RSR
====
......DR.AMBEDKAR IN
'THOUGHTS ON LINGUISTIC REORGANIZATION OF STATES""
.பிராந்திய மொழி அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்க கூடாது. இதற்கு அரசியல் சட்டத்திலேயே வகை செய்ய வேண்டும். இதுவே இந்த அபாயத்தைச் சமாளிப்பதற்கான ஒரே மார்க்கம் என்பது என் கருத்து. இந்தியே மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக இந்தியா தயாராகும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம். இந்தியர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மொழிவாரி மாநிலங்கள் ஓர் அபாயமாக மாறுவது எளிதாகிவிடும்.
ஒரே மொழி இருந்தால் அது மக்களை ஒன்றுபடுத்தும். இரண்டு மொழிகள் மக்களை நிச்சயம் பிளவுபடுத்தவே செய்யும். இது அசைக்க முடியாத விதி. நாட்டின் கலாச்சாரம் மொழியால்தான் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவும் ஒரு பொதுக் கலாச்சாரத்தை வளர்த்து வளப்படுத்தவும் விரும்புவதால் இந்தியை தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்வது அனைத்து இந்தியர்களாலும் மறுக்க முடியாத கடமையாகும்.
மொழிவாரி மாநில அமைப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இந்த யோசனையை ஏற்காத எந்த இந்தியனும் ஓர் இந்தியனாக இருக்க அருகதையற்றவன். அதற்கு உரிமை இல்லாதவன். அவன் நூற்றுக்கு நூறு மகாராஷ்டிரனாக இருக்கலாம். அவன் நூற்றுக்கு நூறு தமிழனாக இருக்கலாம். அவன் நூற்றுக்கு நூறு அவன் குஜராத்தியாக இருக்கலாம். ஆனால் பூகோள அர்த்தத்தில் தவிர, இந்தியன் என்ற சொல்லின் உண்மையான அர்த்த த்தில் அவர் ஓர் இந்தியனாக இருக்க முடியாது. என் யோசனை ஏற்கப்படாவிட்டால் பின்னர் இந்தியா இந்தியாவாக இருக்காது. அதற்கு மாறாக ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்வதிலும் சிண்டுபிடித்துக் கொள்வதிலும் ஏச்சுபேச்சுகளிலும் போட்டி பூசல்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடிய பலதரப்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கதம்பக் கூட்டாகத்தான் அது இருக்கும்.
‘ஓ இந்தியர்களே! நீங்கள் எப்போதும் பிளவுபட்டே இருப்பீர்கள். நீங்கள் எந்நாளும் அடிமைகளாகவே உழல்வீர்கள்’ என்று ஆண்டவன் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் மிகப்பெரிய சாபத்தை தந்திருப்பார் போலும்.!" ...