pakistan. I advocated partition because I felt that it was only by partition that Hindus would ,not only be independent but free. If India and Pakistan had remained united in one State,Hindus though independent would have been at the mercy of the Muslims. A merely independent India would not have been a free India from the point of view of the Hindus. It would have been a Government of one country by two nations and of these two the Muslims without question would have been the ruling race notwithstanding Hindu Mahasabha and Jana Sangh. When the partition took place I felt that God was willing to lift his curse and let India be one, great and prosperous. But I fear that the curse may fall again. For I find that those who are advocating linguistic States have at heart, the ideal of making the regional language their official language.This will be a death knell to the idea of a United India. With regional languages as official languages the ideal to make India one United country and to make Indians, Indians first and Indians last, will vanish. I can do no more than to suggest a way out. "

========================================================

AMBEDKAR says: "CHAPTER VIII

Summary of Principles Covering the Issue

For the sake of the reader I summarise below the principles which should underlie the creation of Linguistic States which are already enunciated in the foregoing pages but which lie about scattered. These principles may be stated as below:

(1) The idea of having a mixed State must be completely abandoned.

(2) Every State must be an unilingual State. One State, one language.

(3) The formula one State, one language must not be confused with the formula of one language, one State.

(4) The formula one language, one State means that all people speaking one language should be brought under one Government irrespective of area, population and dissimilarity of conditions among the people speaking the language. This is the idea that underlies the agitation for a united Maharashtra with Bombay. This is an absurd formula and has no precedent for it. It must be abandoned. A people speaking one language may be cut up into many States as is done in other parts of the world.

(5) Into how many States a people speaking one language should be cut up, should dependupon

(1) the requirements of efficient administration,

(2) the needs of the different areas,

(3) the sentiments of the different areas, and

(4) the proportion between the majority and minority."

========================================================================

1) ஒரு மாநிலத்தில், பல மொழி பேசுவோர் என்ற அமைப்பை , நாம் ஏற்க்கமுடியாது. இதை முற்றிலும் கைவிடவேண்டும்.

2) ஒவ்வொரு மாநிலமும் ஒரு மொழி மட்டும் என்ற அடிப்படையில் அமைய வேண்டும்.

3) ஒரு மாநிலம், ஒரு மொழி என்ற கோட்பாடு, ..'ஒரு மொழி பேசுவோர் அனைவரும், ஒரே மாநிலத்தில் இருக்கவேண்டும்' என்று பொருளாக எடுத்துக்கொண்டு , குழம்பக்கூடாது.

4) 'ஒரு மொழி..ஒரு மாநிலம் ' என்ற கோரிக்கை, கீழ்க்கண்ட விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

1) நிர்வாகம் மேம்படுத்தல்.

2) பல பிராந்தியங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்,

3) பல பகுதியில் வசிக்கும் மக்களின் உணர்வுகள்.

4) பெரும்பான்மையினர், சிறு பான்மையினர் இடையே உள்ள விகிதாசாரம்.