RSR...response
============
1962ல் பிறந்தவர். ..1968ல் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது. சம காலத்துப் போராளிகள் பலரும், முதுகுளத்தூர் நிகழ்வுகள், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், கக்கன் போன்றோரும், ஸ்ரீனிவாச ராவ் போன்ற பொதுவுடைமை இயக்கத் தோழர்களும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஆற்றிய அபார பணிகளை இன்றும் நினைவில் கொண்டுள்ளனர். இவருடைய பிறப்பிடம் அப்படி ஒன்றும் வேறு மாநிலம் அல்ல. சில நூறு மைல்களில் நிகழ்ந்த வர்கப் போராட்டத்தைப் பற்றி இவருக்கு போதுமான தெளிவு, அவருடைய அரசியல் பிரவேச நாட்களில் சுத்தமாக இல்லை. காரணம், இவருக்கு தலித் பிரச்னையைவிட இன அரசியல்தான் தொடக்கமாக இருந்திருக்கிறது. இன்றும் கூட அப்படியே. பொருளாதார வர்க்க அடிப்படை பற்றி இவர் சிந்தித்து இருந்தால், அவருடைய அரசியலும் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அம்பேத்கரை ஏன் இழுக்கிறார்? இவருடைய இன ,மொழிக் கொள்கைகளுக்கும் அம்பேத்கருக்கும் சற்றும் தொடர்பு கிடையாது. அம்பேத்கர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழி என்று கூறியுள்ளார். அவர் இந்திய தேசிய ஆதரவாளர். ஹிந்தி அனைவரும் படிக்க வேண்டும் என்றார். அவர் பிரிவினைவாத எதிரி.
==========================================================
சிறுபான்மை மக்கள், அனைத்துவித சமூக உரிமைகளும் அடிப்படை மனித உரிமைகளும் பெற்று வாழவும், வாழ்க்கையில் முன்னேறவும், அம்பேத்கர் அவர்களே இயற்றிய நமது அரசியல் சட்டம் ,வழி தந்திருக்கிறது. இதை மறுப்பது, அம்பேத்கர் அவர்களையே அவமதிப்பதாகும். 2) வைணவ சம்ப்ரதாயம் ஜாதிய வேறுபாடுகளை அதிலும் குறிப்பாக தீண்டாமையை அறவே வெறுத்து ஒதுக்கியிருக்கிறது. அதன் தொடக்கம் திருக்கோஷ்டியூரில் ராமானுஜர் . (கி.பி. 1100).. ( குலோத்துங்க சோழன் காலம்! சைவ ஆகம மடங்களும் அதன் பின் நிற்கும் ஜாதிகளும், அன்றே ராமானுஜரை எதிர்த்தன குலோத்துங்கனின் ஆணையால், தப்பிவிட்ட ராமானுஜருக்கு பதிலாக, பெரிய நம்பி என்ற சீடரின் கண்களைத் தோண்டி எடுத்ததுதான், சோழப்பேரரசு.) தமிழ்மண்ணில் ஆழ்வார்கள் காலத்தில் ( கி.பி. 700 ) தோன்றிய ஜாதி மறுப்பு பக்தி இயக்கம், ராமானுஜர் மூலம் வட இந்தியா முழுதும் பரவியுள்ளது. நமது சுதந்திர இயக்கத்தின் தலைவர்கள் பலரும் வைணவர்கள். ஏன்! அம்பேத்கர் அவர்கள் கூட, மராட்டிய பக்தி இயக்கத்தின் வழி வந்தவர்தாம். மராட்டிய நக்சல் இயக்கம் , ஜாதி ஒழிப்பில் பக்தி இயக்கத்தின் பங்கை ஏற்கிறது
அம்பேத்கரின் தலையாய பங்களிப்புடன், அரசியல் நிர்ணய சபை, உண்மையிலேயே தலித் மக்கள், ஆதிவாசிகள், மத சிறுபான்மையினர் அனைவரும், எந்தவொரு வேறுபாடும் இன்றி தேர்தல் அரசியலில் பங்கேற்று முன்னேற வழி வகுத்துள்ளது. அடிப்படை உரிமைகள் என்ற சாசனம் உள்ளது. ..அடிப்படையான பொருளாதாரப் பிரச்னையைக் கவனியுங்கள். . உ.பி. , பீகார், வங்கம் போன்ற வட இந்திய மாநிலங்களில் ( 35 கோடி) , தலித் மக்களும், இஸ்லாமியரும், ஏறத்தாழ 40% உள்ளனர். இவர்களுள், நமது அரசியல் நிர்ணய சபை , முழு மனதுடன் கொடுத்த தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் பயனாக ஒரு சிறிய பகுதி மக்களேனும், professionals, businessmen, intellectual path breakers ஆகியிருக்க முடிந்துள்ளது. ஆனால், பெரும்பான்மை மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவது சாத்தியமல்ல. ஏன்? வேலை வாய்ப்புகள் இல்லை. இருக்கும் வேலைகளில் அவர்களுக்கு தனியார் துறை வாய்ப்பளிக்கவில்லை. அப்படியே அளித்தாலும், கோடிக்கணக்கான தலித் மக்களுக்கு அவர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்ததும், உண்மையில் அந்த துறையின் உயிர்நாடியுமான விவசாயத் தொழிலில் அவர்களுக்கு சொந்த நிலம் இல்லை.
