MY VIEW---RSR
===========
1)இந்திய நாடு முழுவதிலிருமிருந்து , கடினமான அகில இந்தியத் தேர்வு முறை மூலம் , ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. .சோதனைத் தேர்வு முறை கூட , மற்ற தேர்வுகள் போலல்லாமல், சிந்தனைத் திறன், அறிவியல் அடிப்படை அறிவுத் திறன் போன்றவைகளில் மாறுபடுகிறது. நமது மாநிலத்தில் மிகவும் சிறப்பான மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவியர், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது , ஏறத் தாழ முடியாத விஷயமாகும். நமது கல்வித் திட்டமும் , ஆசிரியர்களின் தரமும் இதற்கு ஒரு காரணமாகலாம். ..
மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று கருதப்படும், பீகார் மாநிலத்தில், ஒரு தனி நபர் சமூக சேவகர், மிகவும் ஏழைக் குடும்பங்களிலிருந்து மாணவ மாணவியரைத் தேடிக் கண்டுபிடித்து , தரமான பயிற்சி மூலம் , அவர்கள அனைவரும் ஐ.ஐ.டி. தேர்வில் வெற்றி பெறச் செய்கிறார் என்று செய்தி. .
தவிரவும், ஐ.ஐ.டி. சென்னை , தமிழக மாணவர்களுக்கு மட்டுமுண்டானதல்ல. ..அறிவியல், மற்றும் பொறியியல் கற்கும் மாணவர்கள், அரசியல்-வரலாற்று- சமூக-பொருளாதார விஷயங்கள் பற்றி பாடத்திட்டத்திலேயே அறிந்திருப்பது அவசியம். ஆயினும், படிக்கும் போது, அதுவும், ஒரு தலை சிறந்த கல்விக்கூடத்தில்..
2)... கடினமான பாடத் திட்டத்தின்படி படிக்கும் போது, தங்களது முழுக் கவனமும், படிப்பிலேயே செலுத்துவதுதான் நல்லது.
மிகச் சிறந்த பொறியியல், அறிவியல் வல்லுனர்களாக நீங்கள் வெளிவந்து, தங்களது துறையில் ஒளிவீசி, சமூகத் தலைமை பெற்று , அரசியல் பொறுப்புகள் ஏற்பது, மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லது.
மிக மிக அசாதாரனமான் அரசியல் சூழல்களில், ( காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், 1967ல் சர்வதேச பொதுவுடமைப் புரட்சி இயக்கம் போன்ற நாட்களில்),
பல அருமையான சிந்தனைத் திறன் ,மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள், படிப்பை விட்டுவிட்டு நாட்டு சேவையில், ஈடுபட்டது உண்மையாயினும், அவர்கள் படிப்பை முடித்து, சிறந்த பதவி வகித்து அதன்மூலம் இன்னும் அதிகமாகவே நாட்டிற்கு பலனுள்ள சேவை செய்திருக்க முடியும்.
இன்று சீனாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு, சீனாவிலிருந்து மேலை நாடுகள் சென்று , அறிவியல் ஆராய்ச்சி படிப்பு முடித்து, தங்களது நாடு திரும்பிய ஆயிரக் கணக்கான விக்ஞானிகள் ஒரு காரணம்.
இப்போதெல்லாம், அனைத்துவித கருத்துகளும், வரலாறுகளும், நூல்களும், இணைய தளத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.! .சங்கம் வேண்டாம்