உழைக்கும் மக்கள் நகர்ப்புற தொழிலாளர்களாக மாறும்போது, சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஜாதிய சிந்தனை ஓரளவு மறையத்தான் செய்கிறது. கிராமத்தில் இருந்த ஆச்சாரமான பார்பனர்களுக்கும், நகர்ப்புறத்திற்கு குடிபெயர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட பார்ப்பனர்களுக்கும், இன்று வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்ட்வர்களுக்கும் பண்பாடு,விழுமிய வேறுபாடு, தெளிவு. வாழ்வாதாரத் தொழில் ,இத்தகைய அடிப்படை மாற்றத்தைக் கொணர்ந்தது கிராமப் புறங்களில், 'உழுபவருக்கே நிலம்' என்ற திட்டத்தால், குத்தகை விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் ( தலித்) கைவிடப் பட்டனர். இதுதான் அடிப்படைப் பிரச்னை. தீர்வு என்ன? 1) கடுமையான நில உச்சவரம்பு வேண்டும். 2) நிலத்தில் நேரடியாக இறங்கிப் பாடுபடாத எவருக்கும் நில உடமை கூடாது. 3) உபரி நிலம் அரசுடமையாக்கி ,அங்கு அரசு பண்ணைகளில், தலித் மக்கள் அனைத்து கல்வி, மருத்துவ வசதிகளுடன் வாழ வேண்டும். 4) ஒவ்வொரு பகுதியிலும் தலித் மக்கள் மற்ற சமூகத்தால் சூழப்பட்டிருக்கும் நிலை
மாற்றப்பட்டு, தலித் பெரும்பான்மை பகுதிகள்அமையவேண்டும
********************************************************
THIRUMA BUILDUP BY CHAMAS.....COMMENT .""அறிவுஜீவித்தனமாகவும் இல்லை'. ..'அனைத்து ஏழை விவசாயத் தொழிலாளர்கள்' பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை. அம்பேத்கர் வழி என்பார்... "தேர்தல் பாதை திருடர் பாதை 'என்பார். புத்தர் என்பார். வன்முறை பரப்புவார். விடுதலைப் புலிகள் ஆதரவு என்பார். வெறும் அரசியல்வாதி. காதல் திருமணம் பிரச்னைகள்தான் இன்று இவர் போன்றவர்களுக்கு முக்கியம். ..கோபி லக்ஷ்மண ஐயர் என்ற காங்கிரஸ் தேசபக்தரின் வாழ்க்கை எல்லாம் இவர்கள் கண்களில் படாது. ..கலாம் அவர்களின் சிந்தனையை சற்றும் புரிந்து கொள்ள இவர்களால் இயலவில்லை. .ஏதாவது ஒரே ஒரு ஆக்க பூர்வ தீர்வு தருகிறாரா? அந்த அளவுக்கு திறந்த மனதும் சிந்தனையும் இருக்கிறதா? கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் மாதிரி இவரால் எதுவும் செய்ய முடியுமா? கடைசியில், தலித் விடுதலை அரசு ஒப்பந்தக்காரர் வேலை கிடைக்க வேண்டும் என்று முடிந்துவிட்டது.
********************************************************
DANDY.. சிங்களரிடையே தீண்டாமை இல்லை.சாதிப்பெயர் சொன்னால் என்ன (உ-ம்) வரதராஜுலு நாயுடு(முற்காலத்தில் ஹிந்து மகா சபையில் இருந்தார்!), ஈ.வே.ரா.நாயக்கர், திரு.வி.க .முதலியார்,வ.உ.சிதம்பரம் பிள்ளை, ராமசாமிப் படையாச்சி, தீர்த்தகிரி கௌண்டர், முத்துராமலிங்கத் தேவர், தேசிகவிநாயகம் பிள்ளை , கார்மேகக் கோனார், ம.பொ .சிவஞான கிராமணியார், .... தேசியத் தலைவர்களில், இடதுசாரிகள் உட்பட, ஈ.எம்.எஸ்.நம்பூட்ரிபாத் , ஜோதி பாசு, சுர்ஜித்சிங்,சாரு மஜும்தார், ஹரிக்ருஷ்ண கோனார், கனுசன்யால், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சி.ராஜேஸ்வர் ராவ், எஸ்.எ.தங்கே , வினோத் மிஸ்ரா, ஜவஹர்லால் நேரு பண்டிட், வி.பி.சிங், என்.டி ராமராவ், மமதா பானெர்ஜி, சுபாஷ் போஸ், வினோபா பாவே,மகாத்மா கார்வே, மகாத்மா காந்தி, ஜோதிபா பூலே , சூர்யா சென், எம்.என்.ராய், லஜபதி ராய், ரவீந்திரநாத் தாகூர், சித்தரஞ்சன் தாஸ், பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, பந்துலு, லோஹியா, சரண்சிங், மொரார்ஜி தேசாய், பி.சி.ராய், நாகபூஷன் பட்நாயக், அஜய் கோஷ், ....பட்டியல் நீளும். ..ஜாதி வேறு ...தீன்ப்டாமை வேறு. இதுகூடத் தெரியாத இவர் எந்த உலகத்தில் இருக்கிறார்